கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும். நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதிலும் அவள் மிதியுந்தில் செல்லும் வேகம் பார்த்து ஆண்களே, டேய் தள்ளி நில்லுங்கடா என…
-
- 55 replies
- 26.2k views
-
-
பகுதி-1 வணக்கம் உறவுகளே.. நீண்டநாட்களின் பின்னர் ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில், அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்த சில சுவாரசியமான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று இதை எழுதுகிறேன். பத்து நாள் போட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுறான் என்று பகிடி விடக்கூடாது, ஏழுமலை,ஏழுகடல் தாண்டி .. என்ற புராணக்கதைகள் போல கடல் கடந்து காதலி.......சே.../மனைவியுடன் ஒரு சந்திப்பு என்ற வகைக்குள் அடக்குகிறேன். ஒரு சில சம்பவங்கள் யாரையும் காயப்படுத்தும், அவமதிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை அப்படி ஏதும் யாரையும் புண்படுத்தி இருக்குமாயின் முன்கூட்டியே அதற்காய் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். ****************************************************************************…
-
- 276 replies
- 24.5k views
- 1 follower
-
-
வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது 1984 ஒரு காலைப்பொழுது. எவரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. அத்துடன் மோட்டார் சைக்கிள் சத்தமும். வெளியில் வந்து பார்த்தால் புதிதாக திருமணமான எனது மச்சாளும் அவரது கணவரும் வந்திருந்தனர். வரவேற்று உபசரித்து இன்று மத்தியானம் இங்குதான் சாப்பாடு என்று முடிவெடுத்தபின் நிற்கும் சேவலில் எதுவேண்டும் என்று கேட்டு மச்சாள் புருசன் பூவோடு நிற்கும் சிவப்பு சேவலைக்கைகாட்ட அதை முறித்து உரிக்கும்படி தம்பியிடம் கொடுத்துவிட்டு வந்த எனக்கு ஒரே மன உளைச்சல். மச்சாள் நமக்கு கிடைக்காது வேறு ஒருவரை கட்டிவிட்டாவே என்ற ஆதங்கம் உள்ளிருந்தாலும ஒரு வயது கூடியவர் என்பதால் நாம்தானே பார்க்காது விட்டோம் என்பது புரிந்தது. எனது மன உளைச்சலுக்கு காரணம் அவர்கள் வந்திருந்த ச…
-
- 210 replies
- 24.1k views
- 1 follower
-
-
உறவுகளே இந்தத் திரியில் உங்கள் கருத்துக்களை வையுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&hl=
-
- 256 replies
- 22.5k views
-
-
முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்: இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது) முதல் பயணம். 2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக…
-
- 139 replies
- 20.1k views
- 1 follower
-
-
வசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமாக இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்??என தனக்குள் கேட்டுக் கொண்டாள். அதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத் தெரி…
-
- 239 replies
- 17.5k views
-
-
தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்பாளனாகவும் பிறர்மேல் கரிசனை கொண்ட அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார். தலைமைக்குரிய கண்டிப்பும் நேர்மையும் அதேநேரம் பிறருடைய உணர்வுகளைg; புரிந்தவாராக, அவர்களுடைய உணர்விகளிற்கும் மதிப்புக் கொடுக்கும் ஒருவராக இருந்தார். வெறுமனே தலைவர் அவர்களின் ஆளுமைக் கவர்ச்சியில் மட்டும் இளைஞர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படவில்லை. அவரிடம் இருந்த பனமுகப் பண்புகளே அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தது. ஒரு நாள் தலைவர் வாகனத்தில் முகாமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் மீன் வித்துக் கொண்டு சென்றார் ஒரு வியாபாரி. அவரைப்பார்த்ததும் தலைவருக்கு மீன…
-
- 65 replies
- 16.2k views
-
-
நெஞ்சத்தைக் கிள்ளாதே... பகுதி-1 அபி,.. பெயரைப் போலவே சற்றுக் குள்ளமாய் ஆனால் அழகானவள். காவியக் கண்கள் எப்போதும் புன்னகை சிந்தும் இதழகள் சொல்லிச் செய்வித்தது போன்ற தேகம், மண்ணுக்கே உரிய பொது நிறம் என்று கொஞ்சம் குட்டையாகப் பாவாடை,சட்டை போட்டுக்கொண்டு லுமாலா சைக்கிளில் நல்லூர் வீதிகளில் அவள் வரும் போது அது தான் திருவிழா கமலுக்கு. தந்தை தபாலதிபர். தாய் வீட்டு வேலை தான் நான்கு பெண்கள் என்பதனால் பொறுப்பும் அதிகம் அவளுக்கு, அக்கா படித்து முடித்து யாழில் பிரபலமான இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அபி 2006ம் ஆண்டு உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள், தங்கைகள் இரட்டைப் பிள்ளை…
-
- 134 replies
- 14.7k views
-
-
எங்கள் ஊரில் ஒருவர் டுவிஸ்ட் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைப்பதற்கு முடிவெடுத்து அதற்கான ஒழுங்குகள் கே கே எஸ் வீதியில் உள்ள சந்தி ஒன்றில் ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அப்போது நான் காபொத உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன். எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் அது பெரிய வியப்பூட்டும் விடயமாக இருந்ததால், மாலையில் ஒரே சனக்கூட்டமாக இருக்கும். தொடர்ந்து பத்து நாட்கள் விடாமல் ஆடுவதுதான் சாதனை. ஏற்கனவே ஒருவர் ஆடி சாதனை படைத்திருந்தார். அவரை முறியடிப்பதற்காய் இது. முதல் இரண்டுநாட்கள் என்னால் போக முடியவில்லை. மூன்றாம் நாள் நானும் தம்பி தங்கையும் அம்மாவுடன் போனோம். அங்கே மேடையில் பலர் நின்று ஆடிக் கொண்டிருந்தனர். எனது டியூசன் நண்பிகளும் பலர் வந்து நின்று பார்த்த…
-
- 103 replies
- 14.5k views
-
-
எண்ணைவளம் மிக்க சவூதி அரேபியா, அரசராலும் அவரது சொந்த பந்தங்களாலும் ஆளப்படும் ஒரு முடியரசு நாடு. அரச அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் அரச குடும்பத்தினை சேர்ந்தவர்கள். பல பெண்களை மணக்கும் அரச குடும்ப ஆண்மக்களால் உருவாகப் பட்ட கணக்கு இல்லா வாரிசுகளினால், பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோரும் இளவரசர்கள் தான். சவூதியின் மொத்த செல்வமும் இந்த அரச குடும்ப, மற்றும் இளவரசர்கள் வசம் தான் சிக்கி உள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போல தாய்லாந்திலிருந்தும் மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இவ்வாறாக இளவரசர் ஒருவரின் வீட்டுக்கு 23 -24 வருடங்களின் முன்னர் சுத்தம் செய்யும் பணியாளர் ஆக வந்து சேர்ந்தார் ஒரு தாய்லாந்து கிராமவாசி. அவரைப் போல் கிட்…
-
- 64 replies
- 14.3k views
-
-
