Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதலெட்சுமி ஷண்முகநாதன்: கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற 87 வயது இலங்கை தமிழ் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரதலெட்சுமி ஷண்முகநாதன்: கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற 87 வயது இலங்கை தமிழ் பெண்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வரதலெட்சுமி ஷண்முகநாதன்

பட மூலாதாரம்,YORK UNIVERSITY

 
படக்குறிப்பு,

வரதலெட்சுமி ஷண்முகநாதன்

தமது 87ஆம் வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன்.

ஒவ்வொரு சொற்களுக்கு இடையில் நல்ல இடைவெளிவிட்டு, நிதானமாக தன் எண்ணங்களை ஒருங்கிணைத்துப் பேசும் இவர்தான், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில் பட்டம்பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வேலனை (Velanai) கிராமத்தில் பிறந்த வரதலெட்சுமி, உலகிலுள்ள நான்கு கண்டங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.

கல்வி மீதான தீரா காதலோடிருக்கும் வரதலெட்சுமியின் கற்றல் வாழ்கை அத்தனை சீராக இல்லை. இன்டர்மீடியட் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிபெற்றபோதிலும், இன, பாலின - சிறுபான்மை மாணவர்களுக்கு அளவான இடங்களே இருந்ததால் அவரால் இலங்கையில் தன் கல்வியைத் தொடர முடியவில்லை. தன் கல்வியைத் தொடர அவர் கடல் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்தார்.

"கல்லூரி படிப்புக்கு என்னை வெளிநாட்டுக்கு அனுப்புமாறு என் ஆசிரியர்களில் ஒருவர் என் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். எனவே அவர்கள் என்னை இந்தியாவுக்கு அனுப்பினர்" என்கிறார் வரதலெட்சுமி.

தமிழ்நாட்டிலுள்ள சென்னை பல்கலைக்கழகத்தில்தான் அவர் தன் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இலங்கைக்குத் திரும்பியவர் உள்ளூர் பள்ளியில் குழந்தைகளுக்கு இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். அப்படியே சிலோன் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் எஜுகேஷன் (கல்வியில் பட்டயச் சான்றிதழ்) பெற்றார் என்கிறது யார்க் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அடுத்து என்ன படிப்பது, என பயில்வதில் பெரும் ஆர்வத்தோடு இருந்தவரின் கல்வி, அவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது தடைபட்டது. அவர் தன் குடும்ப விவகாரங்களை கவனிக்க வேண்டி இருந்தது. பிறகு ஓர் ஆசிரியரை திருமணம் செய்து கொண்டு இலங்கையை விட்டு வெளியேறினார்.

அப்படியே எத்தியோபியா, சியாரா லியோன், நைஜீரியா, பிரிட்டன் என பல நாடுகளில் வாழ்ந்தபின் 2004ம் ஆண்டு கனடா வந்தடைந்தார்.

வரதலெட்சுமி ஷண்முகநாதன்

பட மூலாதாரம்,YORK UNIVERSITY

முதுமை மேகம் சூழத் தொடங்கிவிட்டது, ஆனாலும் வரதலெட்சுமியின் கற்றல் ஆர்வம் குறையவில்லை. யார்க் பல்கலைக்கழகத்தில் மூத்த குடிமக்களுக்கு பயிற்சிக் கட்டணச் சலுகை இருப்பதை அறிந்து கொண்டார்.

"நான் அரசியல் ஆர்வத்தோடுதான் வளர்ந்தேன், எனக்கு ஐந்து வயதிருக்கும் போது சிலோனில் (பிற்காலத்தில் இலங்கை என பெயர் மாற்றப்பட்டது) இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பல நாடுகள் போர் மற்றும் வன்முறையில் ஈடுபடும் போது அதன் தாக்கம் கடல் கடந்து எதிரொலிக்கும் என்பதை புரிந்து கொண்டேன்" என தன் 85ஆவது வயதில், யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் சமர்பிக்கும் போது எழுதியுள்ளார் வரதலெட்சுமி.

அவரை யார்க் பல்கலைக்கழக நிர்வாகம், 2019ம் ஆண்டு அவரை மாணவராக சேர்த்துக் கொண்டது. ஆசிரியையாக வகுப்பறையில் நின்றவர், தன் பேரன் பேத்தி வயதுடைய மாணவர்களோடு 30 ஆண்டுகளுக்குப் பிறகு சரிசமமாக அமர்ந்து பாடம் படித்தார்.

"பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்வது எனக்கு பெரிய மாற்றமாக இருந்தது, ஹால்வேயில் நடப்பது, நூலகத்தில் படிப்பது, இளைஞர்களைப் போல வேலை செய்வது... எல்லாம் எனக்கு பிடித்திருந்தது" என்கிறார் வரதலெட்சுமி.

உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய இலங்கை குறித்த நூல் ஒன்றை எழுதத் திட்டமிட்டுள்ளார் வரதலெட்சுமி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய இலங்கை குறித்த நூல் ஒன்றை எழுதத் திட்டமிட்டுள்ளார் வரதலெட்சுமி.

டாக்ஸி ஓட்டுநர்கள் அவரை பேராசிரியர் என கருதியுள்ளனர், அவர் மாணவர் என அறிந்ததும் அவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். "நான் ஒரு மாணவர் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்பதை நான் நம்புகிறேன், மூத்த குடிமக்கள் தங்கள் மீது சமூகம் விதித்துள்ள வரம்புகளைக் கடந்து கற்க வேண்டும்" என்கிறார்.

வரதலெட்சுமி தமது 50ஆவது வயதில் லண்டனின் பிர்க்பெக் கல்லூரியில், 'இங்கிலாந்திலுள்ள இலங்கைத் தமிழர்களின் மொழி சார் அணுகுமுறை (The attitudes of Sri Lankan Tamils in England towards language)' என்கிற தலைப்பில் தமது முதல் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இலங்கையில் தேச அமைதியைக் கட்டமைப்புக்கும் நல்லிணக்க மீட்டுருவாக்கத்திற்குமான அமைதி (non-violence for national peace building and reconciliation in Sri Lanka) குறித்து யார்க் பல்கலைக்கழகத்தில் படிக்க முடிவு செய்தார்.

வரதலெட்சுமி தன் முக்கிய ஆய்வை (சிவில் போருக்கான காரணங்கள், அமைதிக்கான செயல்பாடுகள், இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு) ஸூம் காணொளி மூலம் சமர்பித்து கேள்விகளுக்கு விடையளித்தார்.

"போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் இலங்கை தமிழர்களின் பிரச்னைகள் முறையாக தீர்க்கப்படாத வரை அமைதி திரும்பாது, அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியலமைப்பைப் பகிர்ந்து கொள்வது அமைதியக் கொண்டு வரும்" என தன் ஆய்வை நிறைவு செய்துள்ளார்.

உள்நாட்டுப் போருக்கு பிந்தைய இலங்கை மற்றும் அமைதிக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து தமது ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நூல் ஒன்றை எழுதவும் இவர் முடிவு செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-59144778

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல் வாழ்த்துக்கள் அம்மா. உங்களை நினைத்து பெருமைப் படுகின்றோம். 🙏🏽👍🏼

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் அம்மா🙏

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை எவ்வளவு பாரட்டினாலும் தகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தாயே. முயற்சிக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம்.கல்வி கற்க வயதெல்லை கிடையாது என்பதை நிரூபித்து காட்டியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மா ரொறன்ரோ கல்விச் சபைக்குள் பணி புரியும் பார்த்தி கந்தவேலின் சிறிய தாயாவார்.. வாழ்த்துக்கள் அம்மா 💐

நானும் இவவை போல 50+ வயதில வேற ஒரு தொழிலுக்கு மாறுவம் என படிக்க வெளிக்கிட , எனக்கு வந்த புத்திமதிகள், நாங்கள் ஓய்வு பெறுவம் என்று நினைக்கிறம் இனியோ படிக்கப் போகிறாய்?
இனிப்படிச்சென்ன பிரயோசனம் ?  
எனக்கு உலகம் விளங்கவில்லை. இப்ப எல்லாரும் வாட்ஸ்app இதை forward பண்ணுகிறார்கள்,
அவர் ஒரு பெருமைக்குரியவர் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

தமது 87ஆம் வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன்.

இறந்து போகும் வேளை வந்த போதும் இறுதிப் பக்கத்தை தான் வாசித்த புத்தகத்தில் படித்து விட்டு வருகிறேன் என்றான் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிரேக்க தத்துவவியளாளன் ஒருவன்.கல்வி கற்பதற்கு ஏது வயது எல்லை. மண்ணைத் தோண்டத் தோண்ட தாகம் தீர்க்கும் தண்ணீர் கிடைப்பது போல் நீ உன்னை தோண்டத் தோண்ட அறிவு என்னும் ஞானக்கிணறு உன்னில் ஊற்றெடுக்கும்.

தேடலே ஞானம்

தேடுங்கள் தேடுங்கள் 
தேடலே ஞானம்
தேடலே அறிவு 
தேடலே தவம் 
தேடலே கல்வி
தேடலே வாழ்வு 
தேடுங்கள் தேடுங்கள் 
உன்னையும் தேடு 
உனக்குள் 
இருப்பவனையும் தேடு 
இருக்கும் வரையில் 
எல்லாமே தேடு
இதுவே 
வாழ்வின் தத்துவம் 
இதுவே 
வாழ்வின் தவம்.

