Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 24 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Recommended Posts

பதியப்பட்டது

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

எதிர்வரும் 30.03.2022 அன்று யாழ் இணையம் 23 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 24 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 24 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 24 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  • கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  • ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரு. நியானி,

ஒரு சம்சயம்..😎

சுமார் இருபது வருடங்களுக்கு முன், இங்குள்ள மொத்த விற்பனை கடைகளில் கணிப்பொறி உதிரி பாகங்களை வாங்கி, நானே சொந்தமாக கணணியை பொருத்தி (Computer Assembling) பயன்படுத்தி வந்தேன். இப்போது அந்த தொழிற்நுட்பம் அதரப் பழசாகிவிட்டாலும், நான் பெற்ற அனுபவத்தை வெளி இணைப்பு படங்கள் மூலம் விளக்கி, அனுபவக் கட்டுரையை எழுதலாம் என திட்டமிட்டுள்ளேன்.

அதை வரும் யாழ் இணையம் 24 ஆவது அகவை சிறப்பு பக்கத்தில் பதியலாமா..? 🤔

நன்றி..!

Posted

கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் என விதி சொல்கிறது.  எனக்கு  Tower நியாபகத்தில் உண்டு. 286 அல்லது 386 என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, nunavilan said:

கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் என விதி சொல்கிறது.  எனக்கு  Tower நியாபகத்தில் உண்டு. 286 அல்லது 386 என நம்புகிறேன்.

41UdkDlAynL._AC_SY355_.jpg

அதற்குப் பின் 486 வந்து பின்னர் "பென்டியம்" என ஒரு 'ப்ராசசர்' வந்தது. இப்பொழுது அந்த கணணியை மூட்டையாக கட்டி வீட்டு பரண் மீது வைத்துள்ளேன். 😔

பழைய கணணியை பரணிலிருந்து கீழே இறக்கி பிரித்து படம் எடுத்து, பின் தொழிற்நுட்ப தரவுகளை ஞாபகபடுத்தி தயார் செய்ய வேண்டும்..

கள விதிபடி சுத்தமான சுய ஆக்கங்களாக இருக்க வேண்டுமென்பதால், வெளி இணையத்தில் சில படங்களை அல்லது குறிப்புகளை இணைக்க வேண்டிய தேவை வரலாம்.. அப்போ வந்து யாரும் 'லொள்ளு' பண்ணக்கூடாது இல்லையா? 😋

அதை தெளிவுபடுத்திக்கொள்ள கேட்டேன் தம்பி..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழுதுங்கள் வன்னியன் அண்ணா ...எங்களுக்கும் பயன் உள்ளதாய் இருக்கும் ...வாசிக்க ஆவலாய் உள்ளேன் 

Posted
2 hours ago, ராசவன்னியன் said:

41UdkDlAynL._AC_SY355_.jpg

அதற்குப் பின் 486 வந்து பின்னர் "பென்டியம்" என ஒரு 'ப்ராசசர்' வந்தது. இப்பொழுது அந்த கணணியை மூட்டையாக கட்டி வீட்டு பரண் மீது வைத்துள்ளேன். 😔

பழைய கணணியை பரணிலிருந்து கீழே இறக்கி பிரித்து படம் எடுத்து, பின் தொழிற்நுட்ப தரவுகளை ஞாபகபடுத்தி தயார் செய்ய வேண்டும்..

கள விதிபடி சுத்தமான சுய ஆக்கங்களாக இருக்க வேண்டுமென்பதால், வெளி இணையத்தில் சில படங்களை அல்லது குறிப்புகளை இணைக்க வேண்டிய தேவை வரலாம்.. அப்போ வந்து யாரும் 'லொள்ளு' பண்ணக்கூடாது இல்லையா? 😋

அதை தெளிவுபடுத்திக்கொள்ள கேட்டேன் தம்பி..!

