Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? 51 members have voted

  1. 1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

    • ஆம்
      24
    • இல்லை
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, satan said:

சுமந்திரன் அப்படி ஒரு செயல் வீரன், சட்டத்தரணி என்றால்; அவர் வந்தவுடனேயே தீர்வு எடுத்து தந்திருக்க வேண்டுமே? இப்பொழுது விரட்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லையே, அனுராவை விட்டு சஜித்துக்கு வாக்களிக்கும்படி கேட்டிருக்கவும் வாய்ப்பில்லையே? அதுதானே அனுரா, இவரை வெறுக்க காரணம். நாங்கள் பொது வேட்பாளரை ஆதரித்த போது, எந்த முகத்தோடு சிங்களத்தோடு பேசுவது என்று கேட்டவர்கள், எந்த முகத்தோடு பிரதம மந்திரி பதவி அழைப்பிதழுக்கு காத்திருந்தார்?

உண்மை நன்றி (பச்சை புள்ளி கைவசம் இல்லை)

16 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் 2009 இல் நடந்தது இனப்படுகொலை என்று நிரூபிக்கமுடியாது என்பதில் அவரின் சட்ட அறிவைக்கொண்டு, எதுவித சமரசங்களுமின்றி உறுதியாக இருப்பவர்!

அதுபோல சிங்கள அரச அதிகாரத்தில் உள்ளவர்களுடன் பேசி ஒரு நியாயமான தீர்வை தமிழருக்குப் பெற்றுத்தரலாம் என்பதிலும் நம்பிக்கை தளராதவர்!

ஒன்றுமே இல்லாத தமிழர்களுக்கு நியாயமான நிலைத்து நிற்கக்கூடிய தீர்வை சுமந்திரன் தனது சட்ட நிபுணங்களைப் பாவித்து பெற்றுக்கொடுத்தால் நல்லதுதானே!

குறிப்பு: பல சுத்துமாத்துகளையும், குழிபறிப்புக்களையும், தகிடுதித்தங்களையும் பாவித்தும் சுமந்திரன் மக்களால் தோற்கடிக்கப்பட்டதில் சந்தோஷமே.😃 ஆனால், தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு எப்படி முடிவு எடுக்கவேண்டும் என்பதை சுமந்திரனே முடிவெடுப்பார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்! எனவே, சுமந்திரனின் முடிவுக்கு இணங்க, பொதுக்குழுவின் தீர்மானத்துடன் அவர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக அதிக வாய்ப்பு இருக்கின்றது!

உண்மை நன்றி (பச்சை புள்ளி கைவசம் இல்லை)

  • Replies 249
  • Views 14.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commite

  • உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!!  என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உண்மையில் இந்த தேர்தலில் மக்களின் கோபமே (இலங்கை முழுவதும்)/இந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள் மீது தான். இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை கொண்டாடுவதாக சொல்பவர்கள் முதலில் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

100% உண்மை விசுகர். அது புரியாமல் இன்னும் 1970´ம் ஆண்டுகளின் அரசியலை 
கள யதார்த்தம் புரியாமல்...  செய்யும் முழு முட்டாள் சம்பந்தன், சுமந்திரன் போன்ற  
அரசியல்வாதிகளின் செயலால்... நன் மதிப்புடன் இருந்த தமிழரசு கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

அனுர கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணமே...
அவர்கள் சமூக மட்டத்தில் இருந்து... பல்வேறு மக்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியதுதான்.
ஆனால்.... இவர்களோ, தமக்கு.. காக்கா பிடித்து, குழை அடிப்பவர்களை தேர்வு செய்து நிறுத்தி... தமக்கும் தோல்வி ஏற்பட வழி சமைத்த பைத்தியக்காரர்கள்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழரசு கட்சியின்  பொதுக்குழுவில்,  சுமந்திரனின்  ஆளுமை தான்....
தமிழரசு கட்சியை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. 
"உள்ளதும் போச்சுடா... நொள்ளைக் கண்ணா" நிலைமை.   

