Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு 61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

Poll closed on 11/14/24 at 11:59

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள்.

வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும்.

இது இரகசிய வாக்கெடுப்பு. 

14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.

Edited by goshan_che

  • Replies 223
  • Views 11.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

  • ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

  • ரசோதரன்
    ரசோதரன்

    என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு வாக்களித்தேன் என்பதை சொல்லலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 3 வேட்பாளருக்கு வக்களிக்கலாம் என்றது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் 3 வேட்பாளருக்கு வக்களிக்கலாம் என்றது சரியா?

முதலில் ஒரு கட்சியை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும். பிறகு அக்கட்சியில் அதிக பட்சம் 3 பேரை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும். 

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கந்தப்பு said:

முதலில் ஒரு கட்சியை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும். பிறகு அக்கட்சியில் 3 பேரை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும். 

தகவலுக்கு நன்றி. ஒரு கட்சியை தெரிவு செய்துவிட்டு விரும்பினால் வேறு வேறு கட்சிகளில் 3 பேருக்கு வாக்களிக்லாம் என்று தவறாக நினைத்து விட்டேன்..அர்ச்சுனா கட்சியில் அர்ச்சுனாவுக்கு   இல்லை வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தகவலுக்கு நன்றி. ஒரு கட்சியை தெரிவு செய்துவிட்டு விரும்பினால் வேறு வேறு கட்சிகளில் 3 பேருக்கு வாக்களிக்லாம் என்று தவறாக நினைத்து விட்டேன்..அர்ச்சுனா கட்சியில் அர்ச்சுனாவுக்கு   இல்லை வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

இல்லை. முதலில் கட்சிக்கு வாக்கு.

பின்னர் நீங்கள் வாக்களித்த கட்சியில் கேட்க்கும் 3 பேருக்கு விருப்பு வாக்கை அளிக்கலாம்.

கட்சி எண்டால் கட்சிகள் மட்டும் அல்ல. சுயேற்சை குழுக்களும்தான்.

சுயேற்சை குழு 17 க்கு போட்டு விட்டு, பின் அதில் அருச்சுனா அல்லாத 3 வருக்கு போடலாம்.

நான் இதில் கட்சிக்கான வாக்கை மட்டுமே கருதுகிறேன். தனி நபர்களுக்கான விருப்பு வாக்கை  அல்ல. எனவே இதுதான் உங்கள் நிலைப்பாடு எனில் சுயேற்சை குழு  அருச்சுனா வுக்கே நீங்கள் டிக் அடிக்க வேண்டும்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

யாருக்கு வாக்களித்தேன் என்பதை சொல்லலாமா?

ஓம். அவரவர் விருப்பம். நான் இன்னும் வாக்களிக்கவில்லை.

வாக்களிக்கும் போது சொல்லுவேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:
2 hours ago, ஈழப்பிரியன் said:

யாருக்கு வாக்களித்தேன் என்பதை சொல்லலாமா?

ஓம். அவரவர் விருப்பம். நான் இன்னும் வாக்களிக்கவில்லை

நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தரம் வாக்கு போடலாமே ??? அல்லது கள்ள வாக்கு போடலாமா.  ?? 🤣🤣🤣.    

1 minute ago, ஈழப்பிரியன் said:

நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன்.

ஏன் ?????? 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அர்ச்சுனா கட்சியில் அர்ச்சுனாவுக்கு   இல்லை வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது

ஊசிக்கு நேரே புள்ளடி போட்டுவிட்டு

அர்ச்சுனாவைத் தவிர்த்து வேறு மூவருக்கு வாக்கைப் போடலாம்.

3 minutes ago, Kandiah57 said:

இரண்டு தரம் வாக்கு போடலாமே ??? அல்லது கள்ள வாக்கு போடலாமா.  ?? 🤣🤣🤣.    

எனக்கு இது பிடிக்காதென்றபடியால் முயற்சி செய்யவில்லை.

7 minutes ago, Kandiah57 said:

.    

ஏன் ?????? 

உள்ளவர்களில் பரவாயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன்.

அப்ப @புலவர் உடன் மினிமம் 2 வாக்கு கரண்டி🤣

12 minutes ago, Kandiah57 said:

இரண்டு தரம் வாக்கு போடலாமே ??? அல்லது கள்ள வாக்கு போடலாமா.  ?? 🤣🤣🤣.  

கள்ள ஐடி(கள்) வைத்திருப்போர் ஐடிக்கு ஒரு வாக்கு போடலாம்.

#குத்துங்க எசமான், குத்துங்க🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:
12 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன்.

அப்ப @புலவர் உடன் மினிமம் 2 வாக்கு கரண்டி

ஏற்கனவே 7 வாக்குகள் பெற்று வீறுநடை போடுகிறது.

உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ் தேசிய முன்னணிக்கே போடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே 7 வாக்குகள் பெற்று வீறுநடை போடுகிறது.

உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ் தேசிய முன்னணிக்கே போடுங்கள்.

