Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற குழுவில் எரிக்சொல்ஹெய்ம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற குழுவில் எரிக்சொல்ஹெய்ம்

By Rajeeban

24 Oct, 2022 | 09:04 AM
image

தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிப்பேரவையின்  உறுப்பினராக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள்  சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காலநிலைமாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசாங்கத்தின் ஆட்சிபேரவையில் இணைத்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதமடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேரவைக்கு தமிழக முதல்வர் தலைவராக உள்ளார்.மீள்புதுப்பித்தக்க சக்தி வளங்களிற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் அதிகளவுள்ளது  வனங்களும் உள்ளன என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/138289

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா.... விடயம் சூடேறுதே.. ...😀

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சோல்கைமை…
சிங்களமும் கூப்பிடுது, தமிழ்நாட்டு திராவிடமும் கூப்பிடுவதை பார்க்க…
புலிகளை அழிக்க, யாரெல்லாம் ஓரணியில் நின்றார்கள் என்பதை அறிய முடியும்.
காலநிலை என்ற போர்வையில்… ஈழத்தமிழனை இன்னும் சிப்பிலி ஆட்டப் போகின்றார்கள்.

ரணில்தான் அந்த ஆளை கூப்பிட்டது என்றால்… ஸ்ராலினுக்கு புத்தி எங்கே போனது.

வேண்டுமென்றே… திராவிடம் எங்களை அவமதிக்கின்றது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நரி ஏன் உள்ள இடமெல்லாம் திரியுது? இனி ஆர்ரை வாயிலை மண் அள்ளி போடப்போகுது?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஆகா ஆகா.... விடயம் சூடேறுதே.. ...😀

7 hours ago, தமிழ் சிறி said:

எரிக் சோல்கைமை…
சிங்களமும் கூப்பிடுது, தமிழ்நாட்டு திராவிடமும் கூப்பிடுவதை பார்க்க…
புலிகளை அழிக்க, யாரெல்லாம் ஓரணியில் நின்றார்கள் என்பதை அறிய முடியும்.
காலநிலை என்ற போர்வையில்… ஈழத்தமிழனை இன்னும் சிப்பிலி ஆட்டப் போகின்றார்கள்.

ரணில்தான் அந்த ஆளை கூப்பிட்டது என்றால்… ஸ்ராலினுக்கு புத்தி எங்கே போனது.

வேண்டுமென்றே… திராவிடம் எங்களை அவமதிக்கின்றது.  

29 minutes ago, குமாரசாமி said:

நரி ஏன் உள்ள இடமெல்லாம் திரியுது? இனி ஆர்ரை வாயிலை மண் அள்ளி போடப்போகுது?

மேற்கு தான் ஆளை அனுப்பியிருக்கும்.

மெதுவா குழப்ப கூடிய சந்தேகமே இல்லாத ஆள் இவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

thumb_large_eric_stalin.jpg
 
சால்வையை மெதுவா போடுங்க.

ஒட்டிய தலைமுடி விழுந்திட போவுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மேற்கு தான் ஆளை அனுப்பியிருக்கும்.

மெதுவா குழப்ப கூடிய சந்தேகமே இல்லாத ஆள் இவர் தான்.

வடக் கிழக்கு union  என்று ஒரு கதை அடிபடுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி சிறிலங்காவுக்கும், தமிழ்நாட்டுக்கும்  காலநிலை மாற்றக்குழுவில் இவர் இடம்பெறுகிறார். ?
எனது சந்தேகம் இந்தியாவுக்கு என இல்லாமல் தமிழ்நாட்டுக்கு மட்டும் காலநிலை மாற்ற குழுவில் இடம் பெறுகிறார்.
எல்லாவற்றுக்கும் நடுவண் அரசை நாடும் ஸ்ராலின் இதற்கு மட்டும் தனிப்பட முடிவு எடுத்தாரா?