நெல்லு விதைச்சு உழுது பயிர் முளைச்ச வயலுக்குள்ளையே  திருப்பி உழுது காட்டின வீர தீரர் நம்ம சுமந்திரர். 😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசு கட்சியின் தேசியப் பட்டியலில் பெண்ணா? முறியடிக்கும் முயற்சியில் சுமந்திரன்!

Vhg நவம்பர் 16, 2024
1000376644.jpg

 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வெற்றிடமாக உள்ள சட்ட இடைவெளியை நிரப்ப அந்த தேசியப்பட்டியல் சுமந்திரனுக்குதான் வழங்கப்பட வேண்டும் எனவும் பலரும் கூறிவருகின்றனர்.

தேசிய பட்டியலை பெறுவதற்கு உரிய கணிசமான வாக்குகளை இம்முறை மட்டக்களப்பு மாவட்டமே பெற்றுள்ளது. எனவே அந்த தேசிய பட்டியலை மட்டக்களப்புக்கு வழங்குவதே முறையாகும் .

சுமந்திரன் எதிர்பார்ப்பு

இம்முறை பாராளுமன்றம் தெளிவாகியுள்ள ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆண்களாக உள்ள நிலையில், தேசியபட்டியல் தெரிவை பெண்ணுக்கு வழங்குவதே சிறந்தது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அந்தவகையில் எண்ணிக்கை அடிப்படையில் மட்டக்களப்பிற்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாலும் , யாழ்ப்பாணத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருப்பதாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேர்தலில் போட்டியிடாத ஒரு ஆளுமையுள்ள பெண்ணிற்கு வழங்குவதும் சிறப்பாக இருக்கும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தேசியபட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என கூறிய சுமந்திரன் , கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்பட்டவன் என மறைமுகமாக தனது எதிர்பார்ப்பை கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.battinatham.com/2024/11/blog-post_359.html

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் . ....: இன்றைய அரசியலுக்கு தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்த ஒருவர் சரியாக இருக்கலாம் . ......ஆனால் நடைமுறையில் அது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் ........அதைத்தான் இப்பொழுது அவர் சார்ந்த கட்சி அனுபவிக்குது . ...... அதனால் அவர் அங்கு வருவதை நான் விரும்பவில்லை . ........!

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

100% உண்மை விசுகர். அது புரியாமல் இன்னும் 1970´ம் ஆண்டுகளின் அரசியலை 
கள யதார்த்தம் புரியாமல்...  செய்யும் முழு முட்டாள் சம்பந்தன், சுமந்திரன் போன்ற  
அரசியல்வாதிகளின் செயலால்... நன் மதிப்புடன் இருந்த தமிழரசு கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.   

மாற்றத்தை ஆதரிக்கிறோம் என்பவர்கள் தான் சுமந்திரனின் இந்த மீள் வரவையும் எதிர் பார்க்கிறார்கள். கபடமான பேர்வழிகளின் போக்கு இது தான். 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் பாராளுமன்றம் போவதற்கான யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவும் எதிர்ப்பும் இறுக்கமாகப் போகின்றது! இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை😮🫨

2 minutes ago, விசுகு said:

மாற்றத்தை ஆதரிக்கிறோம் என்பவர்கள் தான் சுமந்திரனின் இந்த மீள் வரவையும் எதிர் பார்க்கிறார்கள். கபடமான பேர்வழிகளின் போக்கு இது தான். 

