Jump to content

யாழ் காலக்கண்ணாடி - 02 - 06 - 08


Recommended Posts

யாழ் காலக்கண்ணாடி

வணக்கம் யாழ் கள உறவுகளே,

ஒவ்வொரு கிழமையும் ஞாயிற்றுகிழமைகளில் ஒரு கருத்துக்கள உறவு அந்தந்தக் கிழமைகளில் கருத்துக்களத்தில் இடம்பெற்ற விவாதங்கள், இணைக்கப்பட்ட புதிய ஆக்கங்கள், குறைகள், நிறைகள் போன்றவற்றைத் தொகுத்து எழுதவேண்டும்.

- இணைந்த புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம்

- இவ்வாரம் செயற்திறனோடு இயங்கிய உறுப்பினர் பற்றி

- இணைக்கப்பட்ட கருத்துக்கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் பற்றிய பார்வை

- குறைகள், நிறைகள்

- இவ்வாரம் நடந்த முக்கிய செய்திகளின் சிறு தொகுப்பு

- இவ்வாரம் நடந்த விவாதங்கள் பற்றிய பார்வை

இன்னும் அந்தந்த வாரத்தில் கருத்துக்களத்தில் நிகழ்ந்தவற்றை தொகுத்து ஒரு கட்டுரையாக இணைக்கவேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு உறுப்பினர். தமக்கே உரிய பாணியிலேயே எழுதலாம் (நகைச்சுவையாகவும் எழுதலாம்). கடினமான வேலை என்று எவருமே தயங்கவேண்டியதில்லை. உங்களால் இயன்றளவு எழுதுங்கள். ஒருவர் எழுதியதும் அடுத்த கிழமைக்கான கருத்துக்கள உறவை அழைக்கலாம். இப்படியாக ஒவ்வொரு கிழமையும் தொடரவேண்டும். இது சுயமாக எழுதும் ஆற்றலை வளர்க்கவும், நம்மை நாமே மீள்பார்வை செய்துகொள்ளவும் உதவும். எனவே அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவீர்கள் என நம்புகிறோம்.

முதலில் நாம் அழைப்பவர் "இனியவள்". அவர் எழுதி முடிந்ததும், அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கான உறுப்பினரை அவர் தெரிவுசெய்து அழைப்பார்.

நன்றி

Link to comment
Share on other sites

யாழ் காலக்கணிப்பு - 24.06.2007

உங்கள் அனைவரையும் "யாழ் காலக்கண்ணாடி" என்ற இந்தப் பகுதி மூலம் சந்திப்பதில் நீங்கள் சந்தோசப்படாவிட்டாலும் நான் நிச்சயமாகச் சந்தோசம் அடைகின்றேன்!

இதை எழுத ஊக்கம் அளித்த நபரை நான் உங்களுக்கு மறுநாள் அறிமுகப்படுத்துகின்றேன்,

அதை விட இன்னும் பல முக்கியமான விடயங்கள் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்!!

என்னடா இவள் அலட்டுறாள் என்று நினைத்துவிடாதிங்கள்...( இந்த இனியவள் இப்படி தான் என்று சிலர் நினைக்கின்றீர்கள். எனக்குத் தெரியும். எப்படி என்று யோசிக்கிறீங்களா? இப்ப தான் தும்மினான்!!! )

சரி விடயத்துக்கு வருகின்றேன்,

இந்த வாரம் உங்கள் அனைவருக்கும் இனிய வாரமாக அமைந்திருக்கும் என நான் நம்புகின்றேன்!! இந்தவாரம் இனியவளுக்கும் இனிய வாரமாகவே அமைந்தது - எப்படி? என்ன அதிசயம் என்று மண்டை வெடிக்கிறதா? :) இதற்கு எல்லாம் காரணம் யாழ் கருத்துக்களம் தான். யாழ் களம் மூலம் எல்லா வாரமும் எல்லாருக்கும் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள். இனி இந்தவாரம் யாழ்களத்தில் என்ன நிகழ்ந்தன, என்ன இனிமையான விடயங்கள் நடந்தன என்பதைப் பார்ப்போம்.

+++

முதலாவதா இந்தக் கிழமை எங்களோட சில புதிய உறவுகள் இணைந்திருக்கிறார்கள். இவர்களின்ர வரவு யாழை இன்னும் சிறப்பாக்கும். அவர்கள் அறிமுகத்தோட மட்டும் நிக்காமல் தொடர்ந்தும் நிறைய பயனுள்ள கருத்துக்களை எழுதவேண்டும். அதை வாசிக்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம். அந்தவகையில் இந்த வாரம் எங்களோடு வந்து இணைந்து கொண்ட உறவுகள் யார் என்று பார்ப்போம்:

1. திலீப்.... இவர் அதிகம் பேச மாட்டார் போல. ஒரு வணக்கத்தோடு எங்களோடு இணைந்து கொண்ட அன்பு உறவு.

2. உமை.... இவர் ஒரு வருடத்துக்கு மேலாக யாழ் இணையத்தின் வாசகராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் யாழ் இணையத்தில் இப்பொழுது முதல் தான் கருத்துக்களை எழுத விரும்பி இணைந்திருக்கிறார். வேற என்ன விருப்பங்கள் அவருக்கு இருக்கென்பதை போகப் போக பார்ப்போம்.

3.முனிவர்.... உலகத்தில் பல முனிவர்கள் இருந்தாலும், எங்கள் யாழ் களத்துக்கும் ஒரு முனிவர் தேவை தானே??? தேவையுணர்ந்து வருகை தந்திருக்கிறார். கோபம் வந்து யாருக்கும் சாபமிடாமல் இருந்தால் சரி.

4. பராதசி.... இவர் பெயரே என் வாய்க்குள்ளே நுழையுதில்ல!! இவர் தன்ர பெயரை எப்பிடி உச்சரிக்கிறதெண்டு சொன்னா பேருதவியாக இருக்கும்.

இவர்கள் அனைவரையும் அன்போடு யாழ்கள உறவுகள் அனைவரும் வரவேற்கின்றேம்!! இன்னும் அவர்களை வரவேற்காதவர்கள் அவர்களின் அறிமுகப் பகுதியில் அவர்களை பலத்த கரகோசத்தோடு வரவேற்றுக்கொள்ளுங்கள்.

+++

அடுத்து நான் எழுத நினைக்கிற விடயம்... ஒரு முக்கியமான விடயம் தான். அது ஊர்ப் புதினம்! இந்த வாரம் அதிகமாக நம் களத்தில் ஊர்ப் புதினங்கள் வந்தன!

அதற்கு ராணி - அவங்கள் யார் ??

அது தாங்க ... என்ன இன்னும் தெரியவில்லையா...?

நம்ம ஊர்க் குருவி கறுப்பி அக்கா தான்!

கறுப்பி அக்கா கோமாவில இருப்பதாக கூட ஒரு தகவல் வந்து

அது களத்தையே நடுங்க செய்த விடயம் கூட!!! :D

அக்காவைப் பற்றி பேசியதில் அடுத்து எழுதும் விடயம் கூட மறந்து விட்டது! :angry:

நம் நாட்டுக்காக, நாட்டுக்காக குரல் கொடுப்பவர்களுக்காக, குரல் கொடுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தவரை நாங்கள் கூற மறக்கலாமா??

"பிரித்தானியா ஸ்கொட்லாண்ட் யாட்" கைதுசெய்த பிரித்தானிய தமிழர் ஒன்றிய (BTA (British Tamil Association )) தலைவர் திரு ஏ.சி. சாந்தன், மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு TYO-UK (Tamil Youth Organisation) ஐக்கிய ராச்சியம் கிளையின் பொறுப்பாளர் திரு கோல்டன் லம்பேர்ட் என்பவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி லண்டன் தமிழர்கள் ஏதாவது உடன் செய்தாக வேண்டும். எமது மெளனம் அவர்களின் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துவிடும் ! இதில் அனைத்து பிரித்தானிய மக்கள் கலந்து கொள்ளவேண்டும்! - என்று அழைப்பு விடுத்திருக்கிறார் நெல்லை பூ. பேரன். அவருக்கு நன்றி.

+++

மனிதர்கள் ஒன்று கூடும் இடத்தில் நிச்சயமாக கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் இல்லையா??

எங்கள் யாழ் களம் மட்டும் என்ன விதி விலக்கா ??

எங்கள் கள உறவுகள் பல குறை நிறைகளை கூறி இருந்தார்கள்!!

இந்த வாரம் அதிகமாக பேசப்பட்ட விடயம்:

"மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டுமா?"

இப்படி ஒரு கருத்து கணிப்பே நடந்தது!!

பல உறவுகள் தங்களின் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள்.

அதற்கு மட்டுறுத்துனர்களும் பதில் சொல்லியிருந்தார்கள்.

பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. என்ன எல்லாருக்கும் சந்தோசம் தானே?

கருத்து சொல்லுவதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு, ஆனால் அதை பண்போடு கூற வேண்டும் அல்லவா?

மனிதனாக பிறந்தால், முதலில் மனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும் அல்லவா?

ஆனால் இங்கு சிலர் நடந்துகொள்ளும் விதத்தால் மட்டுறுத்தினர்களுக்கும் வேலைப்பழு அதிகம் உண்டாகின்றது.

ஏன் தமிழர்கள் நாங்களே முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றோம் என்று தெரியவில்லை!!!

:blink: முதல் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். புரிந்துணர்வுடன் நடந்து இணைந்து செயற்படுவோம்.

அப்பாடா.................................தத்துவம் இனியவள் ???? :D

+++

இந்த வாரம் இன்னும் பல சுவாரசியமான விடயங்களும் நடந்தன!!

அது என்னவா... ??? வல்வை மைந்தா என்னை மன்னித்து விடுங்கள்

ஆனால் உங்கள் விடயம் பற்றி இங்கு பேசித்தான் ஆகணும்!!!

அதாவது வல்வை மைந்தனை ஒரு பெண் துரத்தி துரத்தி திரிந்தாங்கள், இதை பற்றி தான் களத்தில் அடிக்கடி பலர் பேசியனார்கள்!!!

நான் சொல்லுவது உண்மை தானே ??? இல்லை என்று சொல்ல போறீங்களா ??

இதை பொறுக்க முடியாமல் தான் மைந்தன் இந்தக் கவிதையை எழுதினாரோ ??

நான் நல்லவனாக வாழ்வது உனக்கு பிடிக்கவில்லையா?

நான் நிம்மதியில்லாது வாழ்வது உனக்கென்ன இன்பம்?

மனிதனை மனிதன் மதிப்பது தப்பா?

விடு என்னை வாழ விடு.

:D

+++

அடுத்து இந்த களத்தில் அனைகமான ஆண்களால் பார்வையிடப்பட்ட பகுதி ஆண்களுக்கான அழகு குறிப்பு, அழகு, அழகு நீ சிரித்தால்....

எந்த ஆணுக்குத் தான் அழகா இருக்க ஆசையில்லை ???

அதை பலர் ஒத்துக்கொள்வதும் இல்லை!! ஆண்களே நீங்கள் உண்மை பேசுகிறது குறைவுதான், அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்!!

ஆனால் இந்த விடயத்திலாவது உண்மை பேசலாம் அல்லவா? :angry:

நீங்கள் குறைந்து போக மாட்டீர்கள்!!!

அது மட்டுமா இங்கு பலர் பல விதமான அழகை பற்றி கருத்துக்களை முன் வைத்திருந்தனர்!!!

எது எப்படி இருந்தாலும் அழகு என்பது, ஒவ்வொரு மனிதனைப் பொறுத்து இருக்கும்

அவன் அதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றான் என்றதைப் பொறுத்து இருக்கும் விடயம் தான் அழகு!!!

கண்ட படி போட்டு குழப்பிக்காதீங்க பெண்களே! ஆண்களே!

+++

இறுதியாக நான் இந்த விடயத்தைக் கூறி விட்டு விடை பெறுகின்றேன்!!

அது தான் எங்கள் டைகர் ஃபமிலி!!

இங்கு பல விடயங்கள் இருக்கின்றன,

அன்பான அறிவிப்பாளர்களே, அன்பார்ந்த நேயர்களே!!

இந்த வாரம் வெண்ணிலாவை பேபி போட்டி கண்டு இருந்தார்

அது மட்டுமா உங்களுக்கு பிடித்த பாடல்களையும் இங்கு கேட்டு மகிழலாம் நண்பர்களே!!!!

அந்த வகையில் இருதியாக உங்களுக்காக ஒரு இனிமையான பாடல் ஒலிக்கின்றது

நான் அலட்டி முடித்துவிட்டேன்!!!!

இந்த வாரம் எங்கள் யாழ் களத்தில் நிகழ்ந்த சில விடயங்களை நான் உங்கள் முன் கொண்டு வர முயற்சி செய்துள்ளேன்.

இது உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன் நண்பர்களே!!!

அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கான உறுப்பினரை நான் தெரிவுசெய்யும் நேரம் நெறுங்கிவிட்டது!!!

யாரை ??? அது தானுங்க நம்ம ஊர்குருவி............................ இப்ப புரிந்துவிட்டதா யார் என்று ???

இல்லையா ??? அது தானுங்க நம்ம கறுப்பி அக்கா!!! B)

வாசித்த களைப்பில் இந்தப்பாடலையும் ரசியுங்கள்..... சிந்தியுங்கள்

Chennai 600028 - Jalsa

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காலக்கணிப்பு - 01.07.2007

ஒரு வாரத்தில் யாழ்களத்தில் நடந்தேறிய நிகழ்வுகளை அழகாய் தொகுத்து வழங்கும் செயற்திட்டத்தை ஊக்குவித்த வலைஞனுக்கு வாழ்த்துகள்

அழகாய் ஆரம்பித்து மெருகோடு ஜொலிக்க வைத்த இனியவளுக்கு இணையாக எழுதுகிறேனா தெரியவில்லை.

என்னை தெரிவு செய்த இனியவளின் பெயரைக் காப்பத்தனும் அதற்கு என்னால் ஆன முயற்சி செய்து எழுதியிருக்கிறேன்.

யாழ்களம் சிறப்பாக அமைய வாழ்த்திக் கொள்வதோடு.......... எதிர்வரும் 11ம் திகதி திருமணபந்தத்தில் இணையும் மணிவாசகன், ரசிகைக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டே இதை தொடர்கிறேன்.

இணைந்த புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம்

நீதியப்பன் - கதவு திறந்திருந்தபடியால உள்ளே வந்தவர் வாசலிலே நிற்கிறார்

சோழநேயன் - எழுதவேண்டும் என்ற முனைப்போடு விசைப்பலகையை வேகமாக தட்டி, ஒசை எழுப்பியவர்

தாமரை - அறிமுகம் இல்லாமலே வணக்கம் மட்டும் கூறி உள்ளே வந்திருப்பவர்.

ஓர்வம்பன் - வித்தியாசமான பெயருடன் உள்ளே வந்திருப்பவர்.

இந்தக் கிழமை பலர் உறுப்பினராக இணைந்திருந்தாலும் நீதியப்பன், சோழநேயன், தாமரை, ஓர்வம்பன் ஆகியோர் யாழ் அரிச்சுவடியில் தங்களை அறிமுகம் கொண்டவர்கள். தொடர்ந்து யாழ்களத்தில் இணைந்து கருத்துகளை முன்வைக்க வேண்டும் எண்டு வேண்டிக்கொள்வதோடு, யாழ்களமும் இவர்களை இரு கரம் பற்றி இனிதே வரவேற்றுக் கொள்கிறது.

இவ்வாரம் செயற்திறனோடு இயங்கிய உறுப்பினர் பற்றி

செய்ற்திறனோடு இயங்கிய உறுப்பினர் எண்டு யாரை சொல்வது. எல்லோருமே ஒருவித உற்சாகத்துடன் இயங்கி இருக்கின்றார்கள்.

இணைக்கப்பட்ட கருத்துக்கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் பற்றிய பார்வை

புல தமிழா!!!!

பொழுதுபோக்கை இழக்க தயார் இல்லாத நிலையை அழகாய் கவிதை தந்தார் புத்தன்

எண்ணமே வாழ்க்கை!, உயர்ந்த எண்ணம் கொள்!.

எண்ணமே உயர்ந்த வாழ்க்கைக்கு அத்திவாரம் என்பதை அழகாய் சொல்லிச் சென்ற தமிழ்தங்கையின் கவிதை அழகு.

விடுதலை

விடுதலையில் இத்தனை வடிவங்களா. ஆஆஆஆ அசந்து விட்டேனே கவிதையைக் கண்டு கஜந்தி உங்க கவிதை அழகு அழகு.

தோழனே

இந்த வாரம் அதிகம் விமர்சிக்கப்பட்ட கவிதை. வெண்ணிலாவின் கவிதை அழகு. தோளில் சாய்ந்து கொள்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது .

ஒரு கவிதையாய்த் தெரிகிறாய்

யாழ்களத்தின் ஆஸ்தான கவிஞருடைய கவிதை. அளவான சொற்கள் கொண்டு அழகாய் இருக்கிறது. ஓவியக்கலைஞரின் ஓவியமும் அழகு.

கவிதை அந்தாதி

இதில் பலர் கவிதை அழகாய் வடித்தாலும் எண்ணிக்கை அடிப்படையில் விகடகவி, பரணியும் அதிகம் அழகாய் எழுதியிருக்கிறார்கள். மேலும் மேலும் கவிமலர்களால் அழகு படுத்த அனைவரையும் வேண்டியபடியே இந்த கறுப்பி.

கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்சம் நேரம்

இவர்களுடன் எல்லாம் கொஞ்சி ஓஓ...... ஸாரி கொஞ்ச நேரம் செலவழிக்கிறார். யார் அவர்? அவர்தான் நம்ம சின்னக்குட்டி சார்.

யாழின் மற்ற பகுதிகளுடன் கொஞ்சநேரம் குலாவினால் நல்லா இருக்கும். போட்டிருக்கும் படங்களை பார்த்து பயந்துட்டேன்.

ஒரு பக்கம் - மேடைநாடகம்

ஒரு பக்க நாடகம் தான் போகப்போகுது எண்டு பாத்தால் 45 நிமிடங்களாய் போகுதே. செற் நாடகம் ரொம்ப ஜோர்தான்.

உங்க ஓட்டத்தைப் பார்த்தால் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையி்ன் ஓரத்துக்கே ஓடினாள் எண்ட டயலாக்கை மாத்தி ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஒடினார் சோழியன் எண்டு சொல்லனும் போல இருக்கு.

மின்னல் - இசையும் கதையும்

சாந்தி அம்மணி இணைத்த இசையோடு கதை அழகு.

இணைத்த பாட்டுகள் அழகு

குறைகள், நிறைகள்

இதில் குறை எண்டு எதை சொல்ல? ஒவ்வொருவரின் கருத்தும் வித்தியாசமானவை. அழகான வார்த்தை கொண்டு கருத்தை சொல்லலாம். வாசிக்கவும் அழகாய் இருக்கும்.

சுய ஆக்கங்களை மேலும் தட்டிக்கொடுத்தால் நல்லாய் இருக்கும்.

விவாதத் தலைப்புகள் ஆழம் நிறைந்த சத்துள்ள தலைப்புகளாய் வந்தால் நல்லா இருக்கும்.

களத்தில் பல சொந்த ஆக்கங்கள் வந்து நிறைவைத் தருகின்றன. இவை போன்றவை மேலும் களத்தை அலங்கரிக்க உறுப்பினர்கள் முன் வரவேண்டும்.

இவ்வாரம் நடந்த முக்கிய செய்திகளின் சிறு தொகுப்பு

- இலங்கையில் தமிழனப் படுகொலையை நிறுத்தக் கோரி ஆபிரிக்காவின் டர்பன் நகரில் பேரணி நடைபெற்றது.

-இணைத்தலைமை நாடுகளின் ஒன்று கூடல் இரண்டு நாட்கள் நோர்வேயில் இடம்பெற்றது.

-பிரித்தானியாவின் பிரதமராக கோர்டன் பிறவுண் பதவியேற்றதைத் தொடர்ந்து லண்டனில் ஏற்பட்ட கார் குண்டும், ஸ்கொட்லாந்து விமான நிலையம் மீது தாக்குதல்களும் ஏற்பட்டது.

-விளையாட்டுச் செய்தியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் 234 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இவ்வாரம் நடந்த விவாதங்கள் பற்றிய பார்வை

யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

இந்த வாரம் மிக வேகமாக பதிவுகள் கண்ட பகுதி இது. கலைஞன் தலைப்பினை அழகாய் கோர்த்து விவாதத்துக்காய் விதைத்தது அழகு. பெண்கள் ஆண்களை சீண்டுவதும், ஆண்கள் பெண்களை சீண்டுவதும் ம்........வாசிக்க நல்லா சுவாரசியமாய்த்தான் இருக்கு.

எனக்கெல்லாம இதில் எந்தவித ஆட்சேபனை இல்லைங்க. ஏதாவது சொல்லிட்டு போகட்டும் . டேக் இட் ஈசி பொலிசி (take it easy)தானுங்க.

பெண்கள் எண்டால் ஓடி வந்து ஒருவித சீண்டலுடன் பதில் சொல்வாரே யார் அது ? நான் சொன்னால் தான் தெரியுமா?

அதுதாங்க நம்ம நெடுக்ஸ். தான் பிடிக்கும் முயலுக்கு மூன்று கால் எண்டு வாதிடுவார் பலர். ஆனால் நெடுக்ஸ் தான் பிடித்த முயலுக்கு நாலுகால் எண்டு வாதிட்டு அழகாய் கருத்து சொல்லுவார். பெண் எண்டால் ஒரே சீண்டல் தான் போங்க.

இப்படி எல்லாம் எழுதிவிட்டு நெடுக்ஸ் இடம் இருந்து தப்பிக்க முடியுமா? என்னை ஒருவழி பண்ணிட மாட்டாரா இல்லையா?

டொம் என்ட் ஜெரியில் வார மாதிரி துரத்தி துரத்தி இந்த கறுப்பி யை ஒட ஒட விரட்டப்போராருங்க. அதற்குள் நான் எஸ்கெப்.

இவ்வளவு நேரமும் யாழ் காலக்கண்ணாடி மூலம் கள உறுப்பினர்களை சந்தித்துக்கொண்டதில் ரொம்ப சந்தோசம். யார் பெயரையாவது தவறவிட்டிருந்தால் மன்னிப்பை வேண்டியபடியே அடுத்தவாரத்துக்கா நான் தெரிவு செய்திருக்கும் உறவு.

-தவறாமல் களம் வருபவர்.

-அழகாய் கருத்துகள் வைப்பவர்.

-பொது அறிவில் நிறைந்த ஞானம் உடையவர்.

-அவர்தாங்க.......யாழ்வினோ

அடுத்தவாரம் அவரை எதிர்பார்த்தபடியே.......................

Link to comment
Share on other sites

காலக்கண்ணாடி 08-07-2007.

இந்த வாரக் காலக்கண்ணாடியில் மிக முக்கிய சம்பவமாக தமிழினத்தின் விடிவிற்காய் தங்கள் உயிர்களை ஆயுதமாக்கி காற்றோடும், கடலோடும் கரைந்து போன உன்னதமான வீர மறவர்களை நினைவு கூறும் புனிதமான கரும்புலிகள் நினைவு நாள் பற்றிய பல பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

நாங்கள் சிரித்து வாழ வேண்டும் என்பதற்காக சிரித்தபடியே சென்று வெடியாகி தங்கள் உயிர்களை தற்கொடையாக்கி வீரகாவியமான 322 கரும்புலி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி பல கள உறவுகள் கவிதைகளை எழுதி இணைத்துள்ளார்கள். அவற்றை மேலோட்டமாக பார்ப்போம்.

கவிதைப் பூங்காடு பகுதியில் கரும்புலி மாவீரர்களுக்கான ஏராளமான நினைவுக் கவிதைகள், கரும்புலிகளை நினைவுகூறும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன. நான் வாசித்த சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

தமிழ்தங்கை அக்கா இணைத்த எம் கரும்புலிகளே

சபேசன் அண்ணா இணைத்த உலகம் அதிர வெடித்தவன்

தமிழ்வானம் அண்ணா இணைத்த கரும்புலி மில்லர்

ஆகிய ஆக்கங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன அத்துடன் கவிதைப் பூங்காடு பகுதியில் பல பொதுவான கவிதைகளும் இணைக்கப்பட்டிருந்தன அவையும் அருமை.

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் சுகன் அண்ணா நெருப்பின் நிஜாயங்கள் என்ற தலைப்பில் கரும்புலிகளின் புகழையும் சாதனைகளையும் எடுத்துக் கூறும் வகையில் மிகவும் சிறந்த ஒரு ஆக்கத்தை எழுதி இணைத்திருந்தார் அவரது எழுத்து திறமையை பலரும் பாராட்டியிருந்தார்கள் அது அவருக்கு ஊக்கமாக அமைந்திருக்கும் அவர் தொடர்ந்தும் எழுதுவார் என்று நம்புகிறேன்.

எமது வரலாற்றில் முக்கிய நிகழ்வாக நினைவு கூறப்படும் கரும்புலிகள் நினைவு நாளுக்கு எமது யாழ் களமும் கவிஞர்களும் வழங்கிய பங்களிப்பு போதாது என்று தான் எனக்கு தோன்றுகிறது அடுத்த வருடத்தில் யாழ் கள உறுப்பினர்கள் இதை விட அதிக பங்களிப்பை செய்ய வேண்டும். இப்படியெல்லாம் சொல்லுறன் நான் என்ன பங்களிப்பு செய்தன் என்று என்னை கேட்கக்கூடாது எனக்கு கற்பனை வளம் மிக மிக குறைவு நான் இந்த காலக்கண்ணாடியை எழுதுவதற்கு கூட என் நண்பனின் உதவியை நாடினேன் ஆனால் தான் சரியான பிசி என்று சொல்லி எனக்கு எழுதித்தர மறுத்துவிட்டார். B)

ஊர்ப் புதினம் பகுதியில் எல்லாரும் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கினார்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குறிப்பாக மணிக்கூட்டில் எலாம் செற் பண்ணி வைத்து காலை 4 மணிக்கு எழும்பி ஊர்ப்புதினம் பகுதியில் செய்திகளை இணைக்கும் கறுப்பி அக்காவுக்கு சிறப்பான பாராட்டுக்கள்.

உலக நடப்பு பகுதியில் அனைவரை மகிழ்வித்த செய்தியாக கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. அலன் ஜோன்ஸ்ரனின் விடுதலையால் உலகின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளார்கள் அப்படி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவர்களில் நம்ம நெடுக்ஸ் அண்ணாவும் ஜம்முவும் அடங்கும்.

சமூகச் சாளரம் பகுதியில் இந்த வாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு சம்பவம் நடந்தேறி இருக்கிறது. அது தான் கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டும் தானா?? என்ற தலைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நடைபெற்ற சூடான விவாதம்.

சந்திரவதனா அக்கா 1999 ஆண்டு ஆவேசத்தோடு எழுப்பிய அந்த கேள்வியை வெண்ணிலா அக்கா அவர்கள் சுட்டு எடுத்து சமூகச் சாளரம் பகுதியில் இணைத்திருந்தார் அதற்கு பதிலடி கொடுக்குமுகமாக யாழ் களத்தின் றியல் ஆண்களான கலைஞன் அண்ணா, வல்வை மைந்தன் அண்ணா, விகடகவி அண்ணா, தூயவன் அண்ணா, கிருபன் அண்ணா, வெற்றிவேல் அண்ணா, ஜம்மு ஆகியோர் மிகவும் ஜதார்த்தமான அருமையான, சிறந்த, அர்த்தமுள்ள யாராலும் மறுக்கப்பட முடியாத கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.

றியல் ஆண்களின் இந்த காத்தரமான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் யாழ் களத்திலுள்ள றியல் பெண்கள் எல்லோரும் திணறினார்கள். இருந்தாலும் வெண்ணிலா அக்கா, தமிழ்தங்கை அக்கா, பிரியசகி அக்கா, கறுப்பி அக்கா, ஜனனி அக்கா போன்றவர்கள் பெண் குலத்தின் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பலவிதமான கருத்துக்களை முன்வைத்தார்கள் ஆனால் இந்த சூடான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் இங்கு உள்நுளைந்த ஒரு றியல் பெண் மட்டும் வாயை கொடுத்தால் மாட்டிவிடுவம் என்ற உண்மையை உணர்ந்து எழுதிய கருத்தையும் அழித்துவிட்டு பிறகு வாறன் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். B)

அதே போல் சமூகச் சாளரம் பகுதியில் ஜனனி அக்கா அவர்களால் இணைக்கப்பட்ட ஆண் - பெண் நட்பு என்ற ஆக்கத்திற்கும் பலர் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.

மெய்யெனப் படுவது பகுதியில் இனியவளின் பொன் மொழிகள் என்ற தலைப்பில் இனியவள் தன்னுடைய அனுபவங்களை ஜதார்த்தத்துடன் கலந்து அழகிய பொன் மொழிகளை வழங்க ஆரம்பித்துள்ளார் அவர் இந்த வாரம்

"ஒரு அறிஞனின் இதயம் முகம் பார்க்கும்

கண்ணாடியை ஒத்து இருக்க வேண்டும்"

என்ற பொன் மொழியை இணைத்திருந்தார். ஆனால் இப்ப கொஞ்ச நாட்களாக ஆளை காணவில்லை.

அதை தொடர்ந்து மெய்யெனப் படுவது பகுதியில் கஜந்தி அண்ணா/அக்கா அவர்கள் சுட்டு இணைத்த உண்மையான அன்பு எது? என்ற தலைப்பில் நம்ம யாழ் கள உறப்பினர்கள் எல்லோரும் உண்மையான அன்பை தேடி சுழியோடினார்கள். இப்படியான தலைப்பில் சுழியோடி ஆராய்கிற நேரத்தில் நல்ல நல்ல கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன அதே நேரத்தில் சுழியோடிகள் ஆள் மாறி உங்களுடைய கைகளையும் பிடித்துவிடுவார்கள் கவனம். :mellow:

விளையாட்டுத் திடல் பகுதியில் இந்த வாரம் துடுப்பாட்டம் சம்மந்தமான செய்திகள் மிக குறைவாகவே இணைக்கப்பட்டுள்ளன காரணம் நம்ம அவுஸ்ரேலியா அணியினர் கலந்து கொள்ளும் துடுப்பாட்ட போட்டிகள் எதுவும் தற்சமயம் நடைபெறவில்லை என்பது தான் என்பது எல்லாருக்கும் புரியும். இலங்கை, பங்களாதேஸ் போன்ற லோக்கல் ரீமுகள் பங்குபற்றும் போட்டிகளை யார் தான் விரும்பி பார்க்க போறாங்க நம்ம களத்தில உள்ள ஒரு சிலரை விட. :P

நம்ம வானவில் மற்றும் ஜம்மு சாரோட புதிய ரைகர் வானொலி இப்ப மிகவும் பரிதாபமான ஒரு கட்டத்தில் தனது சேவையை வழங்கியபடி உள்ளது நான் காலக்கண்ணாடி எழுத வேணும் என்பதற்காக கடந்த வாரம் ரைகர் வானொலிப் பக்கம் போனேன் இரண்டு அறிவிப்பாளர்கள் தனியாக இருந்து அறிவிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் பாடல்களை விரும்பிக் கேட்பதற்கு நேயர்கள் யாரும் வரவில்லை அதனால் ஒரு அறிவிப்பாளர் விரும்பி கேட்கும் பாடலை மற்றைய அறிவிப்பாளர் வழங்கியபடி இருந்தார். சிறிது நேரம் கழித்து மறுபடியும் வந்து பார்த்தேன் அப்பொழுதும் அதே பாணியில் தான் ரைகர் வானொலியின் ஒலிபரப்பு நடைபெற்ற வண்ணம் இருந்தது. :P

நான் எல்லா பகுதிகளிலும் சென்று வாசிக்கவில்லை அதனால் பல கள உறவுகள் எழுதிய ஆக்கங்கள் விடுபட்டுள்ளது என்பது எனக்கு தெரியும் அப்படி விடுபட்ட ஆக்கங்களை எழுதிய உறவுகள் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். :)

இறுதியாக இந்த வாரம் கருத்துக்களத்தில் அதிக கருத்துக்களை இணைத்தவருக்கு ஒரு Special Gift வழங்கப்படுகின்றது. அந்த வகையில் மிகவும் பயனுள்ள 340 கருத்துக்களை இணைத்து அந்த Special Gift இனை பெறுபவர் நம்ம ஜம்மு.

ஜம்முவிற்குரிய Special Gift

அடுத்த வாரத்திற்குரிய காலக்கண்ணாடியை தொகுத்து வழங்குவதற்கு நான் தெரிவு செய்திருக்கும் உறவு :o

நகைச்சுவைக்கு அவர் ஒரு தெனாலி

குறும்புக்கு அவர் ஒரு விறுமாண்டி

மங்கையர்க்கெல்லாம் அவர் ஒரு நாயகன்

மொத்தத்தில அவர் ஒரு சகலகலா வல்லவன்

அதனால் நம்ம யாழ் களத்தில் அவர் ஒரு

கலைஞன்

கலைஞன் அண்ணா அவர்களை அடுத்த வாரத்திற்குரிய காலக்கண்ணாடியை தொகுத்து வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக எனக்கு இந்த வாய்ப்பினை தந்த கறுப்பி அக்காவுக்கு நன்றியை கூறிக்கொண்டு விடைபெறுகிறேன் நன்றி!! வணக்கம்!!

Link to comment
Share on other sites

யாழ் காலக்கண்ணாடி - 15.07.2007

yarl1blackwf6.jpg

Good morning, Ladies and gentlemen, welcome onboard Flight 15.07.2007 with service from yarl.com to a trip around the world. We are currently first in line for take-off and are expected to be in the air in approximately two minutes time. We ask that you double check your yarl.com identifications at this time and secure your passwords. Please turn off all personal electronic devices, including yahoo and msn live messengers now, since they can interfere with the aircraft's navigation systems.

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! ஆங்கில அறிவிப்புக்களை தொடர்ந்து தமிழிலும் அறிவிப்புக்கள் ஆரம்பமாகும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.

At Yarl Airways, your safety is our first priority! We ask that you please direct your attention to the monitors above as we review the emergency procedures.

Please ensure that your seat belt is fastened.

We ask that you make sure that all carry-on luggage is stowed away safely during the flight.

The flight attendants are now pointing out the emergency exit. This is part of the announcement that you might need to pay careful attention. Knowing in advance where the exits are makes a dramatic difference to your chances of survival at Yarl Airways!

Your life-jacket can be found under your seat, but please do not remove it now. In fact, do not bother to look for it at all. In case of any unprecedented miracle will have occurred during the flight, please don't hesitate to use it.

Once we have reached cruising altitude you will be offered a light meal and a choice of beverages. The purpose of these refreshments is partly to keep you cool in your seats and stop you making others uncomfortable.

After take-off, your captain will say a few words. We appreciate that you have a choice of airlines and we thank you for choosing Yarl Airways. Please sit back, relax and enjoy the flight!

yarl2blackgj7.jpg

Good morning passengers! This is your Captain Kalainjan speaking. First I'd like to welcome everyone on Yarl Airways Flight 15.07.2007. We are currently cruising at an altitude of 193,840 posts at an airspeed of 154 users per minute. The time is 7.30 am (GMT + 01 Hours). Sit back, relax and enjoy the rest of the flight!

அனைவருக்கும் காலை வணக்கங்கள்! இது உங்கள் கப்டன் கலைஞன் பேசுகின்றேன். முதலில் நான் உங்கள் எல்லோரையும் காலக்கண்ணாடி பறப்பு 15.07.2007 இற்கு அன்புடன் வரவேற்கின்றேன். நீங்கள் எல்லோரும் கற்பனையில் மிதந்தபடி இந்த விமானப் பயணத்தை அனுபவித்து மகிழும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி! வணக்கம்!

