Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது.

யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம்.

இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 26 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  • கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  • ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியானி said:

எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது.

@ரஞ்சித் எழுதிய இரண்டாம் பயணத்தையும் 26 வது அகவைக்குள் உள்வாங்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

@ரஞ்சித் எழுதிய இரண்டாம் பயணத்தையும் 26 வது அகவைக்குள் உள்வாங்கலாமே.

அது ஒரு உணர்வு பூர்வமான தொடர்...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

@ரஞ்சித் எழுதிய இரண்டாம் பயணத்தையும் 26 வது அகவைக்குள் உள்வாங்கலாமே.

ஓம் அது ஒரு நல்ல பயணக்கட்டுரை..........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி.

நானும் யோசித்து பதிகிறேன்.🙏

ஒருவேளை, அது இனிய யாழ் உறவின் சந்திப்பாகவும் இருக்கலாம்.😍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒருவேளை, அது இனிய யாழ் உறவின் சந்திப்பாகவும் இருக்கலாம்.😍

ஆகா வன்னியர்

உங்கள் சந்திப்பை படங்களுடன் பதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களச் சொந்தங்களுக்கு வணக்கம். நான் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் என் சுய ஆக்கங்களாய் இருப்பினும், பெரும்பாலும் 'சமூகச் சாளரம்', 'தமிழும் நயமும்' பகுதிகளில் பதிவிடுகிறேன். சமீப காலமாக ஒளிப்படம் இணைந்த சில கட்டுரைகளை முகநூலில் பதிந்து பின்னர் யாழில் அவற்றின் இணைப்பை 'சமூகவலை உலகம்' பகுதியில் பதிகிறேன்.

           ஒன்றிரண்டு கட்டுரைகளை 'யாழ் அகவை - சுய ஆக்கங்கள்' பகுதிக்கு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றித் தந்தார்கள். நேராக 'சுய ஆக்கங்கள்' பகுதியில் பதிய வழி உள்ளதா என்பதை யாழ் உறவுகளில் யாராவது தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி மாற்றித் தரக் கோருதலையும் முறையாக எந்த இடத்தில் எழுதலாம் எனக் கூறவும்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2024 at 12:17, நியானி said:

யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

யாழ் களச் சொந்தங்களுக்கு வணக்கம். நான் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் என் சுய ஆக்கங்களாய் இருப்பினும், பெரும்பாலும் 'சமூகச் சாளரம்', 'தமிழும் நயமும்' பகுதிகளில் பதிவிடுகிறேன். சமீப காலமாக ஒளிப்படம் இணைந்த சில கட்டுரைகளை முகநூலில் பதிந்து பின்னர் யாழில் அவற்றின் இணைப்பை 'சமூகவலை உலகம்' பகுதியில் பதிகிறேன்.

           ஒன்றிரண்டு கட்டுரைகளை 'யாழ் அகவை - சுய ஆக்கங்கள்' பகுதிக்கு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றித் தந்தார்கள். நேராக 'சுய ஆக்கங்கள்' பகுதியில் பதிய வழி உள்ளதா என்பதை யாழ் உறவுகளில் யாராவது தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி மாற்றித் தரக் கோருதலையும் முறையாக எந்த இடத்தில் எழுதலாம் எனக் கூறவும்.

வணக்கம் சுப.சோமசுந்தரம்

மேலே நியானி எழுதிய பந்தியில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கிறது.

  • தொடங்கியவர்

வணக்கம்,

யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 26 இனை  சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
 
12 hours ago, சுப.சோமசுந்தரம் said:

நேராக 'சுய ஆக்கங்கள்' பகுதியில் பதிய வழி உள்ளதா என்பதை யாழ் உறவுகளில் யாராவது தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி மாற்றித் தரக் கோருதலையும் முறையாக எந்த இடத்தில் எழுதலாம் எனக் கூறவும்.

யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது
 
ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
 
யாழ் களத்தில் முதலில் பதிந்த பின்னர் முகப்புத்தகத்தில் விரும்பினால் பிரசுரிக்க வேண்டுகின்றோம்.

சுய ஆக்கங்கள் பகுதிக்கு ஏதாவது பதிவுகளை மாற்ற விரும்பினால் இந்தத் திரியிலேயே அறியத்தாருங்கள்.

நன்றி.

  • 1 month later...
  • தொடங்கியவர்

வணக்கம்,

யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.  கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

  1. அக்காவின் அக்கறை......!  (suvy)

  2. புதனும் புதிரும்  ( Kavi arunasalam)
  3. பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)
  4.  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)
  5.  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)
  6.  மரணம்  (ரஞ்சித்)
  7.  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan)
  8. அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam)
  9. பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan)
  10. ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)
  11.  மயிலம்மா.  ( suvy)
  12.  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan)
  13. ஆதி அறிவு   ( ரசோதரன்)
  14. இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)
  15.  என்ன பார்ட்டி இது??  (விசுகு)
  16.  முடிவிலி  (ரசோதரன்)
  17.  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)
  18.  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்)
  19. இலை என்றால் உதிரும்   (ரசோதரன்)
  20. ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்)
  21. ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)
  22.  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)
  23.  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)
  24.  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)
  25.  வாசலும் வீடும்  (ரசோதரன்)
  26.   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)
  27.  மேய்ப்பன்  (ரசோதரன்)
  28.   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)
  29.   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)
  30.  விழல்  (ரசோதரன்)