படங்கள், குறிப்புகள் எடுக்கப்பட்ட தளங்களை குறிப்பிட்டால் சரி . இவ்விதி உங்களுக்கு தெரிந்தது தானே. ரதி சொன்னது போல் நானும் ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் என விதி சொல்கிறது.  எனக்கு  Tower நியாபகத்தில் உண்டு. 286 அல்லது 386 என நம்புகிறேன்.

விதி சதி செய்யும் கவனம்.

2020 அகவைக்கு சுமேயும் நானும் எழுதியதை 4-5 நாட்களால் இடம் மாற்றிவிட்டார்கள்.

சுமே பல நாட்களாக சண்டை பிடித்து மீண்டும் அகவைக்குள் வந்தது.

என்னது எங்கோ ஓர் மூலைக்குள் முடங்கிக் கொண்டது.

இப்படியான செயல்களால் எழுதும் மனநிலையே குறைந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ராசவன்னியன் said:

திரு. நியானி,

ஒரு சம்சயம்..😎

அது திரு நியானி இல்லை ஐயா......திருமதி.நியானி  👩‍🔧

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

அது திரு நியானி இல்லை ஐயா......திருமதி.நியானி  👩‍🔧

face-screaming-in-fear_1f631.png    திருமதியா..?

எஸ்கேப்..! 😛

  • 2 weeks later...
Posted

வணக்கம்,

யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 24 இனை  சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 24 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

விதிமுறைகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  • கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  • ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/2/2022 at 05:48, நியானி said:

தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம்.

உங்கள் நம்பிக்கை வீண் போகாது  தேங்கிபோயுள்ள எண்ணங்கள்,கற்பனை திறனை யாழ் நதியில் திறந்து விட காத்திருக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்றாம் மாதம் ஆரம்பித்து மாதம்முடிய ஆக்கங்கள் போடாதவாறு நிறுத்த வேண்டும். அதைவிட்டு இப்பவே சிறப்புப் பகுதியைத் திறந்துவிட்டு ஆறுமாதங்களாக அதில் பதிவு போட்டுக்கொண்டிருந்தால் அதில் என்ன  இருக்கிறது??? நியானி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மூன்றாம் மாதம் ஆரம்பித்து மாதம்முடிய ஆக்கங்கள் போடாதவாறு நிறுத்த வேண்டும். அதைவிட்டு இப்பவே சிறப்புப் பகுதியைத் திறந்துவிட்டு ஆறுமாதங்களாக அதில் பதிவு போட்டுக்கொண்டிருந்தால் அதில் என்ன  இருக்கிறது??? நியானி 

நீங்கள் பதிவு போட்டவுடன் பூட்டி விடுவார்கள் என நினைக்கிறேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மூன்றாம் மாதம் ஆரம்பித்து மாதம்முடிய ஆக்கங்கள் போடாதவாறு நிறுத்த வேண்டும். அதைவிட்டு இப்பவே சிறப்புப் பகுதியைத் திறந்துவிட்டு ஆறுமாதங்களாக அதில் பதிவு போட்டுக்கொண்டிருந்தால் அதில் என்ன  இருக்கிறது??? நியானி 

மாசி மாதத்துக்கும், பங்குனி மாதத்துக்கும் இடையில்… ஆறு மாதங்கள் வருகின்றதா?
இடையில்… புதிதாக நான்கு மாதங்களை எப்ப இருந்து சொருகியவர்கள்?
எனக்கு இது, தெரியாமல் போட்டுதே… 🤣

  • 3 weeks later...
Posted

வணக்கம்,

யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதிக்கான இணைப்பு கருத்துக்களம் பகுதியின் மேற்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதியப்படும் ஆக்கங்கள் அதிக பார்வைக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள பல யாழ் கள உறுப்பினர்கள் உள்ளனர். ஆயினும், ஆக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. எனவே, காலந்தாழ்த்தாது ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை " யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • 3 weeks later...
Posted

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் பலரும் யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

இதுவரை " யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 20 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நியானி said:

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

வணக்கம் நியானி

முதலில் உங்கள் இந்த வேண்டுகோளுக்கு நன்றி.