Chapter 1 „ அரோகரா அரோகரா“ என்ற ஒரே கோஷம் எல்லா திசைகளிலிருந்தும் ஒலித்துக் கொண்டு இருந்தது . மக்கள் வெள்ளம் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு முன்னேற படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தனர் . இப்போராட்டத்தில் பக்கத்தில் நிற்பவரை கூட தம்மை அறியாது காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணம் அவ்வேளையில் அவர்களுக்கு கொஞ்சமேனும் இருந்ததாக தெரியவில்லை . எப்படியும் தாங்கள் தாங்கள் முண்டியடித்து முன்னேறி முருகப் பெருமானுக்கு அருகில் சென்று தரிசனம் பெற்று விட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. நல்லூர் ஆறுமுகப் பெருமானும் அழகாக பச்சை சாத்தி மெல்ல ஆடி ஆடி அசைந்து வரும் அக்காட்சி கண்கொள்ள காட்சியாக இருந்தது . ஆதித் அம் மக்கள் வெள்ளத்தில் அகப்படாமல் ஒரு ஓரமாக நின்று மிக சுவாரசியத்…
-
- 40 replies
- 13.5k views
-
-
முனேறிபாய்தல் நடவடிக்கை மூலம் வட்டுக்கோட்டை , சங்கானை கரையோரமான யாழ்ப்பாணத்து ஆறு வழுக்கியின் கரை வரைக்கும் இராணுவம் முன்னேறி இருந்த போது புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறை அடிக்கும் சமருக்கு தலைவர் பிரதான கட்டளை இட்டு கொண்டு இருந்தார்... பால்ராஜ் அண்ணை, சொர்ணம் அண்ணை, பாணு அண்ணை அனைவரும் முன்களங்களின் நிண்றார்கள்.... நானும் இன்னும் 10 பேர் வரை சங்கானை சண்டிலிப்பாய் எல்லையில் இருந்த வயல் கரையோரம் இருந்த ஒரு வீதியும்( மானிப்பாய் வீதியாக இருக்க வேண்டும்) சின்ன மதகு கொண்ட எல்லை பிரதேசத்தை பிடிச்சு அதில் ஒரு பாதுகாப்பு அமைக்க சொல்லி வந்த சொர்ணம் அண்ணையின் கட்டளையை நிறைவேற்ற போன போது த்னது முதலாவது அரனை ஆயுதங்களோடு கைவிட்டு போட்டு இரண்டாவது அரணாக இருந்த ஒ…
-
- 115 replies
- 13.3k views
-
-
தந்தையுமானவன்.....! அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது. அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு …
-
- 68 replies
- 12k views
- 1 follower
-
-
அவனைச்சுற்றி நின்று அனைவரும் கை தட்டி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். அப்பொழுது யாரோ அவனை தள்ளிவிட்டது போல இருந்தது . திடுக்கிட்டு விழித்தான் விமானம் சிங்கப்பூரின் சாங்கிவிமான நிலையத்தில் தரையிறங்கிக்கொண்டிருந்தது. தங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்தபயணிகள் விமானிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கைதட்டிக்கொண்டிருந்தனர் என்பதது அப்பொழுதான் அவனிற்கு தெரிந்தது 0000000000000000 நானும் விதவைதான் எனக்கு யுத்தத்தின் வலி தெரியும் எனவே சமாதானம் வேண்டும் என்றபடி சமாதான விதவைத் தேவதையாக வாக்கு கேட்டு சந்திரிகா ஆட்சியில் அமர்ந்து பேச்சு வார்தைகளும் தொடங்கி விட்டிருந்த காலகட்டம்.சந்திரிக்கா தேர்தலில் நிற்கும் பொழுதே புலிகளிற்கும் அவரிற்கும் சில இரகசிய பேச…
-
- 55 replies
- 11.9k views
-
-