The cabin crew will be coming around soon and the entertainment will begin shortly. Please don't forget to return back headphones before you leave the plane, otherwise you will be charged a small amount of fine when you travel next time.

Your Entertainment System

அலைவரிசை 01: [Channel 01]

ஊர்ப்புதினம்: [Tamil Eelam News]

அனைவருக்கும் காலை வணக்கங்கள்! தாயகத்தில் இவ்வாரம்! அலசுவது கந்தப்பு மற்றும் உங்கள் கறுப்பி!

கந்தப்பு: வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு மேலாக கடந்த வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் தாம் சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கறுப்பி: வீழ்ந்தது விமானம் அல்ல அது வெறும் காக்காய் குருவி என்றும், இதைப்போல் முன்பும் பல அப்பாவி காக்காய் குருவிகளை சுட்டுவீழ்த்தி நாட்டின் இறைமைக்கு புலிப்பயங்கரவாதிகள் பங்கம் விளைவித்து வருவதாகவும் சிறீ லங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

கந்தப்பு: குடும்பிமலை பிரதேசத்தை சிறீலங்கா இராணுவத்தினர் கடந்த புதன்கிழமை காலை தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக மகிந்த ராஜபக்சவின் செயலகம் அறிவித்துள்ளது.

கறுப்பி: இந்தச் செய்திகேட்டு மனதில் பேருவகை கொண்ட ஹெல உறுமயவின் சோபித தேரர், ரத்தன தேரர், சம்பிக்க ரணவக்க ஆகியோர் தாமும் தமது சகாக்களும் தமது மொட்டந்தலையில் குடும்பி வளர்க்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

கந்தப்பு: இலங்கை கொமாண்டோக்கள், தொப்பிகல வனாந்தரப் பகுதியில், பரந்த கற்பாறைப் பீடமொன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் எனவும், இதற்கு அவர்களால் "தோரா போரா'' என புனை பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் நேற்றுத் திங்கட்கிழமை இரணுவம் கூறியதாக, ஏ.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

கறுப்பி: "தொப்பியே இன்னும் சரியாகப் போடத்தெரியாத சிறீ லங்காவின் கூலிப்படைகளால், எவ்வாறு இவ்வாறான அரிய, பெரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த முடியும்?" என யாழ் இணையத்தின் பிரபல இராணுவ ஆய்வாளர் சுண்டல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கந்தப்பு: ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வினவியுள்ளார்.

கறுப்பி: பருத்தித்துறையில் இருந்து கதிர்காமத்திற்கு உடம்பில் அலகுகள் குத்தி, தோளில் காவடிகளை சுமந்தபடி வெறுங்கால்களுடன் பாதயாத்திரை செய்வது முருகன் பக்தர்களிற்கு சாத்தியம் என்றால், இதன் கால்வாசி தூரத்தை தோளில் ஆயுதங்களை சுமந்தபடி விடுதலைப் பற்றுக்கொண்ட போராளிகளால் சப்பாத்து கால்களுடன் நடந்து கடப்பது ஒரு கடினமான வேலையாக இருக்காது யாழ் இணையத்தின் பிரபல தத்துவஞானி கிருபன் கூறியுள்ளார்.

கந்தப்பு: 15 ஆயிரம் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த கடந்த 10 வருடங்களாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் ஜெயரத்தினம் என்பவர் மண்டபம் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டின் கியூ பிரிவு போலிசார் தெரிவித்துள்ளனர்.

கறுப்பி: ஐக்கிய நாடுகளின் அகதிகளிற்கான அமைப்பான UNHCR இல் ஜெயரத்தினத்திற்கு விரைவில் ஒரு உயர்பதவி கொடுக்கவேண்டும் என யாழ் இணையத்தின் மனித உரிமைகள் ஆர்வலர் அஜீவன் கேட்டுள்ளார்.

கந்தப்பு: இத்துடன் எமது இவ்வார தாயகவலம் நிறைவுக்கு வருகின்றது. மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கும்வரை நன்றி கூறி விடைபெறுகின்றோம்!

கறுப்பி: வணக்கம்!

இன்று உங்களுக்கு பரிமாறப்படும் உணவு வகைகள்

நாசி கோரிங்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=25877

ஐஸ் கிரீம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=25970

வாழைபூ வறை: http://www.yarl.com/forum3/index.php?showtopic=25995

பப்ஸ் பொரியல்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=11101

The flight attendants are now pointing out the Toilet. If you want to go to Toilet, please be patient and courteous to others.

மலசலகூடம் - Toilet (Currently Available):

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22687

மலசலகூடம் - Toilet - (Not in Use): http://www.yarl.com/forum3/index.php?showtopic=20328

அலைவரிசை 02: [Channel 02]

உலக நடப்பு [World News]

வணக்கம் நேயர்களே! மீண்டுமொரு உலக வலம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

ஈழவன்: லண்டனில் உள்ள மிகவும் தீவிரமான நிலக்கீழ் தொடரூந்து வழிகளில் ஒன்றான "சென்றல் லைன்" தொடரூந்து Mile end - Bethanl green எனப்படும் நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கிடையிலான பாதையில் தரம்புண்டதை அடுத்து பல பயணிகள் காயமைடந்தும் பலர் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர்.

நெடுக்காலபோவான்: பெண்புத்தி பின்புத்தி! இந்த தொடரூந்தை ஓட்டிச் சென்றது ஒரு பெண்ணாக இருக்ககூடும்! சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை ஆண் பிள்ளை தான்!

ஈழவன்: ‘இந்தியனே வெளியேறு’ என்ற முழக்கம் அசாம், மிசோரம் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் உரக்கக் கேட்கிறது. சந்தி சிரிக்கும் இந்திய ராணுவம்!

நெடுக்காலபோவான்: சந்தியில் நின்று சிரிப்பதுதான் தவறு, சந்தியே சிரிப்பது நல்லவிசயம்! வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்!

ஈழவன்: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்து ஜுலை 20ஆம் நாளன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.

நெடுக்காலபோவான்: தூங்குபவனை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது!

விளம்பரம்: Green Brigade - பச்சைப் படையணியில் http://www.yarl.com/forum3/index.php?showtopic=21568 இன்றே இணைந்து நீர் வாழும் பூமியை அழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்வீர்!

ஈழவன்: பிரித்தானியாவில் உள்ள வோல்சிங்கம் தேவாலயத்துக்கு வருடாவருடம் நடைபெறும் திருவிழாவில் தமிழ்க் கத்தோலிக்கர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த வருட விழாவில் கலந்துகொண்ட ஆனந்தராஜன் நீல்பிரசாந்தா என்ற 15 வயது சிறுவன் வேல்ஸ் கடற்கரைக்கு நீந்தச் சென்று நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

நெடுக்காலபோவான்: சின்னப்பிள்ளைகள் கவனமா இருக்க வேணும். ஆழம் அறியாமல் காலை விடாதே!

ஈழவன்: ஈராக்கில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படையினருக்கு போரிலிருந்து அதிக விடுமுறை அளிக்கும் சட்டப் பிரேரணையொன்று அமெரிக்க செனட் சபையைச் சேர்ந்த குடியரசு கட்சி அங்கத்தவர்களால் முடக்கப்பட்டு தோல்வியில் முடிவடைந்துள்ளது.

நெடுக்காலபோவான்: முதல் கோணல், முற்றும் கோணல்!

ஈழவன்: உலக நடப்புக்களை அறியத்தரும் எமது செய்தியாளர் காணாமல் போயுள்ளதால் மேலதிக செய்திகள் கிடைக்கவில்லை. நிகழ்ச்சியில் எஞ்சியுள்ள நேரத்தில் உங்களுக்கு பழமொழிகள் கூறப்பட உள்ளன.

நெடுக்காலபோவான்: அகதி பெறுவதும் பெண்பிள்ளை அதிலயும் வெள்ளி பூராடம்!

கொண்டை பெருத்தவள் குலவழிக்கும் ஆகாது! கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கும் ஆகாது!

தாயைச் சந்தையில் கண்டால் மகளை வீட்டில் பார்க்கத் தேவையில்லை!

பெண்னென்றால் பேயும் இரங்கும்!

பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது!

ஐந்து பெட்டை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்!

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்!

கணவனே கண் கண்ட தெய்வம்!

நச்சுப் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பக் கூடாது!

புகையிலை விரிச்சாப் போச்சு பொம்பிளை சிரிச்சாப் போச்சு!

கொலையும் செய்வாள் பத்தினி!

ஈழவன்: நன்றி நேயர்களே! மீண்டும் சந்திப்போம்!

நெடுக்காலபோவான்: வணக்கம்!

அலைவரிசை 03: [Channel 03]

கதை கதையாம் [story Time]

வணக்கம் குழந்தைகளே! இண்டைக்கு உங்கட சினேகிதி சித்தி பிள்ளைகளுக்கு அச்சா கதைகள் சொல்லபோறன்.

முதலாவது கதை "நட்பும் காதலும்!" எண்ட கதை. இத வெண்ணிலா ஆன்ரி எழுதி இருக்கிறா. ஒரு ஊரில ஒரு மூளை இல்லாத அக்கா இருப்பாவாம். இந்த அக்காவ ஒரு குழப்படிகார அண்ணா காதலிப்பாராம். இந்த அண்ணா அந்த அக்காவ ஜீன்ஸ் படத்தில வாற பிரசாந்த் மாதிரி இரட்டை வேடம் போட்டு எப்பவும் சுத்தி சுத்தி வருவாராம். இதில ஆசிரியராக ஒரு வேடத்திலயும், இண்டர்நெட்டில அரட்டை அடிக்கிற பையனா இன்னொரு வேடத்திலையும் அந்த அண்ணா வருவராம். அந்த அப்பாவி அக்கா இந்த ஒரு அண்ணாவ வேற, வேற இரண்டு ஆக்கள் எண்டு நினைச்சு அதில் ஒருவரை லவ் பண்ணிக்கொண்டு, மற்றவரோட நட்பா இருப்பாவாம். இப்பிடியே கனகாலம் சந்தோசமா வாழுவாவாம்! கதை என்ர கற்கண்டுகளுக்கு பிடிச்சு இருக்கோ?

அடுத்த கதை "ஒரு தேர் நாள்!" இந்த கதைய பிரியசகி ஆன்ரி எழுதி இருக்கிறா. நான் கதையை உங்களுக்கு சொல்லமாட்டன். ஆனா, குஞ்சுகள் நீங்கள் தான் உத வாசிச்சு உதில என்ன சொல்லப்பட்டு இருக்கு எண்டு சித்திக்கும் சொல்லவேணும். சரியோ? கதையில ஆன்ரி இப்பிடி சொல்லுறா..

"பக்கத்தில ஒரு வெள்ளைக்காரி சாறி கட்டி இருந்தா. இல்லை..இல்லை கட்டப் பழகி இருக்கா. அவவோட அந்த வெள்ளைக்கலருக்கு குங்கும கலர் சாறி நல்ல வடிவா இருந்திச்சு. உள் மனம் சொன்னாலும் வெளியில அதை ஒத்துக்க முடியாம அவா சாறி கஷ்டப்பட்டு கட்டியிருப்பதை நக்கல் அடிச்சுக்கொண்டு இருந்தன். கொஞ்ச நேரத்தால அவா எழும்பி போக பார்த்தா அவா இருந்தது "ஒரு பேப்பர்" மேல.. "

பிள்ளைகள், வெள்ளைக்காரி சாறி கட்டினா, பார்க்கிறதுக்கு அச்சாவா இருக்கும் என? எண்டபடியால் செல்லங்கள் நீங்களும் உந்த கதையை கட்டாயம் வாசிக்க வேணுமல்லோ? அத உங்க போய் வாசியுங்கோ! http://www.yarl.com/forum3/index.php?showtopic=26085

கடைசியா சோம்பேறி மாமா எழுதிற "செல்வன்" தொடர்கதை. இந்த கதையில மாமா இப்படி எழுதிறார்..

பூசாரி: "ம்.. உள்ள புடவ மாத்தப்போய் இவ்வளவு நேரமாச்சு.. உடன பொம்பிளைய அழைச்சு வாங்கோ! ம் கெதியா... கெதியா.."

குட்டித்தம்பி: (டன்னைப் பார்த்து.. காதினுள் இரகசியமாக..) "ஐயர் ஏன் சரியா அவசரப்படுறார்?.. அடுத்த கலியாணத்துக்கு போக டைம் வந்திட்டுதே?"

டன்: (ஹிஹி.. சிரிப்பு.. குட்டித்தம்பியின் பக்கம் சரிந்து இரகசியமாக) "இல்ல, அவருக்கு அவசரமா ஒண்டுக்கு ஏதும் போகவேணும் போல இருக்கிதோ தெரியாது!"

குட்டிதம்பி: "ஹாஹா!" (சிரிப்பு..)

பிள்ளைகள், இந்த மாமா இப்படித்தான் கூடாமல், கூடாமல் ஏதாவது எழுதிகொண்டு இருப்பார். இந்த மாமாட கதைய வாசிக்கேக்க நீங்கள் கொஞ்சம் கவனமா இருக்கவேணும் என?

எங்க அச்சா கதைகள உங்களுக்காக கஸ்டப்பட்டு எழுதின வெண்ணிலா ஆன்ரி, பிரியசகி ஆன்ரி, சோம்பேறி மாமாக்கு எல்லாரும் ஒருக்கால் சத்தமா கை தட்டுங்கோ பார்ப்பம்! ம்... இன்னும் சத்தமா தட்டவேணும்...

சரி, குழந்தைகளே மீண்டும் ஒரு காதினிக்கும் கதை நேரத்தில் சித்தி உங்களை சந்திக்கின்றேன்! நன்றி! வணக்கம்! :))))))))))))))

அலைவரிசை 04: [Channel 04]

இவ்வார பொன்மொழிகள் [Life Styles]

வணக்கம் நேயர்களே, வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக இவ்வார பொன்மொழிகளை தொகுத்து தருவது "இனியவள்".

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்!

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள் ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!!

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்!

படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!

ஒரு பெண்ணிடம் உனது காதலை சொல்வதற்கு முன் அவள் யாரையாவது காதலிக்கிறாளா என்று அடிக்கடி கேட்டுவிடு! ஒரு ஆணிடம் உனது காதலை சொல்வதற்கு முன் அவனை யாராவது காதலிக்கிறார்களா என்று அடிக்கடி கேட்டுவிடு! இவ்வாறு அடிக்கடி கேட்கும்போது, இறுதியில் அந்தப் பெண் உன்னைக் காதலிப்பதாக கூறக்கூடும்.. இதேபோல் அந்த ஆண் உனது காதலை ஏற்றுக்கொள்ள கூடும்...

ஆணாய் இருக்கும் உனக்கு பெண்களில் ஆசை வந்தால் சிலகாலம் பெண்ணாக இருந்து வாழ்ந்துபார்! பெண்ணாக இருக்கும் உனக்கு ஆண்களில் ஆசை வந்தால் சிலகாலம் ஆணாக இருந்து வாழ்ந்துபார்! இவ்வாறு செய்தால் முடிவில் உன்னில் நீ ஆசைப்படுவாய்!

இதயம் சொல்வதை செய் வெற்றியோ? தோல்வியோ? அதை தாங்கும் வலிமை அதற்கு தான் உள்ளது!

நன்றி! வணக்கம்!

அலைவரிசை 05: [Channel 05]

விளையாட்டுக்கள் [Games]

வணக்கம்! உங்களுக்கு இப்போது விளையாட்டு காட்டப்போவது யாழ்வினோ..

முதலில் பாட்டுக்கு பாட்டு: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry324095

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?

பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?

அன்பே உந்தன் பெயரை தானே

விரும்பி கேட்கிறேன்!

போகும் பாதை எங்கும் உன்னை

திரும்பி பார்க்கிறேன்!

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்!

என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்!

என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்!

உன் பேரைச் சொல்லுமே!

இனி அடுத்ததாக, சமையல் விளையாட்டு: http://www.yarl.com/forum3/index.php?showt...2627&st=200

குழம்பு - உப்பு

உப்பு - கஞ்சி

கஞ்சி - பால்

பால் - பயற்றம் உருண்டை

பயற்றம் உருண்டை - பக்கத்து வீட்டுக்காரி

பக்கத்து வீட்டுக்காரி -

இனி அடுத்ததாக, தொடர்பு வார்த்தை: http://www.yarl.com/forum3/index.php?showt...250&st=1340

கேள்வி -விடை

விடை-சரி

சரி - பிழை

பிழை - சரி

சரி -

கடைசியாக, புனர்வாழ்வு நிதிசேகர்ப்பு விளையாட்டு: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry323722

இந்த விளையாட்டு விளையாடுவதற்கு சிறிதளவு மூளை தேவைப்படுவதால், என்னால் இதில் பங்குபற்றமுடியவில்லை. மன்னிக்கவும்.

என்னுடன் விளையாட்டு விட்ட அனைவருக்கும் நன்றி! நாங்கள் மீண்டும் மீண்டும் எல்லாருக்கும் விளாட்டு காட்டுவோம்! நன்றி! வணக்கம்!

அலைவரிசை 06: [Channel 06]

யாழ் நாற்சந்தி [Comedy]

வணக்கம் ரசிகப் பெருமக்களே! பல சுவையான அம்சங்களுடன் மீண்டும் ஒரு நாற்சந்தியில் டங்குவார் ஆகிய நான் உங்களை சந்திப்பதில் பேரானந்தம் அடைகின்றேன்.

முதலில பாருங்கையா, யாரோ ஒரு துணிஞ்சகட்டை தனது வீட்டு குளியலறையில தான் செய்கின்ற சாக்கடை வேலைகளை பற்றி கூச்சமில்லாமல் நாலு சனம் கூடுற நாற்சந்தியில பகிரங்க பகிரங்க அறிவிப்பு செய்ய, அந்த காளை மாட்டுக்கு பின்னால ஆகா ஓகோ என்று சந்தோசமா அணிதிரண்ட நூற்றுக்கணக்காக சனம் தாங்களும் தங்கட வீடுகளில நடக்கிற குளியலறை விசயங்கள பற்றி கூச்சமில்லாமல் அறிவிப்பு செய்து இப்ப சந்தியே நாறிப்போய் கிடக்கு. அட தூ! உந்த கட்டாக்காலி மாடுகள் எல்லாம் இப்ப இந்தப் பக்கமா நிற்கிது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=26017 கால்வழுக்கி விழப்போறீங்கள்! மூக்கப் பொத்திக்கொண்டு பார்த்துப் போங்கோ, கவனம்!

ஹை ஸ்பீட் இண்டர்நெட் கனக்சன வீட்டில வச்சுக்கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக்கொண்டு இருக்கிற வேலை வெட்டி இல்லாத படிச்ச பெடியங்கள், பெட்டைகள் கொஞ்சப்பேர் லண்டன் மாநகரில் ஒன்றுகூடி சோம்பேறிகள் சங்கம் ஒன்றை உருவாக்கபோவதாய் இஞ்ச அறிவிப்பு செய்து இருக்கிறாங்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=25595 நீங்களும் வீட்டில பொழுது போகாமல் குந்திக்கொண்டு இருந்தால் போய் அதில கலந்துகொள்ளுங்கோ. போகேக்க கைச்செயின், மணிக்கூடு, கழுத்து சங்கிலிகள், பேர்ஸ், கிரடிட் கார்ட் இதுகள வீட்டில வச்சுப்போட்டு வெறுங்கையோட போறது நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

இந்த முறை யமுனா என்று அழைக்கப்படுகின்ற அர்த்தநாரீசுவரர் நடாத்தும் வெள்ளிக்கிழமை டோக் சோவில வல்மைமைந்தன் என்று சொல்லப்படுகின்ற பிரபல முகமூடி ஆசாமி பேட்டி காணப்பட்டுள்ளார். இவர் என்ன சொல்லுறார் என்றால்...

யாழின் பெண்கள்? மங்களகரமானது

யாழில் காதல் ? விரும்பத்தக்கது

யாழில் திருமணம்? வரவேற்கவேண்டியது

அப்படியென்றால், யாழில் அடுத்த திருமணம் இவருக்குத்தானோ? முழு டோக்சோவையும் கண்டுமகிழ இங்க போங்கோ http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=323928

யாழ்ப்பாணம் போலிசு ஸ்டேசனில் தனது சகபாடியை காணவில்லை எனஅறிவிப்பு செய்த "அப்ப வரட்டா" எனும் புனைபெயர் கொண்ட அர்த்தநாரீசுவரருக்கு போலீஸ் திணைக்களத்தின் தலமை அதிகாரி ஒருவர் அசட்டுத்தனமாக பதில் கூறிவிட்டார் என்று "ஒற்றன்" என அழைக்கப்படுகின்ற பிள்ளைபிடி வழக்கறிஞர் மன்னிக்கவும் பிழைபிடி வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்துபோயுள்ள குறிப்பிட்ட போலிஸ் தலமை அதிகாரியிடம் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம், எப்படிப்பட்ட சுனாமி உங்கள் வாழ்க்கையில் அடித்தாலும் நாங்கள் உங்கள் கைவிடமாட்டோம் என்று மக்கள் பேச்சாளர் மதனராசா ஆறுதல் வார்த்தைகள் கூறியுள்ளார். போலிசு ஸ்டேசனில் நடைபெற்ற பிரச்சனைகளை அறிய இங்கே செல்லவும். http://www.yarl.com/forum3/index.php?showt...1013&st=900

கடைசியாக, இணையத்தால் இணைந்த காதல் ஜோடிகளிற்கிடையில் அண்மையில் நடைபெற்ற திருமண வைபவத்தை பற்றி காதலியின் தம்பி தனது இரண்டு கண்களிலும் கண்ணீர் ஒழுக கதையாக விபரித்துள்ளார். என்னதான் தம்பியாக இருந்தாலும் இவர் தனது அக்காவை பற்றி பப்ளிக்காக சொல்லக்கூடாத பல திடுக்கிடும் தகவல்களை பொறுப்பற்ற முறையில் சொல்லியுள்ளார்.

"சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வட அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் இருந்து "சோறு சமைப்பது எப்படி" என்ற செய் முறையை தேடி கூகுலுக்குள் நுழைந்த முதல் எழுத்து ர, இறுதி எழுத்து கை என்ற சொற்களை கொண்ட 3 எழுத்து உறுப்பினர், சோறு சமைப்பது எப்படி என்ற செய் முறையை யாழ்.கொம் என்ற தளத்தில் வெற்றிகரமாக கண்டுபிடித்து, சோறை வெற்றி கரமாக செய்து சாப்பிடுகிறார். அடங்கொக்காமக்கா சிங்கிள் சோற்றையே எவ்வாறு செய்வது எண்ட செய்முறை இருக்கும் இந்த களத்தில் ரொட்டி சுடுவது எப்படி, அதை கோப்பையில் போடுவது எப்படி என்ற விடயங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று எண்ணி அந்த தளத்தில் தன்னை இணைத்தார்.. "

இந்த விடயம் ஆரம்பத்திலேயே காதலன் மணிவாசகனிற்கு தெரிந்திருந்தால் இவர் காதலி ரசிகை மீது தீவிர காதல் கொண்டு இறுதியில் இப்படி திருமணம் எனப்படுகின்ற அசட்டுத்தனமான விபரீத முடிவுகளை எல்லாம் எடுத்திருப்பாரா என்பது சந்தேகமே! காதலியின் தம்பி கூறும் கண்ணீர் கதையை கேட்க இங்கே செல்லவும்.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=26054

மீண்டும் ஒரு நாற்சந்தி நகைச்சுவைச் சித்திரத்தில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுவது என்றும் உங்கள் அன்பின் டங்குவார்!

அலைவரிசை 07: [Channel 07]

பொது அறிவு போட்டி[General Knowledge Quiz]

வணக்கம் பயணிகளே! பூசுக்குட்டியின் பொது அறிவு போட்டிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன். யாழ் இணையம் சம்மந்தமாக கேட்கப்படும் கீழ்வரும் கேள்விகளிற்கான சரியான விடைகளை கண்டுபிடித்து எழுதி அனுப்பும் மூன்று அதிர்ஸ்டசாலி பயணிகளிற்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும்.

கேள்வி 01: சில காலத்திற்கு முன் யாழ் இணைத்தில் உள்ள ஆடவர்களின் அரையில் கட்டி விடுவதற்கு கோவணத் துண்டுகளையும் அரைஞாண் கயிறுகளையும் கையில் கொண்டு அலைந்த நபரின் பெயர் என்ன? [குளூ: தேர்திருவிழா]

கேள்வி 02: தற்போது யாழ் இணையத்தில் உள்ள பெண்களில் யாருக்காவது கழுத்தில் கட்டி விடுவதற்கு தாலியும், கையுமாக திரிந்து கொண்டிருக்ககூடிய நபர் யார்? [குளூ: பி.எச்.டி]

கேள்வி 03: அப்ப வரட்டா என்று அடிக்கடி கேட்கும் வியாதி உள்ள நபரைப்போல் இப்போது ஒருவருக்கு அப்ப போகட்டா என அடிக்கடி கேட்கும் வியாதி தோன்றியுள்ளதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அவர் யார்? [குளூ: வெட்டுகொத்து]

கேள்வி 04: கடந்த ஒரு மாத காலத்தில் யாழ் இணையத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களில் எத்தனை சதவிகிதமானோர் உண்மையில் புதிய உறுப்பினர்கள்? [குளூ: தெரியவில்லை]

கேள்வி 05: "தமிழ் நாட்டில் கணவரை, மனைவி மாமா என்று அழைப்பது வழக்கம் தானே?" என்ற எமது சிந்தனையை தூண்டும் சீரியசான கேள்வியை யாழ் இணையத்தில் கேட்ட நபர் யார்? [குளூ: சட்னி]

கேள்வி 06: விரைவில் 10,000 தடவைகள் யாழ் இணையத்தில் Add Reply Button ஐ அழுத்தப்போகும் நபர் எத்தனை தடவைகள் முகக்குறிகளை மாத்திரம் பாவித்து சங்கேத பாசையில் உரையாடி உள்ளார்? [குளூ: தெறியாது]

கேள்வி 07: யாழ் இணையத்தில் கீழ்கண்ட கவிதையை எழுதியவர் யார்? [குளூ: குயிலே பாடு!]

ஆருயிர் சகியே

ஆசை முகமே

அன்பு மலரே

அடிபணியா பெண்மையே

உன்னை வாரியணைத்து

வசைமொழி பேசி

வாஞ்சையுடன்

வையப்போகின்றேன்!

கேள்வி 08: "கவிதை ரசிக்க மட்டும் தான் தெரியும் எழுத வராது!" என்று யாழ் இணையத்தில் அடிக்கடி கூறி கவலைப்படுபவர் யார்? [குளூ: துள்ளாத மனமும் துள்ளும்]

கேள்வி 09: "As usual buffoons missing the point whine about lack of time, lack of volunteers etc..." இதை தமிழில் மொழிபெயர்க்கவும்.

கேள்வி 10: "இதே ஒரு பெண் அவர் கணவனை கடித்திருந்தால் இந்த பக்கம் 10 பக்கங்களாவது போயிருக்கும்... " என யாழ் இணையத்தில் கூறி ஆதங்கப்பட்டவர் யார்? [குளூ: பபா]

சரியான உங்கள் பதில்களை ஈ மெயிலில் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி: புசுக்குட்டி@யாழ்.கொம்

Ladies & Gentlemen, Your Entertainment system is being turned off now. We are landing at Yarl International Airport shortly. Please be ready to face any Immigration inquiries.

குடிவரவு - Immigration:

http://www.yarl.com/forum3/index.php?act=S...mp;CODE=leaders

அனைவருக்கும் வணக்கம்! சில நிமிடங்களில் நாம் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கவுள்ளோம். விரைவில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளிற்கு தயாராக இருங்கள்.

yarl1blackwf6.jpg

We'd like to thank you folks for flying with us today. The next Yarl Airways flight is scheduled to depart from Yarl International Airport on 22.07.2007 at 7.45 am (GMT + 01 Hours) and your Caption is Ms.Anitha. Hope you have enjoyed the journey. Have a nice day!

யாழ்விமான சேவையில் பயணம் செய்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! யாழ் விமான சேவையின் அடுத்த பறப்பு கப்டன் அனிதாவினால் 22.07.2007 அன்று யாழ் சர்வதேச விமானநிலைத்தில் இருந்து மேற்கொள்ளப்படும். நன்றி! வணக்கம்! :D

ug01ef1edb1.gif

Link to comment
Share on other sites

வணக்கம் ..... :)

எல்லாரும் எழுதினமே நாம கொஞ்சம் வித்தியாசமா செய்வம் எண்டு தோணிச்சு அதனால் இப்படி செய்திருக்கன்.

லேட்டானதுக்கு கோவிக்காமல் விடீயோ பாத்திட்டு எப்படி இருக்கு எண்டு சொல்லுங்க...! :P

பிறகு மிச்சம் எழுதுறன் B)

கலைஞன் ,ரொம்ப லேட்டாப் போயிடுச்சோ ..... :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்கள நெஞ்சங்களே!

யுத்தம் எம் மீது பலகொடுமைகள் தந்தது

ஆயிரம் ஞாபங்கள் வந்து வலிகளை தந்தது

ஆனாலும்

பூத்து வாசனை வீசவேண்டிய மலர்கள்

பூமியில் உதிர்ந்து கருகி சாம்பலாய் போன

இருண்ட வரலாற்றின் ஒரு வருட நினைவிற்காய்

என் கண்ணீர் அஞ்சலியையும்,

தமிழீழ மண்மீட்பிற்காக தங்களது இன்னுயிரை அர்ப்பணித்த

அனைத்து மாவீரர்களையும் நினைவில் நிறுத்தி..

அந்த செஞ்சோலைச் சிறார்களுக்காக

இந்தவார காலக்கண்ணாடி நிகழ்வை

சமர்ப்பிக்கின்றேன்

நிகழ்வின் ஆரம்பமாக அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய புத்தன், குமாரசாமி, சுவி உட்பபட பெயர் கூற மறந்த அனைத்து நெஞ்சங்களிற்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

**************

ஆனிமாதம் 24ந் திகதி வலைஞன் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டு சகோதரி இனியவளால் ஆரம்பிக்கப்பட்ட காலக்கண்ணாடி இந்தவாரம் தொகுத்து வழங்க என்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதையிட்டதையிட்டு பெருமிதமடைகின்றேன்,

****************

எங்களது எண்ணக்கருவை வெளிக்கொணர்வதிற்கு யாழ்த்தளத்தில் களம் அமைத்து தந்த மதிப்புமிகு மோகன் அவர்களிற்கும், இந்தவாரம் காலக்கண்ணாடியை என்னிடம் ஒப்படைத்த விகடகவியிற்கும், இவரைச் சார்ந்தவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து நிகழ்ச்சியிற்குள் நுழைகின்றேன்.

வணக்கம்.

யாழ் அரிச்சுவடிப்பகுதியில் மிதுனன்_அருளன் அவர்கள் இந்தவாரம் அறிமுகமாகியுள்ளார்

_______;.

கடந்தவாரம் குள்ளநரி என்ற பெயரில் அறிமுகமாகிய நண்பர், பலரின் வேண்டுகோளுக்கமைய தனது பெயரை பெருந்தன்மையுடன் நளன் என்று மாற்றிக்கொண்டு எல்லோரினதும் மனதில் இடம்பிடித்துக்கொண்டார்..

_________

யாழ் உறவோசை பகுதியில் யாழ் ஒன்றுகூடல்கள் தனித்துவமாகுமா? என்ற தலைப்பை ஆரம்பித்த நெடுக்காலைபோவான் தலை மறைவாகிவிட்டார்.

கீழ்வருவது அவரினது கருத்து.

யாழ் களத்திலும் சரி இன்னும் பல தனியார் இணையத்தளங்களிலும் சரி வலைப்பூக்களிலும் சரி இணைய மறைவில் இருந்து எழுதுவோர் முகத்தைப் பார்க்க என்று ஒன்று கூடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் சில நிகழ்ச்சிச் திட்டங்களை வகுத்து நடக்கின்றன. சிலது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களை ஏக்கங்களை ஆசைகளைப் பூர்த்தி செய்ய என்று நிகழ்த்தப்படுகின்றன.

யாழ் களம் தமிழ் இணையத் தள வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் முன்னோடி. ஆனால் யாழ் களமும் சமீப காலமா சில உப்புச் சப்பற்ற சந்திப்புக்களை நடத்தி விமர்சனங்களை முன்வைக்கிறதோட நின்றிடுது.

************

யாழ் உறவோசை பகுதியில் வலைஞன் அவர்களினால் தமிங்கிலம் தவிர்ப்போம் என்ற தலைப்பில் பதியப்பட்ட வேண்டுகோள் வரவேற்க கூடியதாகும்.

இருப்பினும் அதைத்தொடர்ந்து பதியப்பட்டோரின் கருத்துக்கள் வேதனை தரக்கூடியதாக இருக்கின்றன.

*************

வணக்கம் நிருவாகத்திடமும், சக கள உறவுகளிடமும் ஒரு கேள்வி, ஆலோசனை , என்ற தலைப்பில் கலைஞன் அவர்களினால் ஆக்கபூர்வமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது...

யாழில் இரண்டு விதமான படைப்புக்கள் வருகின்றன. ஒன்று சுயபடைப்பு. மற்றையது வெட்டி ஒட்டுவது. கவிதைப் பூங்காடு, கதைகள், ஊர்ப்புதினம், நகைச்சுவை... என அனைத்துப் பகுதிகளிலும் இந்த இரண்டு விதமான ஆக்கங்களும் கலந்து இருக்கின்றன.

எனது கேள்வி அல்லது ஆலோசனை என்னவென்றால் யாழில் இவை இரண்டையும் பிரித்து வெவ்வேறு பகுதிகளினுள் போடமுடியுமா?

************

ஊர்ப்புதினம் பகுதியில் இந்தவாரம் சர்வதேஷ மட்டத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சினமூட்டக்கூடிய பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இவைகள் விடுதலைப்புலிகளின் அரசியல் சாமர்த்தியத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே கருதக்கூடியதாகவுள்ளது.

பல நூற்றுக்கணக்கான போராளிகளின் உயிரையும், கோடிக்கணக்கு பெறுமதியான ஆயுதங்களையும் பாதுகாத்து பொறுமையினால் அரசியலில் அமோக வெற்றியை அடைந்துள்ளார்கள்.

**********

தெற்கு ஆசிய மனித உரிமைகள் அமைப்பு இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு சிறீலங்கா இராணுவமும் காவல்துறையினரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அனுமதி வழங்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

*********

கண்ணுக்கு முன்னால் கடத்தப்படுகிறார்கள்-காணமல் கண்ணுக்கு முன்னால் கடத்தப்படுகிறார்கள்-காணாமல் போகhமல் எப்படிக் காப்பது?

எல்லோரையும் சிந்திக்க வைக்கும் முறையில் இந்த கோரிக்கை ஊர்ப்புதினம் பகுதியில் தமிழினியினால் பதியப்பட்டுள்ளது.

***********

யாழ் இணையத்தளத்தில் தமிழ்த்தேசியம் சம்பந்தமாக கருத்துக்களையும் ஆக்கங்களையும் முழுச்சிரத்துடனும், உணர்வு பூர்வமாகவும் பதிவு செய்துவரும் சகோதரி கறுப்பி அவர்கள் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்.

-------

முழுச்சிங்களவர்களுமே வெட்கப்படக்கூடிய சம்பவமாக சகோதரி கறுப்பியினால் இந்தவாரம் பதியப்பட்ட இந்த செய்தி அமைகின்றது.

