Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு 61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

Poll closed on 11/14/24 at 11:59

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

நான் இலங்கையன் அல்ல.

இருந்தாலும், இதிலாவது 'தமிழர்கள் நல்லா இருக்கட்டுமே..!' என்ற ஆர்வத்தில் வாக்களித்துள்ளேன்.😌

நன்றி ராஜவன்னியன். 👍🏽

  • Replies 223
  • Views 11.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

  • ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

  • ரசோதரன்
    ரசோதரன்

    என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

நான் இலங்கையன் அல்ல.

இருந்தாலும், இதிலாவது 'தமிழர்கள் நல்லா இருக்கட்டுமே..!' என்ற ஆர்வத்தில் வாக்களித்துள்ளேன்.😌

நீங்கள் மானசீக- ஈழத்தவர் என உங்களை நாங்கள் கருதி பல வருடங்கள் ஆகி விட்டதே❤️. ஆகவே உங்கள் வாக்கும் செல்லும்.

கடைசியாக வாழ்ந்த, வெளிநாடு வந்திராவிட்டால் வாழ்திருக்க கூடிய அடிப்படையில் எனக்கு பதிவு கொழும்பில் இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனாலும் என்னை வட-கிழக்கு வாக்காளராக பாவித்து வாக்களித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

என்னைப் பற்றித் தெரியும்தானே!  நாங்கள் பரம்பரை பரம்பரை தமிழரசுக்காரர்!

“புலி பசித்தாலும் பகரவீ அருந்தாது!” 😂

🤣 - விக்கி ஐயா அரசியலுக்குவர - நம்பிக்கையாக யாழுக்கு வந்து எழுத தொடங்கியவன் நான்.

அந்த தேர்தல் மறுநாள்

”மலர்ந்தது தமிழரசு”

என உதயன் போட்ட தலையங்கம் பார்த்து, உருவானது வெறும் அதிகாரமில்லாச் சபை என்பது தெரிந்தும், மனதில் ஒரு சொல்லமுடியாத சந்தோசம் பரவியது.

புலிகள் ஓய்ந்த பலவருடங்களின் பின்னும் மக்கள் அதே ஓர்மத்துடன் ஒரே அணியாக வாக்களித்தனர்.

அனந்தி, சயந்தன், ஐங்கரநேசன் என புதிய முகங்கள் நம்பிக்கை தந்தன.

அதன் பின் சம், சும், மாவை, விக்கி, சிறி, தவராசா, சிவஞானம் இத்யாதிகள் ஆடிய கோமாளிக்கூத்தை பார்த்து வாழ்க்கை வெறுக்காத குறைதான்.

இனி என் (மானசீக) வாக்க தமிழரசு பெற மிக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

2 hours ago, கிருபன் said:

எனது வாக்கு மணிக்கு!

எந்த மணி என்று கேட்கக்கூடாது🤪

யார் கவிண்ட மணிதானே 🤣?

உங்கள் வாக்கை மாம்பழத்துக்கு ஒதுக்கி உள்ளேன். இனி மாத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh,  @செவ்வியன்

அன்பான யாழ்.கள உறவுகளே... 
மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே  சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. 

ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து  வாக்களிக்கப் போகும்  கட்சிக்கு முன்னே  உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி  வாக்களிக்க முடியும். 

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள  ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள  உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂

அரசனை நம்பி புருசனை கைவிடலாமா?

எனக்கு கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் எனது விருப்ப தெரிவு தமிழரசு கட்சி. ஆட்கள் எனில் சுமந்திரன், சிறீதரன், டக்லஸ் தேவானந்தா. 

எனக்கு அழைப்பு அனுப்பியதற்காக சிறியர் தலையில் அடித்துக்கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.😁

அச்சச்சோ... கடும் வெறுப்பு இருந்தாலும், தமிழரசுக்கு வாக்களித்து விட்டேனே....😀

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:

நான் இலங்கையன் அல்ல.

இருந்தாலும், இதிலாவது 'தமிழர்கள் நல்லா இருக்கட்டுமே..!' என்ற ஆர்வத்தில் வாக்களித்துள்ளேன்.😌

உங்களுக்கொரு மகன் பிறப்பான்.அவனுக்கு திலீபன் என்று பெயர் வைக்க வேண்டும் என்று எப்போது எண்ணக்கரு வந்ததோ எப்போதே நீங்கள் ஈழத்தவன் ஆகிவிட்டீர்கள்.

நன்றி வன்னியர்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் வாக்களிக்க முடியவில்லை. எனக்கு முடிவுகள் தான் தெரிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

என்னால் வாக்களிக்க முடியவில்லை. எனக்கு முடிவுகள் தான் தெரிகிறது?

அண்ணை, அப்ப கள்ள வாக்கு போட்டிட்டாங்களோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அண்ணை, அப்ப கள்ள வாக்கு போட்டிட்டாங்களோ?!

இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

என்னால் வாக்களிக்க முடியவில்லை. எனக்கு முடிவுகள் தான் தெரிகிறது?