பா.உதயன் ✍️

வாழ்த்துக்கள் அம்மா.

நானும் Big Data வில் ஒரு சேர்டிபிகேட் ஆவது எடுப்பம் என்று இரண்டு வருடங்களாக முயல்கின்றேன். படிக்க வெளிக்கிட்டால் நித்தா தான் வருகுது.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

 

14 minutes ago, நிழலி said:

வாழ்த்துக்கள் அம்மா.

நானும் Big Data வில் ஒரு சேர்டிபிகேட் ஆவது எடுப்பம் என்று இரண்டு வருடங்களாக முயல்கின்றேன். படிக்க வெளிக்கிட்டால் நித்தா தான் வருகுது.
 

தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டேயிருந்தால் அல்சைமர் போன்ற நரம்பு நோய்களும் தள்ளிப் போகும். சொன்னாப்போல நானும்  Python கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். மிகப்பெரிய தரவுகளை வேறெவரின் உதவியும் இன்றி நானே கையாள வேண்டுமென்பதே இலக்கு! 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Justin said:

வாழ்த்துக்கள்!

 

தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டேயிருந்தால் அல்சைமர் போன்ற நரம்பு நோய்களும் தள்ளிப் போகும். சொன்னாப்போல நானும்  Python கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். மிகப்பெரிய தரவுகளை வேறெவரின் உதவியும் இன்றி நானே கையாள வேண்டுமென்பதே இலக்கு! 

Python இணையத்திலா கற்கிறீர்கள்..? லிங் இருக்கா?

வாழ்த்துகள்.

35 minutes ago, Justin said:

வாழ்த்துக்கள்!

 

தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டேயிருந்தால் அல்சைமர் போன்ற நரம்பு நோய்களும் தள்ளிப் போகும். சொன்னாப்போல நானும்  Python கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். மிகப்பெரிய தரவுகளை வேறெவரின் உதவியும் இன்றி நானே கையாள வேண்டுமென்பதே இலக்கு! 

நான் இப்போது செய்யும் வேலைக்கும் கொஞ்சம் Python தேவை. படிக்கப் பஞ்சியியாலும் வேறு திசையில் கவனம் இருப்பதாலும் கணணி மொழிகளிலிருந்து விலகிப் போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

Python இணையத்திலா கற்கிறீர்கள்..? லிங் இருக்கா?

ஆம் ஓணாண்டி -இணையவழி. இலவச இணைப்பு வெளியே இருக்கிறதா தெரியவில்லை. நான் பயன் படுத்துவது எனது வேலைக் கணக்கைப் (log in) பாவித்து linkedIn learning மூலம்.  

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் அம்மா🙏

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மா படிப்புக்கு வயது ஒரு தடை இல்லை என நிரூபித்து விடடீர்கள்  . 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள் அம்மா. 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணங்குகிறேன் தாயே......பாராட்டுக்கள்......!   💐

  • கருத்துக்கள உறவுகள்


வணங்குகின்றேன் அம்மா! பாராட்டுகள் உரித்தாகுக.

  • கருத்துக்கள உறவுகள்

நல் வாழ்த்துக்கள் தொடர்ந்து படியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் வைரம்போல காலம் கடந்தாலும் காலாவதியாகாத ஒரு சில பொருட்களில் கல்வியும் ஒன்று.

கல்வி என்பது . முயற்சித்தாலும் எல்லோருக்கும் முடிவதில்லை , விடிய விடிய படிச்சாலும் அடுத்தநாள் அத்தனையும் மறந்துபோகும், அடிச்சு அடிச்சு படிக்க வைத்தாலும் சுத்தமாகவ புரியாதும் போகும்.

87 வயசு என்பது ஒரு மனிதனின் 100% ஆயுள்காலம், இத்தனை வயசிலும் கல்வியில் வெறிதனமாக இருக்கிறார் என்றால் அவர் கற்பதெற்கென்றே பூமிக்கு வரம் வாங்கி வந்தவர்.

வரம் வாங்கி வந்த வரதலெட்சுமி அம்மாவுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள் சொல்ல விருப்பமில்லை இவ்வளவு பெரிய கல்விமான்களை நானெல்லாம் வாழ்த்தினா அது தேறாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

இளமையுடன் காணப்படுகிறார்.(87 வயதாக தெரியவில்லை)  என்னால் முடியும் என்ற நம்பிக்கை தான் அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. 87 வயதாக தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வணங்குகின்றேன் தாயே !
பலருக்கும் நீங்கள் உதாரணமானவராக  வாழ்வதில் மிக்க மகிழ்வு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மா, கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதை நிரூபித்து உள்ளீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.