ஐ.நா. உயர் அதிகாரி ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி-புலிகளிடம் இலஞ்சம் வாங்கியவர்: அமைச்சர் ஜெயராஜ்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

~~~~~~

இன்று ஊர்புதினம் பகுதிக்குள் சென்றபோது

ஜோன் ஹொல்ம்ஸ் ஒரு பயங்கரவாதிஇ விடுதலைப் புலிகளிடம் கையூட்டுப் பெற்றவர் என ஜெயராஜ் பெர்னான்டோப்புள்ளை கூறிய கருத்துக்கு ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் வெளியிட்ட கண்டனத்திற்கு பதிலளிக்கும் முகமாக ஜெயராஜ் பெர்னான்டோப் பிள்ளை இதனைத் தெரிவித்துள்ளார்.

பான் கி மூன் வெளியிட்ட கருத்தை உள்வாங்கப் போவது இல்லை. தனது அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளிநாட்டவர் தெரிவிப்பதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என பெர்னான்டோப்புள்ளை குறிப்பிட்டுள்ளார்.

************

உலகநடப்பு பகுதியில் இந்தவாராச்செய்தியில் இது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு குறித்துஇ இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை அமளி ஏற்பட்டது. இந்தியா எதிர்காலத்தில் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு ஒப்பந்தத்தில் எந்தத் தடையும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறிவருகிறார்கள். ஆனால்இ அணுகுண்டு சோதனை நடத்தினால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு ரத்துச் செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமையன்று வாஷிங்டனில் தெரிவித்திருந்தார்

************

யாழில் பல அற்புதமான படைப்புகளை வழங்கிவரும் கந்தப்பு இந்தவாரமும் பொங்குதமிழ் பகுதியில் கீழ்வரும் தலைப்பில் தனது படைப்பை வழங்யுள்ளார்.

வாரியாரும் நம் தாய்த்தமிழும்!

வாரியாருக்கு தமிழை பிடிக்காது வடமொழியைத்தான் பிடிக்கும் என்று சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கான எதிர்வினையே இந்தப் பதிவு.

************

யாழில் இன்று சகலகலாவல்லவன் என்றழைக்கப்படும் ஜமுனாவின் நேர்காணல்கள் எல்லோராலும் பாராட்டைப்பெற்றுள்ளன.

அதில் கலைஞன் வசீகரனுடனான நேர்காணலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

*********

இதனைத் தொடர்த்து கதை கதையாம் என்ற தலைப்பிற்குள் சென்றேன்

சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் இதயநாதம் என்ற தலைப்பில் தமிழ்த்தங்கையினால் பதியப்படும் இசையும் கதையுமாய் இணைந்து வரும் ஓர் தொடர்!.

காதல்" சொல்லிய காதல்

என்ற பகுதி இந்தவாரமும் எல்லோரினதும் கவனத்தை கவர்ந்துள்ளது..

~~~~~~~

இங்கே சுகன் எழுதிய

நம்பிக்கை என்ற கவிதை வாழ்கையின் கோலங்களை சொல்லினிற்பது அருமை

~~~~~~~~

புத்தனின் ஒரு நிமிட கதை நடைமுறை பக்தி சொல்லி நிற்க ரசிக்கக்கூடியது.

***********

நாவூற வாயூற பகுதியில் இந்தவாரம் மீன் சூப்பு எல்லோரினதும் நாவை பதம் பார்த்துள்ளது

அடுத்து தளத்தின் பிரபல்யமான பகுதியான கவியரங்கிற்குள் பிரவேசிக்கின்றேன்.

செஞ்சோலை நினைவுக்கவிதைகளில்

தமிழ் தங்கையின் கவிதையான( மறக்குமோ நெஞ்சம் } என்ற கவிதையில் இருந்து என்னைப்பாதித்த சில வரிகள்

செஞ்சோலை!! செங்குருதியில்

குளித்த ஓராண்டு நிறைவு!

பிஞ்சுகளை எல்லாம் நஞ்சுகள்

நசுக்கிய நாள் இது! ஈழத்தமிழர்

நெஞ்சங்களில் பதிந்திட்ட ஆறாதவடு!

எங்களின் மலர் முகங்களை

மறக்க இயலவில்லை!மனங்களில்

கண்ணீரோடு கதறிய கதறல்

உலுக்குகிறது ஈழத் தமிழனை!

பொறுப்பதில்லை எதற்கும் இனி!.

______

இதை தொடர்ந்து கவிதைப்பூங்காட்டிங்குள் தொடர்த்து நடந்த போது என்னை இதர

கவிதைகள் கவர்த்தாலும் நுனாவிலான் பதித்த

முன்று கற்கள் என்ற கவிதை வித்தியாசமான நடையில் பதியப்பட்டுள்ளது

அதாவது சூரியன் சந்திரன் வாயு போன்ற வற்றுடன் உரையாடுவது போல்

~~~~~~~~

அதனைப்போன்று மோகன் அவர்களால் பதிவான வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதையும்

வித்தியாசமாக இலகுவான நடையில் அமைந்துள்ளது இவைகள் இந்த வhரத்தின்

வித்தியாசமான கவியாக பார்க்கின்றேன்.

~~~~~~~~~

இதனைவிட

தமிழினீ எழுதிய கவிதை உணர்ச்சி பூர்வமாய் அமைத்துள்ளது......