அமெரிக்க தீர்மானம் பாகம் 1: மாசி மாதத்தின் இறுதி நாட்களுள் ஒன்று. விடிகாலையிலேயே தொலைபேசி அலறியது. யாரப்பா அது இந்த நேரத்தில் என்று எரிச்சலுடன் தொலைபேசிய எடுத்துக் காதில் வைத்தேன். "ஹலோ.. என்ன நித்திரையா?! ஜெனீவாவில நிண்டுகொண்டு நான் தான் டி.எஸ். கதைக்கிறன்.. அவசரம் இங்கை.." தொலைபேசியின் மறுமுனை படபடத்தது. "ஓ.. நீங்களா.. என்ன இந்த நேரத்தில?!" இது நான். "இந்த நேரத்திலயோ? நல்லா கேப்பீங்களே.. இங்க முதல் வரைவுத் தீர்மானம் வந்திட்டிது.. பார்த்தியளோ? அல்லது அதுவும் இல்லையா?" "ம்ம்ம்.. பார்த்தனான்... உப்புச் சப்பில்லாமல் இருந்தது.." "அதேதான்.. இதுக்கு உங்களால எதுவும் செய்ய முடியுமே.. ஒரு ஃபோன் அடிச்சு பார்க்கிறது.." "ஓ.. அங்கையா.. இதோ அடிச்சுப் பா…
-
- 122 replies
- 11k views
-
-
வன்னி விடுதலைப்புலிகளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அங்கு வாழ்ந்த பலருக்கு அழகான காலம்தான். சிறிலங்காவின் பொருளாதாரத்தடைக்கு மத்தியிலும், போர்ச்சூழலுக்கு மத்தியிலும் வன்னி தன்னை நிமிர்த்தி வைத்திருந்தது.போராளிகள் பலத்த சவால்களை சந்தித்தனர்.மக்களும் சவால்களுடனேயே முன்னேறினர். உழைப்பின் பின் / களைப்பின் பின் மெல்ல வீசும் தென்றல்க்காற்றில் சுற்றி இருந்து உணவருந்தும் சுகம் இருந்தது.கலகலப்பான மனம் இருந்தது.அநேகருக்கு விடுதலை நோக்கிய உழைப்பிருந்தது.அது ஆளாளுக்கு சற்று வேறுபடினும் எல்லோரிடமும் ஒரு திருப்தியிருந்தது. வன்னியில் இருந்து பத்திரிகை வெளியானது.வானொலி ,தொலைக்காட்சியும் ஒலிபரப்பாயிற்று. புத்தக வெளியீடுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.விரல் விட்டு எண்ணக்க…
-
- 148 replies
- 11k views
-
-
எங்கட கதை பெரிசா சுவாரசியமாய் இருக்காது.நாங்கள் மூன்று பேர் ஒன்றாய் ஒரு அறையில தங்கியிருக்கிறம். இலங்கையில இருந்து இன்னொரு ஆசிய நாட்டுக்கு வந்து கப்பலுக்கு கொஞ்சக்காசைக் கட்டிட்டு ஆறு மாதமாய் பார்த்துக்கொண்டிருக்கிறம்.ஒ எங்களைப்பற்றி சொல்ல மறந்திட்டன்.நான் வன்னியில கொஞ்சக்காலம் ஊடகத்தில வேலை செய்தனான் என்றதைவிட சொல்ல ஒன்றுமில்லை.மாத்தளனில குடும்பத்தோட ஆமியின்ர பகுதிக்கு வந்திட்டன்.மற்றது டாவின் அவன் சங்கானைப் பெடியன்.அவன் எங்களுக்குள்ள வசதியான ஆள் .தமையன் இரண்டு பேர் வெளியால இருக்கிறாங்கள்.அவன் கொம்புயுட்டர் படிச்சவன்.அவன்ர லப் டொப்பில தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறன். அடுத்தது மோகன் அவன் பதினாலு வருஷம் இயக்கத்தில இருந்து இரண்டு வருஷம் புனர்வாழ்வுல இருந்தவன்.அ…
-
- 133 replies
- 10.9k views
-
-
1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்கள் பெயர் தெரிந்துவிடும் என்கிற சந்தோஷம், "விலாசம்", இப்படி ஏதோ ஒன்று. அந்…
-
- 101 replies
- 10.9k views
- 1 follower
-
-
எழுபதுகளின் கடைசி. மூன்றாம் முறை A/L பரீட்சை எழுதிவிட்டு ஏதோ டாக்டர் ஆக போகின்றவன் கணக்கு விடுமுறைக்கு மன்னாருக்கு அத்தானிடம் செல்கின்றேன்.அத்தானின் ஜீப்பில் மன்னார் வங்காலை காடுகள் எல்லாம் சுற்றி அடித்தாலும் பொழுது போவதாக இல்லை .ஒரு லைபிரரி ,ஒரு தியேட்டர் , எங்கும் கழுதைகள் ,அதிக வெய்யிலால் காஞ்சு கிடக்கு மண். இரண்டு நாட்களில் அம்மாவும் அக்காவும் மன்னாருக்கு வந்து சேர்ந்தார்கள் .சும்மா இருந்த அத்தானின் குவார்ட்டர்சில் இந்தியாவில் இருந்து கப்பல் வரும் போது கப்பல் கப்டன் ,ரேடியோ ஆபிசர் வரை தங்குமிடமாக அது மாறியிருந்தது .அவர்கள் ஒரே குடியும் கும்மாளமும் தான் .அத்தான் எச்சில் கையால் காகம் விரட்ட மாட்டார். குடி என்றால் என்னவென்று இன்றுவரை தெரியாது .அவர்களுக்கு இடமும் பொருளு…