சுமந்திரனின் மீள்வரவு எதிர்ப்புக்களையும் மீறி நடப்பது அவர் கையில்தான் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அவர் தேசியப்பட்டியல் ஊடாகப் போகமாட்டேன் என்று உறுதியான சமிக்ஞை எதனையும் காட்டாதது அவர் போகவிரும்புகின்றார் என்றுதான் உணர்த்துகின்றது. சிறிதரன் உறுதியைக் காட்ட சந்தர்ப்பம் இது. ஆனால் கட்சிமேலான வழக்கு தலைக்கு மேல் கத்தியாக இருக்கு நிலையில் சுமந்திரனின் தந்திரங்களுக்கு ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத நிலையில்தான் உள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்

21-6162c89626e0c.webp

21-6162c896b9426.webp

FhYO3tUagAIcwod.jpg

நெல் முளைத்த... வயலை உழுத கையுடன், பசளையும் தூவிய அதி நவீன விவசாயி.
இந்த ரெக்னிக்கை... நாங்கள் ஜேர்மனியிலும் அறிமுகப் படுத்த வேணும். 😂

இவர்  எத்தனையோ...  குறளி வித்தை காட்டியும், 
மக்கள் அதனை கோமாளிக் கூத்தாக எடுத்து, 
தேர்தலில் நல்ல பாடம் புகட்டி, வீட்டிற்கு  அனுப்பி உள்ளார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

மாற்றத்தை ஆதரிக்கிறோம் என்பவர்கள் தான் சுமந்திரனின் இந்த மீள் வரவையும் எதிர் பார்க்கிறார்கள். கபடமான பேர்வழிகளின் போக்கு இது தான். 

தனக்கு தனக்கு என்றால், சுளகு... படக்கு படக்கு என்று அடிக்குமாம். animiertes-gefuehl-smilies-bild-0234.gif
ஊருக்குத்தான் உபதேசம். உனக்கில்லையடி கண்ணே.... என்றானாம். animiertes-gefuehl-smilies-bild-0017

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

நெல் முளைத்த... வயலை உழுத கையுடன், பசளையும் தூவிய அதி நவீன விவசாயி.

இந்த நவீன விவசாயி மாதிரி மலையகத்தில் வடிவேல் சுரேஷின் மகன் பிரதீஷ் கொழுந்து பறிப்பதில் வல்லவர்.😃

56 ஆவது செக்கனில் திரும்பவும் பாருங்கள்😂🤣

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் பாராளுமன்றம் போவதற்கான யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவும் எதிர்ப்பும் இறுக்கமாகப் போகின்றது! இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை😮🫨

தலைப்பின் கேள்வி: 
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? 

ஆம்.

ஆனால், சுத்துமாத்து செய்து... மத்திய குழுவை மிரட்டி, Black mail பண்ணி...  உள்ளே போவார் என்பதே பலரது கருத்து. 

அது... சுமந்திரன் பாராளுமன்றம் போகவேண்டும் என்று விரும்பி போட்ட வாக்குகள் அல்ல. அவரின் சுத்துமாத்துக்கு கிடைத்தவை. 😂

25 minutes ago, கிருபன் said:

இந்த நவீன விவசாயி மாதிரி மலையகத்தில் வடிவேல் சுரேஷின் மகன் பிரதீஷ் கொழுந்து பறிப்பதில் வல்லவர்.😃

56 ஆவது செக்கனில் திரும்பவும் பாருங்கள்😂🤣

வடக்கிற்கு ஒன்று என்றால்... மலையகத்திலும் ஒன்று. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

சுமந்திரன் . ....: இன்றைய அரசியலுக்கு தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்த ஒருவர் சரியாக இருக்கலாம்