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20221024-224553.jpg

நம்ம லெக் தாதா அங்க( ஈழம்) சோலிய முடுச்சிட்டு இங்கட வரார்.. யார் குடி கெட போகுதோ..😢

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

வடக் கிழக்கு union  என்று ஒரு கதை அடிபடுகிறது. 

விளங்கவில்லை.

பழையபடி ஒரு மாகாணமா? அல்லது

பாண்டிசேரி மாதிரியா?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

விளங்கவில்லை.

பழையபடி ஒரு மாகாணமா? அல்லது

பாண்டிசேரி மாதிரியா?

வடக்கும் கிழக்கும் இணைந்த Union. அதில் சிங்கள மாவட்டங்கள் இரண்டு -(அம்பாறை, பொலனறுவையை அண்டி ஒன்று) சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

வடக்கும் கிழக்கும் இணைந்த Union. அதில் சிங்கள மாவட்டங்கள் இரண்டு -(அம்பாறை, பொலனறுவையை அண்டி ஒன்று) சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. 

இதுக்கு ஏன் இவர் தமிழ்நாட்டிலை காலநிலை வேலை பாக்கோணும்?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இந்த பேரவைக்கு தமிழக முதல்வர் தலைவராக உள்ளார்.மீள்புதுப்பித்தக்க சக்தி வளங்களிற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் அதிகளவுள்ளது  வனங்களும் உள்ளன என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து  பெரிய படித்த மனிதர்கள் எல்லாம் வெளிநாடுகளில் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள்...அவர்களுக்கு தமிழ்நாடு பற்றி தெரியாத?. ...நேற்று விமானத்தில் வந்த இவருக்கு எப்படி தமிழ்நாடு பற்றி தெரியும்    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வடக்கும் கிழக்கும் இணைந்த Union. அதில் சிங்கள மாவட்டங்கள் இரண்டு -(அம்பாறை, பொலனறுவையை அண்டி ஒன்று) சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. 

முஸ்லிம்களுக்கு ஒன்றும் இல்லையா?.  மாகாண சபைக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்......தீர்வு கொடுக்க விரும்பினால் எங்கள் தமிழ் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை வைத்து கொடுக்கலாம்   ....கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து தமிழ் தலைவர்களும் வரவேற்பார்கள்...தீர்வு வேண்டாம் என்று எந்த தமிழ் தலைவரும் சொல்லவில்லை....சொல்லவும் மாட்டார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

வடக் கிழக்கு union  என்று ஒரு கதை அடிபடுகிறது. 

44 minutes ago, Kandiah57 said:

முஸ்லிம்களுக்கு ஒன்றும் இல்லையா?.  மாகாண சபைக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்......தீர்வு கொடுக்க விரும்பினால் எங்கள் தமிழ் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை வைத்து கொடுக்கலாம்   ....கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து தமிழ் தலைவர்களும் வரவேற்பார்கள்...தீர்வு வேண்டாம் என்று எந்த தமிழ் தலைவரும் சொல்லவில்லை....சொல்லவும் மாட்டார்கள்....

கந்தையர் இது முடிவல்ல.

கதை அடிபடுகுது என்று தான் சொல்கிறார்.

வரும் ஆனால் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியைப் பற்றி….. @nedukkalapoovan, @goshan_che, @ரஞ்சித்
@Nathamuni, @பெருமாள், @விசுகு,  @vasee , @பையன்26 @MEERA ,   @Kadancha @Maruthankerny  @satan, @alvayan @ராசவன்னியன் @வாலி  @suvy @புலவர் 
@Sasi_varnam @பாலபத்ர ஓணாண்டி @Eppothum Thamizhan @புங்கையூரன் @putthan  @nochchi
ஆகியோரின் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 ஸ்ராலினுக்கு புத்தி எங்கே போனது.

........அவருக்குத்தான்..அது இல்லையே....ஒட்டுத்தலை...வைத்ததே அதை மறைக்கத்தான்.

