Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவித்தல்: யாழ் இணையம் 23 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Featured Replies

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

எதிர்வரும் 30.03.2021 அன்று யாழ் இணையம் தனது 23 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியில் இருந்து மீள ஒளிக்கீற்று தென்படும் காலகட்டத்தில் யாழ் இணையம் 23 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

சுய ஆக்கங்கள் இயன்றவரை பின்வரும் கருப்பொருள்களில் இருத்தல் விரும்பப்படுகின்றது

  • கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி கால அனுபவங்கள்,
  • கோவிட்-19  பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள்
  • யாழ் கள அனுபவங்கள்
  • எதிர்கால வாழ்வு பற்றிய திட்டமிடலும், சாத்தியமான வடிவமைப்புக்களும்

இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 23 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 23 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  • கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  • ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  • கருத்துக்கள உறவுகள்

எனது தனிப்பட்ட கருத்து.. இந்த ஆண்டில் இருந்தாவது கள உறவுகளின் தரமான ஆக்கத்திற்கு 1.2.3ஆம் பரிசுக்குரிய ஆக்கஙகளாக தெரிவு செய்து தாயக உறவுகளுக்கு படிக்க வசதி அற்ற அல்லது தற்காலிக உதவியாக போய் சேரட்டும்.. அந்த பரிசுத் தொகை கூட எங்களுக்கு வேண்டாம்..அந்த பரிசுத் தொகைகளையும் கள உறவுகள் பொறுப்பு எடுத்தல் நன்று.யாராச்சும் சண்டைக்கு வராதீங்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம்,

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 23 இனை  சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

சுய ஆக்கங்கள் இயன்றவரை பின்வரும் கருப்பொருள்களில் இருத்தல் விரும்பப்படுகின்றது

  • கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி கால அனுபவங்கள்,
  • கோவிட்-19  பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள்
  • யாழ் கள அனுபவங்கள்
  • எதிர்கால வாழ்வு பற்றிய திட்டமிடலும், சாத்தியமான வடிவமைப்புக்களும்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ்கள அனுபவம் பற்றி எழுதலாம் எண்டு இருக்கிறன். கட்டாயம் வெட்டுக்கொத்து இருக்கும். படிக்கிற ஆக்களுக்கு வாயால இரத்தமும் வரலாம். அவ்வளவு பயங்ங்ங்கரமாய் இருக்கும். 👹

படிக்கிற ஆக்களுக்கு பிரசர் குளிசை இலவசம். :cool:
 
கதாநாயகியை தவிர வில்லன் ,வில்லி பாத்திரங்கள் உண்டு.😉

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2021 at 01:45, யாயினி said:

எனது தனிப்பட்ட கருத்து.. இந்த ஆண்டில் இருந்தாவது கள உறவுகளின் தரமான ஆக்கத்திற்கு 1.2.3ஆம் பரிசுக்குரிய ஆக்கஙகளாக தெரிவு செய்து தாயக உறவுகளுக்கு படிக்க வசதி அற்ற அல்லது தற்காலிக உதவியாக போய் சேரட்டும்.

ஒருவரும் இன்னும் எழுதவேயில்லை! பரிசு கொடுத்தால்தான் ஆக்கங்கள் வரும்போலிருக்கு!😬

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஒருவரும் இன்னும் எழுதவேயில்லை! பரிசு கொடுத்தால்தான் ஆக்கங்கள் வரும்போலிருக்கு!😬

ஏன்  நீங்க ஆரம்பித்து  வைக்கலாம்  தானே ராசா??

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

ஏன்  நீங்க ஆரம்பித்து  வைக்கலாம்  தானே ராசா??

வெட்டி ஒட்டவே (வாசித்த பின்னர்) நேரம் போதாமல் இருக்கு! கனக்க ஐடியா இருக்கு ஆனால் நேரம்தான் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஒருவரும் இன்னும் எழுதவேயில்லை! பரிசு கொடுத்தால்தான் ஆக்கங்கள் வரும்போலிருக்கு!😬

கிருபன் நீங்களும் சுவியும் எதினாலோ முழு உறுப்பினர்களும் எழுதிய மாதிரி இருக்கும்.
எனவே இருவரும் களம் இறங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2021 at 22:09, குமாரசாமி said:

வில்லி பாத்திரங்கள் உண்டு

வில்லி யாரா இருப்பா ? என்றதில் எனக்கு ஏகப்பட்ட  டவுட் 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபன் நீங்களும் சுவியும் எதினாலோ முழு உறுப்பினர்களும் எழுதிய மாதிரி இருக்கும்.
எனவே இருவரும் களம் இறங்குங்கள்.