~~~~~~~~~

கவிதை அந்தாதி அழகாய் தொடர்கின்றது அதில் பரணியின் இந்த கவிதை

நன்றாக உள்ளது

என்னிடம் மயங்கி

தன்காதல் இயம்பி

~~~~~

இதனைத்தொடர்ந்து லொல்லு கவிதைக்குள் போனால் லொல்லிருந்தது கவிதையை

காணவில்லை என்றாலும் சில வரிகள் லொல்லாய் பதிய பட்டு இருந்தது

அது மேலும் அழகு பெற்றால் அருமையாக இருக்கும்.

***********

அடுத்ததாக புதிய டைகர் வானொலி பகுதிக்குள் நுழைந்தபோது பரிதாபத்திற்குரியதாக இருந்தது. ஆரம்பத்தில் மிகவும் கலகலப்பாக இருந்த பகுதி ஏனோ சோர்வடைந்துவிட்டது.

மீண்டும் கலகலப்பான பகுதியாக மாற்ற இதைச்சார்ந்தோர் கவனத்தில் எடுத்தால் எல்லோருக்கும் பயனாக இருக்கும்.

***********

தினமும் நான் தவறவிடாத இனியவளின் பொன்மொழிகள் பகுதியினுள் இன்றும் நுழைந்தேன்

அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்

சிந்திக்கவேண்டியவை

இந்தப்பகுதியில் சில கருத்துக்கள் சில நாட்களின் முன்பு சிலரை தாக்குவதாக அமைந்திருந்தன இதைக்கவனத்தில் எடுத்தால் மிகவும் சிறப்பான பகுதி என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.

இப்போது ஓரளவு திருந்தியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

**********

தமிழ்த்தேசியத்தின் ஒளிவிளக்காய் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் யாழ் இணையத்தளம் மென்மேலும் வளர்ச்சியடைந்து விடுதலைக்காற்றை சுவாசிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் எம் மக்களிற்கு உறுதுணையாக இருக்க நாம் எல்லோரும் யாழுடன் இணைவோம் என்று கூறிக்கொண்டு,

காலக்கண்ணாடியை பொறுமையுடன் வாசித்தவர்களுக்கு நன்றியையும், எழுத்துப்பிழையிருப்பின் மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு அடுத்தவார காலக்கண்ணாடியை வழங்க கவிரூபனை உங்கள் முன்பு நிறுத்திக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ் கள உறவுகளே,

யாரடா இவன் என்ற கோதாவில் ஏன் பார்க்கிறீர்கள்? எங்கையாவது களத்தில கண்டிருப்பியள்.;-)

இந்த வாரத்திற்கிற்கான (20-08-08 - 26-08-08) காலக் கண்ணாடியை அடியேன் தான் தொகுத்து வழங்கிறன் (அறிவிப்பு ஒன்றும் வந்த மாதிரியே தெரியல.... ம்... எங்க தலையெழுத்து என்று சலிப்பது புரிகிறது...)

ஒன்றும் பெரிசா வித்தியாசம் செய்யல... என்னால முடிந்த வகையில் ....

கீழுள்ள வீடியோ தோன்றமறுத்தால் இங்கே அழுத்தவும் :

http://video.google.com/videoplay?docid=-4...15774&hl=en

தவறுக்கு வருந்துகிறேன்.

ஒரிடத்தில் வலைஞன் என்பதற்குப் பதிலாக கலைஞன் என்று பதிவாகிவிட்டது.(ஒரெழுத்துதான

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் காலக்கண்ணாடி 02.09.2007

வணக்கம் கருத்து கள உறவுகளிற்க்கு!

இந்த வார காலக் கண்ணாடி மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வார காலக் கண்ணாடியை தொகுத்து வழங்க என்னை அழைத்த கவி ரூபனிற்க்கு நன்றியை தெரிவித்து கொண்டு இந்த வாரக் காலக் கண்ணாடியை தொடர்கிறேன்.

இணைந்த புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம்

பூமகள்- அழகான பெயருடன், தமிழ் நாட்டில் இருந்து எங்களுடன் இணைந்து இருக்கார். வந்த உடனேயே கவிதையில் கலக்குறாங்க. தொடர்ந்து பூமகளின் கவிதைகளை களத்தில் எதிர்பார்க்கிறம்.

ஈழத்தமிழன் - யாழ் இல் இருந்து ஆட்டோ ஓட்டி கொண்டு எங்களுடன் இணைந்து இருக்கார்.

இரு உறவுகளையும் யாழ் களம் சார்பில் அன்போடு வரவேற்க்கிறேன்.

இணைக்கப்பட்ட கருத்துக்கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் பற்றிய பார்வை

எப்போது யாழ் வந்தாலும் நேரம் இருக்கோ இல்லையோ நான் விரும்பி பார்க்கும் பகுதி கவிதை பகுதி

இந்த வாரமும் எமது உறவுகள் கவிதைகளில் கலக்கிட்டாங்க.

கோவம்வெண்ணிலாவால் தம்பிக்காக ( யமுனாக்காக) எழுதிய கவிதை. நிலாவின் கவிதைகளுக்கு நான் எப்போதுமே ரசிகை. இந்த கவிதையும் அழகு.

பஞ்சு மேகம்பூமகள் அழகாக வார்த்தைகள் தொடுத்து, பஞ்சு மேகத்தை வர்ணிச்சு இருக்காங்க. வந்ததுமே கவிதையில் கலக்கி எல்லோரிடமும் பாராட்டையும் வாங்கிட்டாங்க. எனது வாழ்த்துக்களும்.

இளமழையே வா வாநம்ம கவி அண்ணா எழுதி இருக்கார், பிறகு சொல்லவா வேணும் எப்படி இருக்கும் என்று. அவரோட இனிமையான குரலில் பாடியும் காட்டி இருக்கார்.

தினம் ஒரு கவிதை பகுதியில் இந்த வாரம் பரணி அண்ணாவால் தண்ட வாளம் இணைந்து கொண்டால் என்ற தலைப்பில் ஒரு அழகான கவி.

இது என்ன குறுக்கெழுத்துப் போட்டியோ?

நாங்கள் நடத்துவது விடுதலைப் போரா இல்லை குறுக்கெழுத்துப் போட்டியா என்று மருமகன் கவிதையிலையே கேள்வியை கேட்டு இருக்கிறார்.

அன்னை தேசம், உன்னை வரைந்தேன்நீண்ட நாட்களின் பின் இலக்கியனின் கவிதைகள். இரு கவிதைகளுமே அருமையா இருக்கு.

அடுத்ததாக கதை கதையாம் பகுதியில் :

புத்தனின் "நவீன கூலிகள்"யமுனா கதை எழுதுறார் என்று புத்தனும் கதை எழுத தொடங்கினார். இப்பொழுது அடிக்கடி புத்தனின் கதைகளை காண முடிகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருத்தை சொல்லும், அதே போல் இந்த கதையும் நல்லா இருக்கு.

வேரும் விழுதும் பகுதியில் அவுஸ்ரேலிய உதயசூரியன் பத்திரிகை ஆசிரியரை

யாழுக்காக யமுனா பேட்டி எடுத்து இருந்தார்.

இவ்வாரம் நடந்த முக்கிய செய்திகளின் சிறு தொகுப்பு

ஊர்ப்புதினம்

29.08.2007 போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் கிளிநொச்சி பயணம்

மன்னார் படைத்தளம் மீது புலிகள் தொடர் எறிகணைத்தாக்குதல்

31.08.2007 மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கை முறியடிப்பு

01.09.2007 மன்னாரில் முஸ்லிம் கிராமத்தவர்களை மனித கேடயமாக பயன்படுத்தும்

சிறிலங்கா படையினர்

மன்னார் சிலாவத்துறை நோக்கி படையினர் முன்னகர்வு

02.09.2007 சிறிலங்கா இராணுவம் வட போர்முனையில் பாரிய முன்னகர்வுக்கு முனைப்பு

காட்டுவாதக் தகவல்

இவ்வாரம் நடந்த விவாதங்கள் பற்றிய பார்வை

பரிந்துரை செய்தல் பற்றி இந்த வாரம் விவாதம் நடந்தது.

நிலாவின் கேள்விக்கு வலைஞன் அண்ணாவின் தெளிவான விளக்கம் எல்லோரின் குழப்பத்தையும் தெளிவு படுத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

யாழ் நாற்சந்தி பகுதியில் யமுனாவால் ஆரம்பிக்க பட்ட தலைப்பு:

உங்கள் கணவர் யாழில் செலவிடும் நேரம்?

யாழ் களத்தின் உறவு ஒருத்தரின் மனைவியையும் பேட்டி எடுத்து இருந்தார்.

இறுதியாக இந்த வாரம் பிறந்த நாளை கொண்டாடிய கந்தப்புவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டு.

உங்களுடன் இருந்து விடை பெறுகிறேன்.

அடுத்த வாரக் காலக் கண்ணாடியை தொகுத்து வழங்குபவர்: கந்தப்பு

Link to comment
Share on other sites

தமிழீழ மண்மீட்பிற்காக தங்களது இன்னுயிரை அர்ப்பணித்த அனைத்து மாவீரர்களையும் நினைவில் நிறுத்தி.,

இவ்வாரத்தில் தாயகத்தில் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து எனது காலக் கண்ணாடியினை வழங்குகிறேன்.

தமிழீழ விடுதலைப்போரில் முதல் மரணித்த தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் தாயார் திருமதி பொன்னுத்துரை அன்னலட்சுமி அவர்களுக்காக இந்தக்காலக் கண்ணாடியினைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

7வது ஆண்டில் காலடி வைக்கும் கனடாத் தமிழர்களின் ரி.வி.ஜ தொலைக்காட்சிக்கும் 2 ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்வாரக்காலக்கண்ணாடியில்

யாழ் இனிது

யாழ் அரிச்சுவடியில்

இவ்வாரம் நான்கு புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள்.

தமிழ் மீது பற்றுள்ளதினால் தமிழ் நாட்டில் இருந்து,திருவள்ளுவரின் அவதாருடன் யாழில் இணைந்தவர் தேவபிரியா.தமிழ், வரலாறு, ஆன்மிகமம் கட்டுரை வரைவதும் படிப்பதும் அவரது பொழுதுபோக்கு.

av4334le7.jpg

தமிழ் மொழி மீதும், தமிழ் இனம் மீதும் உள்ள பற்றினால், தமிழை எங்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வந்தவர் பித்தன்.ஏற்கனவே ஆங்கில எழுத்துக்களில் பித்தன் என்ற உறுப்பினர் யாழில் இருப்பதினால் பெயர் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மனத்தளவில் தமிழீழ நாடு. உடலளவில் அகதிநாடு என்ற அறிமுகத்துடன் இணைந்தவர் ஞானி

யாழ் நகரில் வரிசையில் நிற்கவேணுமென்றால் யாழ்களத்திலும் வரிசையில் நிற்க வேணுமா என்று கேட்கிறார் சஜை.

எனது பார்வையில் இவ்வாரம் யாழ் அரிச்சுவடியில் சிறந்த அறிமுகத்தைத் தந்தவராக பித்தனைத் தெரிவு செய்கிறேன்.

யாழ் உறவோசையில் 'தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய நபர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் ஒரு கருத்தை முன்வைக்கும் போது அதில் மிக மிக அவதானம் தேவை. பொறுப்புணர்வு தேவை' என்ற முக்கியமான கருத்தை யாழ்கள உறுப்பினர்களுக்கு வலைஞன் அவர்கள் சொல்லி இருந்தார்.

செய்திக்களம்

சிலாவத்துறையினை அரசபடையினை கைப்பற்றியது தொடர்பான செய்திகள் இவ்வாரத்தின் முதல் நாட்களில் முக்கிய இடத்தைப்பிடித்தது.

mannar22hz7ga1.jpg

சிலாவத்துறை- ஒரு அரசியல் நாடகம் இளந்திரயன் சாடல்

'சிலாவத்துறைப் பிரதேசத்தில் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கவில்லை. எமது மனிதாபிமானப் பணியாளர்களே அங்கிருந்தனர்.சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மன்னார்-மதவாச்சிப் சாலையின் தென்புறத்தில் சிலாவத்துறை இருக்கிறது. அரசியல் லாபத்துக்காகவும் மக்களை தவறாக வழிநடத்தவும் சிறிலங்கா அரசாங்கம் எதனையும் செய்யும் என்பதை இது வெளிப்படுத்துகிறது.' என்று மேலும் தெரிவித்தார்

சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினர் சுதந்திரமாக நடமாடிய பகுதி என்ற தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது

எமது நிர்வாகப் பகுதிகளை ஐ.நா. மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையிட வேண்டும்- தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி .

பழ.நெடுமாறனின் தமிழர் தியாகப் பயணம் பற்றிய செய்திகளும் இவ்வாரத்தில் காணக்கூடியதாக இருந்தது.

19170381jp4.jpg

இவ்வாரம் முதல் புதினம் இணையத்தளத்தின் செய்திகள் தானியங்கியாக ஊர்ப் புதினம் பகுதியில் இணைக்கப்பட்டு வருகிறது.

உலகம்,செய்தி திரட்டி பகுதிகளில்

வங்களாவிரிகுடாவில் அமெரிக்கா உட்பட 4 நாடுகள் கடற்படை பயிற்சி என்ற தகவலை இணைத்துள்ளார் கறுப்பி.

90 வயதானாலும் ஒட்டகப்பாலைக் குடிப்பதினால் குழந்தைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையினை வயதானவர்களுக்கு ஊட்டினார் சுண்டல்.

camelbactrianplasticsafab5.jpg

ஒரே பெண்ணை மணந்து குழந்தைகளைப் பெற்ற இரட்டையர்களை பற்றிய செய்தியை இணைத்துள்ளார் கருப்பி.

அதிக செய்திகளை உடனுக்குடன் இணைக்கும் கறுப்பி அவர்கள் செய்திக்களத்தில் இவ்வாரத்தின் சிறந்த உறுப்பினராக தெரிவு செய்கிறேன்

தமிழ்க்களம்

சந்திரிகா அம்மையாரின் நெருங்கிய உறவினரும் தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவு தருபவருமான அவுஸ்திரெலியாவில் வாழும் பிரயன் செனவிரட்டினாவினால் சொல்லப்பட்ட, காண்பிக்கப்பட்ட எமது தாயக உறவுகளின் சோகங்களைப் பதிந்த ஒளிப்பதிவினை இணைத்து, இவ் ஒளிப்பதைவைப் பார்ப்பவர்கள் கட்டாயம் பலரது பார்வைக்கு எடுத்துச் செல்லவும் வேண்டும் என்றும் கேட்டுள்ளார் தமிழீனி.

ஜேர்மனியத்தொலைக் காட்சிகளில் (3 SAT , ZDF )ஒன்றில் தமிழர்களின் பாதுகாவலர்களாகவுள்ள விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது தவறு இத்தடை மீளப்பெறப்பட வேண்டும் ,தமிழர்கள் நிம்மிதியாக வாழ்வதற்கு ஒரே தீர்வு தமிழீழமே இதனை தவிர்ந்த எந்த தீர்வும் தமிழர்களை நிம்மதியாக வாழவைக்காது என்ற முக்கிய விடயங்கள் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டது. இத்தகவலை யாழில் இணைத்தவர் கறுப்பி.

ஜரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்று தேவை என்ற தலைப்பில் சபேசன் அவர்கள் இணைத்த ஆக்கத்திற்கு யாழ்கள உறுப்பினர்கள் சிலரிடையே விவாதங்கள் நடைபெற்றது.

23periyarta5.jpg

'ஒரு மொழி செம்மொழியாக இருப்பதற்கு பதினோரு தகுதிகள் விதிகளாக வழங்கப்படுகிறது. இந்த பதினொரு தகுதிப் பாடுகளும் தமிழ் மொழிக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பது தான் தனிச்சிறப்பு. சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு' என்று செம்மொழி பற்றிய தகவலை இணைத்திருக்கிறார் நுனாவிலான்.

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது? என்று கேள்வி கேட்டிருக்கிறார் கலைஞன்.

அவுஸ்திரெலியாச் சட்டத்தை முறைகேடாக தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்தும் சில தமிழர்களை புத்தனின் சிட்னிக் கொசிப்பு 30ல் காணலாம்.

பழந்தமிழ் மறத்தியரும் ஈழத்தமிழ் மறத்தியரும் பற்றி தென்செய்தியில் வந்த ஆக்கமும் இணைக்கப்பட்டுள்ளது

1833467rebelsap300su3.jpg.

பிரான்ஸ் அரசினால் கைது செய்யப்பட்ட 14 மனிதநேயப்பணியாளர்களின் விடுதலைக்கான நியாயத்தினை எடுத்து கூற பிரான்சில் கைது செய்யப்பட்டவர்களிற்கான ஆதரவு அமைப்பு என்கிற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட உள்ளது . தகவலைத் தந்தவர் சாத்திரி.

பிரான்சில் கைது செய்யப்பட்ட மனிதநேயப் பணியாளர்களின் விடுதலைக்கு ஆதரவு அமைப்பினை உருவாக்க உதவும் சாத்திரியைத் தமிழ்க்களம் பகுதியில் இவ்வாரம் சிறந்த யாழ்கள உறுப்பினராகத் தெரிவு செய்கிறேன்.

ஆக்கற்களம்

நாவல் பழம் பிடுக்கப்போகிறார்களம் என்ற படைப்பைத் தந்தவர் சின்னக்குட்டியார்.

இசையும் கதையினை யமுனா அழகாகத் தந்துள்ளார்.

வழமைபோல விறுவிறுப்பாக சப்பறம் பார்க்கலாம் என்ற சொந்தக் கதையினைத் தந்துள்ளார் சாத்திரி.

இம்முறையும் கவிதைப் பகுதியில் அதிகளவில் கவிதைகள் வந்திருக்கின்றன. எல்லாக் கவிதைகளும் நன்றாக இருக்கிறது.

மீண்டும்" என்னும் முழுநீளத் திரைப்படம் நோர்வையில் தயாரிக்கப் பட்டு வரும் தகவலைத் தந்தவர் தமிழ் வானம்.

இப்பகுதியில் பெரும்பாலும் எல்லோரும் சொந்த ஆக்கங்களை திறம்பட படைத்ததினால் யாருடைய ஆக்கம் மிகவும் சிறந்தது என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

இளைப்பாறுங்களம்

குயூபேக் நகரிற்கு சென்ற சினேகிதி அவர்கள் தான் பார்த்த Montmorency நீர்வீழ்ச்சி பற்றிய தகவலைச் சொல்லி இருக்கிறார். இந்த நீர் வீழ்ச்சி நயாகரா நீர் வீழ்ச்சியை விட 27 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது என்ற மேலதிகத் தகவலைத் தந்திருக்கிறார்.

தென் நியூசிலாந்து பயணத்தொடரில் அரவிந்தன், வொக்ஸ் கிளேசியரில் இருந்து காஸ்ட் என்ற நகருக்கு சென்ற பொழுது பார்த்ததினை படம் பிடித்து இணைத்துள்ளார்.

p9270168ca8oj9.jpg

வட்டி கட்டி வாழும் வாழ்க்கை நல்லதா? கூடாதா? என்று கேள்வி கேட்டிருக்கிறார் கலைஞன்.

டண் , இவ்வாரம் முதல் ஒவ்வொருவாரமும் யாழ்கள தரவரிசையினை வழங்கவுள்ளார். அவரின் தரவரிசைப்படி நெடுக்காலபோவான் அவர்கள் முதல் வாரத்தில் யாழ்கள சிறந்த சகல துறை ஆட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த அணியாக அவுஸ்திரெலியா அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

20 - 20 உலக்கிண்ணப்போட்டி, இங்கிலாந்து இந்தியாவுக்கிடையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகள்,தனுகா பத்திரன என்பவரின் சாதனையும் துடுப்பாட்டச் செய்திகளாக இவ்வாரம் யாழில் வந்துள்ளது.

தமிழக ஒட்ட வீராங்கனை சாந்தியின் பூர்வீகம் நாவலப்பிட்டி என்ற தகவலை இணைத்துள்ளார் நுனாவிலான்.

மாவீரர் தினத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய திரைப்படமான தமிழ்ப்பாசறை வெளிவரவுள்ளது என்ற தகவலை தந்துள்ளார் தமிழீனி.

இளைஞன் பார்த்த தமிழல்லாத வேற்று மொழிப்படங்கள் பற்றி ஒவ்வொரு கிழமையும் எழுத ஆரம்பித்துள்ளார். இவ்வாரம் விடுமுறை(The Holiday) என்ற படத்தைப் பற்றிய தகவல்கள் தந்திருக்கிறார்.

theholidaydvdbt8.jpg

எனது பார்வையில் இப்பகுதியில் இவ்வாரம் சிறந்த உறுப்பினராக சொந்த ஆக்கத்தை இணைத்த இளைஞன் அவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்.

அறிவியற்களம்

அமெரிக்கா கணனி வலையமைப்பில் ஊடுறுவல் செய்ததாக சொன்ன குற்றச்சாட்டை சீனா மறுத்த தகவலை வழங்கியிருக்கிறார் தயா.

சிந்தனைக்களம்

தேசிய நலனும் வெளியுறவுக் கொள்கையும் என்ற தொடரை ஆரம்பித்துள்ளார் குறுக்கால போவான் அவர்கள்.சுதந்திர நாடாக எம்மை நாமே ஆழுவதற்கான தகமைகளை ஏன் இதுவரை அடையவில்லை என்பதற்கான காரணங்களை நமக்குள்ளே தான் தேடி நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார்.

சிறப்புக்களம்

பூசணிக்காய்க்குள் இவ்வளவு விசயமிருக்கிறதா என்று அதிசயிக்க வைக்கும் 'பூசணிக்காயின் மருத்துவ குணங்களை' இணைத்துள்ளார் நுனாவிலான்.

23357601cm3.jpg

யாழ் உறவுகள்

சொல்லாடுதல், தொடர் வார்த்தை, பாட்டுக்குள்ளே பாட்டு போட்டிகளில் தொடர்ந்து சில போட்டியாளர்கள் போட்டியிட்டார்கள். நாளை ஆரம்பமாகவுள்ள 20 - 20 துடுப்பாட்ட போட்டியின் யாழ்கள உறுப்பினர்கள் பங்கேற்கும் போட்டியில் இதுவரை 12 போட்டியாளர்கள் பதில் அளித்துள்ளார்கள்.

untitled31lb6.png

தாயகப்பறவைகளின் 14வது இதழ் இவ்வாரம் யாழில் இணைக்கப்பட்டுள்ளது.

அறிவியற்களம், சிந்தனைக்களம், சிறப்புக்களம், யாழ் உறவுகள் ஆகிய 4 பகுதிகளிலும் இணைக்கப்பட்ட ஆக்கங்கள் குறைவு என்பதினால், இவ் 4 பகுதிகளையும் சேர்த்து இப்பகுதியில் சிறந்த ஆக்கத்தை எழுதியவராக எனது பார்வையில் இவ்வாரம் குறுக்கால போவானைத்(சிந்தனைக்களம்) தெரிவு செய்கிறேன்.

இவ்வாரத்தில்

நிறைகள்

சொந்த ஆக்கங்கள் அதிகளவில் வந்துள்ளது.

ஆங்கிலத்தினை வேண்டுமென்றே இணைப்பது குறைக்கப் பட்டுள்ளது.

கருத்துப்படம், செய்தி அலசல், வெளி நாட்டு குழுமங்கள், செய்திப் பரிவுகள் என்று அனைவராலும் பாராட்டக்கூடியதாக யாழ் இணையம் சிறப்பாக முன்னேறிக் கொண்டு வருகிறது.

குறைகள்

செய்திப்பிரிவில் சென்ற வாரத்தின் முதல் சில நாட்களில் சில உறுப்பினர்கள், இணைத்த செய்திகளை மறுபடியும் இணைத்துள்ளார்கள். ஒரே மாதிரியான செய்திகள் புதிய தலைப்பில் இட்டுள்ளார்கள்.

இவ்வாரத்தின் எனது பார்வையில் சிறந்த யாழ்கள உறுப்பினராக 'தேசிய நலனும் வெளியுறவுக் கொள்கையும்' என்ற ஆக்கத்தை தந்தமைக்காக குறுக்காலபோவானைத் தெரிவு செய்கிறேன்.

அடுத்த வாரக் காலக் கண்ணாடியை தொகுத்து வழங்குபவர்: புதிதாக யாழில் இணைந்து செய்திகள் பிரிவில் சிறப்பான ஆக்கங்களை தருபவரான சுகன் அவர்கள்

Link to comment
Share on other sites

காலக்கண்ணாடி 16-10-2007

தொகுப்பாளர்: சுகன் (sukan)

தேச விடுதலைக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கி சிங்கள பேரின வாதத்தால் தினம் மரணித்துக்கொண்டிருக்கம் எமது உறவுகளையும் நினைவு கூருகின்றேன்.

இந்த வார காலக்கண்ணாடியை வழங்க எனை அழைத்த கந்தப்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு காலக்கண்ணாடிக்குள் நுழைகின்றேன்.

image002.jpgimage004.jpg

காலக்கண்ணாடி மூலம் இந்த வாரத்தை மீளப்பார்ப்பதற்கு முதல் இருபது வருடம் முன்னே சென்று இந்த நாட்களை நினைவு கூருகின்றேன். இன்றய நாட்களில் தியாகி திலீபன் அவர்கள் அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கின்றார். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்று அகிம்சைவழியில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கி கொண்டிருக்கின்றார். காலத்தால் அழியாத இந்த நாட்களின் பெறுமதியை நினைவு கூர்ந்து காலக்கண்ணாடியை தொடர்கின்றேன்.

புதியவர்கள் அறிமுகம்

இந்த வாரம் யாழ் தளத்தில் புதிதாக இணைந்த உறவுகள் அக்கினி, காங்கேயன், என்னுமொரு உறவு இஎஎஸ், (தமிழில் உண்மையில் எப்படி உச்சரிப்பதென்று தெரியவில்லை.) மற்றும் எஸ் தயாளன். ஆகியோரை யாழ் இணையம் அன்புடன் வரவேற்கின்றது.

பிரதான நிகழ்வுகள்

பரபரப்பான இந்த வாரத்தில் பழ நெடுமாறன் அய்யா அவர்களின் தியாகப்பயண முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. துடிக்கும் இதயம் உனக்கிருந்தால் தூங்கவிடாது அந்த ரத்த கானம் என்ற வரிகளுக்கேற்ப அவர் தனது தியகப்பயணத்துக்கு அனுமதி கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்தார். தளரும் வயதிலும் தளாரத இன உணர்வுடன் படும் துன்பங்களை எல்லாம் துச்சமென ஒதுக்கி ஓங்கி ஒலிக்கின்றது அவரது குரல். சில உறுதி மொழிகளுக்கிணங்கி அவர் உண்ணாவிரதப்போராட்டத்தை நான்காவது நாள் நிறுத்தியுள்ளார்.

image005.jpg

தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தி நிற்கின்றது அவரது போராட்டம் நெடுமாறன் அவர்களின் முன்னெடுப்புகளுடன் தொடர்புபட்டு தினமணி ஆசிரியர் தலையங்கத்தில் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற தலைப்பிலான செய்தி கவனிக்கும் படியாக உள்ளது. நிகழ்வை உள்ளடக்கிய பீஷ்மரின் ஆய்வான "நெடுமாறன் என்னும் ஓர் அரசியல் சமிக்ஞை" என்ற ஆய்வு கவனத்துக்குரியது.

பல தமிழ் அமைப்புக்கள் தமிழகம் தமிழீழம் மற்றும் உலகளவில் நெடுமாறன் ஐயாவின் உண்ணாவிரதம் தொடர்பான அறிக்கைகள் விடுத்துள்ளது.

அடுத்த பிரதான நிகழ்வாக தியாகி திலீபன் அவர்களது இருபதாவது ஆண்டு நிகழ்வுகள் தமிழீழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஆரம்பமானது. தமிழீழ தேசியத்தலைவர் தியக தீபத்துக்கு மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினார்.

image007.jpgimage009.jpg

மேற்கண்ட நிகழ்வுகள் யாழ்களத்தில்

பழ நெடுமாறன் அய்யாவின் உண்ணவிரதம் தொடர்பாக வன்னிமைந்தன் அவர்கள் "நீ வேண்டும் நெடுமாறா" என்ற தலைப்பில் உணர்ச்சி பூர்வமான ஒரு கவிதையை தந்திருக்கின்றார்.

பழ நெடுமாறன் ஐயா அவர்களின் நிகழ்வுகள் சம்மந்தமான செய்திகளை உடனுக்குடன் இணைத்தும் உணர்வலைகளை பகிர்ந்த வண்ணம் கருத்துக்களம் நகர்கின்றது. நிறைய உறவுகள் இந்த நிகழ்வு குறித்து பங்களிப்பு செய்திருக்கின்றார்கள்.

தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவை தாங்கி மிக அருமையான கவிதைகள் கவிச்சோலை என்னும் தலைப்பில் மணிவாசகன், ஈழத்திருமகன், விகடகவி, தமிழ்த்தங்கை, கறுப்பி, ஆகியோர் வடித்திருக்கின்றார்கள்.

திலீபனுடன் முதலாம் நாள் இரண்டாம் நாள் என்று அந்த நாட்கள் பற்றிய தொகுப்பை மூலப்பதிவை குறிப்பிட்டு யாழில் நுணாவிலான் அவர்கள் இணைத்துக் கொண்டிருக்கின்றார். மிகவும் கனதியான கணங்களாக அவைகள் கண்முன்னே விரிகின்றது.

இணைக்கப்ட ஏனைய செய்திகள்

இந்தோனேசியாவில் பூகம்பம் என்ற செய்தியும் அதனைதொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் கொஞ்சநேரம் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

image010.gif

இந்த சம்பவம் குறித்த செய்திகள் உடனுக்குடன் கருத்துக்கள உறவுகளால் யாழ்தளத்தில் இணைக்கப் பட்டுக்கொண்டிருந்தது.

இன்னுமொரு பூமியதிர்வு வரும் என எதிர்பார்கப்படுவதாகவும் செய்திகள் இணைக்கப் பட்டிருக்கின்றது.

தென்கடலில் மூன்று இழுவைப்படகுகள் தாக்கியழிப்பு என்ற செய்தி வாரத்தின் ஆரம்பத்தில் வந்திருந்தது. இது குறித்து நெடுக்கால போவான் அவர்கள் பலதரப்பட்ட பார்வையில் கருத்துக்களை வழங்கியிருக்கின்றார்.

கிளாலியில் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு. பருத்துறையில் கிளைமோர் தாக்குதல். அம்பாறையில் விசேட அதிரடிப்படையினர் 10 பேர் பலி போன்ற தாக்குதல் சம்வங்களும்.

முல்லை தீவில் பொளத்த சின்னங்களை தரிசிக்கும் நிலையை உருவாக்குவது கடமை என்று மகிந்தர் கூறியிருக்கின்றார் என்ற செய்திகளும் இணைக்கப்பட்டுள்ளது.

கே பி கைது என்ற பரபரப்பு செய்திகளும் வெறுங்கையுடன் இலங்கை குழு தாயிலாந்திலிருந்து நாடு திரும்பிய என்ற செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.

சுவீடன் மற்றும் அமரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது சம்மந்தமாக செய்திகள வந்துள்ளன.

ஓட்டுக்குழுக்களுக்குள் குத்துப்பாடுகள் சுடுபாடுகள் சாவுகள் சம்மந்தமான செய்திகளும் வந்துள்ளன.

எச்சரிக்கை கலந்த ஒரு செய்தி இணைப்பு

விழித்திருங்கள் உங்களை சுற்றி நடப்பதை அவதானத்துடன் பாருங்கள் என்ற எச்சரிக்கை கலந்த செய்தியை வாசன் அவர்கள் இணைத்திருந்தார்.

இந்த செய்தி தமிழர்களிடையே மோதல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சதிகள் பற்றிய சந்தேகங்களை விளங்கப்படுத்தி நிற்கின்றது.- முக்கியமான செய்தி

இந்த செய்தியின் பின்னணியில் புலிகள் பிரான்ஸ் நாட்டின் இலங்கை தூதரகத்தை தாக்கியதை இருட்டடிப்பு செய்யும் பிரான்ஸ் அரசு என்னும் திவாயின சிங்கள பத்திரிகை செய்தியை அவதானிக்க வேண்டியுள்ளது. இதை நுணாவிலான் இணைத்துள்ளார்.

இந்த செய்தியின் பின்னணியில் கருத்துக்கள உறவு தேவன் குறிப்பிடும் "புலிஎதிர்ப்பு நடவடிக்கைகள் மிக மலிவான தரத்துக்கு இறங்கிவிட்டதை அல்லவா காட்டுகிறது" என்ற கருத்தும் கவனிக்க தக்கது.

தாயகத்தின் துயர் தாங்கி வரும் செய்திகள்

புதுக்குடியிருப்பில் காலையிலும் மாலையிலும் வான்குண்டு வீச்சு மாணவர்கள் அல்லோலகல்லோம் . மேலும் சில வான்குண்டு வீச்சுக்கள் நடந்துள்ளது.

யாழில் முச்சக்கர வண்டி சாரதி சுட்டுக்கொலை. மன்னாரில் இடம் பெயர்ந்த தம்பதியினர் இராணுவத்தாக்குதலில் பலி .; யாழில் 21 பேர் காணமல் போயுள்ளனர் 17 பேர் மனித உரிமை ஆணையத்தில் சரண் என்ப பல துயரச்செய்திகள் தொடர்கின்றன. வெலிக்கட மற்றும் கொலன்னாவ பிரதேசங்களில் பலர் கைது என்ற செய்திகளும் தொடர்கின்றன.

கவிதைப்பூங்காடு

தமிழினீ இணைத்த "எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?" என்ற கவிதை மனதை நெருடுகின்றது

கனடாவில் இருந்த பவித்திராவின் "யாரிடம் முறையிடுவோம்" என்னும் தலைப்பிலான கவிதை தாயகத்து அவலங்களை கண்முன்னே கொண்டு வருகின்றது

வல்வை சகாறாவின் "வேங்கையன் பூங்கொடி" என்னும் கனதியான காவியம் தாயக அழகோடும் வீரத்தோடும் தன்னடக்கமான உரையோடு நெகிழ்சியாக ஆரம்பித்திருக்கின்றது.

"மானம் மறைந்திடுமோ" என்னும் பிரம்மனின் கவிதை (பாடல் ) எழுச்சிகரமாக உள்ளது.

யாழ் அகத்தியனின் "ஈழத்து அகதியாய் நான்" என்ற தலைப்பில் ஒரு அகதியின் மன உணர்வுகளையும் அவன் தாயத்தின் பால் படும் வேதனைகளையும் அழகாக எடுத்துரைக்கின்றது. அவரின் என்னு மொரு கவிதை பேனாவோடு நான் என்ற தலைப்பில் நன்றாக உள்ளது.

"தலைவன் வழியிலே" என்ற தலைப்பில் விகடகவியின் கவிதை காலம் கடமை தேவை என்று பலதையும் பாடி நிற்கின்றது.

வ. ஐ. ச. ஜெயபாலனின் இரு பாடல்கள் அருமையாக உள்ளது. அவரின் பூ வால் குருவி என்ற கவிதையும் மிக அருமையாக இருக்கின்றது.

புத்தன் எழுதிய "புனிதம்" என்ற தலைப்பிலான கவிதை எமக்கென்று ஒரு வரலாறு இருந்தும், வரலாறுகள் பல படைத்தும் எம்கென்று ஒரு வரலாற்று பதிவை எழுதாது வரலாற்று தவறை விட்ட எமது சமூக ஆழுமை பற்றி கேள்விகள் எழுப்புகின்றது.

கவிதை அந்தாதி பகுதியில் பல கவிதைகள் மிக சுவார்சியமாக தொடர்கின்றது. கௌரிபாலன், தமிழ்தங்கை, கறுப்பி, வெண்ணிலா மற்றும் சுவி ஆகியோர் இந்தவாரம் எழுதியுள்ளனர்.

இங்கு நான் குறிப்பிடும் கவிதைகளும். முக்கிய நிகழ்வுகளில் நான் குறிப்பிடும் கவிதைகள் என எல்லம் தனித்துவமானதும் சிறப்பானதுமாக இருக்கின்றது. இதில் சிறந்தது எது என்றோ அல்லது விமர்சனமோ என்னால் முன்வைக்க இயலாது. ஓவ்வொருவரின் உணர்வுகளும் அழகாக ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு விடயமாக வெளிப்படுகின்றது. அந்த உணர்வுகளில் நானும் கரைந்து போகின்றேன். கடமைகளை உணர்கின்றேன்.

வாழும் புலம்

வாழும் புலம் பகுதியில் புலத்தில் கொண்டாட்டங்களில் பாவிக்கப்படும் மணவறைகள் தமிழர் பண்பாட்டு சின்னங்களில் ஒன்றா? அல்லது ஆரியமா அல்லது தமிழா என்ற கலைஞன் அவர்கள் இணைத்த தலைபில் விவாதங்கள் தொடர்கின்றன. இவற்றில் நிதர்சன் அவர்கள் விரிவான கருத்துக்களை எழுதியுள்ளார். நவம் அவர்கள் ச. மாடாசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரையை தலைப்புக்கேற்ற வகையில் இணைத்துள்ளர். நிறைய விசயங்கள் அறியக்கூடியதாகவும் சிந்திக்க கூடியதாகவும் உள்ளது.

திருமணம் முடித்த தமிழ் பெண்கள் தமது பெயருக்கு முன்னால் தமது கணவர் பெயரை இணைப்பது ஒர் தமிழ் பண்பாடா அல்லது அடக்கு முறையின் வடிவமா என்ற தலைப்பில் விவாதங்கள் தொடர்கின்றன.

இவ்வாறான தலைப்புகளில் விவாதிக்கும் போது எமது சமூகம் சார் குறை நிறைகளை அறிய முடிகின்றது. குறைகளில் இருந்து விடுபட்டு நிறைவான வளர்ச்சியடைய அடித்தளமிடுகின்றது என்று சொல்ல முடியும். சமூகத்தின் பிற்போக்கு தனங்கள் முற்போக்கு தனங்கள் எல்லாம் விவாதத்தின் ஊடாக வெளிவருவது சிறப்பான விடயம். தலைப்புகளை தொடங்கிய கலைஞனுக்கும் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

சிறுகதைகள்

சின்னகுட்டி அவர்களின் "அலங்காரத்திருவிழா" என்னும் கதை சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சில பிரச்சனைகளையும் அதன் உளவியல் தாக்கங்களையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அருமை. அவருக்கு பாராட்டுக்கள்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் 12 வது பகுதி பரபரப்பாக உள்ளது. கிபிர் ஆமி அம்மன் சமுக அவலங்களை அழகாக வெளிப்படுத்துகின்றது. அவரின் பணிக்கு பாராட்டுக்கள்.

அரசியல் அலசல்

அரசியல் அலசல் பகுதியில் ஈழவன் இணைத்த ஆரிய உதடுகள் உன்னது மற்றும் தயா இணைத்திருக்கும் பொம்மலாட்டம் மேலும் அந்த தலைப்பின் கீழ் நுணாவிலான் இணைத்திருக்கும் அரசியல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்துமா கடற்பிராந்தியத்திற்கான ஆதிக்கப் போட்டியில் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை என்ற தலைப்பில் தாயகத்தில் இருந்து புரட்சி எழுதிய கட்டுரையும் பதிவாகி இருக்கின்றது.

அத்தோடு சித்தன் இணைத்த கலைஞர் கருணாநிதியின் குடும்பம்- புருசோத்தம நாடகம் என்ற தலைப்பிலான கட்டுரையும் அங்குள்ளது.

நலமோடு நாம் வாழ

குண்டாக இருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நுணாவிலான் இணைத்துள்ளர்.

இரத்த அழுத்த நோய் பற்றிய விரிவான தகவல்களை நுணாவிலான் அவர்கள் இணைத்துள்ளார். பயனுள்ள பல தகவல்கள் அறியக்கூடியதாக உள்ளது.

அறிவுத் தடாகம்

அறிவுத்தடாகம் பகுதியில் எரிபொருளாகும் தண்ணீர் என்ற தலைப்பில் ஈழத்திருமகன் இணைத்த செய்தி எதிர்காலம் சம்மந்தமான புதியதொரு நம்பிக்கையை காட்டி நிற்கின்றது- இந்த விடயம் தொடர்பாக நெடுக்கால போவான் அவர்கள் மேலும் சில தகவல்களை இணைத்துள்ளார்.

ஜப்பான் சந்திரனுக்கு அனுப்பிய விண்கலங்களின் முக்கியத்துவம் தொடர்பான செய்தியை நெடுக்கால போவன் அவர்கள் இணைத்திருக்கின்றார்.

நிறைய புதிய விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது. பாராட்டுக்கள்.

இளைப்பாறும் களம் மற்றும் ஆடுகளம்

இளைப்பாறும் களத்தில் இளைஞன் அவர்கள் ஆங்கில திரைப்படம் பற்றி எழுதியிருக்கின்றார். மிக நல்ல விசயம். இப்படியான பதிவுகளை பார்துவிட்டு படத்தை பார்கும் போது நிறைய விடயங்களை உள்வாங்க முடியும். அவரது பணி தொடர வாழ்த்துக்கள்.

image011.jpg