என்னது! அரசியலில் சூழ்ச்சியும் தந்திரமும் நிறைந்தவர் சுமந்திரனா? அவர் தமிழ் மக்களை, அவர்களின் மூச்சான தேசியத்தை உடைப்பதிலும் முழு மூச்சாக சூழ்ச்சியும் செய்தார், தந்திரமும் செய்தார் ஒழிய அரசியலில் மக்களுக்கு எதுவும் சாதிக்கவில்லை. அதனாலேயே இன்று அரசியலில் கேள்விக்குறியாக இருக்கிறார். பேச்சாளர் பதவியை கைவிடாமல் வைத்திருப்பது, தனக்கு வரும் அவமானங்களை தடுப்பதற்கு, ஊடக சந்திப்புகளை நடத்தி மற்றவர்களை பேசவிடாமல் தடுப்பதற்கே. போனதடவை மாவையர் தோற்றபோது என்ன நடந்தது என்பதை கொஞ்சம் மனக்கண் கொண்டுவந்து பாருங்கள். மாவையரை அறியாமல், எத்தனை அறிக்கை விட்டார், எத்தனை ஊடக சந்திப்புகளை நடத்தினார், முடிவுகளை எடுத்தார், நியமனங்களை செய்தார். இன்று, தான் எவ்வாறு செயற்படுகிறார்? அவர் யாரையும் எதையும் மதிப்பதில்லை, தன்னிச்சைப்படியே நடப்பார். இது ஒன்றும் அவரது சொந்த வீடல்ல, தான் நினைத்தபடி நடந்து கொள்வதற்கு. தன்னாலேயே கட்சி இவ்வளவு பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளது, அதிலும் இவருக்கு மீண்டெழ முடியாத அவமானம், தானே தேடிக்கொண்டது. இருந்தாலும் அதை எப்படி மாற்றி கதைவிடுகிறார் எனப் பாருங்கள். இதெல்லாம் பிறவிக்குணம். இவரை மாற்ற முடியாது, நாம் மாறவேண்டும். இவரை விட்டு கட்சியை மீட்டெடுக்க வேண்டும். இப்படியெல்லாம் அதுவும் அரசியலில் வெட்கக்கேடு. சர்வதேசமே, அட இவரிடமா பேசினோம் நாம். என நினைப்பார்கள் நிஞாய தர்மம் இல்லாதவர்.            

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

இந்த நவீன விவசாயி மாதிரி மலையகத்தில் வடிவேல் சுரேஷின் மகன் பிரதீஷ் கொழுந்து பறிப்பதில் வல்லவர்.😃

56 ஆவது செக்கனில் திரும்பவும் பாருங்கள்😂🤣

வாக்கு வாங்கு மட்டும் மக்களின் கழிவுகளையும் எடுப்பார்கள் போலிருக்கே. என்னமா நடிக்கிறார்கள்? மக்களை ஏமாற்றுவதும் கொள்ளை அடிப்பதும் ஒரு கலை இவர்களுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சுமந்திரன் பாராளுமன்றம் போவதற்கான யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவும் எதிர்ப்பும் இறுக்கமாகப் போகின்றது! இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை😮🫨

 

பதில் ரொம்ப சுலபம் 

புலம்பெயர் தமிழர்களை வீழ்த்த எந்த பேயையும் ஆதரிப்போம். கூட்டு சேருவோம். 

ஆனாலும் நாங்களும் புலம்பெயர் சிங்கள தேசியர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என்றே வாக்களித்தேன். ஆனால் சும் எல்லா வழிகளாலும் உள் நுளைவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

சுலபமாக  வெற்றி பெற்றுவிடலாம் தன்னை விட்டால் தமிழர்களுக்கு ஆட்கள் இல்லை என்ற நினைப்பில் அகங்காரத்துடன் கூறிய வார்த்தைகள் இன்று அவருக்கும் அவரது அல்லக்கைகளுக்கும் தாயக புலம்பெயர் பலாக்காய்களுக்கும் ஆப்பு செருகப்பட்டுள்ளது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நியாயம் said:

1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

வினாவில் திருத்தம் வேண்டும். செல்ல வேண்டுமா அல்லது செல்லக்கூடாதா என கேட்கலாம்.

நான் நினைக்கிறேன் இரண்டும் வேறு வேறானவை, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நபர்கள் தேர்தலில் பங்கு பற்றாத (சாதாரண அரசியலை நாடாதவர்கள்) ஆனால் அவர்களிடம் உள்ள ஆற்றல்கள் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படுத்துவதால் அதிக நன்மை கிடைக்கும் எனும் பட்சத்தில் தேசிய பட்டியலிலூடாக துறைசார் நிபுணர்களின் சேவையினை கோரும் முயற்சி, இங்கு சுமந்திரன் தேர்தலில் தோல்வியுற்ற ஒரு சாதாரண வழக்கறிஞ்சர் அவரை விட சிறந்த பலர் உள்ள நிலையில் அவர் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் போகவேண்டுமா எனும் கேள்வியே எழாது.