விசுகு ஐயா, நீங்கள் வாக்களிக்காமல் முடிவுகளை ஒரு தடவை, கவனிக்காமல், பார்த்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். ஒரு மெசேஜ் வந்திருக்கும், அதை நீங்கள் கவனிக்கவில்லை போல.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கட்சியாக பார்த்தேன். எவர் எவருடனும் கூட்டு என்று ஒன்றுமே புரியல. எதையோ மாறி அமுக்கி விட்டேன் போல...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

ஒவ்வொரு கட்சியாக பார்த்தேன். எவர் எவருடனும் கூட்டு என்று ஒன்றுமே புரியல. எதையோ மாறி அமுக்கி விட்டேன் போல...

👍..........

உங்கள் தெரிவை வெளியால் சொல்ல முடியும் என்றால், நீங்கள் சொன்னால், கோஷான் கணக்கில் சேர்த்துக்கொள்வார்...............

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஒவ்வொரு கட்சியாக பார்த்தேன். எவர் எவருடனும் கூட்டு என்று ஒன்றுமே புரியல. எதையோ மாறி அமுக்கி விட்டேன் போல...

என்ன குடித்தீர்கள்.??  பச்சை தண்ணீர்??   🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

ஒவ்வொரு கட்சியாக பார்த்தேன். எவர் எவருடனும் கூட்டு என்று ஒன்றுமே புரியல. எதையோ மாறி அமுக்கி விட்டேன் போல...

விசுகு… வாக்களிக்காமல் முடிவு தெரிய சந்தர்ப்பம் இல்லை.
உங்களை அறியாமல் எதையோ கிளிக் பண்ணி விட்டீர்கள் போலுள்ளது.
அனேகமாக… தமிழரசு அல்லது அர்ச்சுனா கட்சியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன்.

இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என் தாய்மொழிக்கோ எதிரானவன் இல்லை.

ஆனாலும், எவராலும் அங்கு எந்த விதமான அரசியல் தீர்வுகளும் வரும் என்று நான் நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மை மிக உறுதியாக எனக்குள் வளர்ந்து நிற்கின்றது. அவர்களில் எவரும் ஒரு கிராமம் தன்னும் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை, வியாசரின் கதையில் வருவது போலவே.

முழு இலங்கை மக்களும் ஒரு புதிய திசை நோக்கி நகர்வதற்கு இந்த மாற்றம் தேவை என்பதாலேயே இந்த தெரிவை நான் எடுத்தேன்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன்.

இங்கு களத்தில் இருக்கும் பெரும்பானமையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என் தாய்மொழிக்கோ எதிரானவன் இல்லை.

ஆனாலும், எவராலும் அங்கு எந்த விதமான அரசியல் தீர்வுகளும் வரும் என்று நான் நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மை மிக உறுதியாக எனக்குள் வளர்ந்து நிற்கின்றது. அவர்களில் எவரும் ஒரு கிராமம் தன்னும் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை, வியாசரின் கதையில் வருவது போலவே.

முழு இலங்கை மக்களும் ஒரு புதிய திசை நோக்கி நகர்வதற்கு இந்த மாற்றம் தேவை என்பதாலேயே இந்த தெரிவை நான் எடுத்தேன்.

ரசோதரன்… நீங்கள் கூறிய விளக்கம் எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ரசோதரன்… நீங்கள் கூறிய விளக்கம் எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதே.

மிக்கநன்றி அண்ணா.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

என்னால் வாக்களிக்க முடியவில்லை. எனக்கு முடிவுகள் தான் தெரிகிறது?

நீங்கள் வாக்களிக்க முன்பே - முடிவுகளை பார்க்கும் பொத்தானை அழுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன்.

அப்படி அழுத்த முன், இதை அழுத்தினால் இனி உங்களால் வாக்களிக்க முடியாது என்ற அறிப்புக்கும் ஓகே ஐ அழுத்தி இருப்பீர்கள்.

இனி உங்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் இல்லை என நினைக்கிறேன். இது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லை என நினைக்கிறேன்.

 🥲

26 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு… வாக்களிக்காமல் முடிவு தெரிய சந்தர்ப்பம் இல்லை.
உங்களை அறியாமல் எதையோ கிளிக் பண்ணி விட்டீர்கள் போலுள்ளது.
அனேகமாக… தமிழரசு அல்லது அர்ச்சுனா கட்சியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

இல்லை இருக்கிறது. 

வாக்களிக்காமல் show results ஐ அமத்தினால் நான் மேலே சொன்ன எச்சரிக்கையை தரும், அதையும் ஓகே பண்ணினால், முடிவுகளை காட்டும், ஆனால் பிறகு வாக்களிக்க முடியாது.

22 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன்.

இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என் தாய்மொழிக்கோ எதிரானவன் இல்லை.

ஆனாலும், எவராலும் அங்கு எந்த விதமான அரசியல் தீர்வுகளும் வரும் என்று நான் நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மை மிக உறுதியாக எனக்குள் வளர்ந்து நிற்கின்றது. அவர்களில் எவரும் ஒரு கிராமம் தன்னும் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை, வியாசரின் கதையில் வருவது போலவே.