வித்தியாசமாக உள்ள சித்திரமும் கைபழக்கம் என்ற தலைப்பில் இலக்கியனின் இணைப்பு ஓவியங்களை அழகாக கோர்த்து அருமையாக உள்ளது.

நாரதர் இணைத்த சுசீலா ராமனின் மாந்திரீகம் வேலவா. ஆடிக்கிற அடியில் தாரை தம்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா என்ற இருபத்தி மூன்றம் புலிகேசியின் வசனத்துக்கேற்ப பக்தி பட்டடை கிழப்புகின்றது.

20- 20 துடுப்பாட்டம் தொடர்பான செய்திகள் தொடர்கின்றது.

புயலின் பொது அறிவுப்போட்டி நிறைய தகவல்களை அறியக் கூடியவாறு நகர்கின்றது. நிறைய விசயங்கள் கேள்வி பதில்களாக தொடர்கின்றது. மணிவாசனின் தேடுங்கள் சொல்லுங்கள். தொடர்கின்றது. அரவிந்தனின் 20 20 துடுப்பாட்டம் தொடர்பான போட்டி சுவார்சியமாக தொடர்கின்றது.

வண்ணத்திரை என்ற பகுதியில் நுணாவிலான் இணைத்த ஈழத்து தமிழ் திரைப்படங்களின் பட்டியல் என்ற செய்தியில் தெரியாத பல ஈழத்து திரைப்படங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

"மீண்டும்" என்ற முழு நீள திரைப்படம் பற்றிய தகவல்களை தமிழ்வானம் அவர்கள் இணைத்திருக்கின்றார். அத் திரைப்படம் வெற்றி பெற பலரும் வாழ்த்தியிருக்கின்றனர். ஜமுனா அவர்கள் வாழ்துவதோடு மட்டுமல்லாமல் எம்மவர்களும் எமது படைப்பாளிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பல உறவுகள் மீண்டும் திரைப்படத்தை பார்கும் படி செய்கின்றேன் என்றும் நம்பிக்கை கொடுத்து கருத்தை பகிர்ந்திருக்கின்றார். ஜமுனா அவர்கள் கூறுவது போன்று நாம் எமது படைப்பாளிகள் வளர தோள் கொடுக்க வேண்டும். நல்ல விடயமும் நல்ல வாழ்த்துக்களும் கருத்துக்களும்.

நிறைகள் குறைகள்

யாழின் கருத்துப்படம் கவனத்தை ஈர்க்கும் படி உள்ளது அதற்கு எதிர்பக்கத்தில் உங்கள் கருத்து என்ன என்ற தலைப்பில் நான்கு விடயங்கள் இணைக்கப்பட்டிருக்பது சிறப்பாக உள்ளது.

காலத்துக்கேற்ற வகையிலும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டும் சமூக பிரச்சனைகளை கருத்தில் கொண்டும் சுய ஆக்கங்கள் திறம்பட உள்ளது.

நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களுக்கு ஏற்ப பல பக்கங்களில் இருந்தும் செய்திகளை வேகமாக இணைக்கும் உறுப்பினர்கள் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது

குறைகள் என்று கூறுவதை காட்டிலும் எனது மனதில் படுபவைகள் சிலவற்றை கூறுகின்றேன். ஆழமாகவும் உணர்வு பூர்வமாகவும் கவிதைகளை தரும் உறவுகள் அவற்றை ஏனைய குரல்வளம் உள்ளவர்களுடன் இணைந்து ஒலிவடிவத்திலும் தர முயற்சித்தால் அவைகள் என்னும் நிறைய மக்களை சென்றடையும்

பழ நெடுமாறன் ஐயாவின் எம்மீதான பாசத்துக்கும் இனப்பற்றுக்கும் செயல்பாடுகளுக்கும் வாழ்த்து மடல் ஒன்றை வரைந்து அதில் ஏனைய உறவுகளும் ஒப்பமிட்டு அவரை வாழ்த்லாம் அல்லது அவருக்கு அனுப்பி வைக்கலாம். இவற்றை செய்திகளுடன் இணைந்து உறவுகள் செய்து கொண்டுதான் உள்ளனர் ஆனால் யாழ் களத்திலிருந்த பிர்த்யோகமான ஒரு வாழ்த்தை வெளியிடலாம் அல்லது அனுப்பலாம் என்பது எனது கருத்து.

இந்தவாரம் காலக்கண்ணாடியை இத்துடன் நிறைவு செய்கின்றேன். அடுத்த வார காலக்கண்ணாடியை நல்ல படைப்புக்களை தந்து கொண்டிருக்கும் சின்னக்குட்டி அவர்களை தருமாறு அழைத்து விடைபெறுகின்றேன்.

நன்றி

சுகனால் காலக்கண்ணாடியை படங்களுடன் இணைக்கமுடியாதிருந்த காரணத்தால், அவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் அதனை இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

யாழ் கால கண்ணாடி 23.09.07

சின்னக்குட்டி

வணக்கம் நண்பர்களே. இந்த வார யாழ் காலகண்ணாடியை என்னை செய்யுமாறு சுகன் கேட்டு கொண்டார். எழுத்தில் விமர்சன வடிவில் செய்ய நேர அவகாசம் கிடைக்காத படியால் சிறிய ஒலி வடிவத்தில் தந்திருக்கிறன்.

கீழை உள்ள யூ ரூயூப் இணைப்பை தட்டி அந்த ஒலி வடிவத்தை கேட்டு கொள்ளுங்கோ

http://www.youtube.com/watch?v=Qnc5tEs1rSI

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யாழ் காலக்கண்ணாடி - ரமா

ரமா:- தத்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட - வில்லினில் பாட

வரம் தந்து அருவள்வாய் கணபதியே

சினேகிதி, ரசிகை:- ஆமா வரம் தந்து அருள்வாய் கணபதியே

ரமா: வாணி கலைவாணி தேவியே சரஸ்வதியே வரம் தந்தருள்வாயம்மா

ரசிகை சினேகிதி:- அம்மா வந்து எமக்கு வரம் தருவாய்

ரமா : வணக்கம் வணக்கம் வணக்கம் உங்கள் எல்லாருக்கும் வணக்கம். வில்ிலையை ரசிப்பதற்கு சபையியிலுள்ள எல்லோர்க்கும் முதல் வணக்கம்.தமிழே தாய்மொழியேயேயயயயய

சினேகிதி:- (மனசுக்குள்ள:என்ன இந்த இழுமை இழுக்கிறா நிப்பாடுறன் பொறுங்கோ )ஆமா இன்று அதுவும் இந்த யாழ் இணைய கருத்துகளத்தில் ஒன்று கூடி அப்படி என்ன தான்

கதைக்கப்போகின்றோம்?

ரசிகை:- அட யாழைப் பற்றி கதைக்க ஒன்றுமே இல்லையா? அதைப்பற்றி கதைக்க தொடங்கினால் இலங்கையை

எரித்த அனுமானின் வாலைப் போல் நீண்டு கொண்டு போகுமெல்லோ?

சினேகிதி:- என்னவோ இவா தான் அந்த வாலின்ரை நீளத்தை மெற்றிக் றூளர் கொண்டு அளந்தவா போல...கதையைக்

கேளுங்கோ!

ரமா:- இருவரும் கொஞ்ச நேரம் அலட்டமால் இருங்கோ.

"தமிழுக்காய் தமிழால் எல்லோரையும் இணைத்து ஒரு குடும்பத்திற்கு உரிய கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்பவற்றை

கருத்தில் கொண்டு ஒரு தசாப்பத்தை முடித்து 11ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் இந்த யாழ் இணையத்தின்

முதல்வர் திரு.மோகன் அவர்களுக்கும் ஒரு வசனத்தில் பதில் கருத்து எழுதிக் கொண்டிருந்த எம்மை யாழ்க் காலக்

கண்ணாடியில் வில்லிசை வைத்து அமர்க்களப்படுத்தும் அளவிற்கு தமிழறிவை வளர்க்க உறுதுணையாக இருந்த

மட்டுநிறுத்தினார்களுக்கும் சக உறுப்பினார்களுக்கும் எமது முதல் கண் நன்றியுடன் கூடிய வணக்கத்தை கூறி விடயத்திற்கு

போவோம்.

சினேகிதி:- விடயத்துக்குள்ளையா போகப்போகின்றோம்? அப்ப வடிவாய் பார்த்து கவனமாக காலை வையுங்கோ ரசி அக்கா.

ரமா:- சினேகிதி காலை வைத்தது காணும் இப்ப வாயை.........நீங்கள் கொஞ்சம் என்னைக் கதைக்க விட்டால் நம்ம சபையோருக்கு யாழ் களத்தில இப்ப என்ன நடக்குதெண்டு கொஞ்சம் விலாவரியா சொல்லிடுவன்.

சினேகி:- மெல்லமா ( இதென்ன பெரிய விசயம்..நான் சொன்னாச் சொல்லுப்படாதோ)

முதலில் யாழ் இணையத்துடன் இவ்வாரம் புதிதாக இணைந்த கருத்தாளர்களான asha123, தி.ஆபிரகாம்,

kaandam, shan_, கவரிமான், Mithunan_Arulan அனைவருக்கும் வணக்கம் கூறிக் கொள்வதோடு கருத்துக் களத்தில்

உள்ள எல்லா பகுதிகளிலும் தங்களின் சொந்தக் ஆக்கங்களோடு ஜொலிக்க வேண்டும் என்று வாழ்த்தி இந்த வார செய்திகள் பக்கம்

ஏட்டி பார்ப்போம்.

ரசிகை:- முக்கியமான செய்திகளை பார்க்கும் முன் இவ்வாரம் எம்முயிர்களுக்காக தம்முயிரை தியாகம் செய்த

மாவீரர்களுக்கு வீர வணக்கங்களை கூறிக் கொண்டு மற்ற செய்திகளுக்கு செல்லுவோம்.

ரமா:- அடுத்து பாக்கியறஞ்சித் அடிகளாரின் இறுதி ஊர்வல நிகழ்வு அமைதியாக இடம்பெற்றிருக்கிறது.

சினேகிதி:- திலீபன் அண்ணாற்றை நினைவு தின கொண்டாங்கள் பற்றிய செய்திகள் நிறையவே இருக்கு.

ரசிகை:- ம்ம்ம் சோக செய்திகளுக்கும் மத்தியில் ஒரு புது தெளிவு தரும் சாதனை பற்றிய செய்தியை வாசித்தீர்களோ இருவரும்?

ரமா:- இலங்கை வரலாற்றில் 5ம் தர புலமைப் பரீட்சையில் 200 புள்ளிகள் முதல் முதலாக பெறப்பட்டதையோ சொல்ல

வாறிங்கள் ரசிகை?

சினேகிதி:- அதோட சம்மந்தப்பட்ட விடயம் தான் ரமா அக்கா. ஆனால் அதில் நாம் எல்லாம் பெருமைப்பட

வேண்டிய விடயம் என்னவென்றால் திருமாறன் ஈழவரன் என்றா தமிழ் மாணவன் 190 புள்ளிகள் பெற்று

மிகப் பெரிய சாதனையை ஈட்டியுள்ளார் எல்லோ!

ரமா:- அதுவும் யுத்த பிரதேசமான கிளிநொச்சியில் இருந்து கொண்டு எல்லோ சாதித்திருக்க்கின்றார்.

ரசிகை:- அரசாங்கம் திட்டமிட்டு எமது இளைய தலைமுறையின் கல்வியறிவை நசுக்கி கொண்டிருக்கையில்

ஈழவரன் புரிந்த சாதன பாராட்ட வேண்டிய ஒன்றாகும்

சினேகிதி:- ம்ம் அந்த பிள்ளை இன்னும் சாதிக்க எங்கட யாழ் நேசக்கரம் கொஞ்சம் கரம் நீட்டவேணும்.

(தன் பாட்டில : இருந்திருந்திட்டு எனக்கும் மூளை வேலை செய்யுது )

ரமா:- சாதணைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க அதையும் தாண்டி அதியங்களும் நடந்து கொண்டிருக்கின்றது

சினேகிதி:- என்ன ரமா அக்கா புதிர் புதிராக போடுகின்றீர்கள்?

ரசிகை:- அது இல்லை சினேகிதி பெண்ணின் வாயிற்றுக்குள் இருந்த பாம்பை பற்றி சொல்ல வாருகின்றா போல் இருக்கு

ரமா:- ஆமாம் அமெரிக்காவில் மட்டுமில்லை இந்த யாழ்களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கதை பற்றி தான்

சொல்ல வந்தேன்.

சினேகிதி:- உதுக்குத்தான் அக்காமாரே நான் கண்ட கிண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பது இல்லை. யஸ்ற்

யூஸ் தான்.

ரசிகை:- ம்ம் யூஸ் கலரில் ஒன்றும் தெரியாது தானே. டபக் என்று குடித்து விட்டு உவா மாதிரி அவஸ்தை பட வேண்டியது தான்

சினேகிதி:- ரசிகை அக்கா எல்லாம் சொல்லுகின்றீர்கள் சரி தான். அது ஏன் அடிக்கடி எனது கையை ஏட்டி ஏட்டி பார்க்கின்றீ்ர்கள்?

ரசிகை:- இல்லை அம்மணி, போன கிழமை எங்கையோ வெட்டு விழுந்தாக ஞாபகம். அது தான் இப்பவும் ரத்தம் கித்தம்

வடியுதோ என்று பார்த்தேன்

சினேகிதி:- கிகிகிகிகி மட்டுநிறுத்தினார்கள் வெட்டுவது எமக்கு நுளம்பு குத்துவது மாதிரி அக்கா. அது தான் நெடுகலும் வெட்டு

வாங்கின்றோம்.

ரசிகை:- கவனம் பார்த்து, நெடுகலும் நுளம்பு குத்தினால் மலேரியா தான் வரும் தங்கைச்சி

ரமா:- சும்மா வெட்டுக்குத்து கதையை விடுங்கோ. வலைஞனை ஏற்கனவே மாறு கால் மாறுகை வாங்கினம். நீங்கள்

வேறை சும்மா அவரை எரிச்சல் படுத்தமா அடக்கி வாசியுங்கோ.நல்லதுக்குக் காலமில்லப்பா.

ரசிகை:- "ராம்" "ராம் "ராம்"

சினேகிதி &ரமா:- என்னச்சாசு ரசிகை?

ரசிகை:- உஷ்.... நான் என் இஸ்ட தெய்வமான ராமாரை நினைத்து தியானத்தில் இருந்தேன்

சினேகிதி:- நானும் என்னவோ கந்தப்புஸ் தாத்தா குடிக்கின்றா யூசை நீங்களும்

மாறி குடித்து விட்டீர்கள் என்று எல்லோ நினைச்சிட்டன்.

ரசிகை:- உமக்கு எனது இஸ்ட தெய்வமான ராமாரை பற்றி என்ன தெரியும்? சொல்லும் பார்ப்போம்

சினேகிதி:- "விடிய விடிய ராமர் கதை விடிஞ்சாவுடன் ராமர் சீதைக்கு என்ன முறை"

ரசிகை:- அந்த முறை தெரிந்திருந்தால் நீர் இப்படியெல்லாம் லொள்ளு விடமாட்டீர்

ரமா:- இப்ப யாருக்கு என்ன விளக்க குறைவு? உங்கடை விளக்க குறைவு கதையை கேட்டு நான் சொல்ல வந்ததை

எல்லாம் மறக்கின்றேன்.

ரசிகை:- கூல் டவுண் ரமா கூல் டவுண்

சினேகிதி:- இப்ப ரமா அக்காவை குஷிபடுத்த ஒரு கவிதை சொல்லாட்டா? "அன்றைத் திங்களும் அவ்வெண்ணிலாவும்"

ரசிகை:- "அன்றைத் திங்கள் அந் நிலாவின் ஒற்றை பூவில் நீர் பறக்க குற்றப் பார்வை பார்த்து நீயா?"

ரமா:- சினேகிதி கவிதை என்கின்றா நீர் பாட்டு எல்லோ பாடிக்கின்றீர்?

சினேகிதி:- அவாவிற்கு இப்ப நிலவுப் பாட்டுக்கள் தான் ஞாபகம் வரும். நான் சொல்ல வந்தது என்னவென்றால்

ஜெயபாலன் அண்ணா எழுதின கவிதையைப் பற்றி. எனக்கு மிகவும் பிடித்த கவிதை.

ரமா:- நான் வாசிச்ச மிச்ச கவிதைகளைப் பற்றி நான் சொல்லுகின்றேன் கேளுங்கள்.

"காரணம் என்ன?" "காரணம் என்ன" என்று சுவைதா கேட்க "காதலே காதலே" என்று அகத்தியன் சொல்ல எங்கோ

இருந்த சுண்டல் இடையில் வந்து "தேவதைக்காக" என்று சொல்ல " கண்ணே கண்மணியே" என்று ஐமுனா

நடிக்க "என் செல்லமே" என வெண்ணிலா மயங்க "எங்கே போனாய்" என்று இலக்கியன் துடிக்க ஒரே

பம்பல் தான் கவிதை பக்கத்தில்.

ரசிகை:- உண்மையாகவா? கேக்க நல்லாயிருக்கு பிறகு யாரு அவர்களோடை சேர்ந்தார்கள்.

சினேகிதி:- விடுப்பு புடுங்க உங்களை விட்டால் யாருமே இல்லை

ரமா:- அது மட்டுமா? கனடா பவித்திரா திலீபன் அண்ணாவை பற்றி ஒரு கவிதையோடு "போராடு போராடு என்று சொல்ல

கலக்கமென்ன கண்மணி" என்று தமிழ் தங்கை தொடார "தன்மானத் தந்தையே திருமாற பழ நெடுமாறன் ஐயா என்று பவித்திரா

தொடரா "நீ வேண்டும் நெடுமாறா" என்று வன்னிமைந்தன் நம் இனத்துக்காக உண்ணா நோன்பை தொடங்கிய

பழ. நெடுமாறன் ஐயா புகழ் பாட "முன்றாவது மனிதனின் கவிதை" கிறிஷ்மஸ்" உயிர்தெழுந்த நாட்கள்" "இல்லறம்" என்று

வ.ஐ.ஐயபாலன் அண்ணா தொடர ஒரே அமர்க்களம் தான்.

சினேகிதி:- பாவித்திரா என்னோடை தமிழ் வகுப்பில் படிச்சவா போல இருக்கு

ரசிகை:- நீர் எத்தனை தரம் கோட்டை விட்டு படிச்சிரோ தெரியா? சும்மா உம்மைப் போல் மற்றவையையும் நினைக்காதையும்.

சினேகிதி:- திலீபன் அண்ணாவை பற்றிய கவிதை வாசித்தவுடன் அங்காலை கதைபிரிவில் தூயா "நானும் என் ஈழமும்

பகுதி 6" சூப்ராக எமது பழைய நினைவுகளை மீளப்பதிந்து இருக்கின்றா.

ரசிகை:- நாங்கள் முன்பு பாடசாலைகளில் பேச்சுப் போட்டியில் பங்கு பற்றி திலீபன் அண்ணாவை பற்றி பாடியது

எல்லாம் ஞாபகம் வந்திச்சு.

ரமா:- உஷ் திலீபன் அண்ணாவின் அப்பா படிப்பித்த அத்துடன் அவர் பாலர் வகுப்பு படித்த பாடசாலையில் தான் சின்ன வயதில் நானும் படித்தேன்.

சினேகிதி:- இஞ்சை இங்கை ஒராள் சந்தடிசாக்கில சிந்து பாடுறா....

ரமா:- எங்கை இருந்து வந்து சேர்ந்திங்களோ தெரியா? என்னை ஒன்றும் சொல்ல விட மாட்டினமாம்.

ரசிகை:- என்ன சினேகிதி அதுக்கு இடையில் முகத்தை நீட்டி வைத்திருக்கின்றீர்.

சினேகிதி:- ரமாக்க என்னைப் பேசிட்டா

ரசிகை:- என்ன நீங்கள் யம்பு பேபி மாதிரியே அழுறிங்கள்?

ரமா:- இப்ப தானே சொன்னேன் என்னை கதைக்க விடமால் அலட்டுகின்றீர்கள் என்று. சொல்லி வாய் மூடுமுன் முகத்தை

நீட்டி போட்டு இப்ப வாயும் நீண்டு விட்டது.

நான் மிகுதியையும் சொல்கின்றேன் கேளுங்கோ. ஐரோப்பா அவலம் எழுதும் சாத்திரி இந்த முறை தொ(ல்)லை

பேசியால் தான் பட்டி அவஸ்தை பற்றி சொல்லியிருக்கின்றார்.

சினேகிதி:- அவர் சரியாய் சாத்திரம் சொல்லுறாரோ இல்லையோ கதைகள் மட்டும் நல்லாய் அனுபவித்து எழுதுகின்றார் அதாவது நல்லாப் புழுகித்தள்ளுறார்.

ரசிகை:- அப்படித்தான் இந்த கதையும். ஒருவருக்கும் சொல்லாதையுங்கோ. கலைஞன்...........

சினேகிதி:- நிப்பாட்டுங்கோ! என்ன அவர் எலக்சன் போட்ல வேலை செய்யிற விசயமா? அது ஊருக்கே தெரிந்த

விசயம் தானே. அந்த அனுபவத்தை வைத்து தானே யாழிலை நெடுகலும் வாக்கு பதிவு நடத்துகின்றார்.

ரமா:- அவர் பெரிய கில்லாடி தான். கதைத்து கதைத்து இலவசமாக குடை சம்பூ எல்லாம் வேண்டினதைப் பற்றி

விபரமாக சொன்னவர் கடைசிவரைக்கும் அந்த கடையின் பெயரை சொல்லவில்லை பார்த்திங்களோ?

சினேகிதி:- ஏன் ரமா அக்கா நீங்களும் போய் அந்தக்கடைல குடை வாங்கப்போறீங்கிளோ?

ரமா:- இல்லை கலைஞன் மட்டும் சுத்துமாத்துக்குள்ளை அகப்படலை. அவரின் அப்பாவும் பாவம் நல்லாய் சுத்தி போட்டாங்கள்.

ரசிகை:- என்றாலும் அவர்களின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடங்களாக இருக்கட்டும்.

சினேகிதி:- அங்காலை கரிகாலனும் எலக்ஷன் வோர்ட்டில் வேலை செய்வதற்கு ஆயத்தப்படுகின்றார் போலை.

ரசிகை:- புலத்தில் உள்ள ஆலயங்களுக்கு மக்கள் கொடுக்கும் பணம் பற்றியும் சினிமா நட்சத்திரங்களை அழைத்து

நடாத்தப்படும் விழாவையும் பற்றி குறுகிய ஆய்வு செய்ய முணைகின்றார்.

ரமா:- புலம் என்றால் தாயகம். புலம் பெயர்ந்தோர் என்பது தாயகத்தை விட்டு இடம் பெயர்ந்தோர். கரிகாலன் தனது

கேள்விகளை மாற்றியமைக்க வேண்டும்.

ரசிகை:- அங்கை தரிசனம் வேறு ரிரிஎன் வேறு என்று தெரியமால் pepsi குழம்புகின்றார்.

சினேகிதி:- .இவர்களும் அரசியல்வாதிகள் போல் தங்களுக்கு வேண்டிய நேரத்தில் சேருவார்கள் பின்னார் பிரிவார்கள்.

ரமா:- மொத்தத்தில் சனங்களை குழப்புகின்றார்கள் என்று சொல்ல வாறிரோ?

ரசிகை:- வேரும் விழுதும் பகுதியில் நுணாவிலான் இணைத்த மதிப்புக்குரிய திருமதி தமிழ்க்கவியின் பேட்டியை பார்த்திர்களோ?

சினேகிதி:- அதை வாசிக்கும் போது மிகவும் பெருமையாக இருந்தது

ரசிகை:- பெருமைபட்டது போதும் உம்மை பார்த்து யாரவது பெருமைப்பட நீரும் எதாவது செய்யுமன்.

சினேகிதி:- லொள்ளு கூடித்தான் போச்சு. எதற்கும் மணி அத்தானுடன் சந்திக்க தான் இருக்கு

ரமா:- திருப்பியும் தொடங்கியாச்சா? சும்மா அலட்டியதோடு நில்லமால் ஒருக்கால் அரசியல் பக்கமும்

பார்வையை வீசுங்கோ

சினேகிதி:-(என்ர கண்ணில என்ன கல்லோ வச்சிருக்கிறன்)

ரசிகை:- லொள்ளை விட்டு அங்காலை நிலா போட்ட இறால் குழம்பு படத்தை பாரும்.

சினேகிதி:- ஏன் பார்த்தவுடன் முருக்கங்காய் போட்டு சாப்பிடவேணும்போல் இருக்கோ?

ரமா:- இறால் குழம்புடன் தூயா சொல்லி கொடுத்த கார மீன் பொறியல் என்று "நாவுற வாயுற" பகுதி களை கட்டுது

சினேகிதி:- அடுத்து இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடிய யம்மு பேபியின் ராம் அண்ணா, இலக்கியன், சகி, அனைவருக்கும்

பிறந்த நாள் வாழ்த்துக்களையும் மறக்கமால் கூறிவிடுவோம் அக்கா.

ரமா:- யாழ் செயலரங்கம் பகுதியில் ஈழப்பிரியன் அவர்களால் வைக்கப்பட்ட கேள்விக்கு விடை பகிர யார் வருவார்கள்?

ரசிகை:- எல்லாமே "யார் பூனைக்கு மணி கட்டுவது" என்பதில் தான் இருக்கு

சினேகிதி:- பூனைக்கு மணி கட்ட தான் எங்களாலை முடியவில்லை ஆனால் அங்காலை கறுப்பி அக்கா தொடர்ந்து கொண்டிருக்கும் "பாட்டுக்குள்ளை

பாட்டு" "பழமொழியை கண்டுபிடியுங்கள்" "தொடர்பு வார்த்தை" "சொல்லாடுதல் போட்டி" அத்துடன் புயல் என்பவரால்

தொடங்கப்பட்ட "பொது அறிவுப்போட்டி" மணி அத்தானால் தொடங்கப்பட்ட "தேடுங்கள் சொல்லுங்கள்" என்று மிகவும்

விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கின்றது.

ரமா:- இவ் வாரம் யாழ் இணையத்தில் பல சொந்த ஆக்கங்கள் வந்திருந்தாலும் இந்த வில்லிசையில் பங்கு பற்றிய

ஒருவரும் தங்களுடைய ஆக்கங்கள் ஒன்றையும் பதிவு செய்ய வில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்து

கொள்ள வேண்டியதாய் இருக்கின்றது.

சினேகிதி:- நான் என்றாலும் கொஞ்சம் பாரவயில்லை நீங்களும் இருக்கின்றீர்களே!

ரமா:- உஷ்.... கிடைத்த சிறு நேரத்திலும் ஒரு வார நிகழ்வை கொண்டுவருவது மிகவும் கடினமாக இருந்தாலும் எங்களால்

முடிந்தவரை எல்லோரையும் சந்தோஷப்படுத்திய திருப்தியுடன் விடைபெறுகின்றோம்.

மூவரும்:- "மங்களம் மங்களம் வில்லுப்பாட்டு வாசித்த அனைவருக்கும் மங்களம்

விரும்பி வாசித்த எம் ரசிகர்களுக்கும் மங்களம்

வேண்டா விருப்புடன் வாசித்தவர்களுக்கும் மங்களம்

மங்களம் மங்களம் மங்கள் மங்களம்"

அடுத்து வில்லிசை பாட சீ யாழ் காலக் கண்ணாடியை தொகுத்து வழங்க நாம் அழைப்பது வாலை பறிகொடுத்து அடர் அவையில் படுத்து உறங்கி கொண்டிருக்கும் "ஆதிவாசியை"

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யாழ் காலக்கண்ணாடி

ஒக்டோபர் 1 - 7

வணக்கம். வணக்கம்!

யாழ்க்கள வாண்டுகளுக்கு கோபம் தலைக்கு ஏறிப்போச்சுப்போல

ஆதிக்குக் காலம் சரியில்லை. சனிமாற்றமாம். ஏதோ ஒரு வீட்டில் ஆட்சி செய்யிற சனியன் ஆதியின் தலையில் ஏறிக் குந்தியிருக்கார் அதான் நம்ம கந்தப்பு மாதிரி பாவமாக் கிடக்கென்று விட்டுவிட்டேன். நாங்கதான் நாடுநாடா அலையிறம் பாவம் சனியன் நம்ம தலையிலயாவது குடியிருக்கட்டுமே..

சரி சரி ஆதி அலம்ப ஆரம்பித்துவிட்டேன் என்று நீங்க முணுமுணுக்க ஆரம்பிக்கிறது காதில விழுகிறது. வாறன்..

அறிமுகப்பகுதியில போனவாரம் அதாவது அக்டோபர் 1 இளையதம்பி தன்னை அறிமுகம் செய்ய நம்ம களத்து இலக்கு, யம்முப்பே(ய்)ப், இன்னி, மாப்பு, காண்டம்(மயானமா?), வல்வைமைந்து, இனிஅவ(ல்)ள் ஆகியோர் வரவேற்று உபசரித்திருக்கிறார்கள். இளையதம்பி உள்ளே வந்து கவனமா செற்ரில இரப்பு எப்பவும் அவதானமாப் பேசினா இங்க பிரச்சினை இல்லை. இல்லையென்றால் பிறகு துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டிவரும்.

யாழ் முரசத்தைப் பார்த்தால் வெட்டுக்களுக்கு குறைவில்லை என்று தெரியுது. அதைப்பத்தி அதிகம் அலட்டத் தேவையில்லை.

யாழ் உறவோசையில் வெள்ளிமாலை பேட்டிப்பக்கம் மாப்பு அஜீவனிடம் அழகாகக் கேள்விகளைத் தொடுத்திருக்கிறார். அஜீவன் கெட்டிக்காரர் சில இடங்களில் நழுவல்.

ஊர்ப் புதினத்தில் வழமைபோல கப்பி, இறை, யனார்த்து, குரல்(?), கந்து, மின்னி, மோகன், (க)ரன், விவிசி வா ஆகியோருடன் தொழில்நுட்பமும் இணைந்து செய்திகளை இணைத்திருக்கிறார்கள்.

உலக நடப்பில் கப்பி, அஜீவன், நம்ம கந்து ஆகியோர் தங்கள் சேவையை செய்துள்ளார்கள்.

அடுத்தது அகழ்வும் நிகழ்வும் பகுதியில் சுகன், ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி என்ற தலைப்பில் அகழ்விற்குரிய கருவை முன்வைத்துள்ளார். எல்லாம் நம்ம யாழ்க்கள அகழ்வாராய்ச்சிக் காரங்களில் அவ்வளவு நம்பிக்கை நடக்கட்டும் நடக்கட்டும்.

3ந்தேதி இணைக்கப்பட்ட மூனாவின் கருத்துப்படம் தமிழீழத்தின் அயல்நாட்டு மனித ஓநாய்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறது.

செய்தி திரட்டியிலும் கப்பி தன்னுரிமையை நிலைநாட்டி இருக்கிறார். போட்டிக்கு சிநேகியும் குதித்திருக்கிறார் போல. இருட்டடி கிடைக்காமல் சிநேகி தப்பிக் கொள்ளட்டும்.

எங்கள் மண் பகுதியில் பரணி கிருஸ்ணரஜனியின் விடுதலையின் விரிதளங்கள் - 6 இணைக்கப்பட்டுள்ளது. இங்கும் கப்பியே கருமாரி.

கடந்த வாரம் வாழும் புலம் உருப்படியான விவாதங்களுக்கு களம் சமைத்திருக்கிறது. கரிகாலன் பெயரை தக்க வைக்கும்படியாக விவாதத்தைக் கொண்டுபோக முற்பட்டிருக்கிறார்(பல இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது) ஆள் கெட்டி. பாராட்டுவோம்.

பொங்கு தமிழில் எது புத்தாண்டு? பொங்குகிறது விவாதம் கவனியுங்க.

கவிதைப் பூங்காட்டை நெடுக்கு கடந்த வாரம் தன் வசப்படுத்தி பலரைத்(ஆதியைத்தான்) தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்துள்ளார். அத்தோடு காதற்குள்ளன் யாழ் அகத்தியன் தனது பாணியில்.. அத்தோடு முக்கியமாக களத்துக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்களின் கவிதை அவர் குரலிலேயே இணைக்கப்பட்டுள்ளது.

கதை கதையாம் பகுதியை

இளங்கோவின் சாய்ந்த கோபுரங்கள்( நிமிர்த்தவே ஏலாதோ?)

கண்களை மூடாமல் கனவு கண்ட நுண்ஸ் இருவரும் சேர்ந்து கவர்ச்சியாக நகர்த்தியிருக்கிறார்கள்.

வேரும் விழுதும் பகுதியில் பவள விழாக் காணும் எஸ் போவை இளசு இணைச்சிருக்கார்.

தென்னங் கீற்றில் அழியாத கவிதையை அஜீவன் எழுதியிருக்கிறார்.

வண்ணத்திரையில் குறுக்கால போனவர், கப்பி, நுண்ஸ் ஆகியோர் வர்ணம் பூசியிருக்கிறார்கள்.

நுண்ஸ், நெடுக்கு விளையாட்டுத்திடலில் எழுதி விளையாடி இருக்கிறார்கள்.

இனிய பொழுதில் டங்குவார் கீதமிசைக்க, அதை இரசிக்கிற வேளை கொறிக்கச் சுண்டல் வேண்டாமோ?

வலை(மீன்வலையா?) உலகத்தில் அருணும், கணனி வளாகத்தில் வந்தியத்தேவனும் உதவிக்கரம் கேட்டிருக்கிறார்கள்.

அறிவுத் தடாகத்தில் (இது ஆதிக்குச் சம்மந்தமே இல்லாத விடயம்) கப்பி, நுண்ஸ்(நுணுக்கம் என்று பெயர் வச்சிருக்கலாம்) இருவரும் அறிவை வளர்க்கப் பாடுபட்டுள்ளார்கள்.

அரசியல் அலசலில் குறுக்குத்(குறுகு;கால போவான் எழுதும் அரசியல்) தொடர் 3, மற்றும் கியூப சமூகம் நுணுக்கத்தின் கைவண்ணம் கண்டிப்பாப் பாக்கவேண்டிய பகுதிகள்.

மெய்யெனப்படுவதில் நெடுக்கு, நார், சபேசன், இளசு, கரிகாலன், தேவப்பிரியா தாராளமாக மெய்யாவே படுத்துகிறார்கள். இந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்று வாசித்தால் மூளை குழம்புவது நிச்சயம். நீங்கள் யாராவது பவர் புள்ளான ஆளாக இருந்தால் இந்தப் பகுதிக்குள் நுழைந்து இந்த மெய்யைப் பற்றி விவாதிப்பவர்கள் என்னதான் கூறுகிறார்கள் என்று ஆதிக்கு விளங்கப்படுத்துங்கள். உள்ளே போய் வாசிக்கிறதுக்கே திடம் வேணும்.

இந்த மெய்யெனப்படுவதில் மூளை சூடேறினால் நம்ம யம்முப்பே(ய்)ப் கரட் சம்பல் போட்டு வச்சிருக்கிறா டோன்ட் வொறி.

நலமோடு நாம் வாழப்பகுதியில் கறிவேப்பிலை மருத்துவம்,

துயர் பகிர்வோம் பகுதியில் மாவீரர் வீரவேங்கை முரசொலியின் 90ஆம் நாள் நினைவேந்தலை தமிழ் நிதா இட்டுள்ளார்.

யாழ் வழிகாட்டியில் தமிழ் கூகிலுக்கு யாழ் நுணுக்கம் வழிகாட்டி இருக்கிறார்.

இதுக்குக் கீழே ஆதி உங்கள் எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இக்காலக் கண்ணாடியில் ஒரு சிறந்த விமர்சனத்தைத் தரமுடியாமைக்கு மனம் வருந்துகிறேன். ஆதிக்கு தற்சமயம் ஆற அமர வாசித்து எழுத முடியாத சூழல். நிச்சயமாக தொடர்ந்து வரும் காலத்தில் ஆதிக்கான சந்தர்ப்பம் அமையும் நேரத்தில் மீண்டும் முடிந்தவரை தரமான விமர்சனத்தை முன்வைப்பேன் என்பதனை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு அடுத்ததாக யாரைத் தெரிவு செய்யலாம்.?????

வணக்கத்திற்குரிய நம்ம கு.சா அவர்களை ஆதி தெரிவு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

123cd7.jpg

யாழ் காலக்கண்ணாடி ஒக்டோபர் 14 2007

அனைவருக்கும் வணக்கம்!

இந்தக் காலக்கண்ணாடியை திருவாளர். குமாரசாமி அவர்களும், அவர்களுடன் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகச் சேர்ந்து படித்த செல்வி. பரிமளம் அவர்களும், மற்றும் இவர்களுடன் கலைஞனாகிய நானும் இணைந்து வழங்குகின்றோம். இங்கு கு.சா என்ற பெயரில் கூறப்படும் கருத்துக்கள் திருவாளர். குமாரசாமி அவர்கள் ஒக்டோபர் 07, 2007 தொடக்கம் ஒக்டோபர்13, 2007 வரையிலான காலப்பகுதியில் யாழில் உண்மையில் எழுதிய கருத்துக்கள் ஆகும். செல்வி. பரிமளம் என்பவர் ஓர் கற்பனைப் பாத்திரம் ஆகும்..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

- யாழ் அரிச்சுவடி: வணக்கம்-

கு.சா: வணக்கம் சிவகுமாரன்!வாருங்கள்.நல்ல பெயருடன் அறிமுகம் செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

பரிமளம்: உங்களுக்கு சைவப்பெயர்கள் தான் நல்ல பெயராத் தெரியும் எண்டு எனக்கு அப்ப அஞ்சாம் வகுப்பில இருந்தே தெரியும்.

கலைஞன்: ஒக்டோபர் 2007 இல், யாழ் இணையத்தில் இணைந்த உதயபானு, ஈழத்தம்பி, பிலெனின்,சிவகுமாரன் ஆகியோரை அன்புடன் வரவேற்கின்றோம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

- உலக நடப்பு: இலங்கையர் ஒருவர் மதுரையில் சுட்டுக் கொலை-

கு.சா:

27915563199.jpg

பரிமளம்: இவர் சிங்களவரா? தமிழரா? முஸ்லீமா? பறங்கியரா? சொல்லுவத கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கோ.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

- உலக நடப்பு: நவீன வேவு விமான சேவையை அமெரிக்கா இலங்கையுடன் பகிரவுள்ளது-

கு.சா: நிச்சயமாக இந்தியாவுக்கு அல்ல!!!!இந்தியாவை பழம் திண்டு கொட்டை போட்டவர்கள் அமெரிக்கர்களும் ரஷ்சியர்களும் ????இந்தியர்களிடம் எந்த பருப்புமே வேகாது.உண்மையிலேயே இந்தியாதான் இவ்வுலகின் வல்லரசு. விபரமறிந்தவர்களுக்கு இது நன்றாகத்தெரியும்

கலைஞன்: உலக நடப்பு பகுதியில் வாசகர்களால் ஓரளவு பார்க்கப்பட்ட கடந்தவாரச் செய்தி நெடுக்காலபோவான் இணைத்த 'லண்டனில் அதிகரித்து வரும் இளையோர் வன்முறை - கொலை' மட்டுமே ஆகும். உலகநடப்பு பகுதி உற்சாகம் குறைந்து காணப்படுவதற்கும், பதில் கருத்துக்கள் குறைவாக வருவதற்கும் முக்கிய காரணங்களாக நான் நினைப்பவை: ஒன்றில் சுவாரசியம் இல்லை அல்லது இணைக்கப்படும் செய்திகளில் பயனுள்ள தகவல்கள் இல்லை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

- செய்தி திரட்டி: மனைவியின் துணையுடன் அண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி!-

கு.சா: முன்னர் ஒரு முறை இதே போன்ற செய்தியை நான் இணைத்தபோது பல விமர்சனங் களுக்குள்ளாகினேன். அதை விமர்சித்த என் உறவுகள் இன்று எங்கே? அதை இணைத்ததிற்காக மன்னிப்பு கூட கேட்டிருந்தேன். நிர்வாகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை தனிய உறவுகளை மட்டுமே கேட்கின்றேன்?

பரிமளம்: அப்ப அது புது அனுபவம். இப்ப சனத்துக்கு தினமும் இப்படி செய்திகள யாழில பார்த்து பழகிப்போச்சு. இதுக்குப் போய் சும்மா பீல் பண்ணாதடா எண்ட செல்லம்!

கலைஞன்: செய்தி திரட்டியில் எவ்வாறான செய்திகள் இணைக்கப்பட முடியும் என்று நிருவாகம் சற்று விளக்கமாக கூறமுடியுமா? உடனுக்குடன் செய்திகள் | ஈழம் | உலகம் இப்படி எழுதப்பட்டுள்ளது. இப்போது ஊர்ப்புதினம் பகுதியிலும், உலகநடப்பு பகுதியிலும் கள உறவுகள் எல்லோரும் செய்திகளை இணைக்க முடியும். எனவே இந்தப் பகுதியை நீக்கிவிடுவது நல்லது என நினைக்கின்றேன். இந்தப் பகுதி யாரையாவது கிண்டல் அடிக்கும் செய்திகளை இணைப்பதற்கு மாத்திரமே தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-வேரும் விழுதும்: பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் (Jeevan4U Swiss Radio ) அவர்களுடனான உரையாடல்!!-

கு.சா: மெதுவாக இருவருக்கும் நன்றிகள்.

பரிமளம்: உலகத்தில மெதுவாக நன்றிகள் எண்டு சொன்ன முதல் மனுசன் நீங்கதான்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-இனிய பொழுது: இளையராஜாவின் இனிய கானம்-

கு.சா: இளசுவின் பாடல்கள் கேட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.டிஸ்கோ ஹிந்தி பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த எம்மவரை கிராமியப்பக்கம் திருப்பிய பெருமை இசைஞானியையே சாரும்.இவருடைய இசையை வைத்தே இன்றைய ஒருசில வானொலிகளும், தொலைக்காட்சிகளும் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றன.

கலைஞன்: இனிய பொழுது பகுதியில் "யாழ். இல் 'சிலந்தியின் கேள்வி பதில் நேரம்' பதில் வெகு விரைவில் உங்கள் கேள்விகளையும் கேளுங்கள் என சுண்டல் அவர்கள் ஒரு தலைப்பை ஆரம்பித்து இருந்தார். இதில் தற்போது வரை கேட்கப்பட்டுள்ள கேள்விகள்:

டன்: சுண்டலின் எம்.எஸ்.என் லிஸ்டில் எத்தனை குட்... சா பூவையரின் முகவரிகள் இருக்கு எண்டு ஒருக்கா சிலந்தியாரிட்ட கேட்டு சொல்லுவீங்களா யாரேனும்??

தயா: கேள்வி இலக்கம் ஒண்று...:- சுண்டல் எத்தினை பேருக்கு கடலை போட்டார்... அவர்களில் முக்கியமானவர் யார்.. ( ஒரேகேள்ள்விதான்)

ஈழவன்: சிலந்தி நீங்கள் நல்லவரா கெட்டவரா?

சபேஸ்: சிலந்தி அண்ணே...

சைவ சமயத்தின் சிறப்பை எடுத்து சொல்லுவீர்களா?

இந்த கேள்வி பிடிக்கலை எண்டால்...

கனடா நாட்டில் பெரியார் மனறம் அமைக்க என்ன செய்ய வேண்டும்?

கவரிமான்: குரு சிலந்தி அவர்கள் இந்து சமயத்தவரா???அப்படி ஆயில் என்னுடைய முதல் கேள்வி;இந்து சமயத்தில் மது குடிக்க கூடாது என்றும் புகைக்க கூடாது என்றும் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? இது செய்தால் அவர்கள் இந்துக்கள் இல்லயா???

இன்னும் ஓர் கேள்வி, ஏன் எல்லோரும் உங்களை சிலந்தி என்று அழக்கிறார்கள்??? இது உங்கள் பெற்றோர் வைத்த பெயரா? இல்லை பட்டமா?

வெண்ணிலா: வணக்கம் சிலந்தி அவர்களே, என்னுடைய கேள்வி.

"ஆண் பெண் நட்பு தவறானதா? இல்லையா? விளக்குக ;

இனியவளின் கடந்தவார பொன்மொழிகளில் சில:

இனியவள்: முன்வந்து உதவும் ஆட்களைவிட முன்வந்து

பின் தள்ளுமாட்களே அதிகம்

மருமகன்: முன்வந்து பின் தள்ளும் ஆட்களை விட

கூட இருந்து குழி பறிக்கும் ஆட்களே அதிகம்

நுணாவிலான்: மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்

சுவை/சுவி: சுகதேகி என்றால் ஆரோக்கியம்

அரவிந்தன் எழுதும் 'எனது நியூசிலாந்துப்பயணம்' தொடர்கட்டுரை 100 பதில்க்கருத்துக்களை இதுவரை கண்டு தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