.யூனியன்...பிரதேசமாக வடக்கு கிழக்கு வந்தால்...உதயநிதியை முதலமைச்சராக நியமிக்க இப்பவே அச்சாரம் போடுகிறார்...அதுதான் சொல்கைமை நேரடியாகவே அழைத்து பதவிகொடுத்து..விருப்பமான மசாலாத்தோசையும் கொடுத்து பார்ட்டி வைத்தவர்... சோழியன் குடுமி (ஓட்டு மயிர் என்றாலும்) சும்மா ஆடுமே...நரி எட்டடி பாய்ந்த்தால் ..இசுடாலின் ..தலையை அமத்திப் பிடித்துக்கொண்டு..பதினாறு அடி பாய்வார்..😆

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ரை ப‌ற்றி என்ன‌ சொல்ல‌
2009 வாயை மூடி வேடிக்கை பார்த்த‌ லிஸ்ரில் இவ‌னும் ஒருவ‌ர் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்லவன் தவறுதலாக கெட்டது செய்தாலும் அது நன்மையாகவே முடியும்.......ஒரு கெட்டவன் விழுந்தடித்து நல்லது செய்தாலும் அது கெடுதலாகவே முடியும்......எம்மினத்தைப் பொறுத்தமட்டில் இவர் ஒரு நம்பிக்கைத் துரோகி......வேறென்ன சொல்ல முடியும்......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்தச் செய்தியைப் பற்றி….. @nedukkalapoovan, @goshan_che, @ரஞ்சித்
@Nathamuni, @பெருமாள், @விசுகு,  @vasee , @பையன்26 @MEERA ,   @Kadancha @Maruthankerny  @satan, @alvayan @ராசவன்னியன் @வாலி  @suvy @புலவர் 
@Sasi_varnam @பாலபத்ர ஓணாண்டி @Eppothum Thamizhan @புங்கையூரன் @putthan  @nochchi
ஆகியோரின் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளோம்.

என்னிடமும் கருத்தறிய விரும்பியமைக்குத் தமிழ்சிறியவர்களுக்கு முதலில் நன்றி. நானொன்றும் அவளவு அரசியலறிந்தவனல்ல. எனக்குத் தோன்றியதைப் பகிர்கின்றேன்,

முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கிய நகர்வில் எரிக்சொல்கைம் - ரணில் கூட்டு. முதற்பாகம் தமிழரது படைவலுவை இல்லாமற் செய்ததில் வெற்றி. இரண்டாம் பாகத்திற் தமிழரது அரசியற் கோட்பாட்டு வலுவைச் செயலிழக்கச் செய்யும் நகர்வு. முன்னையதில் தந்தையின் உதவி தேவைப்பட்டது. தற்போது மகனின் உதவியைநாடி பொன்னாடை போர்த்தப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

முஸ்லிம்களுக்கு ஒன்றும் இல்லையா?.  மாகாண சபைக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்......தீர்வு கொடுக்க விரும்பினால் எங்கள் தமிழ் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை வைத்து கொடுக்கலாம்   ....கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து தமிழ் தலைவர்களும் வரவேற்பார்கள்...தீர்வு வேண்டாம் என்று எந்த தமிழ் தலைவரும் சொல்லவில்லை....சொல்லவும் மாட்டார்கள்....

கால மாற்றத்தை (Change) நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லாதுபோனால், அந்த மாற்றமே எங்களை அழித்துவிடும். 

😉

48 minutes ago, nochchi said:

என்னிடமும் கருத்தறிய விரும்பியமைக்குத் தமிழ்சிறியவர்களுக்கு முதலில் நன்றி. நானொன்றும் அவளவு அரசியலறிந்தவனல்ல. எனக்குத் தோன்றியதைப் பகிர்கின்றேன்,

முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கிய நகர்வில் எரிக்சொல்கைம் - ரணில் கூட்டு. முதற்பாகம் தமிழரது படைவலுவை இல்லாமற் செய்ததில் வெற்றி. இரண்டாம் பாகத்திற் தமிழரது அரசியற் கோட்பாட்டு வலுவைச் செயலிழக்கச் செய்யும் நகர்வு. முன்னையதில் தந்தையின் உதவி தேவைப்பட்டது. தற்போது மகனின் உதவியைநாடி பொன்னாடை போர்த்தப்படுகிறது. 