இதுவரை பதியப்பட்ட 30 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் ரசோதரன் 12 ஆக்கங்களை பதிந்துள்ளார். உற்சாகமாக சுய ஆக்கங்களை பதியும்  உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள உறுப்பினர்கள் பலர் இன்னும் பதியாமல் பார்வையாளார்களாக உள்ளனர். யாழ் அகவை 26 க்கு இன்னும் 15 நாட்களே உள்ளன என்பதால் விரைவில் ஆக்கங்களைப் பதியுங்கள்.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்+

பங்களித்துச் சிறப்பிக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 நான் பதிவிட்டஇரண்டு கவிதையையும் 26 வது அகவைக்குள் உள்வாங் முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன ஆலோசனை ..நீங்களே   அங்கு சென்று பதியலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கடவுள் விற்பனைக்கு கவிதையை இங்கு உள்வாங்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2024 at 20:32, நியானி said:

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

வணக்கம், காடு திரைவிமர்சனம் வண்ணத்திரை பகுதியிற் பதிந்துள்ளேன். அகவை26க்கான பகுதியில் மாற்றி இணைத்துவிட முடியுமா? 

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • தொடங்கியவர்
6 hours ago, nochchi said:

வணக்கம், காடு திரைவிமர்சனம் வண்ணத்திரை பகுதியிற் பதிந்துள்ளேன். அகவை26க்கான பகுதியில் மாற்றி இணைத்துவிட முடியுமா? 

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

ஆக்கம் "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2024 at 23:04, நியானி said:

ஆக்கம் "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் @நியானி

ஊர்ப் புதினம் பகுதியில் உள்ள, தமன்னா திரியை... 
யாழ். அகவை சுய ஆக்கம் பகுதிக்கு நகர்த்தி விட முடியுமா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை தான் கூடுதலான ஆக்கங்களைப் படைத்த ஆண்டாக இருக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த தடவை தான் கூடுதலான ஆக்கங்களைப் படைத்த ஆண்டாக இருக்கப் போகிறது.

👍....

சைவசமயப் பரீட்சையில் இன்னும் ஒரு பேப்பர், இன்னும் ஒரு பேப்பர் என்று கேட்டு எழுதுகிற மாதிரி இது போய்க் கொண்டிருக்கின்றது......... 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த தடவை தான் கூடுதலான ஆக்கங்களைப் படைத்த ஆண்டாக இருக்கப் போகிறது.

சந்தோசமான விடையம் தானே..நான் இதற்குள் வரும் போதெல்லாம் எட்டிப் பார்த்துட்டு ஒரு பச்சையை தட்டி விட்டுட்டு போய் விடுவேன்..பின் இரவுகளில் வந்து படித்துக் கொண்டு இருப்பேன்..சொல்லப் போனால் கொஞ்சம் சீனியர் ரிக்கற்றுகளால் தான் இந்தப் பக்கம் வாறதே.😆🖐️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

👍....

சைவசமயப் பரீட்சையில் இன்னும் ஒரு பேப்பர், இன்னும் ஒரு பேப்பர் என்று கேட்டு எழுதுகிற மாதிரி இது போய்க் கொண்டிருக்கின்றது......... 

இதிலே உங்களுக்கும் பெரிய பங்கு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி என்னுடைய சிலகவிதைகள்   கவிதைக் கள த்தில்/26 ஆவது அகவையில் போட்டென்..அவை எங்கு இருப்பதாகவும் தெரியவில்லை ...அவையின் கள  நிலைமைகளை அறிய ஆவலாக உள்ளேன்...அவற்றை உரிய இடத்துக்கு மாற்ற முடியுமா..

கண்டால் வரச் சொல்லுங்க

நானும் ஒரு அடிவிட்டன்

கனத்தைப் பேய்க்  கவிதை…..

பிஞ்சுக் காதல்

தம்பி நீ கனடாவோ?

26 வது அகவை மலருக்காக எழுதப் ப்ட்டவை

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

https://yarl.com/forum3/forum/247-யாழ்-26-அகவை-சுய-ஆக்கங்கள்/

மேலே உள்ள சுட்டியை அழுத்தி பாருங்கள்.எல்லாமே பத்திரமாக இருக்கிறது.

அதற்கு யாயினியைக் கேட்டால் அவ என்ன தான் செய்வா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அய்யா...தலைக்கு மேலை வேலை...அத்ஹடியில் இருப்பது ..அவசரமாகத் தேடுவ்து..தவறவிட்டுவிட்டேன்.. மன்னிக்கவும் ...இருவரும்

2 hours ago, ஈழப்பிரியன் said:

https://yarl.com/forum3/forum/247-யாழ்-26-அகவை-சுய-ஆக்கங்கள்/

மேலே உள்ள சுட்டியை அழுத்தி பாருங்கள்.எல்லாமே பத்திரமாக இருக்கிறது.

அதற்கு யாயினியைக் கேட்டால் அவ என்ன தான் செய்வா?

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.