-
- 75 replies
- 10.5k views
-
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர…
-
-
- 107 replies
- 10.5k views
- 1 follower
-
-
அது துனிசியாவில் ஒரு நகரம்.. முகமெட் ஓரளவு வசதியானவன் சொந்தமாக TAXI வைத்திருந்தான்.. திருமணமாகி ஒரு ஆண்குழந்தை அழகான மனைவி சொந்தவீடு ஆனந்தமான வழமாக வாழ்க்கை என வாழ்வு போய்க்கொண்டிருந்தது.. மார்கழி மாசம் சரியான குளிர் மனைவி கேட்டாள் பிள்ளையைக்கூட்டிக்கொண்டு போய் அம்மாவீட்டில் 2 நாள் தங்கி வரட்டா என. இன்றைய தினத்தின் முக்கியத்தை உணராதவன் அதற்கென்ன ஆனால் நான் வேலைக்கு போய்விட்டு அங்கு வரமாட்டேன் அங்கு வந்தால் ஆட்கள் அதிகம் அவர்களுடன் பொழுது போகும் ஆனால் நான் ஓய்வெடுக்கமுடியாது என. அது வழமையாக நடப்பது என்பதால் மனைவியும் ஒத்துக்கொண்டாள். வழமை போல டக்சியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட முகமெட் மனைவியைக்கொண்டு போய் தாய்வீட்டுக்கு போகும் புகையிரத ந…
-
- 97 replies
- 10.1k views
- 1 follower
-
-
கணனித் திரையில் தனது அம்மாவைப் பார்த்து என் மனைவி கதைத்தபோது, நாளை நான் இருப்பேனா இல்லையோ என்ற அவரின் வயதிற்கேற்ற கூற்று என்மனைவியை ஆதங்கப்படுத்தியதில் வியப்பில்லை. அந்த ஆதங்கம் 90 வயதைத் தொடும் தனது அம்மாவைக் காணவேண்டும் என்ற தவிப்பை மேலோங்கச் செய்தது. தாய்தந்தையரை இழந்துவிட்ட எனக்கும் என் மாமிதான் தாயாக விளங்கினார். மனைவி துன்பப்பட்டால் தீர்த்துவைப்பேன் என்று திருமணத்தின்போது அய்யருக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்து, கூடவே விடுமுறையும் வரவே, துணைவியையும் அழைத்துக்கொண்டு பிறந்தமண்ணுக்குப் பறந்தேன். விடிந்ததும் எழுந்து யாழில் செய்திகள் பார்த்துக் கருத்துக்களும் எழுதும் எனக்கு இனிச் சிலவாரங்கள் அது முடியாதே என்ற கவலை எழுந்தது. கைத்தொலைபேசி பாவிக்கவும் தயக…
-
- 67 replies
- 9.8k views
-
-
மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான் ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத தெய்வங்கள் இல்லை. பிள்ளை…
-
- 36 replies
- 9.6k views
-
-
சிங்களம் தெரியுமா? யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிய மினிபஸ்ஸில் முதல் பஸ்சை சன நெரிசல் காரணமாக விட்டுவிட்டு அடுத்ததில் ஏறி முன் சீற்றில் ஜாலியா குந்தி இருந்த போது பள்ளி சீருடைகளுடன் ஒரு மாணவர் குழாம். ஒருவரை தவிர அனைவரும் மாணவிகள். அந்த மாணவனும் என்ன நினைத்தானோ அருகில் வந்து அங்கிள் இதில இருக்கலாமா என்று நான் ஏதோ மினிபஸ் உரிமையாளர் போல கேட்டான். நானும் பக்கத்தில் இருந்த குட்டி சீட்டை மடித்து அவனின் வருகைக்கு உதவினேன். வந்த குட்டியன் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப்போட்டது. சிங்களம் தெரியுமா? விசரனின் ஒஸ்லோ முருகா கத்தல்தான் மண்டைக்குள்ள முதலில் வந்தது. சிங்களத்தில் எண்ணவே தெரியாத என்னை இவன் எதுக்கு தமிழில சிங்களம் தெரியுமா என்கின்…
-
- 28 replies
- 9.3k views
-
-
குறிப்பு. பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன. பாம்பு “க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது. அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் த…
-
-
- 60 replies
- 9.3k views
-