இன்னும் எத்தனை காலத்திற்கு எரிக் சொல்கெய்மை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்போம்? 

நாம் விட்ட தவறுகளையும், எம்மால் தவற விடப்பட்ட சந்தர்ப்பங்களையும் திரும்பிப் பார்க்க மாட்டோமா? 

இனி வரப்போகும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த நாம் ஆயத்தமாக இருக்க வேண்டாமா? 

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை வரவேற்று அழைத்தமைக்கு நன்றி சிறியர்! ஒருபுறம் வி. முரளிதரன் வடக்கிற்கு புனர்வாழ்வளிக்கப்போறாராம், மறுபுறம் இந்தியா முன்னாள் போராளிகளை அழைக்குது, இன்னொருபுறம் புலிகளுக்கெதிராக சர்வதேசவலை விரித்த நரி சொல்ஹெய்மை அழைத்து பதவிகொடுத்து இந்தியாவுக்கும் அனுப்புது, இந்தியாவின் விருந்தாளிகள் மவுனம் காப்பு, மொத்தத்தில் எல்லாரும் சேர்ந்து  தமிழனுக்கு மொட்டையடித்து காடாத்தப்போகினம். கேக்கிறதுக்கு யார் வரப்போகினம்? உண்மையிலேயே தமிழர்பிரச்சனையை தீர்க்க விருப்பினால் யாரோட பிரச்சனையோ அவர்களோடேயே பேசவேண்டும் அதை விட்டு ஊரை அழைத்து கொழுவி விட்டு தமிழனை தனிமைப்படுத்தி மீண்டும் அழிக்கிற வேலை, உதில நரியார் கைதேர்ந்தவர் கண்டியளோ! முன்னாலை நல்ல பிள்ளை மாதிரி பேசிக்கொண்டு பின்னாலை வலை விரிப்பார்.                          

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது  ஒரு நல்ல  விடயம்

தமிழருக்கு  சார்பான அத்துடன் தமிழரின்  பலத்தை  காட்டும்  ஒரு  விடயம்

இந்த விடயத்தில்  சிங்களம்  சிறுபான்மையாகி  விடும்

இதை இறுகப்பிடித்துக்கொண்டு சரியாக காய் நகர்த்தினால் எரிக் சொல்கெய்மும் 

தாயகம்  தமிழகம்  புலம்  என ஆப்பிழுத்த  குரங்கின்  நிலைக்கு வருவார்

ஆனால் இதில்  தான் சிங்களத்தின் காய் நகர்த்தலும் அதன் நரித்தனமும் சார்ந்து பயம்  வருகிறது

ஏனெனில்  அது தாயகத்திலோ தமிழகத்திலோ புலத்திலோ சிங்களத்தை  சமாளிக்கும்  துளிக்கு கூட  இல்லை😪

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

எரிக் சொக்கெய்மைக் குறை சொல்குவதைத் தவிர்த்து, அந்தாள் மூலமாக ஏதும் செய்ய வழி இருக்கிறதா எனப் பார்ப்பதே புத்திசாலித்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

எரிக் சொக்கெய்மைக் குறை சொல்குவதைத் தவிர்த்து, அந்தாள் மூலமாக ஏதும் செய்ய வழி இருக்கிறதா எனப் பார்ப்பதே புத்திசாலித்தனம். 

அதுக்கு முதலில் ஆளைத்தெரிந்திருக்கணும் இல்லையா?

எரிக் சொக்கெய்மை இங்கே  நான்  குறை கூறவில்லை

ஆனால் அவர் மீது தமிழினத்துக்கு ஒரு ஆதங்கம்  என்றும்  உள்ளது இருக்கும்

இங்கே  நான்  குறிப்பிடுவது இவற்றை புத்திசாலித்தனமாக எமக்கு  சார்பாக மாற்ற நாதியில்லை  என்பதையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.