அத்துடன் சுமந்திரன் பாராளுமன்றம் செல்லக்கூடாது என மக்கள் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டார்கள், அதனால் அதனை மீளவும் கருத்து கணிப்பிற்குட்படுத்துவது தேவையற்றது என கருதுகிறேன்.

இங்கு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லமாட்டேன் என கூறும் சுமந்திரன் தேசிய பட்டியலில் செல்வாரா என ஒரு நிகழ்தகவினை ஆய்வுப்படுத்தும் கருத்துக்கணிப்பாக இது இருக்கும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

இல்லை என்றே வாக்களித்தேன். ஆனால் சும் எல்லா வழிகளாலும் உள் நுளைவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

சுலபமாக  வெற்றி பெற்றுவிடலாம் தன்னை விட்டால் தமிழர்களுக்கு ஆட்கள் இல்லை என்ற நினைப்பில் அகங்காரத்துடன் கூறிய வார்த்தைகள் இன்று அவருக்கும் அவரது அல்லக்கைகளுக்கும் தாயக புலம்பெயர் பலாக்காய்களுக்கும் ஆப்பு செருகப்பட்டுள்ளது.

 

சுமந்திரன் தமிழரின் அரசியலை பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது என்று நீண்டகாலமாகவே  விரும்பினாலும் “ஆம்” என்றே வாக்களித்தேன்!

அவர் எல்லா வழிகளிலும் பாராளுமன்றம் போக எத்தனிப்பதாலும் பொதுக்குழு அவருக்கு சார்பானவர்களின் பெரும்பான்மையுடன் உள்ளதாலும் 👇🏿இந்தக் கேள்விக்கு “ஆம்” என்பதே அதிகம் பொருந்தும்😃

 திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

அட இந்த சுடலை வைரவர் எப்ப இதுக்கிள்ளை வந்தவர்...

"டுமீல் " கொஸ்ஸ்ரி அனுரவிற்கு கோல் எடுத்திருப்பார்கள். எதுக்கும் ஒரு தடவை உங்கள் முட்டையடி கோஸ்ரி தலீவர கேட்டுப்பாருங்கோ.

🤣

9 hours ago, MEERA said:

உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்…

உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

உங்கள் "டுமீல்" ஸோஸ்ரி யினரின் வியாபார டமில் தேசியம்தான் உருவப்பட்டுள்ளது.  போய் நல்லூர் கந்தனிடம் பறவைக் காவடி எடுத்து உங்கள் பாவங்களைக் கழுவுங்கோ,...🤣

வைதான் பாரு யாழ்ப்பாணீஸ் புலம்பெயர்ஸுக்கு ஆப்பு,.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

"டுமீல் " கொஸ்ஸ்ரி அனுரவிற்கு கோல் எடுத்திருப்பார்கள். எதுக்கும் ஒரு தடவை உங்கள் முட்டையடி கோஸ்ரி தலீவர கேட்டுப்பாருங்கோ.

🤣

அட நம்ம சுடலை வைரவர் ...அனுரவிடவும் கொமிசனுக்கு தெரிவாகிவிட்டரோ...இன்னுமொரு 5 வருசத்துக்கு உங்க காட்டிலை மழைசார்...உங்களுக்கு வெட்கம் மானம் ரோசமே கிடையாதா சார்..அடிக்கடி மடைமாற்றிக்கொண்டே இருக்கிறியள்...அட உங்க உடம்பிலும் சும்மோட ரத்தம்தானே ஓடுது...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

அட நம்ம சுடலை வைரவர் ...அனுரவிடவும் கொமிசனுக்கு தெரிவாகிவிட்டரோ...இன்னுமொரு 5 வருசத்துக்கு உங்க காட்டிலை மழைசார்...உங்களுக்கு வெட்கம் மானம் ரோசமே கிடையாதா சார்..அடிக்கடி மடைமாற்றிக்கொண்டே இருக்கிறியள்...அட உங்க உடம்பிலும் சும்மோட ரத்தம்தானே ஓடுது...