வாக்கு சாவடியில் நின்று பிரச்சாரம் செய்தல் ஆகாது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை. முதலில் கட்சிக்கு வாக்கு.

பின்னர் நீங்கள் வாக்களித்த கட்சியில் கேட்க்கும் 3 பேருக்கு விருப்பு வாக்கை அளிக்கலாம்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஊசிக்கு நேரே புள்ளடி போட்டுவிட்டு

அர்ச்சுனாவைத் தவிர்த்து வேறு மூவருக்கு வாக்கைப் போடலாம்.

ஓம் விளங்கியது👍

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

வாக்கு சாவடியில் நின்று பிரச்சாரம் செய்தல் ஆகாது🤣.

மக்களே எமது கட்சியின் ஆதரவுகளைப் பார்த்து பொய்க் குற்றம் சுமத்துகிறார்கள்.

என்னை கைது செய்தாலும் நீங்கள் குழம்பாமல் சாரைசாரையாக வாக்களித்துக் கொண்டே இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அனுராவுக்கு வாக்களித்துள்ளேன்.அனுரா யார் என்று தெரிய முன்பே தமிழ் கட்ச்சிகள் அமைச்சரவையில் சேராத கோபத்தில் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.பிகு-எனக்கு இங்கு வாக்குரிமை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் அனுராவுக்கு வாக்களித்துள்ளேன்.அனுரா யார் என்று தெரிய முன்பே தமிழ் கட்ச்சிகள் அமைச்சரவையில் சேராத கோபத்தில் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.பிகு-எனக்கு இங்கு வாக்குரிமை உள்ளது.

நன்றி  வாழ்த்துக்கள்  சுவைபிரியன்.   நானும் அனுரவுக்கு. வாக்களிப்பு செய்தேன்   காரணம் 

70 ஆண்டுகளுக்கு மேலாக   பேச்சு  உணர்ச்சிகளுடன் பேசும் தமிழர்களை பாராளுமன்றம் அனுப்பி   எங்களது இனத்தையே அளித்து சிறுபான்மையினர் ஆகிய நாம்  மேலும் சிறுபான்மையினர் ஆகியது தான்  மிச்சம்   

இலங்கையில் சிங்களவனுடம். கதைக்கமால். தீர்வு கிடையாது   எனவே… இடைத்தரகர்களின்றி   நேரடியாக கதைப்போம் 🙏. அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு 

3 hours ago, goshan_che said:

அப்ப @புலவர் உடன் மினிமம் 2 வாக்கு கரண்டி🤣

கள்ள ஐடி(கள்) வைத்திருப்போர் ஐடிக்கு ஒரு வாக்கு போடலாம்.

#குத்துங்க எசமான், குத்துங்க🤣

சும்மா பகிடிக்கு கேட்டேன்   என்னிடத்தில் கள்ள. ஐடியாக்கள் இல்லை 🙏.  தலைவரே    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

மக்களே எமது கட்சியின் ஆதரவுகளைப் பார்த்து பொய்க் குற்றம் சுமத்துகிறார்கள்.

என்னை கைது செய்தாலும் நீங்கள் குழம்பாமல் சாரைசாரையாக வாக்களித்துக் கொண்டே இருங்கள்.

அண்ணன் அடலேறு ஈழப்பிரியன் வாழ்க!

4 hours ago, சுவைப்பிரியன் said:

நான் அனுராவுக்கு வாக்களித்துள்ளேன்.அனுரா யார் என்று தெரிய முன்பே தமிழ் கட்ச்சிகள் அமைச்சரவையில் சேராத கோபத்தில் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.பிகு-எனக்கு இங்கு வாக்குரிமை உள்ளது.

இப்படி பலர் சிந்தித்தால் - அனுர கட்சி வரவால் ஏனைய தமிழ் தேசியம் அல்லாதா கட்சிகளுக்கும் பாதிப்பு வரும் போல இருக்கிறது.

3 hours ago, Kandiah57 said:

சும்மா பகிடிக்கு கேட்டேன்   என்னிடத்தில் கள்ள. ஐடியாக்கள் இல்லை 🙏.  தலைவரே  

ஒ…நான் இதுவரை கந்தையா57 என்பதே ஒரு கள்ள ஐடி என்றல்லவா நினைத்தேன் 🤣 (பகிடிக்கு). 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh,  @செவ்வியன், @nirmalan

அன்பான யாழ்.கள உறவுகளே... 
மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே  சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. 

ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து  வாக்களிக்கப் போகும்  கட்சிக்கு முன்னே  உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி  வாக்களிக்க முடியும். 

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள  ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள  உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன்.

8 hours ago, goshan_che said:

அப்ப @புலவர் உடன் மினிமம் 2 வாக்கு கரண்டி🤣

கோஷான் சொன்னபடியே வாக்களித்துள்ளேன்.2010 இல் இருந்து தளம்பாது ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறேன்.கட்சி தடம்மாறினால் வேறு தெரிவுபற்றிச் சிந்திப்பேன். தற்போதுவரை ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும்பொழுது ததேமுன்னனியே ஓரளவு தமிழ்த்தேசியக் கொண்கையில் தடம்புரளாது பயணிக்கிறது. இந்தியா தொடர்பாக  அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh,  @செவ்வியன்

அன்பான யாழ்.கள உறவுகளே... 
மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே  சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. 

ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து  வாக்களிக்கப் போகும்  கட்சிக்கு முன்னே  உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி  வாக்களிக்க முடியும். 

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள  ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள  உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂

கேட்டதும் உடனே செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️🙏.

———-

யாழில் ஒரு விடயத்தை அனைவர் கண்ணிலும் படும்படியாக செய்ய, இன்றே நாடுங்கள் @தமிழ் சிறி!

இவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது (என்று சொல்கிறார்🤣). 

1 minute ago, புலவர் said:

நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன்.

கோஷான் சொன்னபடியே வாக்களித்துள்ளேன்.2010 இல் இருந்து தளம்பாது ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறேன்.கட்சி தடம்மாறினால் வேறு தெரிவுபற்றிச் சிந்திப்பேன். தற்போதுவரை ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும்பொழுது ததேமுன்னனியே ஓரளவு தமிழ்த்தேசியக் கொண்கையில் தடம்புரளாது பயணிக்கிறது. இந்தியா தொடர்பாக  அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்.

அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பால் உங்கள் ஸ்திரத்தன்மைக்கு ஒரு சபாஷ்👍.

  • கருத்துக்கள உறவுகள்

இது  கருத்துக்கணிப்பா கோஷான். இனிவருபவர்கள் எதுக்கு வம்பு என்று மன்னனியில் இருக்கும் கட்சியான முன்னணிக்கே வாக்களிக்கப் கபாகிறார்கள். முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளாத மாதிரி வைத்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

Dheena Ruffian

வாக்களித்துவிட்டேன்.
அடிச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

இது  கருத்துக்கணிப்பா கோஷான். இனிவருபவர்கள் எதுக்கு வம்பு என்று மன்னனியில் இருக்கும் கட்சியான முன்னணிக்கே வாக்களிக்கப் கபாகிறார்கள். முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளாத மாதிரி வைத்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

8 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே 7 வாக்குகள் பெற்று வீறுநடை போடுகிறது.

உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ் தேசிய முன்னணிக்கே போடுங்கள்.

வாக்களிக்க முன் எவருக்கும் முடிவு தெரியாது புலவர்.
வாக்களித்த பின்பே முடிவை காட்டும்.

ஆனால்... மேலே ஈழப்பிரியன் எழுதிய கருத்து, வாசகர்களை ஒரு பக்கம் சாய வைக்கலாம்  
இதனை தற்காலிகமாக மறைத்து வைத்திருப்பது நல்லது என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

இது  கருத்துக்கணிப்பா கோஷான். இனிவருபவர்கள் எதுக்கு வம்பு என்று மன்னனியில் இருக்கும் கட்சியான முன்னணிக்கே வாக்களிக்கப் கபாகிறார்கள். முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளாத மாதிரி வைத்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

முடிந்தளவு அப்படித்தான் முயற்சித்தேன்.

ஆனால் நீங்கள் சொல்லும் போல் ஒரு தெரிவு இருக்கவில்லை.

யாழுக்கு வருவோர் பெரும்பாலும் தேசிய உணர்வுள்ளோர்தானே? ஆகவே இந்த முறை தமிழரசு இல்லை எனும் போது முண்ணணிக்கு போடுகிறார்கள் என நினைக்கிறேன்.

Just now, தமிழ் சிறி said:

வாக்களிக்க முன் எவருக்கும் முடிவு தெரியாது புலவர்.
வாக்களித்த பின்பே முடிவை காட்டும்.

ஆனால்... மேலே ஈழப்பிரியன் எழுதிய கருத்து, வாசகர்களை ஒரு பக்கம் சாய வைக்கலாம்  
இதனை தற்காலிகமாக மறைத்து வைத்திருப்பது நல்லது என நினைக்கின்றேன்.

@ நியானி - நிர்வாகம் சரி எனப்பட்டால் செய்வதில் எனக்கு ஒரு முரணும் இல்லை.

——-/

யாழ்கள தெரிவு - மக்கள் தெரிவு ஒப்பீடு எப்படி இருக்கும் என பார்க்க ஆவலாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மனது வைத்து எந்த தேர்தல் கட்சிகளிலும் துளிகூட நாட்டமில்லை.

தமிழ்சிறியின்  அழைப்புக்காகவும் கோஷானின் கருத்துக்கணிப்புக்காகவும் மதிப்பு கொடுத்து ஒரு வாக்கை தட்டிவிடலாம் என்றிருக்கிறேன்.

இந்த வாக்களிப்பு தெரிவில் தேர்தலை புறக்கணிக்கிறோம் அல்லது இந்த தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை  என்றொரு தெரிவை ஏன் நீங்கள் வைக்கவில்லை கோஷான்? ஏனெனில் எந்த தேர்தலிலும் அந்த முடிவை எடுக்கும் கணிசமான பிரிவினர் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.