அடுத்து இதுவரை எழுதியர்கள் ஒருவரின் திரிக்குள்ளும் உங்களின் ஊக்கங்கள் எதையும் காணவில்லையே ஏன்?
 
உங்களது இச்செயல் எமது அரசியல்வாதிகளையே நினைவுக்கு கொண்டுவருகிறது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது இன்று நேற்றறாக நடை பெறும் விடைையமல்ல..
விருப்ப புளளி மற்றும் விடையங்களை கேட்டுத் தான் பெற வேணும் என்று இல்லைஅதனால் இதை பற்றி பேசிக் கொள்வதற்கு பெரிதாக ஒன்று இல்லை.நான் கூட பல தடவைகள் முரண்பட்டு இருக்கிறேன்..பின் பிரியோசனம் இல்லை என்று இந்தப் பக்கம் அதிகம் வருவதற்கு கூட விரும்புவதில்லை.எங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்காக நாங்கள் சற்று மறை முகமாக வந்து போக வேண்டிய சூழ் நிலைகள் ஆனால் அதே விருப்பின் பெயரில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் மறை முகமாக வந்து போக வேணும் என்று இல்லை.இவை வந்து ஒரு வித இக்னோறன்ஸ் என்று தான் சொல்ல வேண்டும்.சக உறுப்பினர்கள் கூட மற்றைய உறுப்பினர்களை தங்களைப் போன்றவர்கள் தானே என்ற ஒரு நிலைப் பாட்டில் கூட இல்லை.நான் நிறைய அவதானித்து கொண்டே திரிவதனால் சொல்கிறேன்.அவரவர் தங்கள் இயல்புக்கு ஏற்றால் போல் தான் எதையும் செய்ய முடியும்.எதையும் கேட்டுத் தான் பெற வேணும் என்று இல்லை..அதே நேரம் யாயினியா கொஞ்சம் தலைக் கணம் கூட என்ற முத்திரையையும் குத்தி விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎30‎-‎03‎-‎2022 at 03:23, ஈழப்பிரியன் said:

வணக்கம் நியானி

முதலில் உங்கள் இந்த வேண்டுகோளுக்கு நன்றி.

அடுத்து இதுவரை எழுதியர்கள் ஒருவரின் திரிக்குள்ளும் உங்களின் ஊக்கங்கள் எதையும் காணவில்லையே ஏன்?
 
உங்களது இச்செயல் எமது அரசியல்வாதிகளையே நினைவுக்கு கொண்டுவருகிறது.

நன்றி.

ஏன் அவரின்ட கதைக்கு பச்சை குத்தினாய் எனக்கு ஏன் குத்தவில்லை என்று சண்டை பிடிக்கவோ😅....அவர் நியாணி என்ட பேரில் வந்து தான் ஊக்க படுத்த வேண்டும் பச்சை🙂 குத்த வேண்டும் என்று இல்லை . அவரது மற்ற ஜடியில் வந்து இதை எல்லாம் செய்கிறார்😎 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரதி said:

ஏன் அவரின்ட கதைக்கு பச்சை குத்தினாய் எனக்கு ஏன் குத்தவில்லை என்று சண்டை பிடிக்கவோ😅....அவர் நியாணி என்ட பேரில் வந்து தான் ஊக்க படுத்த வேண்டும் பச்சை🙂 குத்த வேண்டும் என்று இல்லை . அவரது மற்ற ஜடியில் வந்து இதை எல்லாம் செய்கிறார்😎 

இங்கு நீங்கள் மட்டும்தான் வாசகர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் ஒரு சமநிலையை பேணுபவராக இருக்கின்றீர்கள்.......பாராட்டுக்கள் சகோதரி......!  👏

  • 1 month later...
Posted

வணக்கம்,

யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 41 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கதைக் களம்

கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

கவிதைக் களம்

கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

_______________________________________________________________________________________

யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு:

யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.