முழு இலங்கை மக்களும் ஒரு புதிய திசை நோக்கி நகர்வதற்கு இந்த மாற்றம் தேவை என்பதாலேயே இந்த தெரிவை நான் எடுத்தேன்.

உங்கள் கருத்துத் தான் எனதும். ஆனாலும் என்னால் ஜேவிபி போன்ற ஒரு இனவாதக் கட்சிக்கு என் வாக்கை போட விருப்பம் இல்லை என்பதால் நான் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

ஊரில் இருந்திருந்தால் என் வாக்கை செல்லுபடியற்ற வாக்காக செலுத்தியிருப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

👍..........

உங்கள் தெரிவை வெளியால் சொல்ல முடியும் என்றால், நீங்கள் சொன்னால், கோஷான் கணக்கில் சேர்த்துக்கொள்வார்...............

அண்ணா வாக்களிதாரா இல்லையா என்பதே டவுட்டாக இருக்கும் போது, டபிள் அக்கவுண்டிங் ஆகிவிடுமோ என யோசிக்கிறேன்.

2 minutes ago, goshan_che said:

நீங்கள் வாக்களிக்க முன்பே - முடிவுகளை பார்க்கும் பொத்தானை அழுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன்.

அப்படி அழுத்த முன், இதை அழுத்தினால் இனி உங்களால் வாக்களிக்க முடியாது என்ற அறிப்புக்கும் ஓகே ஐ அழுத்தி இருப்பீர்கள்.

இனி உங்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் இல்லை என நினைக்கிறேன். இது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லை என நினைக்கிறேன்.

 🥲

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நீங்கள் வாக்களிக்க முன்பே - முடிவுகளை பார்க்கும் பொத்தானை அழுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன்.

அப்படி அழுத்த முன், இதை அழுத்தினால் இனி உங்களால் வாக்களிக்க முடியாது என்ற அறிப்புக்கும் ஓகே ஐ அழுத்தி இருப்பீர்கள்.

இனி உங்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் இல்லை என நினைக்கிறேன். இது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லை என நினைக்கிறேன்.

 🥲

இல்லை இருக்கிறது. 

வாக்களிக்காமல் show results ஐ அமத்தினால் நான் மேலே சொன்ன எச்சரிக்கையை தரும், அதையும் ஓகே பண்ணினால், முடிவுகளை காட்டும், ஆனால் பிறகு வாக்களிக்க முடியாது.

நான், அந்தத் தெரிவை கவனிக்கவில்லை.
தகவலுக்கு நன்றி கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன்.

அண்ணை, நீங்கள் உங்கள் பல்கலைத் தோழருக்கு வாக்களித்துள்ளீர்கள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன்.

இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என் தாய்மொழிக்கோ எதிரானவன் இல்லை.

ஆனாலும், எவராலும் அங்கு எந்த விதமான அரசியல் தீர்வுகளும் வரும் என்று நான் நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மை மிக உறுதியாக எனக்குள் வளர்ந்து நிற்கின்றது. அவர்களில் எவரும் ஒரு கிராமம் தன்னும் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை, வியாசரின் கதையில் வருவது போலவே.

முழு இலங்கை மக்களும் ஒரு புதிய திசை நோக்கி நகர்வதற்கு இந்த மாற்றம் தேவை என்பதாலேயே இந்த தெரிவை நான் எடுத்தேன்.

தலைக்கு தில்லுத்தான். திசை காட்டிக்கு போட்டதும் இல்லாமல் விளக்கம் வேற குடுக்கிறியள்😀.

இதை இன்னும் எத்தனை ஆண்டுகள் கருத்துகளத்தில் உங்களை எதிர்க்க பாவிப்பார்களோ🤣.

நானும் கிட்டதட்ட இதே நிலைதான்.

அநேகமாக அடுத்த தேர்தலில் என்பிபி சொன்னதில் 50% செய்தால்,  நானும் கட்டாயம் இப்படித்தான் போடுவேன்.

—————

நாங்கள் பரம்பரை திமுக 

இப்படி பல தமிழ் நாட்டு மக்கள் சொல்வதை நாம் விளங்க கஸ்டப்பட்டுள்ளோம்.

ஆனால்….

 நிழலியால் @நிழலி தமிரசுக்கு, குசா அண்ணையால் @குமாரசாமிபொன்னம்பலம் கட்சிக்கு போடாமல் வெளியே போக முடியவில்லை.

நானும் எதுவுமே தெரியாத பொடியள் மீது ரிஸ்க் எடுக்கிறேன் - அவர்கள் தமிழ் தேசிய அரசியல் செய்வார்கள் என நம்பி.

அதே phenomena தான் தமிழ்நாட்டிலும்.

#ஏதோ ஒன்று

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை வாக்களிக்காதோருக்கு

ஆரம்பத்தில் ஒரு கட்சி முந்துவதாக தெரிந்தாலும்….

தற்போதைய நிலையில் சகல கட்சிகளும் 40% க்கு கீழேதான்.

ஆகவே….

All to play for …..

வாக்கை செலுத்தவும்.

வாக்களிக்க முன் முடிவுகளை பார்க்க வேண்டாம். உங்களால் வாக்களிக்க முடியாது போய்விடும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.