சின்னக்குட்டி அவர்கள் "சின்னக்குட்டியின் அப்பன் மவனே சிங்கன்டா 365 நாட்களை தாண்டி திரைவானில்-video" எனும் தலைப்பின் கீழ் ஒரு வீடியோவை இணைத்து இருந்தார். அதை கீழே பார்க்கலாம். சின்னக்குட்டிக்கு யாழ் இணையம் சார்பில் வாழ்த்துக்கள்!

இறுதியாக இனிய பொழுது பகுதியில் உள்ள இனியவள் ரசித்த சினிமா பாடல்களில் நுணாவிலான் இணைத்த பல பாடல்களில் எனக்கு பிடித்த அழகிய பாடல் ஒன்று..

விழிகளின் அருகினில் வானம்!

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!

இது ஐந்து புலங்களின் ஏக்கம்!

என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!

பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!

இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!

அவள் நட்பை யாசித்தேன்!

அவள் பண்பை நேசித்தேன்!

வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

இப்படி தொடர்கின்றது பாட்டு..

">
Link to comment
Share on other sites

ஜம்மு பேபியின் யாழ்காலகண்ணாடி 21/10/2007

kannadiis7.jpg

இன்று தமிழர்களிற்கு எல்லாம் மகிழ்சியான நாளாகவே இருக்கும் இன்று கரும்புலி படையணி மற்றும் தமிழீழ விமான படை அணி இருவரும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் அநுராதபுர வான்படை தளமே அதிர்ந்து போய் காணப்படுகிறது.........வெற்றியாக குண்டுமழைகளை பொழிந்து விட்டு இருப்பிடம் திரும்பிய விமானபடையினருக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு கரும்புலி அணியில் சகோதர சகோதரிகள் தம் உயிரை துச்சமா மதித்து சென்றவர்கள் தம்முயிரை அர்ப்பணித்து தலைவன் வவைத் திட்டத்தை வென்றவர்கள். அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து காலகண்ணாடியினுள் செல்கிறேன்!!(21சகோதர,சகோதரிகளை இழந்த துயருடன்)

"என்னை ஈன்றெடுத்து என்னையும் மனிதனாக்கி என் வளர்ச்சியில் உளம் மகிழ்ந்து என் துயரை தன் துயராக எண்ணி தாங்கி, தன்னை ஒரு ஏணியாக்கி என்னை உயரத்துக்கு கொண்டு செல்ல ஒரு துணையாக வரும் என் அன்பு அன்னைக்கு என் இதயத்தில் இருந்து வரும் அன்பு முத்தங்களை அள்ளி வழங்குவதுடன் இன்று என்னால் தொகுத்து வழங்கும் இந்த காலகண்ணாடியையும் என் அன்னைக்கு பரிசாக கொடுக்கிறேன்!!" :wub:

53113946kr2.jpg

17mn9.jpg

யாழ்கள பல்கலைகழகத்தின் விதிமுறைகள்!!

இந்த பல்கலைகழகத்தில் சேர பல மாணவர்களும் காத்திருக்கும் போது என்னையும் சுண்டல் அண்ணாவையும் போல குழப்படி செய்யாம அச்சா பிள்ளைகளா படிக்க வேண்டும்!!

*யாரும் பல் கலைகழகத்தில் அடித்து போட்டீனம் என்றா நீங்க திருப்பி அடிக்க வேண்டாம் பக்கத்தில இருகிற (ரிபோர்ட்) என்ற பட்டனை அமர்தினா செக்ரியூட்டிகார்ட் எல்லாம் ஓடி வந்திடுவீனம்.........இந்த பட்டனை பற்றி தெரியாதவை இங்கே சென்று பார்கவும்!!

இங்கே செல்லவும்

*தமிழில் தான் பல்கலைகழகத்தில் எழுத வேண்டும் அது சரி ஆனா கதைக்கும் போது தமிங்கிலம் வந்தே தீரும் அதை நிர்வாகம் எதிர்த்தா நாம பார்த்து கொள்வோம் பயப்பிட வேண்டாம்...........தமிழில எழுத தெரியாட்டி இங்கே போய் அதனை படியுங்கோ!!

இங்கே செல்லவும்

யாழ்கள பல்கலைகழகத்தின் துணை வேந்தர் -டாக்டர்.மோகண்

யாழ்கள பல்கலைகழகத்தின் உப வேந்தர் -திருவாளார் .வலைஞன்

யாழ்கள பல்கலைகழகத்தி கண்காணிக்கு குழுவினர் (செக்ரியூட்டி)

யாழ்பாடி (தலைமை செக்ரியூட்டி)

யாழ்பிரியா (யார் உவா என்று மாணவர்களிற்கு எல்லாம் சந்தேகம்)

இணையவன் (நல்லதொரு செக்ரியூட்டி)

எழுவான் (அட மேல சொன்ன 3 பேரில ஒருத்தர் என்று சொல்லுவன் என்று நினைத்தீங்களோ நேக்கு தெரியாது)

மற்றும் 3984 மாணவர்களையும்,விரிவுரையாளர்?ளையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரே ஒரு தமிழ் பல்கலைகழகம்!!அது 10 வருடங்களாக நிலைத்து நிற்பது என்பது நமக்கு எல்லோருக்கும் பெருமை அதில் ஜம்மு பேபியும்,சுண்டல் அண்ணாவும் படிக்கிறது எல்லாருக்கு பெருமை (இது கொஞ்சம் ஓவராக இருக்கோ)

"மொட்டுகள் பூத்து மலராக்கி" எங்கும் நறுமணத்தை வீசுவது போல் தான் இந்த யாழ்கள பல்கலைகழகம் பல பூக்களை உலகதிற்கு தந்து கொண்டு தொடர்ந்தும் பத்து வருடங்களாக எந்த வெள்ளதிற்கும்,மழைக்கும் அசைந்து கொடுக்காமல் தன் பயணத்தை அமைதியாக மேற்கொண்டு இருகிறது. பலதரபட்ட பூத்து குலுங்கும் நறுமணம் வீசும் பூக்களை கொண்டு யாழ்கள பல்கலைகழகம் கம்பீரமாக நிற்கிறது :) , இங்கு மதிப்புக்குரிய துணைவேந்தர் மோகன் அண்ணாவின் தலைமையில் பல விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் கொண்டு பல்கலைகழகத்தை சிறந்த வழியில் கொண்டு செல்வதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. யாழ் பல்கலைகழகம் தற்போது புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்துடன் மிளிர்கிறது. இந்த பல்கலைகழகத்தின் விசேசம் என்னவென்றால் விரிவுரையாளராக கடமை ஆற்றுபவர்கள் இன்னொரு பீடத்தில் தாமும் கல்வி பயில்வதே. அத்துடன் இன்னொரு சிறப்பு 5 வயது இளையவர் முதல் 99 வயது முதியோர் வரை இந்த பல்கலைழகத்தில் கூடி மகிழ்ந்து கும்மாளம் அடிப்பதுடன் கற்றல் மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடல் ஆகும், ஆகவே இவ்வளவு பெருமைகளையும் தாங்கிய ஒரு தமிழ் பல்கலைகழகத்தில் தான் நாம் இன்று நுழைய போகிறோம்....ஜம்மு பேபி இந்த பல்கலைகழகத்தில எல்லா பக்கமும் ஓடிதிரிந்து விளையாடி எல்லோரிடம் பேச்சும் வாங்கினது தான் ஆனாலும் மறக்கமுடியாத பல நினைவுகளை இந்த பல்கலைகழகத்தில் தான் பெற்று கொண்டது என்பதை மறுக்கமுடியாது......அந்த வகையில் ஜம்மு பேபி தன் நாட்குறிப்பில் கடந்த கிழமை பல்கலைகழகத்தில் நடந்த சுவாராசியமான சம்பவங்களை பதிந்து வைத்த டயரியை படுக்கையில் இருந்தவாறே புரட்டுகிறது. கடந்த கிழமை நினவுகளிள் மூழ்கிறது,அத்துடன் மட்டுமில்லாமல் மறக்கமுடியாத சில பசுமையான சம்பவத்துடனும் சேர்ந்து மூழ்கிறது!!

பல்கலைகழக நாற்சந்தியில் டங்குமாவின்ட செட் நிற்கீனம். அவரின்ட செட்டில (தூயவன்,வினித்,டங்குவார்) இப்படி கொஞ்ச பேர் நின்று பம்பல் அடித்து கொண்டு வாற போறவைய நக்கல் அடித்து கொண்டு இருக்கீனம் அது மட்டுமா வாற போற அக்காமாருக்கும் நக்கல் அடித்து கொண்டிருக்க அந்த பக்கம் வந்த இன்னொரு மிகவும் புத்திசாலி மாணவனான கலைஞன் பெண்களை நக்கல் அடிப்பதை பார்த்து டென்சன் ஆகி ஏச தொடங்கிடார். என்றாலும் இவை கலைஞனுக்கே நக்கல் அடித்து கலாய்த்து போட்டீனம் என்றா பாருங்கோ............கலைஞனுக்கு சரியான கோபம் மற்றும் டென்சன். ஒன்றும் சொல்லாம போயிட்டார் (போய் பிறகு வந்து வாக்கெடுப்பு நடத்துறாறோ நேக்கு தெரியாது)............. :lol:

இவர் போக ஒருத்தர் வாறார் புதிசா இன்றைக்கு தான் முதன் முதலா வாறவர் போல வாறார் முருகா அண்ணண்..........இவர் வந்து பழனி மலையில் இருந்து வருகிறார் பழனிமலையில ஆதியின்ட பிரண்ட்ஸ் எல்லாம் நிற்பீனம் என்று நினைக்கிறேன் ஆனா ஒரு காலத்தில இவருக்கும் ஆதிக்கும் போட்டி ஏதாவது வாழைபிரச்சினை இருக்குமோ தெரியாது..........ஆனாலும் அண்ணண் நிறைய நாளா மட்டம் போட்டு விட்டு இன்றைக்கு வந்து " சத்தியமா தப்பு தண்டா ஏதும் பண்ணவில்லை என்னால ஒரு லெக்சையும் அட்டண்ட் பண்ண ஏலாம இருகிறது என்று கரிகாலன் அங்கிளிட்ட சொல்லுறார்..........கொஞ்சம் சவுண்டா சொல்லுறார் ஆனா பழனிமலை முருகாவின் அலறல் ஒருவரினதும் காதிலும் விழவில்லை போல.....இவரோட புதிதா வந்தவர் (SWISS GEO) இவரின்ட பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு இன்னும் தான் வந்திட்டேன் என்று நிர்வாகத்திட்ட சொல்லவில்லை ஆனா அடிக்கடி பல்கலைகழகதிற்கு வந்து செல்கிறார்............அண்ணன் அடக்கி வாசிக்கிறார் ஏன் என்று தெரியவில்லை எனி தான் வாசிக்க போறாறோ என்று யாமறியோம்!!இவை இரண்டு பேரும் நம்ம டங்கிளஸ் மாமாவின்ட செட்டிட்ட மாட்டுபட்டு போயிட்டீனம் உடனே இவை புதிய ஆட்கள் என்று "ராகிங்" பண்ண தொடங்கும் போது தான்.............

ஜம்முபேபி,சுண்டல் ,நிலா அக்கா இப்படி இன்னொரு செட் வருது. வந்தவுடனே நேரா வந்தது டங்குமாமாவிட்ட தான் (தூயவன் அண்ணா சொல்லுறார் டங்கு யாரிட்ட வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளுங்கோ இந்த ஜம்முட்ட வேண்டாம் சொல்லிட்டன்) என்ன இப்படி பயந்து கொண்டு நாம சீனியர் இவன் இப்ப தானே வந்தவன் இவனிற்கு போய் பயந்து கொண்டு உடனே ஜம்மு பேபி சீனியர் என்றாலும் எத்தனை வருசம் தான் ஒரு பல்கலைகழகத்தில படிகிறது உடனே டங்கு மாமா மற்றவனை போல படிபித்த ஆசிரியருக்கு துரோகம் செய்திட்டு போறவன் நாம இல்லை அது தான் தொடர்ந்தும் வெயில் விட்டு படிக்கிறோமல :icon_mrgreen: !! ஜம்மு பேபி இதை நாம நம்பிட்டோமாக்கும் ஆனா இப்ப சொல்லுறன் பஞ் அதாவது ரஜனி கூட நடிக்க வரக்க அறிமுகம் தான் ஏன் ஜம்மு பேபி கூட யாழிற்கு வரும் போது அறிமுகம் தான் சோ இந்த "ராகிங்" பண்ணுறது எல்லாம் வேண்டாம் சொல்லிட்டன்......அப்ப நான் வரட்டா!! டங்கு மாமா (மனதிற்குள்ள) என்னடா வந்தான் சொன்னான் போறான் நம்மளையே கலாய்ச்சிட்டு போயிட்டான்!! :(

இப்படியே ஜம்ம் பேபி ஆடிபாடி கொண்டு நிர்வாகத்தின்ட அறைகுள்ள எட்டி பார்க்க விரிவிரையாளர் வலைஞன் ஏச ஓடி வந்திடு பேபி நல்ல பிள்ளையாக இந்த முறை பல்கலைகழகத்தின் ஒருத்தரும் குழப்படி செய்யாதபடியா ஒருத்தருக்கும் பனிஸ்மன்ட் (எச்சரிக்கை) கிடைக்கவில்லை என்றாலும் நம்ம பல்கலைகழகத்தில நாகரிகமற்ற முறையில் பல்கலைகழக சுவரில் கீறினா எடுத்து போடுவீனம் அந்த வகையில் இந்த முறைசுவரில கீறு வாங்கி ஏச்சு வாங்கின ஆட்களை பார்க்க இங்கே போகவும் ஆனா கவனம் நிர்வாகத்தில உப வேந்தர் (உப நிர்வாகி) சரியான ஸ்ரிக சரியோ ஆன படியா கவனமா போய் பார்த்து விட்டு ஓடி வாங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=13069

அத்தோட விரிவுரையாளர் கறுப்பி மேடம் நிர்வாகத்திடம் சந்தேகம் கேட்டுள்ளா அதை நிர்வாகம் பார்க்கவில்லை போல இங்கே சென்று பார்த்து ஒருக்கா கறுப்பி மேடத்தின்ட சந்தேகத்தை கிளியர் பண்ணி விடுங்கோ!!

வலைப்பூவில் Trackbacks for this entry இருக்கும் பதிவுகளை எப்படி அழிப்பது

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=22031

இப்படியே நிர்வாக அறையை பார்த்துவிட்டு சுண்டல் அண்ணாவோட கடலை போட்டு கொண்டு வரக்க எதிரில் பகுதி நேர அரசியல் விரிவுரையளாரான சாணக்கியன் அண்ணாவும் அதே போல் பகுதிநேர விரிவுரையாளர் தயா அண்ணாவும் உரையாடி கொண்டு வருகிறார்கள் அவர்களை கண்டவுடன் ஜம்முபேபியும்,சுண்டல் அண்ணாவும் நல்ல பிள்ளைகள் போல குட்மோர்னிங் சொல்ல,அவையும் குட்மோர்னிங் சொல்லி எப்படி பேபி சுகம் என்று நலம் விசாரித்து விட்டு எமது பல்கலைகழகத்தை மேலும் சிறந்த முறையில் நடத்தி செல்ல ஒரு சங்கம் தேவைபடுகிறது மற்றது சில நேரம் நிர்வாகம் சில பிழைகளையும் விடுகிறது இதனால் மாணவர்கள் பல்கலைகழகம் வராம இருப்பதை அவதானிக்கமுடிகிறது இதனை எல்லாம் சுமுகமான தீர்வு காண உங்கள் தலைமையில் ஒரு சங்கம் அதாவது"சுகந்திர கருத்தாளர் சங்கம்" என்று ஆரம்பிக்கவும் அதற்கு தேவையான ஆலோசனைக் உதவிகளை நாம் தருகிறோம் என்று,உடனே ஜம்மு பேபியால் பல்கலைகழக வளாகத்திலே இந்த சங்கம் ஆரம்பிக்கபட்டு அதன் கொள்கைகளும் தெளிவாக விளக்கபட்டது ஆனாலும் சில மாணவர்கள் சங்கத்தின் மீது அவதூறை பரப்பியதால் பலரும் சங்கதிற்கு எதிர்பை தெரிவித்ததுடன்,அரசியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் குறுக்ஸ் தானும் பல சங்கங்களை மது சங்கதிற்கு எதிராக பல்கலைகழக வளாகத்தில் ஆரம்பித்தாலும் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு "புல்டோசர்" கொண்டு அவரின் சங்கங்களை அழித்ததுடன் இன்னொரு சிரேஷ்ட மாணவன் கலைஞனால் பல்கலைகழக நுழைவாயிலில் உருவாக்கபட்ட சும்மா வந்து சும்மா போகும் சங்கமும் நுழைவாயிலில் இடைஞ்சலாக இருக்கும் என நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்து அதனை பல்கலைகழகத்தின் பின்வாயிலில் அமைத்து கொடுத்தது அதனுடன் சுண்டல் அண்ணாவால் கடலை போட ஆரம்பிக்கபட்ட இன்னுமொரு சங்கம் உடனடியாக யாழ்பாடி என்ற பல்கலைகழக செக்ரியூட்டி மூலம் உடனடியாக அப்புறப்படுத்தபட்டது தன்னை எதிர்த்து சுண்டல் அண்ணா பல ஆர்பாட்டங்களை செய்தபோது அவை யாவும் பயனற்று போனதே மிச்சம் (ஒரு கை தட்டினா ஓசை வராது)

ஆகவே இதிலிருந்து "சுதந்திர கருத்தாளர் சங்கத்தின்" மேல் நிர்வாகம் கொண்டுள்ள நம்பிக்கை புலனாகிறது ஆகவே "சுதந்திர கருத்தாளர் சங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த பெருமையை நிலை நிறுத்தும் என்று நம்புவோமாக! கருத்து சுதந்திர சங்கத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் அங்கத்துவர்களையும் இங்கே செல்வதன் மூலம் பார்க்கலாம்

.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=352548

அத்துடன் சும்மா வந்து சும்மா போகும் முகவரியையும் இத்துடன் இணைப்பதோடு சும்மா வந்து சும்மா போகும் சங்கத்தால் ஒரு அறிவுபட்டறை நிகழ்த்தபடுகிறது அதாவது "யாழ்பல்கலைகழகத்தில கருத்து சுதந்திரம் என்றா என்ன என்று" ஆகவே பல்கலை வளாகத்தில் இருக்கும் இந்த பட்டறைக்கு சென்று அந்த ஆய்வை நல்ல வழியில் கொண்டு செல்லுமாறு அதன் தலைவர்.திரு.கலைஞன் அவர்கள் கேட்டுக் கொண்டதோடு மேலதிக விபரங்களிற்கு இங்கே செல்லுமாறு அவர் கேட்டு கொள்கிறார்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29775

(பல் கலைகழக வளாகத்தில் நடை பெறும் உரையாடல்)

சுண்டல் -ஓய் ஜம்மு பேபி எல்லாரும் சங்கம் அமைக்கிறாங்க நாமளும் அமைக்க வேண்டும்

ஜம்மு பேபி -கூட்டம் சேர்த்தவன் எல்லாம் ஜெயிக்கமாட்டான் என்று இந்த பல்கலைகழக வளாகத்தில யாரோ சொன்னவை!!

சுண்டல் -ஆனால் நாம சேர்த்த கூட்டம் இல்லை கடலை போட்டு சேர்த்தக் கூட்டம் சோ இன்றிலிருந்து நான் "சும்மா வந்து சுருட்டி கொண்டு போவோர் சங்கம் ஒன்று ஆரம்பிக்க போறேன் அதன் கொள்கைகள் வெகு விரைவில் மேலதிகள் விபரங்களிற்கு.............

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29868

ஜம்மு பேபி -அப்ப நான் வரட்டா!!

அப்படியே அடுத்த லெக்சரையும் கட் பண்ணிவிட்டு சுண்டல் அண்ணாவும்,ஜம்மு பேபியுன் மூனா என்ற ஓவியரின் கலைகூடதிற்கு செல்கிறார்கள் (ஒவியதிற்கும் நமக்கும் வெகு தூரம் தான் என்றாலும் கட் அடித்து விட்டு இங்கே இருந்தா தான் சேவ் அது தான்)மூனாவின் ஓவிய கூடதில் அனைத்து ஒவியங்களும் தனி அழகு அதற்கு அரசியல் பீட (செய்தி குழுமம்) விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களால் கொடுக்கும் எண்ணகருவும் காரணமாகும்.......இறுதியாக மூனா அவர்களின் ஓவிய கலைகூடத்தில் காட்சிக்கு வைக்கபட்டுள்ள கருத்து படம் இது...........

jh.jpg

பல்கலைகழகத்தின் நுழைவாயிலையும் இந்த ஓவியம் மேலும் மெருகூட்டுகிறது........ஆனாலும் இந்த கருத்து படங்களிள் உள்ள குறைபாடுகள் என்னவென்றா இது குறிப்பிட்ட சிலரால் மட்டுமே விளங்கி கொள்ளபடும் ஏனையவர்களால் விளங்கி கொள்வது கடினம் விளங்கியவர்களிற்கு விளக்கம் கொடுக்க இந்த கருத்து படம் உருவாக்குவதில் எந்த வித பயனும் இல்லை என்றே கூறலாம்!!மேலும் இங்கே பல மாணவர்கள் பல விதமான எண்ணபாடுகளை கூறி இருகிறார்கள் நீங்களும் வந்து உங்க எண்ணபாட்டை கூறுங்கோ ஓவிய கூடதிற்கு இப்படி வந்தா சரி...........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29749

அடுத்து இந்த ஓவிய கூடத்தில் உள்ள நகைச்சுவை என்றா சிரேஷ்ட விரிவுரையாளர் குறுக்ஸ் (சரியான ஸ்டிரிக்கான ஆள் சிரிக்கவே மாட்டார்) வந்து இந்த படத்தின் எண்ணக்கரு அரசியல் பீடத்தின்(செய்தி குழுமத்தின்) என்று அடிக்கடி சொல்வது அவ்வளவு அழகல்ல இதை பார்த்து நம்ம மாணவர்கள் வேண்டும் என்றே மூனாவிற்கு மட்டும் நன்றியை தெரிவிக்கிறார்கள் இதில அறிவியல் விரிவுரையாளர் நெடுக்ஸ் தாத்தா மட்டும் விடுவாரா அவரும் தன் பங்கிற்கு மூனாவிற்கு மட்டும் தான் வாழ்த்துகளை தெரிவிப்பார் செம காமேடியாக இருக்கும் ஆகவே கருத்து படம் இருவரினதும் வெற்றி தான்.....

(அட ஓவியகூடம் பூட்டுற நேரம் வந்த படியா வேற எங்கையாவது போவோம் என்று போகக்க சுண்டல் அண்ணா என்னடா மச்சி ஒரு பிகரையும் காணவில்லை................ரொம்ப முக்கியம் பக்கத்தில செக்ரியூடி எல்லாம் நிற்பீனம் கவனாமாக வாங்கோ என்று போய் கொண்டிருக்க..........

ஒரு இடத்தில செய்தி ஆய்வு என்று செய்தி பற்றிய அலசல் இருந்தது அதுவும் பல்கலைகழக பகுதி நேரவிரிவுரையாளர் சுகன் அவர்களால் எழுதபட்டு கறுப்பி மேடம் அவர்களால் பதியபட்டிருந்தது............."அவலங்களை பார்த்து அழும் ஆர்பர் அம்மையாரும்,சிங்கள அரசியலும்" என்று மிகவும் நல்லதொரு ஆய்வு ஆனாலும் பல மாணவர்கள் இந்த பக்கம் வரவில்லை ஏன் என்று தெரியவில்லை ஒருக்கா வந்து பார்த்தால் பலவிசயங்களை இதன் மூலம் அறியலாம்..........இதற்கு இந்த வழியால் வந்தால் வந்தடையலாம்..........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29653

அப்படியே நல்ல ஒரு செய்தி ஆய்வை படித்த மகிழ்ச்சியில் போய் கொண்டிருக்க சிவா அண்ணா வாறார் எப்படி சிவா அண்ணா சுகமா என்று கேட்க நல்ல சுகம் பேபி ஒரு விசயம் தெரியுமா நமக்கு முன் ஜாமின் தந்திருகிறார்கள்...........(நமக்கு ஒரே குழப்பம் என்ன முன் ஜாமின் நீங்க என்ன குற்றம் செய்தனீங்க என்று) பிள்ளை கோவிக்க கூடாது அதை பற்றி கதைக்க எனக்கு நேரம் இல்லை இப்ப தான் ஒவ்வொருத்தர் ஒவ்வொருத்தர் கேட்கிறபடியா எழுதி வைத்திருகிறேன் இங்கே போய் படித்தா விளங்கும் சரியா அப்ப நானும் வரட்டே............

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29562

(அட என்ன இவ்வளவு அவசரம் என்னதிற்கும் படித்து பார்போம் சுண்டல் அண்ணா அட சா இதா மாட்டார் இதற்கா முன் ஜாமின் எதற்கு எல்லாம் முன் ஜாமின் எடுக்கிறது என்று விவஸ்தையே இல்லாம போயிட்டு)..........இப்படியே கால் போன போக்கில போய் கொண்டிருக்க "ஜொம்மு.ஜொம்மு" என்று யாரோ கூப்பிடுற சத்தம் பார்த்தா நம்ம இவள் அக்கா............என்ன அக்கா கண்டுகனகாலம் எங்கே போனனீங்க.......அது ஒன்றும் இல்லை ஜொம்மு கொஞ்சம் பிசி அது தான் உனக்கு ஒரு விசயம் தெரியுமா "சிவகங்கை சாமியாரை மணந்த ஆஸ்திரிய பெண்" இதை பற்றி கந்தப்பு தாத்தா சொன்னவர் அது தான் உனக்கு தெரியுமா என்று கேட்டுபோடு போக வந்தனான்............ஆமா இது ரொம்ப முக்கியம் பிச்சு போடுவேன் பிச்சு............கூல் ஜொம்மு இந்தா இதை வாசித்து பாரு நல்லா இருக்கு நான் போக வேண்டும் என்ட ஆள் வெயிட்டீங் என்று இவள் அக்கா ஓடுறா...........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29796

(சுண்டல் அண்ணா எல்லாருக்கும் ஆள் இருக்கு நமக்கு மட்டும் ஆள் இல்லை) சரி சுண்டல் அண்ணா வாங்கோ வேற ஏதாவது பார்போம் அப்ப நிலா அக்கா வாறா அட என்ன இங்கே நிற்கிறீங்க இன்றைக்கும் கட்டா லெக்சர் வர வர மோசம் இரண்டு பேரும். இன்றைக்கு மம்மியிட்ட மாட்டி கொடுக்கிறேன்..........அக்கா இப்படி எல்லாம் செய்தா பிறகு நான் அழுவன் சொல்லிட்டேன் என்று சொல்ல சரி சரி வாங்கோ 3 பேரும் சேர்ந்து சுற்றுவோம் என்று 3பேரும் நம்ம பயணத்தை (அது தான் சுற்றுறதை) தொடர்ந்தோம்.......

இப்படியே நடந்து கொண்டிருக்கும் போது "தியாக தீபங்கள் வில்லிசை' என்று நல்லதொரு வில்லிசையை வல்வை அண்ணா கொடுத்து கொண்டிருந்தார் மூவரும் அதனை சற்றி நேரம் இருந்து இரசித்த வண்ணம் நடக்க தொடங்கினோம்..............நீங்களும் ரசிக்க வேண்டும் என்றா இங்கே போய் ரசியுங்கோ.....

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29789

இப்படி நடத்து கொண்டிருக்க பல்கலைகழக நோட்டிஸ்போர்ட்டில் பெரிய ஒரு சுவரொட்டி சிறி என்ற மாணவனால் இணைக்கபட்டிருந்தது "ஜேர்மனிய மாவீர நாள் 2007" என்று அதனை வாசித்து கொண்டு போகும் போது........சாத்திரி அங்கிள் வழிமறித்து பிள்ளைகளா ஜப்ஸ'சர்வதேச புலம் பெயர் தமிழ் ஒன்றியம்" பிரான்சில் கடந்த சித்திரை மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மனிதநேயப்பணியாளர்களின் மீதான நியாயமான விசாரணை நடாத்தி அவர்கள் விடுதலையை வலியுறுத்தியும் அதேநேரம் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிற்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படாதவாறு மற்றும் அவர்களிற்கான உதவிகள் பிரான்சு அரசால் மேற்கொள்படவேண்டும் என்றும் மற்றும் சிறீலங்காவில் பிரான்சின் உதவிநிறுவனமான அக்சன் பாம் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டசம்பவத்தில் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை நடாத்த கோரியும் சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றித்தினால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிறற்கு பாராட்டினை தெரிவித்து கொள்வவதோடு கடிதத்தை இங்கு இணைக்கிறேன் இதனை ஒரு முன் உதாரணமாக எடுத்து புலம்பெயர் தேசத்தின் உள்ள தமிழ் அமைப்புக்கள் ஒன்றியங்கள் மற்றும்பழைய மாணவர் சங்கங்களும் இப்படியான முயற்சியை மேற்கொள்ளலாம்."

இந்தாங்கோ கடிதம் இதனை நீங்களும் அனுப்புங்கோ என்று தருகிறார் நன்றி சாத்திரி அங்கிள் மற்ற மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் இந்த கடித்தத்தை இங்கே சென்று பெற்று கொள்ளுங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29612

இப்படி இதை முடித்து கொண்டு போகும் போது மின்னல் அண்ணா ஓடி வந்து கனடா ஒன்ராரியா தேர்தலில லிபரல் வெற்றி -தமிழ் வேட்பாளர்கள் தோல்வி" என்று..........இப்படி இவர் சொல்ல மேலும் மாணவர்கள் வந்து லிபரல் மற்றும் லேபரை பற்றி ஆரோக்கியமாக கதைத்து கொண்டிருக்க

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29556

இறுதியில் யாழ்பாணத்தவர் பழமைவாதிகளா என்று பிரச்சினை வந்து பிறகு செக்ரியுட்டி கார்ட் எல்லாம் வந்து பிரச்சினையை தீர்க்க வேண்டியதா போயிட்டு.........பிறகு செக்ரியூட்டிகார்ட் சொன்னவை இந்த தலைபோடு பேசும்படியும் யாழ்பாணத்தவர் பழமைவாதிகளா என்று யாரும் இல்லாத இடத்தில போய் பேசுங்கோ நீங்க இப்படி சண்டை பிடித்தா ஜம்முபேபி மாதிரி பேபிகள் எல்லாம் பயந்து போயிடும் என்று..........பிறகு அதனை இங்கே சென்று செக்ரியூட்டிகார்ட்டின் பார்வையில் கதைத்தார்ர்கள் நீங்களும் சென்று பாருங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29723

அங்கால போய் கொண்டிருக்க தமிழ் விரிவுரையாளர் சின்னகுட்டி தாத்தா பல்கலைகழக மினி தியேட்டரில் "புலம் பெயர் தமிழ் இளம் தலைமுறையினர் விவாதிக்கின்றனர் டேட்டிங்" என்று படம் போட்டு காட்டினாலும் எல்லாம் மாணவர்களும் டேட்டிங் பண்ணி கொண்டு இருந்ததாலே அந்த பக்கம் வரவில்லை சுண்டல் அண்ணாவும் நானும் தான் போய் படத்தை பார்த்தது சும்மா சொல்ல கூடாது இளம் தலைமுறையினர் நன்றாக தான் விவாதிக்கின்றனர் இலவசமா படம் போட்டு காட்டின சின்னகுட்டி தாத்தாவிற்கு நன்றி சொல்லிட்டு வந்தோம் நீங்களும் மினி தியேட்டரிற்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்றா இவ்வாறு செல்லுங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29783

அடுத்த மினி தியேட்டரில தமிழ் விரிவுரையாளர் சின்னகுட்டிதாத்தா டேட்டிங் பற்றி தெரியாத பெருசுகள் தெரிந்து கொள்ளுங்கோ என்று தனக்காக போட்ட மாதிரி போட்டிருந்தார் நமக்கும் வடிவா தெரியாத படியா நாமளும் இருந்து பார்தோம் நிலா அக்கா பார்த்துவிட்டு "ஆனால் இடைவேளையில் தமிழில் எல்லாம் கதைக்குறாங்க. அப்போ முதலே டேட்டிங் என்றால் என்ன என்பதை தமிழிலேயே சொல்லி இருக்கலாமே" இப்படி சொல்லுறா.........இப்படி நேரத்தை ஒரு மாதிரி கடத்திவிட்டு நன்றியை கூறி சின்னகுட்டி தாத்தாவிடம் இருந்து விடைபெறுகிறோம்!!டேடிங்க் பற்றி தெரியாத பெருசுகள் இங்கே சென்று பார்க்கவும்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29927

மச்சி என்னடா எங்கே எனி போறது என்று சுண்டல் நிலா அக்கா தமிழ்லெக்சர்ஸ் நடக்கும் இடதிற்கு போவோம் போனா தமிழ் பற்றி அறிவு உங்க இரண்டு பேருக்கும் வரும் வாங்கோ என்று கூப்பிட ஆமாம் 'லெக்சர்ஸ்" என்பது தமிழ் தானே அதுகுள்ள நமக்கு தமிழ் தெரியாது என்று சொல்லுறா என்று சொல்ல சுண்டல் அண்ணா சிரிக்க நிலா அக்கா முறைத்து பார்க்க சரி நிலா அக்கா வாங்கோ போவோம் என்று போக அங்கே ஒரு விரிவுரையாளர்களையும் காணவில்லை மாணவர்களையும் காணவில்லை வெறிசோடி போய் கிடந்தது அப்பப்ப சில விரிவுரை நடந்த மாதிரி இருந்தது......"சங்கம் இலக்கியம் ஒர் எளிய அறிமுகம்" என்று தேவபிரியா என்ற அக்டிங் விரிவுரையாளர் இதனை பற்றி விரிவுரையை எடுத்த போதும் யாரும் விரிவுரைக்கு வராது மிகவும் கவலையாக இருந்தது............ஆகவே இந்த விரிவுரை பகுதிக்கு மாணவர்கள் சென்று தமிழ் தாயின் அழகை பற்றி சொல்வதை கேளுங்கோ..........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29748

அத்துடன் அந்த பீட மாணவன் நுணாவிலனால் ஒரு சிறிய பட்டிமன்றத்தை நடத்தும் வகையில் ஒரு தலைப்பை ஏனைய மாணவர்களிடம் கேட்டார் அதாவது கண்ணதாசன் பாடல் சிறந்ததா அல்லது வைரமுத்து பாடல் சிறந்ததா என்று அதற்கு பல விளக்கங்களையும் கொடுத்திருந்தார் ஒரே ஒரு மாணவன் இறைவன் மட்டுமே இதில் கலந்து கொண்டார் ஏனையோர் அந்த பக்கம் வரவில்லை எல்லாரும் வந்தா அழகிய விவாதமாக கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29715

அஜிவன் அண்ணாவின்ட வானொலி இருக்கு அங்கே போவோமா என்று ஜம்மு பேபி கேட்க மற்றவையும் ஓம் என்று சொல்ல பல்கலைகழகத்தில் இருக்கும் அஜிவன் அண்ணாவின் வானொலிக்கு சென்றா அங்கே "ரமலான் திருநாளிற்கு வாழ்த்துகள்" கூறி விசேட நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது மிகவும் சிறந்த முறையில் சிங்கபூரில் இருந்து ஒருவர் தொகுத்து வழங்கிறார் நிகழ்ச்சியை நாமும் இரசித்தோம் நீங்களும் இரசிக்க வேண்டும் எனின் வானொலியை கேட்க இங்கே செல்லவும்...........(ரம்ழானிற்கு யாரும் சாப்பிட தருவாங்க என்று பார்த்தா கிடைக்கவில்லை அது தானெ பெரிய ஏமாற்றம் சுண்டல் அண்ணாவிற்கு)

ramadan.jpg

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29635

அத்துடன் இலங்கை இனபிரச்சினை குறித்து நடந்த ஊடகவியாளர் சந்திப்பு பற்றிய ஒளி தொகுப்பும்(Front Line Club) அஜிவன் அண்ணாவால் இணைக்கபட்டுள்ளது அதனையும் இங்கே சென்று பார்க்கலாம்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29698

இப்படி ஒரு மாதிரி பொழுதை கழித்து முடிதாச்சு வீட்டை போகலாம் என்றாலும் பல்கலைகழக விளையாட்டு மைதானதிற்கு போய் விளையாடிபோட்டு போகலாம் என்றா பல்கலைகழக மைதானத்தில் விரிவுரையாளர் நெடுக்ஸ் தாத்தா இந்த வயசிலையும் ரக்பி பக்ரிக்ஸ் செய்து கொண்டு இருகிறார்.............நம்மளையும் வந்து பக்ரிக்ஸ் பண்ண சொல்லி சொன்னவர் நம்மளிற்கு இது எல்லாம் சரி பட்டும் வராது கிரிகேட் மட்டும் தான் சரி என்று சொல்ல அவர் '"ரக்பியில்" உலகசம்பியனாக தென்னாபிரிக்கா இந்த முறை வந்துள்ளது என்று கூறி முதல் மூன்று பிரதான விளையாட்டில் ரக்பியும் அடங்கிறது என்று கூறினார்.........அத்துடன் தனது அபிமான ரக்பி அணியான தென்னாபிரிக்கா அணிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.............மேலு?் செய்தி வேண்டும் என்றா இங்கே போய் வாசிக்க சொன்னவர்........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29943

_44188812_smit_get_203.jpg

என்றாலும் மைதானத்தில் எங்களின்ட ஆட்களை காணவில்லை வெகுவிரைவில் பல்கலைகழக நிர்வாகம் நல்லதொரு பயிற்றுவிப்பாளரை கொண்டு வந்து விளையாட்டிலும் நாம் முதல் இடம் வர பண்ண வேண்டும்..........

(சுண்டல் அண்ணா அட வாடா மச்சி இங்கே நின்று கொண்டு செம போரிங்கா இருக்கு என்று இழுத்து கொண்டு போறார்)

அப்படியே சுண்டல் அண்ணா இழுத்து கொண்டு போயிட்டார் நிலாஅக்காவும் வந்தவா எல்லாரும் நல்ல பிள்ளை மாதிரி வீட்டை போகும் போது........கூட்டமா இருந்து எல்லாரும் பெரிசா டிஸ்கஸ் பண்ணுறாங்க பார்த்தா ரசிகை அக்காவை சுற்றி தான் ஒரே கூட்டம் என்ன என்று கேட்டா திருமணதிற்கு ஏற்ற வயசு என்னவென்று ரசிகை அக்காவிட்ட அவாவின்ட பிரண்ட் கேட்க அதை கொண்டு வந்து இங்கே கேட்க எங்களின்ட மாணவர்களிள் இருந்து பேராசிரியர்கள் வர அங்கே தான்............நல்ல டிஸ்கசன் நடக்கிறது........அதுகுள்ள டங்கு மாமா வேற வந்து என்னவோ அக்கா தனக்கு கல்யாணம் கட்டி வைக்க போறா என்று நினைத்து வந்து ஏமாந்து கொண்டு போனது தான் மிச்சம்... இப்படி திருமணம் ஆன யாழ்கள மாணவர்கள் பல அநுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள் விரிவுரையாளர் நெடுக்ஸ் தாத்தா வழமை போல் தான் பிடித்தா முயல் அது முயல் இல்லை நாய் என்று வாதாடி சென்ற விதம் அழகு.........அதுகுள்ள நம்ம கவி ஆண்டிக்கு வீட்டை ஏதும் சொன்னா அடிவிழும் என்ற பயத்தில இங்கே வந்து லொள்ளு பண்ணிவிட்டு ரவி அங்கிள் ஒடுவதை நினைக்க சிரிப்பா இருக்கு.........இப்படியான ஒரு கருத்து பகிர்வில் உங்கள் கருத்தையும் சொல்ல ஓடுங்கோ பல்கலைகழக மாமரதிற்கு கீழே...........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29756

இப்படியே விடுப்புகளை எல்லாம் பார்த்து கொண்டு அமைதியாக வீடு நோக்கி செல்லும் போது சரியான பசி. வாங்கோ பல்கலைகழக "கண்டினிற்கு" போவோம் என்று போனா கண்டின் முதலாளி தூயாவை பல நாளா காணவில்லை உணவுகள் எல்லாம் பெரிதாக இருக்கவில்லை இனியவள் அக்கா செய்த ஆட்டு எலும்பு சூப்பும் மற்றது நுணாவிலன் அண்ணா செய்த "கேசரியும்" தான் இருந்தது சரியான பசியில இரண்டையும் வாயிற்குள்ள போட்டது தான் ஆனாலும் சூப் ரொம்ப டேஸ்ட் அதே போல் தான் கேசரியும் நீங்களும் சுவைக்க விரும்பின் இங்கே சென்று சுவைத்து மகிழுங்கோ!!

கேசரி - http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29731

ஆட்டு எலும்பு சூப்-http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29659

நல்ல சாப்பிட்டாச்சு பசி போயிட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு போனா நல்லா இருக்கும் என்று நிலா அக்கா சொல்ல பக்கத்தில பார்த்தா இன்னொரு மினி தியெட்டரில குறும்படம் ஒன்றை ஈழவன் போடுகிறார் "விலை" என்ற குறும்படம் அங்கே போய் அமைதியா இருப்போம் என்று இருந்தா அருமையான படைப்பு அந்த குறும்படம் உள்ளத்தை தொட்டு செல்கிறது அதனையும் பார்த்து ரசித்து விட்டு வெளியால வந்து அதை பற்றி தான் கதை நீங்களும் பார்க்க வேண்டும் என்றா இங்கே சென்றா பார்க்கலாம் காணதவறாதீர்கள் நாளை மட்டும் இலவசம் அதற்கு பிறகு காடு கொடுக்க வேண்டும்.......

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29857

ஒரு மாதிரி சுண்டல் அண்ணாவும் இனி வீட்டை போவோம் என்று வெளிகிட ஜம்மு என்று கூப்பிட்டு கேட்க திரும்பி பார்த்தா இன்னிசை எப்படிடா சுகம் என்று கேட்டு கொண்டு ஏன் இன்றைக்கு லெக்சர்ஸ் அட்டண்ட் பண்ணவில்லை என்று ஏசி கொண்டு அவாவும் ஜொயின் பண்ணிட்டா.............இப்படியே நாம பம்பல் அடித்து கொண்டு போகும் போது இலக்கியன் அண்ணா வருகிறார் கையில் என்ன என்று கேட்க ஓவியம் என்கிறார் பார்த்தா அவரின் ஓவியம் இவ்வாறு இருகிறது..........

ஓவியங்கள் செந்-தமிழ்

ஓலைக்காவியங்கள்

உள்ளத்து உணர்வுகளின்

உன்னதக் கோலங்கள்