சும்மா ஜோக்கடிக்காதேயுங்கோ அல்வாயன். ரிக்கற் போட்டாயிற்றா ? எப்ப பிளைட்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

 

🤣

உங்கள் "டுமீல்" ஸோஸ்ரி யினரின் வியாபார டமில் தேசியம்தான் உருவப்பட்டுள்ளது.  போய் நல்லூர் கந்தனிடம் பறவைக் காவடி எடுத்து உங்கள் பாவங்களைக் கழுவுங்கோ,...🤣

வைதான் பாரு யாழ்ப்பாணீஸ் புலம்பெயர்ஸுக்கு ஆப்பு,.. 🤣

1. புலம்பெயர்ந்தவர்கள் யாரின் பின் நின்றார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை.

2. தாயகத்தில் தமிழ் தேசியமே இல்லை என்று வாதிட்ட தாங்கள் இன்று வியாபார தமிழ் தேசியம் என்று குத்துக் கரணம் அடித்துள்ளீர்கள்.

3. இங்கு குறூசோ என்பவர் தான் கிறீஸ்தவன் ஆதலால் கிறீஸ்தவரனா சுமந்திரனை ஆதரிக்கிறேன் என்னைப் போலவே எல்லா கிறீஸ்தவர்களும் ஆதரிப்பார்கள் என எழுதியிருந்தார். இன்று 20,000 தன்மான கிறீஸ்தவர்கள் கூட சும்மின் பின்னால் இல்லை. 

4. நல்லூருக்கு காவடி எடுப்பது சைவர்கள் சம்பந்தப்பட்டது அதற்குள் மூக்கை நுழைக்காது இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சும்மா ஜோக்கடிக்காதேயுங்கோ அல்வாயன். ரிக்கற் போட்டாயிற்றா ? எப்ப பிளைட்? 

🤣

நீங்க..அனுரவுடன் நிற்பதாக கேள்வி....அவரு உங்களை பார்லிமென்ட் கழிப்பறைக்கு அனுப்பிவிட்டாராம்...அங்கை இப்ப கிளீனிங்தானே நடக்குது..எதுக்கும் உங்க ஜொப் முடிந்ததும் சொல்லுங்க பார்ப்பம்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @Kandiah57, @vasee, @vaasi, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @sinnakuddy thasan, @kayshan

அன்பான யாழ்.கள உறவுகளே... animiertes-gefuehl-smilies-bild-0145
மீண்டும் ஒரு தேர்தலில், வாக்களிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
 

மேலே உள்ள தலைப்பின் கேள்விக்கு... animiertes-gefuehl-smilies-bild-0232 ஆம் அல்லது animiertes-gefuehl-smilies-bild-0033 இல்லை என வாக்களித்தால் போதுமானது. 

வழமை போல்  இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே  சொல்லாதவரை, எதற்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. animiertes-gefuehl-smilies-bild-0246

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள  ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். animiertes-gefuehl-smilies-bild-0126

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

நீங்க..அனுரவுடன் நிற்பதாக கேள்வி....அவரு உங்களை பார்லிமென்ட் கழிப்பறைக்கு அனுப்பிவிட்டாராம்...அங்கை இப்ப கிளீனிங்தானே நடக்குது..எதுக்கும் உங்க ஜொப் முடிந்ததும் சொல்லுங்க பார்ப்பம்

போலி டமில் தேசிய வியாதிகளின் பீத்தல் கோவணமும் உருவப்பட்டதை மறைக்க  முடியாத நிலையில் அல்வாயனுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. 🤣

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.