Résultat de recherche d'images pour "ice on the head gif"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/2/2021 at 15:01, பெருமாள் said:

வில்லி யாரா இருப்பா ? என்றதில் எனக்கு ஏகப்பட்ட  டவுட் 😁

இந்த திரிக்கு போய் பாருங்கோ. இரண்டு கோல்டன் லேடிஸ் வந்துட்டு போயிருக்கினம்.இதுக்கு மேலை சொல்ல வெளிக்கிட்டன் எண்டால் நான் இஞ்சை குடியிருக்கேலாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 16:28, குமாரசாமி said:

இந்த திரிக்கு போய் பாருங்கோ. இரண்டு கோல்டன் லேடிஸ் வந்துட்டு போயிருக்கினம்.இதுக்கு மேலை சொல்ல வெளிக்கிட்டன் எண்டால் நான் இஞ்சை குடியிருக்கேலாது. 🤣

அந்த லிங்கை  இங்கை செருகி இன்னுமொரு பச்சை வாங்கி விட்டார்.  கு சா அண்ணா கில்லாடி தான்  ;)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sabesh said:

அந்த லிங்கை  இங்கை செருகி இன்னுமொரு பச்சை வாங்கி விட்டார்.  கு சா அண்ணா கில்லாடி தான்  😉

பிள்ளைகள் அழுவது தனக்கு இன்னும் இன்னும் அதிகமாய் வேண்டும் என்றுதான்.....!  😂

Crying Baby GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, suvy said:

பிள்ளைகள் அழுவது தனக்கு இன்னும் இன்னும் அதிகமாய் வேண்டும் என்றுதான்.....!  😂

Crying Baby GIFs - Get the best GIF on GIPHY

நான் முற்றும் துறந்தவன் எண்டால் நம்மவே போறியள்.😁

  • தொடங்கியவர்

வணக்கம்,

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதிக்கான இணைப்பு முகப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதியப்படும் ஆக்கங்கள் அதிக பார்வைக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியிலும் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.  கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை " யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 22:28, குமாரசாமி said:

இந்த திரிக்கு போய் பாருங்கோ. இரண்டு கோல்டன் லேடிஸ் வந்துட்டு போயிருக்கினம்.இதுக்கு மேலை சொல்ல வெளிக்கிட்டன் எண்டால் நான் இஞ்சை குடியிருக்கேலாது. 🤣

ஆராயிருக்கும் அந்த கோல்டன்ஸ்?🤔 அதுவும் குமாரசாமியை குடியிருக்க விடாமல் பண்ணக்கூடிய ஆக்கள் 😝

On 22/2/2021 at 22:28, குமாரசாமி said:

frame Steuerelement

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2021 at 22:09, குமாரசாமி said:

நான் யாழ்கள அனுபவம் பற்றி எழுதலாம் எண்டு இருக்கிறன். கட்டாயம் வெட்டுக்கொத்து இருக்கும். படிக்கிற ஆக்களுக்கு வாயால இரத்தமும் வரலாம். அவ்வளவு பயங்ங்ங்கரமாய் இருக்கும். 👹

படிக்கிற ஆக்களுக்கு பிரசர் குளிசை இலவசம். :cool:
 
கதாநாயகியை தவிர வில்லன் ,வில்லி பாத்திரங்கள் உண்டு.😉

நிழலியருக்கு  தலையில் முடியே வளரவிடுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருப்போம் .😄

On 22/2/2021 at 21:28, குமாரசாமி said:

இந்த திரிக்கு போய் பாருங்கோ. இரண்டு கோல்டன் லேடிஸ் வந்துட்டு போயிருக்கினம்.இதுக்கு மேலை சொல்ல வெளிக்கிட்டன் எண்டால் நான் இஞ்சை குடியிருக்கேலாது. 🤣

அட இவாவே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, பெருமாள் said:

நிழலியருக்கு  தலையில் முடியே வளரவிடுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருப்போம் .😄

  என்ன  பெருமாள் நீங்கள்? நான் எப்பவோ தொடங்கீட்டன் எல்லோ. தலைமுடி என்ன தாடி முடி கூட  நினைச்சு பாக்க கூடாது எண்டதிலை கண்ணும் கருத்துமாய் இருக்கிறன் 😎

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம்,

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதியில் இதுவரை பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆர்வமுடனும் உற்சாகமாகவும் சுய ஆக்கங்களை பதிந்து சிறப்பிக்கும் கள உறுப்பினர்களுக்கு நன்றிகள்.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புதிய அகவையில்  இன்று காலடி பதிக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்!

  • 1 month later...
  • தொடங்கியவர்

வணக்கம்,

யாழ் இணையம் 23 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் இக் கொரோனா நெருக்கடிக் காலத்திலும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 54 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கதைக் களம்

கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

கவிதைக் களம்

கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

_______________________________________________________________________________________

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு:

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இப்படி செய்வார்களா அனைத்து பதிவுகளில் வேறுபட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி பலருக்கும் தெரிவித்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.