இவ்வாறு தொடர்கிறது ஆகா என்ன அழகு அவரின் கவிதை ஓவியம் போலவே இருக்கிறது என்று நாம் வியக்க பணிவுடன் சொல்லுகிறார் ஏதாவது பிழை இருந்தா சொல்ல சொல்லி சுண்டல் அண்ணாவிற்கு சிரிப்பு ஆமாம் பேபி எல்லாம் பிழை கண்டு பிடித்து சொல்லுமாம் என்று.......அந்த கவிதையின் பிரதி ஒன்றை விட்டு சென்றார் அவர் அந்த ஓவியத்தை பார்க்க வேண்டின் இங்கே செல்லவும்!!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=36

அந்த ஓவியத்தை பற்றி பேசி கொண்டு போகும் போது ஒருவர் பல்கலைகழகத்தில் பெண் ஒருவரின் பின் தாடியுடனும் கையில் ஒரு பேப்பருடனும் வருகிறார் அவரை சுண்டல் அண்ணா என்ன என்று அதட்ட அவர் கையில் கொண்டு வந்த பேப்பரை போட்டு விட்டு ஓடுகிறார் சுண்டல் அண்ணாவிற்கு சரியான சந்தோசம் என்னை பார்த்து ஒருத்தன் ஓடிட்டான் என்று,அந்த பேப்பரை எடுத்து பக்கங்களை புரட்டினா ஆகா அத்தனையும் முத்துகள். காதல் கடலில் ஆழத்திற்கு சென்று அள்ளியெடுத்த முத்துக்கள்............ஆகா இப்படி ஒரு கவிஞனா என்று வியக்கும் போது "இரக்கமில்லாத குண்டு விமானம் என்று வாழ்வின் விரக்தியையும்" கவிதையாக தருகிறான் இவன் ஒரு புதுமை கவிஞன் தான் ஆனா ஏன் ஆட்களை கண்டு அஞ்சி ஓடுகிறான் என்று தான் தெரியவில்லை இவரின் கவிதைகளையும் உங்களுக்காக பிரதி பண்ணிவிட்டு செல்கிறேன் சென்று பார்த்து மகிழவும் சுவைக்கவும் கவிதையை!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=36

இப்படியே நாம் நால்வரும் போகும் போது எதிரில் டங்கு மாமா ஓவரா திங் பண்ணி கொண்டு இருந்தார் அவரிடம் போய் எங்கே யாழ்களதரவரிசையை காணவில்லை என்று கேட்டவுடன் டென்சன் அவரிடம் இருந்து வந்த விடை!!

"ஆமா இதை செய்ய டங்கு அண்ணா நாடு நாடா திரிஞ்சு, பல அரச தலைவர்களோட சந்திப்புக்களை நடாத்தி கஸ்ரப்படுறார், பிச்சு போடுவன் பிச்சு, கருத்து எண்ணிக்கையை கூட்டுற சாட்டில டங்கு அண்ணாவோட விளையாட்டு.... "

ஆமாம் இப்ப யார் இவரை அண்ணா என்று சொன்னது நினைப்பு தான் பிழைப்பை கெடுகிறது என்று சொல்லி கொண்டு நம்ம செட் அந்த இடத்தை விட்டு நகர்கிறது.......அப்படி சென்று கொண்டிருக்கும் போது ஒரு இனிமையான குரலில் இனிமையான கவிதை வரிகள் நெஞ்சை தொடும் வரிகள் குரல் வந்த திசைசென்றா அங்கே இருப்பது நம்ம இனி ஆகா அருமையான குரலில் மிகவும் அருமையான கண்டு பிடிப்பு எழுத்து பிழை இருக்கிறது என்று மற்றவர்கள் சொன்னாலும் அந்த கவிதையின் அழகில் எழுத்து பிழைகள் யாவும் இல்லாம போகின்றது என்பதே உண்மை நாம் மட்டும் இரசித்து சென்றா சரியா? இல்லைத்தானே நீங்களும் சென்று ரசியுங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=36

சுண்டல் அண்ணா டென்சன் ஆகி என்ன லொள்ளா எனக்கு கடலை போட நேரம் ஆச்சு கவிதை வாசித்து கொண்டு இருக்கிறாங்களாம் பேபிக்கு எல்லாம் என்ன கவிதை என்று டென்சன் ஆகா பேபி சொல்லுது பிறந்ததிலே இருந்து இறக்கிறவரைக்கும் ஏதோ ஒரு விதத்தில கவிதை நம்மை சுற்றி வந்து கொண்டு தான் இருக்கு! என்று ஆமாம் இதில பஞ் டயலக் வேற என்று சொல்லி வாய் மூட முன்னம் கௌரிபாலன் அண்ணாவோட வாறது யார் என்றா நம்ம விகடகவி மாமா அவரை பற்றி சொல்லவா வேண்டும் அவர் கவிதையில் மாஸ்டர் முடித்துவிட்டார் வெகுவிரைவில் இந்த பல்கலைகழகத்திலேயே பேராசிரியராக போறார் என்று நினைக்கிறேன்.................என்ன மாமா கவிதை இல்லையா என்று கேட்க அவர் தந்தார் இரண்டு கவி அவர் தந்தது இரண்டு கவிதை ஆயினும் அதனுள் ஒழிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம்............

மனிதா...மனிதா என்று மனிதனே எப்ப திருந்த போறார் என்று கேட்கிறார் அத்தோட மட்டும் இல்லாம அடுத்த கவிதையில்!!

"இறுதி தோட்டா உனக்குதாண்டா" என்ற கவிதையில்

தலைவனுக்காய் போராடு..

எட்டப்பன் என்றில்லாமல்

வீரன் என்று உன் பெயர்

தமிழ் ஈழக் காவியத்தில் ஏறும்..

இவ்வாறு அவரின் கவிதை முடிகிறது முடிவில் பல அர்த்தங்கள் என்றா ஆரம்பத்தில் எப்படி இருக்கும் ஆகவே அவரின் இந்த இரண்டு கவிதையும் சுவைக்க இங்கே செல்லுங்கோ.............

http://www.yarl.com/forum3/index.php?showforum=36

இவ்வாறு கவிதையை சுவைத்த சுவையில் சென்று கொண்டிருக்க சினிமா துறை பேராசிரியர் அமைதியான பூங்காவனத்தில் நடுவில் இருந்து தன் சக மாணவர்களிற்கு 'நினைத்தாலும் மறக்கமுடியாதவை" என்ற கதையினை சொல்லி கொண்டிருந்தார் அசத்தலான ஆரம்பம் தொடர்ச்சியாக சலிபில்லாத பயணம் அவரின் கதையை கேட்டுவிட்டு செல்ல வேண்டும் போல் இருந்தது...........அதற்குள் தமிழ்பீட விரிவுரையாளர் சோழியன் அவர்கள் வந்து

அடடா.. திடீரென தடம் மடை திறந்து வருகிறது..

அட .. பரலே?கத்தில வாழுற எந்தன் கடவுள்களே.. அஜீவனின் இந்த தொடராவது ஒழுங்காக, முழுமையாக வர உங்களிடம் மன்றாடுகிறேன்.. அரேகரா!!

இவ்வாறு சொல்லிவிட்டு ஓடிட்டார் அவர் நின்று கதைக்கமாட்டரோ ஏனேனின் எப்ப பார்த்தாலும் ஓடி கொண்டே தான் இருப்பார்...........

ஆனாலும் அஜிவன் அண்ணா மிகவும் சிறப்பாக தன் கதையை பல்கலைகழகத்தில் கதைவிடுவோர் மத்தியில் மிகவும் அருமையாக எடுத்து இயம்பும் விதம் சிறப்பு நீங்களும் கதையை ரசிக்க வேண்டும் என்றா பல்கலைகழக பூங்காவிற்கு வரவும் வருவதிற்கு வழி இது!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29687

அஜிவன் அண்ணாவின் கதையில் இரசித்ததில் நேரம் போனது தெரியவில்லை சுண்டல் அண்ணா தனக்கு கடலை போட நேரம் ஆச்சு பல்கலைகழக கணணி வளாக கணணியை யூஸ் பண்ணிட்டு வீட்ட போவோம் என்று கணணி வளாகத்திற்குள் வாறார் அதற்குள் அருன் என்ற மாணவன் மற்றது ஜனார்தனன் என்ற மாணவர்களை தவிர எவரும் இல்லை எல்லாரும் கடலை போட போயிட்டார்கள் போல........கணணியில சுண்டல் அண்ணா கடலை போடுறார் தானே அங்கால இருக்கிற கணணி லெக்சர் ரூமில என்ன நடந்திருகிறது என்று பார்த்தா!!

கணணி விரிவுரையாளர் கலைநேசன் 1 (ZIPஆயுதம்) என்று மாணவர்களிற்கு லெக்சர் எடுத்தாலும் ஒரு மாணவனையும் காணவில்லை அவர் நோட்சை விட்டுபோட்டு போயிருகிறார் மாணவர்கள் வந்தா படிக்க சொல்லி இந்தாங்கோ இங்கே போனா லெக்சர் நோர்ட்ஸ் கிடைக்கும்.......

http://www.yarl.com/forum3/index.php?showforum=24

அப்படியே கிரடிட் கார்ட் எண்ணில் ஒரு கணக்கு என்ற லெக்சரையும் நடத்தி சென்றிருகிறார்......வராதா மாணவர்கள் இங்கே சென்று நோர்ட்சை பெற்று கொள்ளவும்......

http://www.yarl.com/forum3/index.php?showforum=24

அடுத்து நுணாவிலன் என்ற ஒரு மாணவன் "இணையதமிழ் இனி எப்படி இருக்கும் என்று" அருமையான ஆக்கம் ஒன்றை பிரசுரித்திருகிறார் அதனையும் இங்கே சென்றா பார்த்து பயனடையலாம்!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=24

சுண்டல் அண்ணா கடலை போட்டு முடிந்து வந்திட்டார் போவோம் என்று சொல்லி கொண்டு!!

சுண்டல் அண்ணா சரி வேலை முடிந்து எனி நாம கிளம்புவோம் என்று படியால இறங்கும் போது கீழே விழுந்து போனார் எனக்கோ சிரிபென்றா சிரிப்பு என்றாலும் சுண்டல் அண்ணா அழதொடங்கிட்டார் உடனே அவரை பல்கலைகழகத்தில் இருக்கிற மருத்துவசாலைக்கு கூட்டி கொண்டு போனா அங்கே டாக்டர் இல்லை ஒரு காலத்தில வைத்தியர் .வடிவேல் அண்ணா இருந்தவர் தான் (படித்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்று நினைக்ககூடாது. காசு கொடுத்து வாங்கினது தான்) அங்கே பார்த்தா சபேஷ் மாமாவும் நிற்கிறார் அவருக்கு ஒரே எரிச்சல் தான் எவ்வளவு நேரமா நிற்கிறாராம் டாக்டரையே காணவிலை என்று ஏன் நீங்க வந்தீங்க என்று பேபி கேட்க அவர் சொன்ன காரணம் இது இதற்கு விடை தெரிய வேண்டுமாம்.........

குழந்தைகளின்(18 மாதம்) தலை ஏன் வியர்கிறது? கூடுதலாக நித்திரை கொள்ளும் போதுதான் அவதானிக்க முடிகிறது.

இப்போது இங்கு குளிர் காலம். இருந்தும் நாங்கள் வெப்பநிலையை அதிகம் கூட்டுவதில்லை. 22 - 23 பாகை செல்சியஸ் தான் இருக்கும் இருந்தும் அவனின் தலையில் மிகவும் வியர்வை கசிந்து உள்ளது. இது சில குழந்தைகளுக்கு பொதுவென கூகிள் தேடலில் அறிந்தேன். இதுபற்றி இங்கு யாருக்காவது தெரியுமோ? நன்றி.

நேரம் போனது தான் மிச்சம் வைத்தியரை காணவில்லை சுண்டல் அண்னா இப்ப தான் ஒகே வங்கோ போவோம் என்று மெல்ல மெல்லமா நடக்க தொடங்கினார்.....ஆனா சபேசன் மாமா இன்னும் நிற்கிறார் ஆகவே யாழில யாரும் டாக்டர் இருந்தா போய் சபேஷ் மாமாவின்ட பிரச்சினையை தீர்த்து வையுங்கோ.......வைத்தியசாலைக்கு போக வேண்டிய முகவரி (கட்டாயம் பல்கலைகழகதிற்கு ஒரு டாக்டர் தேவை)

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29900

சுண்டல் அண்ணாவை கூட்டி கொண்டு சுண்டல் அண்ணா நொண்டி நொண்டி நடந்து கொண்டு போகும் போது கவிரூபன் அண்ணா வாறார் பேயரில கவியை கொண்டவருக்கு கவிதையா பஞ்சம் என்ன அண்ணா கவிதை ஒன்றையும் காணவில்லை என்று கேட்க........"சுடும் நினைவு" என்றார் ஏன் நினவுகள் சுட போகுது என்றா கவிதையாக தந்தார் .......கவிதையை வாசித்தவுடன் நெஞ்சம் ஒரு கணம் சுட்டது தான் ஆகா என்ன அருமையான கவி வரிகள்.........

நில்லாத உயிர்

நிலைக்காத வாழ்க்கை

எல்லாமே புரிகிறது

நீயில்லாத வாழ்வை

நினைக்க

நினைவெல்லாம் சுடுகிறது!

ஆகா இவ்வாறு கவிதை தொடர்கிறது நீங்களும் கவிரூபனின் சுடும் நினைவுகளை பார்க்க வேண்டும் என்றா இங்கே சென்று பாருங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29900

அந்த சுடும் நினைவுடன் பயணித்து கொண்டிருக்க பூக்களை கொய்தபடி பூமகள் வருகிறாள் வரும் பூமகள் பிறவா பிறையுடன் வருகிறா (வேற யாரும் கவிதை கொண்டு வந்தா நேரம் போகுது என்று சொல்லுற சுண்டல் அண்ணா யாராவது கேள்ஸ் கொண்டு வந்தா மட்டும் அமைதியா இருப்பார்)

பிரம்மன் வரையா ஓவியமே..!!

சிற்பி செதுக்கா

சீர் சிலையே..!! - என்

வயிற்றில் வளரா

வளர் பிறையே...!!

என்று வந்து

என் வயிற்றில்

உயிர்த்து என்னை

உயிர்ப்பிப்பாய்..???

இவ்வாறு மனதை நெருட வைக்கும் கவிதையுடன் வருகிறா ஆகா என்ன அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை கவிதை அருமை என்று வாயால் வந்தாலும் கவிதையை வாசிக்க இதயம் கனத்தது சில நிமிசம்...........இந்த இதயம் கனக்கும் கவிதையை வாசிக்க இங்கே சென்று வாருங்கள்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29900

கவிதையை பற்றி நிலா அக்காவுடன் கதைத்து கொண்டு போகும் போது சுண்டல் அண்ணாவின் செல் அலறுகிறது வேற யார் கடலை போட்டவை இப்ப போனிலையும் தொடங்கிட்டார் அந்த நேரம் நம்ம வடிவேல் அண்ணா007 செல்லுக்கு மனசு இருந்தா எப்படி எல்லாம் அது நினைத்து இருக்கும் என்பதை அவர் நினைத்து பார்க்கிறார் அவரின் நினைப்பு சரி தான் சுண்டல் அண்ணா மாதிரி ஆட்களிட்ட செல் மாட்டுபட்டா............அவரின் கற்பனையே பார்க்க இங்கே போகவும்........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29757

இப்படி போனை கதைத்து கொன்டு சுண்டல் அண்ணா வரும் போது"என்ன கொடுமைங்க இது" என்று கத்தி கொண்டு விகடகவி மாமா வாறார் சுண்டல் அண்ணாவும் ஏதோ பிரச்சினை என்று (வேற என்ன மற்ற பக்கமா ஓட பார்த்தா) மனம் விட்டு சிரிங்க என்று விகடகவி மாமா சொல்லுறார் இதை பார்த்து இதை பார்த்து சுண்டல் அண்ணா சிரித்து வயிறு எல்லாம் நொந்து அதை ஏன் கேட்பான் ஆகவே நீங்களும் இதை பார்க்காவிடில் போய் சென்று பார்த்து சிரிக்கவும்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29918

இப்படியே வீட்டை போக வேண்டும் என்று சொன்னபடி இன்னும் போகவில்லை ஒரு மாதிரி வீட்டை போவோம் என்று பார்க்க அந்த வழியால அரவிந்தன் வாறார் வந்து தான் போன நியுசிலாந்து பயணத்தை பற்றி வெட்டி வீழ்த்துறார் சுண்டல் அண்ணாவிற்கு ஒரு பக்கம் கடுப்பு லேட் ஆகுது என்று மறுபக்கம் நியுசிலாந்து பயணத்தை பற்றி ஓவர் பில்டப் கொடுக்கிறது என்று (டங்கு அண்ணாவிற்கு தெரியாது போல இல்லை அங்கே போன காசை நேசக்கரதிற்கு கொடுக்க சொல்லி இருப்பார் என்று சுண்டல் அண்ணா மனதில நினைத்து கொண்டாராம்)அவரும் வெட்டி வீழ்த்தி படங்கள் எல்லாவற்றையும் காட்டி சென்றார் நீங்களும் இங்கே சென்றா அவரின் பயணத்தை ரசிக்கலாம்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=22480

என்னடா இன்றைக்கு வீட்ட போனபாடு இல்லை என்று சுண்டல் அண்ணா டென்சன் ஆக முகமூடி போட்டு ஒருவர் முன்னுக்கு வர சுண்டல் அண்ணா பயத்தில :lol: அலற முகமூடி போட்டு கொண்டு வந்தவர் பயத்தில அலற அப்ப தான் தெரிந்தது இது நம்ம சிலந்தி என்று..........சிலந்தி டென்சன் ஆகி உங்களிட்ட கேள்வி வாங்க வந்தா இப்படியா கத்துறது என்று உடனே சுண்டல் அண்ணா பின்னே இப்படி வந்தா பயப்பிட மாட்டோமா என்று கேள்விகள் இங்கே இருக்கு சென்று பார்க்கும் படி கூறுகிறார் ஆகவே நீங்களும் சிலந்தியிடம் கேள்விகளை கேட்டா விடை தர காத்திருக்கிறார்..........கேள்விக?ை இங்கே சென்று கேட்கவும்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29300

அப்படியே வீட்டை போவோம் என்று பல்கலைகழகத்தையே சுற்று கொண்டு இருகிறோம் பல்கலைகழக வளாகத்தில் சில பொன் மொழிகள் பதிக்கபட்டுள்ளது.......

சட்டியில் கஞ்சி குடித்தாலும்,

வட்டிக்கு கடன் வாங்காதே!!

இனியவள்

திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்!!

நுணாவிலன்

அன்பை எப்போதும் இரகசியமாக வைத்திருக்காதீர்கள்.ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.

நுணாவிலன்

இப்படி ஆங்காங்கே பொன்மொழிகளை காணகூடியதாக இருமகிறது..........அப்படியே நடந்து கொண்டே போனா "இளையராஜாவின் இனிய கானம்" செவிகளை இனிமையாக்கின்றன நீங்களும் இங்கே சென்றா அந்த இசை என்ற இன்ப வெள்ளத்தில் நனையமுடியும்!!அத்துடன் இங்கே வன்னியன் கூறுகிறார் "இளையராஜாவும் சினிமாவுக்கு பல நல்ல பாடல்களை வழங்கியிருக்கின்றார் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் தாய் அவர்தான் இசையை வளர்த்தார் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. " என்று கூறுகிறார் இதை பற்றிய உங்கள் கருத்துகளையும் நீங்க இங்கே சென்று கூறலாம்.......

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29170

சுண்டல் அண்ணா சரி இப்ப வீட்டிற்கு போக வேண்டாம் வாங்கோ சினிமா கலைகூடதிற்கு செல்வோம் அங்கே நம்ம பசங்க என்ன செய்யிறாங்க என்று பார்க்க போனா........அங்கே விரிவுரையாளர்களும் மாணவர்களும் ஒரே கதை ஒரு மாணவன் சொல்லுறான் 'ஸ்ரெயாவோடு வடிவேல் டூயட்" என்று அதை மற்ற எல்லாரும் ஏதோ அமெரிக்க இரட்டை கோபுரதாக்குதல் நடந்த மாதிரி ஆவலுடன் கேட்கிறார்கள்........இப்படி கதைத்து கொண்டிருக்க இந்த பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஜிவன் அவர்கள் வந்து " பிகாசோவின் சினிமா" என்று லெக்சரை நடத்தினாலும் அந்த பக்கம் யாரையும் காணவில்லை நேரம் இருக்கும் போது மாணவர்கள் போய் பார்பார்கள் போல.........

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29674

அதிரடியாக வருகிறார் பகுதி நேர இளம் விரிவுரையாளர் வசீகரன் அண்னா வந்தவுடன் எல்லாருக்கும் அன்பை கொடுத்து விட்டு கொண்டு வந்த காதல் கடிதம் திரைபடத்தில் -நிழற்படத்தையும்" மாணவர்களுக்கு கொடுக்கிறார் மாணவர்களும் முந்தி அடித்து கொண்டு நிழற்படங்களை பார்கிறார்கள் பார்க்காத மாணவர்கள் இங்கே சென்று பார்க்கவும்!!

kadhal20070610zp1.jpg

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29787

இப்படி பல விரிவுரையும் போய் கொண்டிருக்க அதே பீட மாணவனான கிருபாகரன் மீண்டும் ஒரு செய்தி சொல்லுறார் "சூப்பர் ஸ்டாரின் மகள் காதலனுடன் ஓட்டம்! ரசிகர்கள் அதிர்ச்சி" என்று அதனை கேட்டு போட்டு அவரை சுற்றி ஒரு கூட்டம் என்றா பாருங்கோ.........பத்தாதிற்கு சிவா அண்ணாவும் ஓடி வந்து தான் வாசித்த உண்மை கதை என்று ஒரு கதையை வேற சொல்லுகிறார் இப்படி பம்பலா போய் கொண்டிருக்கு நீங்களும் வேண்டும் என்றா இந்த பம்பலில் இணையலாம்!!

அதே கிருபாகரன் இன்னொன்றோட வருகிறார் "வாயால் கெட்ட சிம்பு" என்ற செய்தி அதற்கு ஆதரவக ஒரு அணியும் இல்லை என்று ஒரு அணியாக இரண்டு அணிகள் களத்திள் இறங்கி உள்ளது........இந்த நிகழ்ச்சியில் பிரச்சினைகுரிய பகுதியை அஜிவன் அண்ணா இணைக்க அவர் செய்தது சரியா பிழையா என்ற பெரிய ஆராய்ச்சியில் நம் மாணவர்களை இறங்கி உள்ளனர் இதில் நம்ம சின்னகுட்டி தாத்தாவும் இறங்கி உள்ளார் என்பது அடுத்த விசயம்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29708

இவை எல்லாம் விளையாடி கொண்டு இருக்க ஜம்மு பேபி "அகிரோகுரோசவா" என்ற உலக திரைபட மேதையை பற்றி எழுத அதற்கு சாத்திரி அங்கிள் வந்து ஜம்மு பேபியை பபி என்று நினைத்தேன் ஜம்மு பேபி விசயம் தெரிந்த பேபி என்று பாராடா (சுண்டல் அண்ணாவிற்கு கெட்ட கோபம்) நீங்களும் இந்த உலக திரைபட மேதையை பற்றி அறிய விரும்பினா இங்கே செல்லவும்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29755

இப்படியே ஜம்மு பேபியும் சுண்டல் அண்ணாவும் லொள்ளு பண்ணி கொண்டு போக நிலா அக்காவும் வந்து எம்மோடு இணைந்து கொள்கிறார் (லொலிபொப்புடன்) இப்படியே நடந்து கொண்டு போகும் போது பெரிய ஆலமர நிழலின் கீழ் விரிவுரையாளர்களும் மாணவர்கள் எல்லாம் இருந்து "கச கச" என்று கதைக்கீனம் என்னத்தை பற்றி கதைக்கீனம் என்று பார்த்தா ''ஊர்புதினத்தை தான்"(வெளிநாட்டில இருந்து கொண்டு இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்று சொல்லுறது ரொம்ப இலகு)சுண்டல் அண்ணா ஒரே நச்சரிப்பு வா போவோம் ஜம்மு என்று என்ன தான் கதைக்கிறார்கள் என்று பார்போம் என்று போய் பார்த்தா "நீயூஸ் போட்" என்ற அரசியல் பீட மாணவன் "வள வள" என்று ஊர் புதினத்தை பற்றி சொன்னாலும் ஒருத்தரும் கண்டுக்கிறது இல்லை அவர் சரியான பாவம் என்றே சொல்லலாம் (அத்துடன் முன்னைய காலங்களை போல் இந்த ஆலமரதிற்கு கீழே வந்து ஊர்புதினம் அலசுபவர்களின் எண்ணிகையும் குறைந்து போயிட்டு என்றே சொல்லலாம்)

இவை என்ன தான் அப்படி கதைக்கிறார்கள் என்று ஓட்டு கேட்டா......கலைபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கறுப்பி மேடம் வந்து சொல்லுறா " கொழும்பு ஊடகத்தின் பார்வையில் தென்னிலங்கையை அதிர்சியில் உறைய வைத்த யாழ் தாக்குதல் என்று" அதற்கு நம்மண்ட மாணவர்களும்,விரிவுரையாளர்கள?ம் ஒவ்வொரு கருத்தை சொல்லீனம் அவைகு தெரியாம ரெக்கோர்ட் பண்ணிணாங்க இங்கே போய் கேளுங்கோ இவையின்ட ஆராய்ச்சிகளை!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=40

அங்கால கந்தப்பு தாத்தா குந்தி கொண்டு இருந்து "பெரிய தம்பளை முன்னரங்க மோதல் படைதரப்பில் 10 பேர் காயம் என்று சந்தோசமாக கத்துறார் ஆனா ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை ஏன் எல்லாரும் அமைதி???

(அதற்குள் ஜம்மு பேபியும் சுண்டல் அண்ணாவும் உரையாடல்)

டேய் மச்சி ஜம்மு இந்த கந்தப்பு குந்தி இருந்து கொண்டு வயசு போன காலத்தில வாறவை போறவைக்கு லெட்டர் கொடுக்கிறாறாம் உண்மையோ........சுண்டல் அண்ணா சா நான் நினைக்கவில்லை அவர் ரொம்ப நல்லவர் என்றாலும் ஒரு கண் வைத்து கொள்கிறேன்)

மறுபடி கறுப்பி மெடம் இன்னொரு நியூஸ் சொல்லுறாங்க "பாகிஸ்தான் குண்டு வெடிபிற்கு மகிந்த கண்டணம்" என்று உடனே புலிகேசி என்ற மாணவன் சொல்லுறார்"வெள்ளாடு நனையுதென்று கழுத்தில வளையம் போட்ட ஓநாய் அழுத கதை என்று................அத்தோட யாருக்கும் அந்த கதை தெரிந்தா கூறும்படி கேட்கிறார் (எனக்கும் கதை கேட்க சரியான ஆசை யாருக்கும் தெரிந்தா சொல்லுங்கோ)

இப்படி சுவாரசியமாக உரையாடல் போய் கொண்டிருக்கும் போது துணை வேந்தர் மோகன் வந்து "அவசிய அறிக்கைகள்" எல்லா மாணவர்களும் விரிவுரையாளர்களும் சென்று பார்க்கும்படி கூறுகிறார்"ஆனா எல்லாரும் அமைதியாக இருக்கீனம் நேரம் இருந்தா ஒருக்கா போய் பாருங்கோ.........அத்தோட அவர் காலகணிப்பு 17.10.2007 யும் தந்துள்ளார் அதையும் நேரம் இருந்தா பாருங்கோ என்று மாணவர்களிற்கு கூறுகிறார்!!

இறைவன் என்ற மாணவன் வந்து சொல்லுறார் "மட்டக்களப்பில் எமது சம்மதமின்றி எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றமுடியாது த.தே.கூ எச்சரிக்கை" என்று அதற்கு நம்ம மாணவர் சுழியன் பதில் சொல்ல சபேஷ் மாமா சூப்பரா இருக்கு என்று சொல்லுறார்!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=40

மீண்டும் இறைவன் அண்ணா சொல்லுறார் "அனைத்து பகுதி மக்களையும் புலிகளின் பிடியில் இருந்து மீட்க போகிறோம் என்று:மகிந்த ராஜபக்ச.............என்று அதற்கு ஈழவன் அண்ணா "கோமணத்தை பற்றி கதைக்க தொடங்கி தற்போது மகிந்தாவின் கோமணம் பற்றிய பிரச்சினையா போய் கொண்டிருகிறது..........

எங்கையோ இருந்து நுணாவிலன் அண்ணா ஒடி வந்து மூச்சிறைக்க சொல்லுறார் " உலகத்திலேயே செயல் திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலை புலிகள் உள்ளனர் என்று".............சொல்லிவிட்டு லெக்சருக்கு நேரம் ஆகிட்டு என்று சொல்லி கொண்டு ஒடுகிறார்!!

(சுண்டல் அண்ணா சிரித்து கொண்டு நாம எந்த காலத்தில லெக்சர்ஸ் எல்லாம் அட்டண்ட் பண்ணி இருகிறோம்)

அப்படியே சுண்டல் அண்ணாவும்,ஜம்மு பேபியும் கடலை போட்டு கொண்டு அங்கால போகும் போது அட ஜன்னி அக்கா,இனியவள்,சகி அக்கா,அனிதா அக்கா (பாட்டி).சிநேக் அக்கா,ரமா அக்கா,சிநெகிதி அக்கா இவையும் லெக்சருக்கும் போகாம நல்லா கடலை போட்டு கொண்டிருக்கீனம் உடனே சுண்டல் அண்ணா போயிடுவாரே .............அவை என்னத்தை பற்றி கதைக்கீனம் என்று பார்த்தா உலக நடப்பை பற்றி (ரொம்ப முக்கியம் என்று நான் சொல்லவில்லை அதுவும் சுண்டல் அண்ணாதான் சொன்னவர்)..................

ஜன்னி அக்கா - சாமியார்களுக்கு ரஜனி அறிவுரை சொல்ல வேண்டும்:கருணாநிதி சொல்லுறார் இதை பற்றி யாருக்கும் தெரியுமா ரஜனி ஒரு கிழடு எனக்கு அவனை கண்ணிலையும் காட்ட ஏலாது எனக்கு அஜித் தான் பிடிக்கு!!

சிநேக் அக்கா (பாய்ந்து அடித்து )- இது என்ன பெரிய விசயம் தமிழ் நாட்டில் சிங்களத் திரைபட விழாவை தொடங்கி வைப்பதா?ராதிகாவிற்கு தமிழ்நாட்டு அன்னையர் முன்னனி கண்டனம் இதை பற்றி யாருக்கும் தெரியுமா!!

எல்லாரும் சேர்ந்து - இல்லை இப்படியான செய்தி எல்லாம் உங்களுக்கு தானே தெரியும்!!(மனதில் நினைப்பு தானே பிழைப்பை கெடுக்குது என்று நினைக்கிறார்கள்)

http://www.yarl.com/forum3/index.php?showforum=34

சிநேக் அக்கா (சந்தோசத்துடன்) -உதை பற்றி தெரியாதோ இங்கே போய் பாருங்கோ இதை பற்றிய சுவாரசியமான உரையாடலை!!

சகி அக்கா -இலண்டன் விமான நிலையத்தில் இலங்கை விமானம் விபத்துகுள்ளாயிடாம்!!

இனியவள் -அப்புறம்!!

சிநேக் அக்கா -ஆஸ்பத்திருக்கு கொண்டு போனவையாம் (எல்லாரும் சிரிக்கிறார்கள்)

எல்லாரும் - ஆமா சிநேக் பெரிய யோக் சொல்லிட்டா அதை விட ஜெயராஜ்பெனாடோ புள்ள சொல்லி இருப்பாரெ இதற்கு காரணம் விடுதலை புலிகள் என்று!!

அனிதா அக்கா (பாட்டி) -உதை எல்லாத்தையும் விட ஒன்று தெரியுமோ "ரமணா" பட பாணியில் இறந்த சிறுமிக்கு சிகிச்சை இதை பற்றி தெரியுமோ என்னால சொல்ல ஏலாது இங்கே போய் பாருங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=34

எல்லாரும் -ஆமாம் இவா பாட்டி தானே வயசு போயிட்டு சொல்ல ஏலாது தானே!!

ரமா அக்கா -இது எல்லாம் ரொம்ப முக்கியம் "மாறுங்கள் இல்லை மடிந்து போவீர்கள் இப்படி ஒரு நல்ல ஆய்வு இருக்கு நீங்களும் போய் வாசித்து பாருங்கோ!!

எல்லாரும் -இதை எல்லாத்தையும் நாம வாசிக்கிறதாவது (சிரிப்பு)

(இவை எல்லாம் கதைத்து கொண்டு இருக்க சுண்டல் அண்ணா கடலை போட அங்கையும் நுழைகிறார்)

இத்தோடா இது எல்லாம் சப்பை மாட்டர் தங்களுக்கு பல்லை பிடுங்கும் பிரிடிஷ்காரர் இதை பற்றி தெரியுமா..............இல்லை பெண்கள் மட்டும் உறுபினர்களாக கொண்ட அரசியல் கட்சியாம்.பெயர் ஜக்கிய முண்ணனி இதை பற்றி தான் தெரியுமா என்று ஒவரா பில்டப் காட்ட தொடங்க!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=34

எல்லாரும்- அட இப்படி எல்லாம் செய்திகளை சுண்டல் அண்ணாவால மட்டும் தான் தரமுடியும் சுண்டல் அண்ணா என்றா சுண்டல் அண்ணா தான்

சுண்டல் அண்ணா -இப்படி என்னை புகழ்கிறது எனக்கு விருப்பம் இல்லை வேண்டும் என்றா உங்க மெசெஞ்ஜர் ஜடியை தாங்கோ (தொடங்கிட்டானய்யா தொடங்கிட்டான்!!)

எல்லாரும் -அட லெக்சசிற்கும் நேரமாட்டு என்று சொல்லி கொண்டு சுண்டல் அண்ணாவிற்க்கு பாய் காட்டி கொண்டு பறக்க!!

சுண்டல் அண்ணா -இட்ஸ் பார்ட் ஒவ் ட கேம்!!

ஜம்மு பேபி-இதை தான் எத்தனையோ நாளா நீங்க சொல்லுறீங்க சுண்டல் அண்ணா!!

சுண்டல் அண்ணா -அதற்கு மிஞ்சி நம்மளிற்கு இங்கிலிசு தெரியாது அடக்கி வாசியுங்கோ!!இத்தோடா இது எல்லாம் சப்பை மாட்டர் தங்களுக்கு பல்லை பிடுங்கும் பிரிடிஷ்காரர் இதை பற்றி தெரியுமா..............இல்லை பெண்கள் மட்டும் உறுபினர்களாக கொண்ட அரசியல் கட்சியாம்.பெயர் ஜக்கிய முண்ணனி இதை பற்றி தான் தெரியுமா என்று ஒவரா பில்டப் காட்ட தொடங்க

எல்லாரும்- அட இப்படி எல்லாம் செய்திகளை சுண்டல் அண்ணாவால மட்டும் தான் தரமுடியும் சுண்டல் அண்ணா என்றா சுண்டல் அண்ணா தான்

சுண்டல் அண்ணா -இப்படி என்னை புகழ்கிறது எனக்கு விருப்பம் இல்லை வேண்டும் என்றா உங்க மெசெஞ்ஜர் ஜடியை தாங்கோ (தொடங்கிட்டானய்யா தொடங்கிட்டான்!!)

எல்லாரும் -அட லெக்சசிற்கும் நேரமாட்டு என்று சொல்லி கொண்டு சுண்டல் அண்ணாவிற்க்கு பாய் காட்டி கொண்டு பறக்க!!

சுண்டல் அண்ணா -இட்ஸ் பார்ட் ஒவ் ட கேம்!!

ஜம்மு பேபி-இதை தான் எத்தனையோ நாளா நீங்க சொல்லுறீங்க சுண்டல் அண்ணா!!

சுண்டல் அண்ணா -அதற்கு மிஞ்சி நம்மளிற்கு இங்கிலிசு தெரியாது அடக்கி வாசியுங்கோ!!

இப்படியே லெக்சரையும் கட் பண்ணிவிட்டு சுண்டல் அண்ணாவுடன் சேர்ந்து வீட்டை போகாம ஒரே பன்பலா போய் கொண்டிருக்க "காதல் ஒழிக" காதல் ஒழிக" என்று கோஷம் பார்த்தா நம்ம ஆதியும்,விரிவுரையாளர் நெடுக்ஸ் அவர்களும் கோஷம் போடீனம் அவர்களை சுற்றி ஒரே மாணவர் கூட்டம்.(சுண்டல் அண்ணா கூட்டத்தை பார்த்துவிட்டு வா மச்சி போவோம் ஏதாவது நமக்கு மாட்டுபடும் என்று இழுத்து கொண்டு போனா)"காதல் ஒழிப்பு சங்கம்" என்று ஒரு சங்கம் ஆதி அமைத்து புத்தன்,கந்தப்பு,கலைஞன்,டங்க

Link to comment
Share on other sites

kannadi01pa6.jpg

(21-10-2007 - 27-10-2007)

வணக்கம் களஉறவுகளே!

இந்த வார காலக்கண்ணாடியோடு உங்களனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. யாழ் களத்தில் இந்த வாரம் ஒரு எழுச்சி மிக்க வாரமாக அமைந்தது. எல்லாளனின் வருகையை அடுத்து களம் களைகட்டியது நீங்கள் அனைவரும் அறிந்ததே. யாழ் இணைய தகவல் வழங்கிகள் கூட சுமை தாளாமல் பல வேளைகளில் செயலிழந்தது. இத்தகைய ஒரு வாரத்தில் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்க என்னை அழைத்த ஜமுனா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு காலக் கண்ணாடிக்குள் நுழைகிறேன்.

kannadi02uq1.jpg

இந்த வாரம் புதிய வரவுகள் இருபத்தி மூன்று (23)

விண்ணப்பித்தவர்கள்:

,
,
,
,
,
,
,
,
,
,

புதிய உறுப்பினர்கள்:

,
,
,
,
,
,
,
,
,
,

கருத்துக்கள உறவுகள்:

அனைத்து புது முகங்கங்களையும் அன்புடன் வரவேற்கின்றோம், அத்துடன் ஆரம்பகட்ட பரீட்சைகளில்
தங்கை
போல சித்தியடைந்து விரைவில் கள உறவாக வாழ்த்துகிறோம்!

உறவோசையில்,

கரிகாலன் அவர்கள்
என்றும் மற்றும் ஆதி அவர்கள்
மற்றும்
போன்ற தலையங்கங்கள் மூலமாக தனது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். இவர்கள் விரக்தியடையாது தொடர்ந்து எழுத கள உறவுகள் சார்பில் வேண்டுகின்றேன்.

பல யாழ்கள உறவுகளின் துறைசார் திறமைகள் கண்டு நாரதர் அவர்கள்
என்றும் மற்றும்
என்று இரு வேண்டுகோள்களை விடுத்திருந்தார். நிச்சயம் இவ் வேண்டுகோள்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

kannadi02uq1.jpg

ஊர்ப்புதினம் பகுதியில்,

எல்லாளன் நடவடிக்கையை தொடர்ந்து ஊர்புதினம் அது தொடர்பான செய்திகளால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டது. தாக்குதல் பற்றிய செய்திகள், தாக்குதல் நடத்திய கரும்புலிகள் பற்றிய செய்திகள், அழிக்கப்பட்ட விமானங்கள் குறித்த ஊகங்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பிந்திய செயற்பாடுகள், தங்கள் கையாலாகத்தனத்தை அவர்கள் வெளிப்படுத்திய விதம், ஊடகங்கள் மீதான பாச்சல் என ஒவ்வோரு நாளும் பரபரப்பாக காணப்பட்டது.

எல்லாளன் தாக்குதல் சம்பந்தமான பின்வரும் 3 தலைப்புகள் பலராலும் பார்வையிடப்பட்டு மற்றும் கருத்துகள் பதியப்பட்டு முதல் 3 இடங்களை பெற்றுள்ளன:
  1. -
    (கருத்துகள்:173 / பார்வைகள்:20,707)

  2. -
    (கருத்துகள்:47 / பார்வைகள்:6,974)

  3. -
    (கருத்துகள்:12 / பார்வைகள்:4,621)

இதைவிட வேறு சில முக்கிய செய்திகளாக,

இந்த வாரம் மிகுந்த
ஈழவன்
ஊக்கத்துடன் சுழன்று சுழன்று கருத்துகளையும் செய்திகளை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருந்தார்.
அஜீவன்
அவர்கள் பிறமொழி ஊடக செய்திகளை மொழிபெயர்ப்பு செய்து இணைத்திருந்தார் இருவருக்கும் பாராட்டுகள்.

உலக நடப்பு பகுதியில்,

இந்தியாவின் குஜராத்தில் 2002 இல் நரேந்திர மோடியின் தலமையிலான அரசு இந்துத்துவ அமைப்புகளுடன் இணைந்து சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்திய கோரமான இனப்படுகொலையை தெல்கா ஊடகம் புலனாய்வு செய்து ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமான விவாதம்
என்ற தலைப்பில் இடம்பெற்றது.

மேலும் சில உலக செய்திகள்:

செய்தி அலசல் பகுதியில்,

ஒலிவர் ஜேம்ஸ்
எழுதிய
என்ற ஆய்வை
வலைஞன்
இணைத்திருந்தார். இதில்
"தமிழ்பேசும் மக்கள் தமக்கு உகந்த தீர்வை தாமே முன்மொழிந்து அதனைப் பிரகடனம் செய்வதன் மூலம் நிறுவுவதற்கு முன்வரவேண்டும். இவ்வாறு நிறுவப்படும் தீர்வானது சர்வதேச அரங்கில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளில் ஒன்றாக அமைவது சிறப்பானதாகும். "
என்று பொருள்பட விவாதிக்கப்பட்டிருந்தது. இதில்
இறைவன்
,
தயா
,
பூனைக்குட்டி
,
நுணாவிலான்
ஆகியோர் தமது கருத்துகளை பகிர்ந்திருந்தனர்.

kannadi02uq1.jpg

எங்கள் மண்:

ஒரு முன்னாள் போராளி தன் மனைவியையும் குழந்தையையும் கூட போராட்டத்தில் ஈடுபடுத்தியதை விபரிக்கும்
எனும் ஒரு உண்மைக்கதையை
ஈழவன்
பிரசுரித்திருந்தார்.

வாழும் புலம்:

கலைஞன் அவர்கள்,
"போரை நான் விரும்புபவனாக இருந்தால் அல்லது ஆதரிப்பவனாக இருந்தால் போரில் எனது தனிப்பட்ட வாழ்வை அல்லது சுகத்தை நான் இழக்க தயாராக இருக்கின்றேனா? இல்லை என்றால், எப்படி நான் என்னைப் போன்ற இன்னொருவர் தனது வாழ்வை போரில் தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள அல்லது ஆதரிக்க முடியும்? எனக்கு மட்டும் ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயமா?"
என்று தனது மனச்சாட்சியை பார்த்து கேள்விகளை எழுப்பி,

"எனது மனச்சாட்சியைப் பொறுத்த அளவில் இப்படி இந்த இளம் வயதில் அவர்கள் கரும்புலிகளாக இருக்கட்டும், சாதாரண போராளிகளாக இருக்கட்டும் தமது வாழ்வை போரிற்கு ஆகுதி ஆக்கிக்கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை."
என்று பதிலும் கூறி இருந்தார். நியாமான இந்த கேள்விகள் தன்னை போல பிறரையும் நேசிக்கும் மனிதரின் நெஞ்சிலும் நிச்சயம் தோன்றும்.

இதற்கு நேடுக்கால்போவான், வடிவேல்007, கலைநேசன்1, வசிசுதா, நுணாவிலான், பூனைக்குட்டி, இன்னோருவன், ஐ.வீ.சசி, சுகன், பனங்காய், இறைவன், வல்வை மைந்தன், புத்தன், மருதங்கேணி, கரிகாலன் ஆகியோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

kannadi02uq1.jpg

தமிழும் நயமும்:

உலக பொது மறையாம் வள்ளுவரின்
குறள்
அவர்களால் இணைக்கப்பட்டுள்ளது. இசையுடன் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது.

பொங்கு தமிழ்:

"சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம் - அக்னிபுத்திரன்" என்னும் தலைப்பில் தேவிபிரியா இலக்கியம் பற்றி ஒரு சிறந்த பதிவை இட்டுள்ளதாக இளங்கோ மற்றும் சுவி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

வாழ்த்துகள்:

இளைஞன் அவர்கள் இந்தவாரம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவருக்கும் எமது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!

துயர் பகிர்வோம்:

யாழ் போதனா வைத்தியசாலையில்
நினைவு கூறப்பட்டது.

kannadi02uq1.jpg

ஆக்கற்களம் - தென்னங்கீற்று

கனடாவில் சுயாதீன திரைப்பட நிறுவனம் நடாத்திய 6வது சர்வதேச குறும்பட விழாவில்,சிங்கப்பூர்,மலேசியா , லண்டன், இலங்கை,இந்தியா,டென்மார்க், கனடா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து 150 படங்கள் பங்கு கொண்டது.

இதில் பாரீஸிலிருந்து பாஸ்கரின் (மன்மதராசா) இயக்கத்தில் உருவான "நதி" குறுந்திரைப்படம் " 5 " விருதுகளை வென்றது . அங்கு நடைபெற்ற குறுந்திரைப்பட விழாவில் இந்த குறும்படமே 5 விருதுகளைப் பெற்றது.

கதைகதையாம்

அஜீவன்
வழங்கும்
மற்றும் "சாய்ந்த கோபுரங்களில்"
இளங்கோ
வழங்கும்

போன்றவை இடம்பெற்றுள்ளன.

இறுதியாக யாழ்களம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒன்றாக கருத்துப்பட உருவாக்கம் சிறப்பான முறையில் காலத் தேவைகளுக் கேற்ப ஓவியர் மூணா அவர்களின் கைவண்ணத்தில் வெளியிட்டு வருகின்றது. இது ஒரு நல்ல ஆரம்பம் என்ற போதும், இது போதுமானது அல்ல! களஉறவுகள் பங்களிப்பு இது போன்ற விடயங்களில் போதாது என்றே கொள்ள முடியும். இந்த இடத்தில் கரும்புலிப் போராளி இளங்கோ அவர்கள் தன்னை தற்கொடையாக தரும் முன்னர் மக்களை விழித்து வரைந்த மடலின் வாசகங்களை அனைவரும் மனத்திற் கொள்ள வேண்டும். இதே நிலை தாயகத்தில் உள்ள ஏனைய இளைஞர்களுக்கும் ஏற்படாது, அவர்களும் எம்மைப் போலவே வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வோருவரும், ஏதாவது ஒரு திறமையை வளர்த்து அதன் மூலம் நாட்டிற்காக அற்பணிப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.

கவிநயத்திலும், மெய்யியலிலும் எனக்கு விமர்சனம் செய்யும் தகுதி இல்லாத காரணத்தினாலும், ஏனைய பகுதிகளை அலச நேரம் போதாமை காரணமாகவும் இத்துடன் காலக்கண்ணாடியை நிறைவு செய்கிறேன். தவற விடப்பட்ட ஆக்கங்களுக்காக மன்னிப்பு கோருகிறேன், பொறுமையுடன் வாசித்த உங்கள் அனைவரிடமும் நன்றிகளை கூறிக் கொண்டு விடைபெறுகிறேன், வணக்கம்!

அன்புடன்,

சாணக்கியன்

kannadi04xu7.jpg

Link to comment
Share on other sites

kaalakkannaadianimxy4.gifkaalakkannaadi02bn2.gif

kaalakkannaadi03xc1.jpg

யாழிற்கு புதிய உறுப்பினர்கள்

இவ்வாரம் புதிதாக நாற்பதுக்கும் அதிகமானவர்கள் யாழில் இணைந்துள்ளனர். இவர்களில் velu murugan, eElasUdar, mugiloli,drops, Selvendran,payumpuli, யதார்தன், lojan, Chola_, srini, oorkkaluku, kavalur kanmani, vithikal, indran, periyarkuyil,gonesan, dhama, subash chandrabo..., ஆகியோர் விண்ணப்ப நிலையில் உள்ளனர்.

மாயவன், TMVP, sarankumar, EDI, Kavallur Kanmani, அருண், kavalur kanmani, oorkkaluku, Samyuktha, Thooyan-Ragavan, ravi12,YarlShiva , Anpe, jeganco, forlov, antony, VAALI, prince of chola, இரமணன், Thiva, Subo, Gowsy, ragunathan, Akkaraayan ஆகியோர் புதிய உறுப்பினர்களாவார்கள்.

செய்திகள்

இவ்வரம் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறீலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தது முக்கிய செய்தியாக இடம்பெற்றது. நெடுக்காலபோவான் இணைத்த விடுதலைப் புலிகளின் அறிக்கையின் கீழ் யாழ் கள உறவுகள் தமது துயரினைப் பகிர்ந்து கொண்டனர்.

thalaivar1op0.jpg

thalaivar2ce5.jpg

வீரச் சாவடைந்த விடுதலை வீரர்களின் இறுதிச் சடங்கு தொடர்பான செய்திகளும் வீர வணக்கப் படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பழ.நெடுமாறன் அவர்கள், கலைஞர் கருணாநிதி, அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள், அனைத்துலக ஊடகங்கள், மற்றும் பலர் தமது வீர வணக்கங்களையும் இரங்கல் செய்திகளையும் தெரிவித்திருந்தனர்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையடுத்து தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக பா. நடேசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், நாம் 'எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்ற வாரம் அனுராதபுர முகாமில் நடத்தப்பட்ட எல்லாளன் நடவடிக்கையத் தொடர்ந்து ஆனந்த சங்கரி என்பவர் எழுதிய கண்டனக் கடிதம் வேடிக்கையாக இருந்தது. கோதபாயா ராஜபக்ஸா புலிகளின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதாக சூழுரைத்ததுடன் வன்னிப் பகுதிகளில் விமானத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. எல்லாளன் நடவடிக்கையில் பங்குகொண்டு வீரச்சாவடைந்த கரும்புலிகளின் உடல்களைச் சிதைத்து நிர்வாணப்படுத்திதை புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசைய்யா இளந்திரையனை கண்டித்திருந்தார். எல்லாளன் நடவடிக்கையைத் தொடர்ந்து அனுராதபுர வான் படைத்தளத்தில் பணிபுரிந்த 3 தமிழர்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. அனுராதபுர வான் படைத்தளத்தில் ஏற்பட்ட அழிவுகளை ஈடுசெய்ய சீனா, ரஷ்யா, செக்., பாக். இஸ்ரேல் அரசுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன.

நீண்டகாலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்த போராளி மேஜர் இரும்பொறை திங்கட்கிழமை இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்து ஒன்றின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அனுராதபுர தோல்வியை ஈடுசெய்வதற்காக அரச படைகள் மன்னார் முகமாலைப் பகுதிகளில் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தன. இம் முன்னகர்வுகள் ழுறியடிக்கப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்

தொடர்ந்து செய்திகளை இணைத்துவரும் யாழ் கள உறவுகளாகிய ஈழவன், கறுப்பி, இறைவன், நுணாவிலான், வல்வை மைந்தன் மற்றும் ஏனையோருக்கும் செய்திகளை ஒருங்கிணைப்பதில் உதவி புரியும் கந்தப்புவுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

வாழும் புலம் பகுதியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரகாவியமானதையுட்டு இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நினைவுக் கூட்டங்களும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. அதேவேளை லண்டனில் சில அமைப்புகள் அஞ்சலி செலுத்த முன்வராமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

neesakkaram02zp7.gifneesakkaram04pv8.gif

சிட்னி கேசிப் 34, சிட்னி கேசிப் 35 ஆகியவற்றின் மூலம் புத்தன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

பொங்குதமிழ் பகுதியில் தமிழ் மொழியின் சிறப்புக்களை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்குகிறார் நுணாவிலான்.

கவிதைப் பூங்காடு பகுதியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவால் ஏற்பட்ட உள்ளக் குமுறல்களை கவிதை வடிவில் விகடகவி, எழிலன், பரணீ, யாழ் ஆதித்தியன், ரகுநாதன், வ.ஐ.ச.ஜெயபாலன், கவிரூபன், வல்வை சகாரா , தமிழ்வானம், ravi_dk ஆகியோர் வெளிப்படுத்தினர். வெண்ணிலா இனியவள் ஆகியோரின் ஆக்கங்களும் கவிதை பூங்காட்டை அலங்கரித்தன.

கதை கதையாம் பகுதியில் புத்தனின் ஒருநிமிடக் கதை திருமணக் பேச்சு தொடர்பான சிந்தலையைத் தூண்ட, சாத்திரி ஈழத்து அனுபவங்களை தனது நகைச்சுவைப் பாணியில் தந்திருந்தார்.

வண்ணத் திரை பகுதியில் 'அரவாணி' ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை நிகழ்த்த இருப்பதாக செய்தியொன்றை கிருபாகரன் இணைத்துள்ளார்.

விளையாட்டுத் திடலில் உலகக் கிண்ணக் கால்பந்து, கராத்தே பற்றிய செய்திகள் இணைக்கப்பட்டன.

இனிய பொழுதில் கலைஞன் 'அக்கா எனும் இனிய உறவு!' என்ற கட்டுரை மூலம் தனது அக்காவின்மீதுள்ள அன்பை வெளிக்காட்டியிருந்தார்.

வலையில் உலகம் பகுதியில் கூகுளில் தமிழ் தட்டச்சுவான் வந்துள்ள செய்தியை கலைநேசன் இணைத்திருந்தார்.

அரசியல் அலசல் பகுதியில் குறுக்காலபோவான் எழுதிய 'செய்தி ஊடகங்களின் ஆரம்பமும் இன்றைய பிரச்சார வடிவமும்' என்ற கட்டுரை மூலம் செய்தி ஊடகங்கள் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது.

மெய்யெனப் படுவதில் நியூமராலஜி பற்றியும் பாரீசில் நடைபெற்ற தலித் மகாநாடு பற்றியும் கட்டுரைகள் இணைக்கப்பட்டன.

பொறுமையாக இவ்வாரக் காலக்கண்ணாடியை வாசித்த உறவுகளுக்கு நன்றிகள். ஊர்ப்புதினம் பகுதியில் ஏராளமான செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாவற்றையும் தொகுக்க முடியவில்லை. தவறுதலாக ஆக்கங்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

அடுத்த வாரக் காலக் கண்ணாடியைத் தயாரிப்பவரை பின்பு அறிவிக்கிறேன். அல்லது யாராவது விரும்பினால் முன்வரலாம்.

நன்றி.

Link to comment
Share on other sites

யாழ் காலக்கண்ணாடி

காலம் : 5 - 11- 2007 முதல் 12- 11 - 2007 வரை

அன்பின் யாழ் சகோதர சகோதரிகளே எல்லோருக்கும் அடியேனின் வணக்கங்கள்.காலக்கண்ணாடியில் சந்தர்ப்பவசமாக அன்பு நெஞ்சங்களை சந்திப்பதில் அளவிலா மகிழ்ச்சி.என்னை தேர்ந்தெடுத்த இணையவனுக்கு நன்றிகள் பல.

புதிய உறுப்பினர்களாக யாழில் இணைந்தவர்கள் பின்வருவோர்:முகிலொலி , Nitharsanakumar , waren , jaffna25 , velu murugan, sarmil , ramjan , punguduthivaan , drops .

விண்ணப்பித்தோர் பட்டியலில் kahir,raja1965,neervai thambi,udisecular இடம்பெறுகிறார்கள்

புது உறுப்பினர்கள் வாருங்கள். உங்களை யாழ் களம் வரவேற்கிறது. கள விதிகளை வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை வழங்குங்கள் சகோதர சகோதரிகளே.ம் நான் சொன்னா கேட்பிங்களாக்கும் என்றொரு அசரீதி கேட்கிறது.அ அ ஆ..........

ஏனெனில் வெட்டு குழு, தணிக்கை குழு என ஆவியாக திரிகின்றன.

கள விதிகளை படிக்க கீழுள்ள தள முகவரிக்கு செல்லவும்

http://www.yarl.com/forum3/index.php?act=SR&f=40

அதி கூடிய செய்திகளை யாழுக்கு வழங்கி கொண்டிருக்கும் முதல் 5 உறுப்பினர்கள்

ஜமுனா,வெண்ணிலா, கறுப்பி, தூயவன், ரசிகை.

களத்தில் மிக நீண்ட கால உறுப்பினரும், தற்போதும் கருத்துக்களை வழங்கி கொண்டிருப்பவர் vasisutha.

யாழில் அதிகூடிய கருத்துக்களை வழங்கியவர் ஜம்மு. கருத்துக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15,000 ஐ எட்டுகிறது.பாராட்டுக்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

மேலும் உறுப்பினர் அட்டவணையை கீழுள்ள தள முகவரியில் பார்வையிடலாம்.

http://www.yarl.com/forum3/index.php?act=M...&filter=ALL

இவ்வாரம் ஊர்புதினம் பகுதியில் பின்வருவோர் செய்திகளை இணத்திருந்தார்கள்.

கறுப்பி, கலைஞன், hirucy, Iraivan, Eelathirumagan, sukan, NewsBot,vvsiva, nedukkalapoovan, janarthanan, paranee, muruga, சாணக்கியன் அனிதா,கந்தப்பு, அருண்

கலைஞனால் படங்களுடன் இணக்கப்பட்ட தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? என்ற விவாத வினா தொடுத்திருந்தார்.இதற்கு justin கீழ்கண்டவாறு எழுதி இருந்தார்.சிந்திக்க தூண்டியது."ஒரு முக்கிய தலைவனை இழந்த பின்னும், சுதாரித்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது தமிழீழம். மேலே விமானம் பறக்க எந்த சலனமும் இல்லாமல் முக்கிய தளபதிகள் சூழ்ந்திருந்தார்கள் அங்கே. சிறி லங்காவில் மூன்று நாள் அதே அரற்றல் பிதற்றல் கொண்டாட்டம். முக்கிய தலைவர்கள் ஓடி ஒளித்துக் கொண்டார்கள் புலி பாயும் என்று.யாரைப் பார்த்தால் தடை செய்யப் பட்ட அமைப்பு மாதிரித் தெரிகிறது? புலிகளையா சிங்கள அரசையா? ". இணைப்புக்கு,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30570

நெடுகாலபோவானால் இணைக்கப்பட்ட "முகமாலையில் புதனன்று படையினருக்கு பேரிழப்பு "

பரணியால் இணைக்கப்பட்ட "வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிரிட்டனில் கைது"

ஜனார்த்தனனால் இணைக்கப்பட்ட "முகமாலை வரவு -செலவுத் திட்டம் இது - ஐ.தே.க"

கறுப்பியால் இணைக்கப்பட்ட "மௌனம் காக்கும் புலிகளின் குற்றச்சாட்டுக்கு நோர்வே மறுப்பு" ஆகிய செய்திகள் கூடுதலான வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளன.

உலக செய்தியில் ஈழபிரியனால்(ஆங்கில),அஜீவனால் (தமிழ்) இணைக்கப்பட்ட "நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த ஒரு இரண்டு வயது குழந்தைக்கு இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்க 13 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் முயன்றுவருகிறார்கள்."லக்சுமியின் அறுவை சிகிச்சை வெற்றி பெற பிராத்திப்போம். ". இணைப்புக்கு,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30612

செய்தி அலசலில் கறுப்பியால் இணைக்கப்பட்ட வான்வழி விழுந்த அடி சமாதானத்தின் மீது வீழ்ந்த அடி பிரிகேடியர் தமிழ் செல்வன்,மற்றும் ஐந்து போராளிகட்கும் வீர அஞ்சலி செலுத்தப்பட்டு, தமிழ் செல்வன் அண்ணாவின் போராட்ட வரலாறு காலத்தின் தேவை அறிந்து எழுதப்பட்டுள்ளது.நிச்சயமாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.இந்த அருமையான செய்தி அலசலை தந்த கறுப்பிக்கு யாழ் சார்பாக நன்றிகள் பல. ". இணைப்புக்கு, http://www.yarl.com/forum3/index.php?showtopic=30525

செய்தி திரட்டில் நிதர்சனால் இணைக்கப்பட்ட "கடும் குளிரின் மத்தியிலும் குலையா உறுதியுடன் கனேடிய தமிழரின் பிரிகேடியர் தமிழ் செல்வன்,ஐந்து போராளிகளின் வீரவணக்க நிகழ்வு" கனேடிய தமிழ் மக்களால் கடும் குளிர்,மழையின் மத்தியிலும் மிகவும் உணர்வு பூர்வமாக தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர்.வல்வை சகாரா கூறியது போல் தள்ளாடும் முதியவர்கள் மட்டுமல்ல ஆறெழுமாதங்கள் நிரம்பிய பச்சைக் குழந்தைகளைக் கூட இந்தக் கொட்டும் மழையில் வைத்துக்கொண்டு தங்கள் உணர்வின் வெளிப்பாட்டை காட்டிய தமிழ்மக்களும் நின்றதைப் பார்த்தபோது எனக்கு மெய் சிலிர்த்துப் போய்விட்டது. நிச்சயமாக இச்செய்தி எங்கள் தாயகத்திற்கு ஒரு பெரும் புத்துணர்வை ஊட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30567

எங்கள் மண்ணில் புது முகம் சோழ இளவரசன் தமிழீழ மக்களின் பிரச்சனை பற்றி சிங்கபூரில் உள்ள அவரின் நண்பர்களுக்கு கற்பிக்க களத்தில் இறங்கியுள்ளார்.இவருக்கு யாழ் கள உறுப்பினர்கள் நிறைய ஆதரவு வழங்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.மேலும் தகவலை கீழுள்ள திரியில் பார்க்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30539

அடுத்து யாழ் கழ உறவு Jude "அங்கிகரிக்கப்படாத நாடுகள் பட்டியலில் தமிழ் ஈழத்தை இணைத்திருக்கிறேன் " என்ற தலைப்பில் மிக பெரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.அவருக்கு கீழ் கண்ட உதவிகள் தேவை.ஒவ்வொரு கள உறவும் நேரமெடுத்து அவருக்கு உதவ வேண்டுமென்பது எனது அவா.

சிறி லங்கா அரசின் சமாதான செயலகம்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பணிப்பாளர்

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகளுக்கான பணிப்பாளர்

உலக வங்கி.

மேலும் தகவலுக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=30522

பொங்கு தமிழ் பகுதியில் கந்தப்புவால் இணைக்கப்பட்ட "தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!" என்ற தலைப்பில் பலத்த வாத பிரதி வாதங்கள் நடைபெறுகிறது.யாராவது இப்பக்கத்தை பார்க்க தவறின் சென்று பார்த்து உங்கள் பொன்னான கருத்துக்களை அளியுங்கள்.இணைப்புக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30565

வாழும் புலத்தில் புது முகம் ரகுநாதன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தேசப்பற்று பற்றி கடுமையாக சாடியிருந்தார்.அத்துடன் தமிழ் நாட்டிலுள்ள தமிழரிடம் எமது தலைவர்,போராட்டம் என்பவற்றுடன் ஒப்பிட்டிருந்தார்.மேலும் வாசிக்க http://www.yarl.com/forum3/index.php?showtopic=30683

வாழும் புலத்தில் சோழனால் இணைக்கப்பட்ட "கண் திறக்கும் பிரித்தானிய ஊடகங்கள்!" என்ற தலைப்பில்,நீண்ட காலங்களாக எம்மக்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளைப் பாராமுகமாக இருந்த பிரித்தானிய ஊடகங்கள், சிலரது அயராத முயற்சிகளை அடுத்து கண் விளிக்கத் தொடங்கியிருக்கிறது.இச்செய்த

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் "இவளின்" வணக்கங்கள்

யாழில் சென்றவாரம் என்ன நடந்ததுயென்று சுருக்கமாக எழுதுகின்றேன். நேரம் காணாதபடியால் விவரமாக எல்லாவற்றையும் வாசிக்க முடியலங்க, ஏதும் விடுபட்டால் உங்க பெரியமனசால் மன்னிச்சுக் கொள்ளுங்கள்.வலைஞன் அண்ணாவின் தனிமடலை நான் தாமதாக பார்வையிட்டதால் காலக்கண்ணாடியும் தாமதமாகிவிட்டது. :rolleyes:

யாழில் கார்த்திகை மாதம் 10 ம் திகதியில் இருந்து 18 ம் திகதிவரையில் என்ன என்ன நடைப்பெற்றதென்பதை சுருக்கமாக பார்ப்போம்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ யாழ் அரிச்சுவடி : புதிய உறவுகள்

-"வாலி" - //அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்....! //என்று தலைப்பிட்டு அறிமுகமானார். வாலி என்றவர் யாழில் சுவைக்க காரணம் "சுண்டல் " தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

வாலியண்ணாவை யாழிற்கு வரவேற்பதில் சந்தோசம். ஆனால் பாருங்கோ வாலியண்ணாவுக்கும் ,கள உறவு சுண்டல் எழுதுவது போல் "னை" என்ற பிரச்சனை உள்ளது. அதாவதுங்கோ சுண்டலுக்கும் "ணை" எண்டு எழுத வராதுங்கோ, தங்களுக்கும் ணை எண்ட எழுத்தில் பிரச்சனை உள்ளது . உங்கள் அறிமுகத்தலைப்பை பார்க்கவும்.

"அன்பழகன்" //அனைவருக்கும் வணக்கம்// என்று எழுதியவர் ஒரு கருத்தோடு அவரைக் காணவில்லை!

"ஜாவா" என்ற புதியவர் // அன்பு வணக்கம் //வந்தனங்கள் என்று ஆரம்பிச்சு தன்னைப்பற்றிய அறிமுகத்தை தந்திருந்தார்.

"eelamlover" என்ற புதிய உறவு //அனைவருக்கும் வணக்கம்//என்று தலைப்ப போட்டு , தான் சில மாதங்களாக யாழை வாசிப்பதாகவும் தற்போது இணைந்துள்ளதாகவும் எழுதியிருந்தார்.

அனைத்து புது உறவுகளையும் அன்போடு வரவேற்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ யாழ் உறவோசை :

இதில சென்ற கிழமை என்ன நடந்திச்சுன்னு பாத்தீங்க என்றால், //எணக்கு களத்தில் எழுத தடைய? // என்ற கேள்வியோடு "நாவூற" தலைப்பிட்டு இருக்கின்றார்.

"நாவூற" வாழுற இடம் www.neruppu.org என்ற இணையத்திலாம். நெருப்பு இணையத்தில் வாற செய்திகளை அடிக்கடி இணைச்சார். நிர்வாகமும் அதை நிர்வாகத்துக்குள் நகர்த்திக்கிட்டே இருந்தார்கள்.

எண்ட கருத்து என்னவென்றால் நிதர்சனம், நெருப்பு போன்ற இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இங்கு இணைப்பதை நிர்வாகம் தடுக்கவேணும். அவை வேற வேற இடங்களில இருந்து செய்தி எடுத்துப் போட்டுட்டு உரியாக்களின்ர பெயருகள போடுறேல.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ ஊர்புதினம் : முக்கியமான செய்திகள்

- விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் - சிறீலங்கா வான்படைத்தளபதி சூளுரை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30804

- யுத்தத்தை தொடர ஈரான், சீனா, பாகிஸ்தானிடம் ஆயுத உதவியை சிறீலங்கா நாடியுள்ளத - பி.ராமன

:http://www.yarl.com/forum3/index.php?showtopic=30875

- தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு 4 பேர் படுகாயம்

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=30879

- அமெரிக்காவின் றாடர் கருவி: இந்தியா அச்சத்தில் - இந்தியப் பத்திரிகை

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=30922

- இவ்வருடம் இருபதாயிரம் புதிய படை உறுப்பினர்கள் - கோதபாய

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=30917

- சிறீலங்காவிற்கு பிரித்தானியா பத்து இலட்சம் பவுண்ஸ் வழங்கியுள்ளது

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=30954

- சிறீ லங்கா உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!! , காணொளி..

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=30938

- வைகோ, நெடுமாறனுக்கு நிபந்தனை ஜாமீன்

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=31001

- உலக த‌மிழ‌ர்களை ஏமா‌ற்று‌கிறா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்று!

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=31032

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ உலக நடப்பு:

- ஆடு வெட்டி யாகம் நடத்திய சங்கராச்சாரியார்

வசி சுதா : அப்ப இறைச்சி கடைக்காரர் அதோட இறைச்சி சாப்பிடுற

ஆட்களையும் உள்ள தள்ளவேணும்.

இறைவன்: அனுமதியின்றி ஆடு வெட்டப்பட்டால் அது கள்ள ஆடுதானே.

வசிசுதா: ஆட்டின் அனுமதியைதானே சொல்றீங்கள்?

ஈழவன் : எப்படி உங்களால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகின்றது

வசிசுதா : தானா வருது...

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=31071

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

- பிரிட்டனை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரிட்டனில் இருந்து வெளியேறுவோரில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் தான் குடியேறி வருகின்றனர்.

: http://www.yarl.com/forum3/index.php?showtopic=30972

- காதலி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்கும் காதலன்..!

கௌரிபாலன் : பெண்கள் எப்போதுமே புத்திசாலிகள்தான் ...

நெ.போ: அப்படியா அவங்க நினைச்சுக்கிறாங்களே தவிர.... புத்திசாலிகள்...??!

ஜொம்மு பேபி பஞ்ச்- காதல் ஒரு கழற்றி போட்ட செருப்பு, சைஸ் சரியா இருந்தா யாருக்கும் போட்டு கொள்ளளாம்"!!

நெடுக்கால போவான் அண்ணேக்கு இந்தமாதிரி செய்திகள் தான் கண்ல படும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ நிகழ்வும் அகழ்வும்:சென்ற வாரம் யாழில் இணைக்கப்பட்ட கருத்துப்படங்கள்

carttooniv4.jpg

tro_new4.jpg

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ செய்தி திரட்டி:

- நாய்க்கு தாலி கட்டிய இளைஞர்...........

fpn04qp7.jpg

என்ன கொடுமை இது !

- சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை!

இதில பாருங்கோ சாணக்கியன் சார் நல்ல கேள்விகள் கேட்டிருக்கார், :unsure:

1) கர்ப்பமான போதே பெற்றோரில் ஒருவருக்கு எயிட்ஸ் இருப்பது உணரப்பட்டால் கருவை அழித்து இந்த அவலம் இடம்பெறாமல் தடுக்க சட்டம் அனுமதிக்குமா?

2) கருக்கலைப்பை தடைசெய்த அரசாங்கம் ஏன் பிள்ளையை தொண்டு நிறுவனத்திடம் கொண்டு ஓடுகிறது? தனது சட்டத்தினால் ஏற்பட்ட பக்கவிளைவுக்கு தானல்லவா பரிகாரம் வழங்கவேண்டும்!

3) பெற்றோரை தீவிரமாக தேடும் பொலிசார் அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கி மேலதிகமாக பிள்ளையையும் அவர்களிடமே கொடுப்பார்களா?

4) கருவை கொல்லக்கூடாது என்று சட்டமியற்றியற்றிய அரசும், மதஅடிப்படை வாதிகளும், அவ்வாறே பெறப்பட்டு கைவிடப்பட்ட குழந்தைகள், சிறுவர்களை பாதுகாக்கவென கிராமம் தோறும் ஆச்சிரமங்கள் அமைத்து இலவசமாக பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை மகிழ்வுடன் பொறுப்பேற்று பராமரிக்குமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30904

- திருட்டு பயலைக் காட்டு ஆத்தா - தேங்காய் பூசாரி

p40aja3.jpg

p41aec7.jpg

நல்ல காலம் உருட்டப்பட்ட தேங்காய் யாழ் களத்துக்குள்ள வரயில்லை! :rolleyes:

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ வாழும் புலம்:

- சிட்னிகோசிப் 35, சிட்னி தமிழ் பாடசாலை

ஜொம்மு பேபி பஞ்-"எத்தனை வருசமா தான் இராமாயணத்தையும்,மகாபாரத்தைய

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடி (கார்த்திகை 19 முதல் கார்த்திகை 25 வரை)

எல்லாருக்கும் வண்க்கம். நேரமின்மை காரணமாக நுனிப்புல் மேய்ந்து இக்கண்ணாடியைத் தருகிறேன். யாழ்பிரியா நேற்று தனிமடலில் கேட்டிருந்தார். யாரும் கல்லெறிந்தால் அவர்தான் பொறுப்பு எனச்சொல்லியிருந்தேன். அதனால் கல்லெறிய விரும்புபவர்கள் "யாழ் பிரியாவிற்கே" எறியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! :D முன்னரே கேட்டு அதிக நேரம் தந்திருந்தால் சிறப்பாக செய்திருப்பேனோ எனக்கேட்டால் வேறு காரணம் தான் தரமுடியும்; ஏனெனில் "சட்டியில இருக்கிறது தானே அகப்பையிலை வரும்" :) .

இங்கு இருக்கும் தமிழ் பண்டிதர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை திருத்தி வாசிக்கவும்.

யாழ் இனிது (வருக வருக)

யாழ் அரிச்சுவடி (சென்ற வாரம் களத்தில் இணைந்த உறவுகள்):

விண்ணப்பித்தோர்

polikainayagan

thamby2007

jeyaa

Amutan

saarulatha

ksrajan

radcell

புதிய உறுப்பினர்கள்

maravan15

jaffnaBoy

madayan

சாள்ஸ்

rajan24

thushi_eelam

udhayakumar

karan_123

Oli

Born4eelam

கருத்துக்ள உறவுகள்

Eelathupithan

யாழ் முரசம்:

என்னதான் மட்டுறுத்துனர் முரசு அடித்து சொன்னாலும் கடவுளுக்கும் பகுத்தறீவுக்கும்(?) இடயிலான கருத்தாட்டத்தில் உறவுகள் உணர்ச்சிவசப் படத்தான் செய்கின்றனர். இல்லை மட்டுறுத்துனருக்கும் வேலை வேண்டும் என நினைத்து வைக்கிறார்களோ தெரியாது. காரணம் அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைப்பதாக படுகிறது. ஆகவே இது தொடர்பான கருத்துகளே திருத்தம்/நீக்கம்/மற்றும் தணிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளன.

யாழ் உறவோசை:

வழமையான ஆர்ப்பாட்டங்களும் உதவி கோரல்களும்.

நீங்களே பார்த்து மகிழ

செம்பாலை (செய்திக்களம்)

ஊர்ப் புதினம் முக்கியமானவை:

க. வே. பாலகுமாரின் "மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது"

விடுதலை கோரி தமிழ்க்கைதிகள் சிறையில் உண்ணாவிரதம்.

இரா. சம்பந்தன்னின் "கனகசபையின் மருமகனைக் கடத்த ஏவிவிட்டது மகிந்த அரசுதான்"

அமெரிக்காவில் TRO வின் சொத்தகள் முடக்கம்

கோத்தபாய ராஜபக்சவின் "அம்பாந்தோட்டை அசம்பாவிதத்துடன் ஜேவிபி தொடர்பு"

கெல உறுமயவின் "சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ராவூப் கக்கீமும் இருக்கின்றனர்"

நல்லூரில் உள்ள தியாகி தீபனின் நினைவுச்சிலை உடைக்கப்பட்டது

2008ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

சண்டே லீடர் அச்சகம் தீ வைப்பபு

கிளிநொச்சி யுனிசெஃப் அலுவலகத்தை மூட ஜேவிபி வலியுறுத்தல்

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பதிலளிக்க பெர்னாண்டோபிள்ளே மறுப்பு

தமிழர் புணர்வாழ்வுக் கழகத்துக்கு தடைவிதித்த இலங்கை

இந்தியாவின் காதில் பூச்சுற்றும் இலங்கை

சிறலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு

உலக நடப்பு:

பயனுள்ள சில:

பரித்தானியாவில் பெருகி வரும் பாலியல் நோய்கள்

பிரிட்டனின் அரைவாசிக்கும் அதிகமான மக்களின் முக்கிய தரவுகளடங்கிய கணினி பதிவேடுகள் தொலைவு

ஆஸ்திரேலிய தேர்தல்.

நிகழ்வும் அகழ்வும்:

யாழ் செய்திக்குழுமத்தின் எண்ணக்கருவை சிறந்த ஓவியமாக்கிருக்கிறார் அனிதா - வாழ்த்துக்ள். :)

செய்தி திரட்டி

வழமையான மசாலாக்கள் தான். நீங்களே பாருங்கள்

படுமலைபாலை (தமிழ்களம்)

எங்கள் மண்:

நுணாவிலான் சுட்டு தந்த "ஈழத்து ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பியலாய்வு" - நான் எதிர்பார்து போன அழவுக்கு இல்லை (மிகச் சில ஊர்கள் பற்றித்தான் உள்ளது)

உதயபானு சுட்டு தந்த "எங்கள் அடையாளங்கள்" - அணைவரும் அறிந்திருக்க வேண்டியவை

வாழும் புலம்:

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச தலைவர் அமெரிக்காவில் கைது

புத்தனின் சிட்னிகோசிப் 35

துக்களக் வாரப்பத்திரிகை ஜரோப்பா வாழ் தமிழர்களால் தீ வைப்பபு

தமிழும் நயமும்:

தூய தமிழ்ச் சொற்கள், தமிழ் சொற்கள் அறிவோம்

உறவாடும் ஊடகம்:

புயலெனத் தென்றலின் ஒளிப்பாய்ச்சல் - புதிதாக வரவிருக்கும் தொல்லைக்காட்சிக்கு விளம்பரம்.

நெடுக்ஸின் ஆதங்கம் "ஏன் இப்படி நடந்துக்கிறாங்க?"

செவ்வழிப்பாலை (ஆக்கற்களம்)

கவிதைப் பூங்காடு:

வழமைபோல அதிகமாக காதல் சுக ? பிரிவுக் கவிதைகளுடன் சில மாவீரர்களுக்கான கவிதைகள். நீங்ளே பருக...

கதை கதையாம்:

நுணாவிலான் சுட்டு தந்த "வார்தை தவறிவிட்டாய்"

நூற்றோட்டம்:

நுணாவிலான் மீண்டும் சுட்டு தந்த "மால்கம் எக்ஸ் - என் வாழ்க்கை நூல் அறிமுகம்"

சிரிப்போம் சிறப்போம்:

நீங்களே பார்த்து சிரிக்க

விளையாட்டுத் திடல்:

இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வியாம் - ஆரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

கோடிப்பாலை (அறிவியற்களம்):

வலையில் உலகம்:

மீண்டும் நுணாவிலான் சுட்டு தந்த "எரிதங்ள் (spam) ஒரு விளக்கம்" - பயனுள்ள தகவல்

அறிவுத் தடாகம்:

ஜம்முவிற்காக சுண்டலின் ஆராய்ச்சியில் "பெண்களிடம் I Love You சொல்லும் தைரியம் வருவது எப்படி?"

அதிவேக விமானம்

விளரிப்பாலை (சிந்தனைக்களம்)

மெய்யெனப் படுவது - இந்த பிரிவின் பெயரே ஒரு மாதிரித்தான் இருக்கிறது. அதாவது மெய்யெனப் படுவது ஆனால் மெய் இல்லை என்பது போல இருக்கிறது.

இப்பிரிவின் கீழ்வரும் விடயங்ளை சிந்தனை செய்வொம் எண்டு பெயரில் இருக்கிறதையும் குழப்பி விடுவார்கள் என்பதால் நான் உள் நுளைவதில்லை. நீங்கள் விரும்பின்?

மேற்செம்பாலை (சிறப்புக்களம்)

நாவூற வாயூற:

சுண்டலுக்காக தூயா தரும் "சுண்டல் அவிப்பது எப்படி" - எங்கேயோ நல்லாய் அவிச்சிருக்கிறார் போல

நுணாவிலானின் கைவண்ண கொத்து ரொட்டி மற்றும் சிக்கன் ப்ரைடு ரைசு

நலமோடு நாம் வாழ:

வழம போல நுணாவிலான் பயனுள்ள தகவல்களைச் சுட்டு தந்திருக்கிறார்

உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? - என்னை போல புத்திசாலியா பிறந்து என்ன பிரயோசனம் ஜம்மு மாதிரி புத்திசாலியா வாழ இல்லா வேண்டும் :(

உங்களுக்கு என்ன நோய்?

காய்கறிகளின் வயாகரா - ரொம்ப முக்கியம்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

வாழிய வாழியவே:

தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

இத்துடன் எனது சுருக்கமான காலக் கண்ணாடியை முடிவுக்கு கொண்டு வருகிறேன். ஏதாவது முக்கியமானவற்றை தவற விட்டிருந்தால் மன்னிக்கவும்.

நட்புடன்,

சபேஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.